நம்ப முடியல..


கிரிக்கெட்டில்  'பவுண்டரி' என்பது, பந்து ஆடுகளத்தை விட்டு எல்லை கோட்டினை கடப்பதாகும். அதற்கு, ஆறு அல்லது நான்கு ஓட்டங்கள் கிடைக்கும். மட்டை பிடித்து ஆடுபவரின்(betsman) மட்டையில் படாமல் ஆறு ஓட்டங்கள் (சிக்சர்) கிடைப்பதற்கு (அனேகமாக) வாய்ப்பு இல்லை. ஆனால், பந்து மட்டையில் படாமலே எல்லை கோட்டை கடந்து நான்கு ஓட்டங்களை தர வாய்ப்பு உள்ளது. அதற்கு 'byes' என்பர். பந்து மட்டையில் பட்டால் மட்டை பிடித்து ஆடுபவரின்(batsman) கணக்கில் அது சேரும்.
மட்டையில் படாமல், stumpil பட்டு நான்கு ஓட்டங்கள் கிடைத்தால் அது எந்த கணக்கில் சேரும் ? என்ன பைத்தியக்காரக் கேள்வி என்கிறீர்களா ? ஆம்.. stumpil பட்டால் அது அவுட் தானே ? எனினும் அவ்வாறு நடந்து, 'byes ' கணக்கில் ஓட்டங்கள் சேர்க்கப்பட்டன..  நம்ப முடியவில்லையா ? 'bailes' விழவில்லையாதலால், batsman அவுட் இல்லை.
http://www.cricinfo.com/indvrsa2010/engine/match/441827.html
(Commentary from 1st ODI, India Vs SA 21st Feb 2010)
 
49.3 Langeveldt to Nehra, FOUR, 146.5 kph, whoah, this is unbelievable, a yorker on off, 136kmh, Nehra misses, the ball kisses offstump and races away for four, the bails don't fall, that is bizarre, Langeveldt can't believe it

இந்த  மேட்சுல வேடிக்கை என்னன்னா, கடைசில இந்தியா வெறும் 1 ஓட்டம் வித்தியாசத்தில ஜெயித்தது. ஆதுல கூட கடைசியில டெண்டுல்கர் அட்டகாசமா பவுண்டரிய தடுத்து மூணு ஓட்டங்களா மாத்தினாரு.

"http://www.cricinfo.com/indvrsa2010/engine/current/match/441827.html"
//Go back to the penultimate ball of the match, when Sachin tries to stop that boundary. Replays and camera angles weren't conclusive. We may never know if that really was a boundary but India got the benefit of the doubt. Terrific effort from Sachin all the same to keep his nerve under pressure.//

ரொம்ப நல்ல மேச்சு பாத்த, ஒரு feeling..."இந்தியா ஜெயிசுடிச்சே!"


----------------------------------------------- End Punch
ஒரே பந்துல மூன்று sixers அடிப்பது சாத்தியமா? இல்லை ஒரே பந்துல இரண்டு fours அடிப்பது சாத்தியமா ?
ரெண்டுமே சாத்தியம்.... ஒரே பந்து.. அதாவது பந்தை change செய்யலேன்னா..
------------------------------------------------------

சாலை(யில்) பாதுகாப்பு


நண்பர் 'ஆதிமனிதன்' சாலை பாதுகாப்பு பற்றிய தொடர்-பதிவிற்கு அழைத்திருந்தார். பெரும்பாலும் இந்த தலைப்பில் பலர் நல்ல கருத்துக்களை 'இடுகை' செய்துவிட்டனர். எனவே என்ன எழுதுவது என யோசித்து இதுதான் என்னால் முடிந்தது. நல்லா இல்லைன்னா (பயன் இல்லைன்னா) ஆட்டோ அனுப்பிடாதீங்க..

'சாலை பாதுகாப்பு' --  சாலையில் போகும் 'மனிதர்களுக்கு' பாதுகாப்பா? 'சாலைக்குப்' பாதுகாப்பா? முதலில் சாலை நன்றாக பாதுகாக்கப்படவேண்டும். அப்போது தான் சாலையில் செல்லும் வாகனங்கள், மக்கள் சரியான முறையில் செல்ல நேரிடும். குறிப்பாக பாரதத் திருநாட்டின் முக்கிய (மா) நகரங்களில் கூட, சாலைகள் சரியாக பராமரிக்கப் படுவதில்லை. முக்கியமாக மழைக்காலங்களில் சாலைகள் படு மோசமாக, நடக்கக் கூட லாயக்கில்லாமல் இருக்கிறது. ஒரு முறை ஜெர்மனியில், அந்த நாட்டின் நண்பருடன் நடந்தும் செல்லும் வேளையில், அங்குள்ள சாலைகளின் அமைப்பை கண்டு வியந்தேன். நம்ம ஊருல பஸ்சு, காரு, சைக்கிள் போகும்போது எத்தனை விபத்துகளை பார்க்கிறோம். ஆனால் அங்கோ, சாலையின் நடுவே ட்ராம் (traam) செல்கிறது, விபத்துக்கள் இல்லாமல். இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. அனைவரும் சாலை விதிகளை மதித்து செல்வதனை, நான் கண்ணாரக் கண்டேன்.
நான் ஆச்சர்யப் பட்ட விஷயம், சாலைகளை அவர்கள் எவ்வாறு மழைக்காலங்களிலும் வீணாகாமல் பராமரிக்க முடிகிறது. கூட வந்த நண்பரை நான் கேட்டேன்.. 'இங்கு மழை ரொம்ப பெய்யதா? சாலைகள் பழுதடயாதா?' (தமிழில் கேட்டவில்லை, ஆங்கிலத்தில் தான் கேட்டேன்). அவர் சொன்னார், ஆங்கிலத்தில் "It rains during the season, but roads do not get damaged". அது ஏன் சார் நம்ம ஊர்ல (நாட்ல) முடிய மாட்டேங்குது? எங்கப் பாத்தாலும் ஊழல் ஊழல்..  சாலை பணி ஒப்பந்தத்துல போடுற சாலை ஒரு மழைக்கு கூட தாங்க மாட்டேங்குது. நாம ஏன், அப்படிப்  பட்ட சாலைகள் போடும் அல்லது சாலைகளே போடாமல் இழுத்தடிக்கும் அதிகாரிகள் / பணியாளர்களை, தகவல்  அறியும் சட்டத்தின் மூலம் ஏதாவது செஞ்சு, சாலைகளை ஒழுங்கா பராமரிக்குமாறு செய்ய முடியாதா? நல்ல சாலைகள் இருந்தால் சில விபத்துக்கள் குறையாலாம்னு நான் நினைக்கிறேன்.

நல்ல சாலைகளில் இருந்தும் கூட விபத்துகள் நடப்பது கவனக்குறைவே காரணம் இல்லீங்களா? நல்ல சாலைகளை பெறுவது நமது உரிமையாகும். நல்ல சாலைகளில் கவனமாக வாகனங்களை ஓட்டுவது, நமது கடமையாகும். இவை இரண்டும் சாலை விபத்துக்களை பெருமளவு குறைக்குமென நான் நினைக்கிறேன்.

நமக்காக (தெரிந்த/தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் தான்) கீழே ஒரு படத்தினை கொடுத்துள்ளேன். பயன் பெறுவோமென நம்புகிறேன்.

THE COMPULSORY SIGNS
There are some important and compulsory traffic signals and which are always indicated in circular form.

 

THE CAUTIONARY SIGNS
These are signs indicated in a triangular form. They are meant for the safety of the road user.

THE INFORMATORY SIGNS
These are signs indicates some places which are located nearby the high way, like hospital, Petrol pump etc.


ரொம்ப அறுத்துத்டேனா ?  கீழே உள்ளதையும் கொஞ்சம் பொறுத்துக்குவீங்களா?
==============================================================
தார் சாலை, ரயில் பாதை  என்ன ஒற்றுமை ?
               ரெண்டுக்குமே  ஜல்லி(சிறிய கற்கள்) தேவை.
==============================================================
ஒருவர்  :  ஸ்கூல் பக்கம் ரோடு போடுறவன வச்சி ஏரோப்ளேன் ரன்-வே(Run-Way) போடச் சொன்னது தப்பா போச்சு.
மற்றவர் : ஏன், என்ன ஆச்சு ?
முதலாமவர்  : நடுவுல ரெண்டு மூணு, speed breaker போட்டுட்டான்யா.
===============================================================

விடைகள் -- மூளைக்கு வேலை.. (my post on Feb 4th '10)

விடைகள் :
பெரும்பாலான விடைகள், அருமை அண்ணன் பே. சோ. வி சொல்லிவிட்டார். எனினும் அவரால் (கூட) சொல்ல முடியாத கேள்விகளுக்கான விடைகள் இங்கு தரப்பட்டுள்ளது.

2 ) "International Date Line" [ http://en.wikipedia.org/wiki/International_date_line ] என்று ஒன்று இருப்பது உங்களில் பலருக்கும் தெரியுமென நினைக்கிறேன். அது ஒரு கற்பனை கொடு வடக்கு-தெற்காக அமைந்துள்ளது. அந்த கோட்டினை கிழக்கிலிருந்து மேற்காக கடந்தால் நாம் ஒரு நாளை (Calender days) திரும்பவும் பெறுவோம்.  ஒரு கப்பல் மேற்கூறிய கோட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் பொது, அதில் பயணம் செய்த நிறை மாத கர்பிணிப் பெண் ஒருவள் முதலாவது மகவை ஈன்றாள், சற்று நேரத்திற்கு பின்னர் கப்பல் அந்த கோட்டினைக் கடந்து மேற்குப் புறம் வந்தவுடன் இரண்டாவது மகவை ஈன்றாள். பிறந்தபோது இருந்த இடத்தின் நாள் மற்றும் நேரப்படி(local date & time), இரண்டாவதாக பிறந்தவன், முதலாகப் பிறந்தவனை விட, மூத்தவன் தானே ?

3) 'sixth letter o square l'  =  FOOL
     F -- > sixth letter of the english alphabet
     O square -> OO
     l --   L

4) மூன்று 'நேர் கோடுகளை' மட்டுமே கொண்ட செவ்வகம் வரையுங்கள், முடிந்தால்...

பேரு என்ன ?

ஒருவர் : உங்க பேரு என்ன சார் ?
மற்றவர் :
  • சின்ன வயசுல 'பாலன்'
  • பாக்கெட் மணி கிடைக்க ஆரம்பிச்சப்ப 'தன'பாலன்
  • தெத்துப்பல்லு வந்தப்ப தன'பல்லன்'
  • ஒல்லியா இருந்தப்ப தனபா'லீன்' (lean)
  • சின்ன சந்துல குடியிருந்தப்ப தனபா'லேன்' (lane )
  • தண்ணி அடிக்கும் பழக்கம் இருந்தப்ப த'நெப்போலியன்'
  • போலியோ விழிப்புணர்வு சங்க உறுப்பினரா இருந்தப்ப தன'போலியோ'ன்.
  • பாலிதீன் கம்பெனில வேலை செஞ்சப்ப தன'பாலிதீன்'
  • சர்கஸ்ல ரிங் மாஸ்டரா இருந்தப்ப தனபா'லயன்' (lion )
  • இப்ப பால் வியாபாரம் செய்யுறதால தன'பால்'

மூளைக்கு வேலை.. !

1 ) கீழ்க்கண்டவைக்கு எத்தனை பக்கங்கள் ?
அ) எண்கோணம்  (Octagon)
ஆ) அறுகோணம் (Hexagon)
இ) ஐங்கோணம் (Pentagon)
ஈ) சதுரம் ( Square)
உ) முக்கோணம்  Triangle )
ஊ) வட்டம் (circle )

2) இரட்டையராகப் பிறந்தவர்களுள் (twins / ட்வின்ஸ்) முதலில் பிறந்தவன் இரண்டாவது பிறந்தவனுக்கு தம்பி (செல்லப் பெயர் அல்ல, வயதுபடி).  இது எப்படி சாத்தியம் ?

3) what is 'sixth letter o square l' ?


4) மூன்று 'நேர் கோடுகளை' மட்டுமே கொண்ட செவ்வகம் வரையுங்கள், முடிந்தால்.

5 ) ஒரு வகுப்பில் 32 மாணவர்களும் 28 மாணவிகளும் உள்ளனர். கணக்கு ஆசிரியர் வகுப்பில் உள்ள மாணாக்கருக்கு கீழ்க்கண்ட கணக்கு கொடுத்தார். அதற்கு எத்தனை பதில்கள் கிடைக்க வாய்ப்புள்ளது ?
   கேள்வி :  2 X - 6 = 0  எனில்,    X ன் மதிப்பு என்ன ?