தொ(ல்)லைக்காட்சி

விளம்பரத்தை பார்க்க இங்கே சொடுக்கவும் 
சபீபத்தில், ஒரு விளம்பரம் பார்க்க நேர்ந்தது.. அந்த விளம்பரத்தில் வரும் கடைசி வரிகள்.. சென்னையில் உள்ள பல ரயில் நிலையங்களில் கீழ்க் கண்ட வாசகங்களுடன் வேயக்கப்பட்டுள்ளன.
"இரண்டாவது டிகாக்க்ஷனும் முதலாவது போலவே". அதனைப் படித்துவுடன் எனக்குத் தோன்றியவை 

"அடேங்கோய்யாலே. .. இனிமே, நாங்க முதலாவது டிகாக்க்ஷன்ல காபி போட்டாலும், அவிங்க ரெண்டாவதொன்னு நெனைப்பாங்களே ?"



-------------------------------
அதாவது பரவாயில்லை..  AXE  - Deo க்கு வருகிற விளம்பரங்கள் ரொம்ப கொடுமையா இருக்கு.. பெண்களெல்லாம் ஆண்களுக்கு பினாலே ஓடுவது ரொம்ப அருவருப்பாக இருக்கிறது. இதற்கெல்லாம் தணிக்கை (censor) என்பது கிடையாதா?
----------------------------------------------------------------------------------------------------
 

பொது இடங்களில், சினிமாவில்  சிகரெட் குடிப்பது & மது அருந்துவது தடை செய்யப்பட்டு பல நாட்களாகிறது.. தொலைக்காட்சியில் கூட அது போன்ற செயல்களை காட்டக்கூடாது என்பது எழுதப் பட்ட விதி. அந்த தடை அமலுக்கு வரும் முன்னர் எடுக்கப் பட்ட நிகழ்சிகள், சினிமா போன்றவைகளை ஒளிபரப்பும் பொது கண்டிப்பாக 'சிகரெட் குடிப்பது & மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு' போன்ற எச்சரிக்கை வாசகங்களை போட வேண்டும். தடைக்குபின்னர் எடுக்கப்பட்ட நிகழ்சிகளிலாவது அது போன்ற செயல்கள் இல்லாமல் எடுக்கலாமே.. எனினும் பாருங்கள், தற்போது வரும் நிகழ்ச்சிகளில் கூட, அது போன்ற செயல்கள் எச்சரிக்கை வாசகங்களுடன் ஒலிபரப்பப் படுகிறது.....  நம்ம ஆளுங்க திருந்தவே மாட்டாங்களா ?

-----------------------------

ஊருல விசேஷங்க


என்னதான் சொல்லுங்க... எந்த ஒருத்தருக்கும், தான் பிறந்த ஊரும், வளர்ந்த ஊரும் ரொம்பப் பிடிக்குமுங்கோ.. அதுல, பிறந்து வளர்ந்தது ஒரே ஊரா இருந்தா.. சொல்லவே வேணாம்.. நம்ம ரஜினி காந்த் 'படையப்பா படத்துல சொல்லுற மாதிரி' ... 'ரொம்ப.. ரொம்ப.. ரொம்பவே' பிடிக்குமுங்கோ..

நா பிறந்து, வளர்ந்து.. படிச்ச (எனக்கு பிடிச்ச) ஊரு மன்னார்குடி. எங்க ஊருக்கே ரொம்ப பெருமை சேக்குற விஷயம், அழகான மதில்கள் சூழ்ந்த பெரிய கோவிலும் (மன்னார்குடி மதிலழகு), அதன் திருவிழாக்களும்.. ஆமாங்க, வருஷம் பூராவும் அதாவது எல்லா தமிழ் மாசத்துலயும், ஏதாவது ஒரு திருவிழா உண்டு, எங்க ஊரு கோவிலுல. இருந்தாலும் பல வருஷத்துக்கு ஒரு தடவை நடக்கும் 'கும்பாபிஷேகம்' ஒரு தனி விஷேஷந்தான ?

இது முன்னால 1995 ம் வருஷம் ஜூன் மாசத்துல 'கும்பஷிஷேகம்' ரொம்ப விமரிசையா நடத்தினாங்க.... அந்த நாள் ஞாபகம் இப்ப ரொம்ப வருது.. ஏன்னா.. நாளைக்கு (22 ஆகஸ்டு 2010), அதாவது 15 வருஷத்துக்கு அப்புறம், எங்க ஊரு பெரிய கோவிலுல 'கும்பாபிஷேகம்' நடக்க போகுது. நான் 1200 கிலோமீட்டருக்கு அப்பால இருந்தாலும், என்னோட மனசு மன்னர்குடிலதான் இருக்குது.. ஆமாம் நேர்ல இந்த விசேஷத்துக்கு போக முடியலேன்னு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு.. இந்த விழாவில் பங்கு பெரும் அனைத்து மக்களும் என்னைப் பொறுத்தவரை ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க தான்.. எனக்கு ரொம்ப பொறாமையா இருக்கு அவங்க மேல. இருந்தாலும், 'ஸ்ரீ செங்கமலத் தாயார் சமேத ஸ்ரீ ராஜகோபாலன்' (எங்கள் தெய்வம்) எப்பவுமே எங்களோட இருப்பதாக அணுவளவும் சந்தேகமின்றி சொல்லுவேன்.

மேலும் ஆர்வமிருந்தால் பின்வரும் வலை-நிலையங்களை பார்க்கவும்...
  1. http://www.thehindu.com/arts/history-and-culture/article582320.ece?homepage=true
  2. http://www.divyadesam.com/purana-temples/mannargudi-temple.shtml
  3. http://www.onlytravelguide.com/tamilnadu/spiritual/mannargudi-temple.php
  4. http://www.templenet.com/Tamilnadu/rajamann.html
அட தேவையில்லாம என்னத்தையோ சொல்லிப்புட்டு இருக்கேன்... சிம்பிளா கூகுள்ள 'மன்னார்குடி temple'ன்னு சர்ச் பண்ணத்தெரியாத உங்களுக்கெல்லாம் ?


திருவிழாக்களும், பண்டிகைகளும் மக்களை, மொழி-இன-மத வேறுபாடின்றி, மகிழ்வோடு வாழ வைப்பதற்கே என நினைத்து வாழும் உள்ளம்,
-- ஸ்ரீ. மாதவன்

எங்கள் மண்ணின் தெய்வத்தின் காலடியில், இப்பதிவினை சமர்ப்பிக்கிறேன்.

சுலபமாக 'கோடீஸ்வரன்' ஆவது எப்படி ?

ஐந்தே மாதங்களில் லட்சாதிபதியாக... (மேலே படிக்கும் முன்னர், நீங்கள் இந்த லின்கிலுள்ள இடுகையை படித்தால் சுவாரசியமாக இருக்குமென நான் நினைக்கிறேன்) என்ற தலைப்பில் சக வலைப்பதிவர் இன்று ஒரு இடுகை இட்டுடிருக்கிறார். நல்ல சிந்தனை.. இப்படியே அனைவரும் நினைக்க ஆரம்பித்துவிட்டால் 'வெளங்கிடும்'

நல்லா யோசிச்சுப் பாருங்க.. இந்த காலத்துல.. இன்னைக்கு அகில, தேசிய பொருளாதார நெலைமைல 'லட்சாதிபதி' ஆனாப் போதுமா..? .. லட்சங்களுக்கு மதிப்பு ரொம்ப இல்லைன்னு நா நெனைக்கிறேன்.. அவரு கூட அந்த பதிவுல ரெண்டாவது ஐடியா கொடுத்திருக்காரு பாருங்க.. அதுக்குக் கொடுத்த கண்டிஷன படிச்சீங்கன்னா தெரியுமே, நிச்சயமா நீங்க கோடீஸ்வரனா இருந்தாலொழிய முடியாது.

'கோடீஸ்வரனாவது' எப்படின்னு கேட்டா, அவரு, எல்லாத்தையும் அவரே சொன்னா நல்லா இருக்காது.. வேற யாருக்கிட்டேயாவது கேட்டு தெரிஞ்சுக்கோங்க அப்படீங்கறாரு..

பரவாயில்லை, அவர ரொம்ப 'டிஷ்டர்பு' பண்ணாதீங்க.. நீங்க கோடீஸ்வரரா மாறனும்னா அது ரொம்ப கஷ்டமில்லீங்கோ.. கொஞ்சமா முதலீடு (செலவு ) பண்ணினாப் போதும்... அப்புறம் ஜென்மத்துக்கும், நீங்களே வேண்டாம்னு நெனைக்கிற / சொல்லுற வரைக்கும் நீங்க 'கோடீஸ்வரர்' தான்.

ரெடியா.. ஜூட்..... ரெண்டு, மூணு ஆயிரம்தான் செலவாகும்.. பரவாயில்லையா? (செலவு கொஞ்சந்தான்..)

1) லோக்கல் நியுஸ் பேப்பருல ஒரு விளம்பரம் கொடுக்கணும்.
(மேட்டர கீழ கொடுத்திருக்கேனுங்க..)
2) நோட்டரி / முதன்மை magistrate கையொப்பமிட்ட 'affidavit' பண்ணும்.
3) உங்களோட ரெண்டு பாஸ்போர்டு சைஸ் புகைப்படம் வேணும், அம்புட்டுதான்...

கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினாப் போதும்.. அப்பால உங்கள் எல்லாருமே 'கோடீஸ்வரன்' தான் சொல்லுவாங்க..

I hitherto known as ..................... Son of .............................. employed / doing business at ...................................... residing at ........................ have changed my name and shall hereafter be known as 'Koteesvaran'.

என்னங்க.. சரியா சொல்லிப் புட்டேனுங்களா ?

டிஸ்கி : நீங்க மகளிரா இருந்தா, ஆம் சாரி, நீங்க 'கோடீஸ்வரர்' ஆனா நல்லா இருக்காது.. வேணும்னா, 'கோடீஸ்வரி' ஆகலாம், மேல சொன்ன அதே மேதடுல..

கட்டழகியும் கந்துவட்டியும்



ஒரு ஊருல பெரிய செல்வந்தர் இருந்தார். அவரோட பேரு 'கந்தசாமி'. பணத்த வட்டிக்கு விட்டு தொழில் நடத்திவந்தார். (ஒக்கே ஒக்கே.. கந்துவட்டி கந்தசாமி ). அவரு தொழில் விஷயத்துல ரொம்ப கறார் பேர்வழிதான். கொடுத்த காசுக்கு வட்டிய வசூல் பண்ணாம விடவே மாட்டாரு. அவருடைய 65 வயதிலும் காசு விஷயத்தில் அவர் காம்ப்ரமைஸ் ஆனதில்லை.

நம்ம ஹீரோ ஒரு ஏழை விவசாயிக்குப் பிறந்தவர். அந்த ஊரிலேய நம்ம ஹீரோதான் சிறந்த 'அழகி'.. இல்லை இல்லை 'பேரழகி'. அதுவும் மணமாகாத இள-நங்கை. (ஹீரோன்னா ஆம்பிள்ளையத்தான் சொல்லனுமா.. இந்த கதைக்கே இவங்கதான் மெயின் காரக்டர்.. அதனால இவருதான் ஹீரோ) அழகு மட்டுமல்ல.. 'அதி புத்திசாலித்தனமும்' இவரு கூடப் பிறந்தது.. (இப்ப சொல்லுங்க இவருதான ஹீரோ?)

விளைச்சல் குறைவு, விலைவாசி ஏற்றம் (ஹி.. ஹி.. அதான் விலைவாசி என்னிக்குமே கஷ்டத்த கொடுக்குதே.. இத வேற தனியா சொல்லனுமா ?) போன்றவற்றால், ஹீரோவின் குடும்பம் பணச் சிக்கலால் படாத பாடு பட்டது... கந்தசாமியிடம், அந்த ஏழை விவசாயி எத்தனை முறைதான் கடன் (வட்டிக்கு) வாங்க முடியும்.... கொஞ்சமாவது கடனை திருப்பி கொடுத்தால் தானே அடுத்த முறை மறுபடியும் கேட்க முடியும்.

(கந்து) வட்டியோ மேலே மேலே ஏறிக்கொண்டே இருக்க, ஒருநாள், கந்தசாமி, விவசாயிடம் சென்று.. 'உன்னால கொடுத்த கடனை இந்த ஜென்மத்தில திருப்பித் தர முடியாது. வேண்டுமானால் ஒன்று செய்யலாம்.. எனக்கு உனது பெண்ணை திருமணம் செய்து கோடு.. உனது கடனை வட்டியுடன் தள்ளுபடி செய்துவிடுகிறேன்'. அவர்களது இக்கட்டான சூழ்நிலையை தனக்குச் சாதமகாக மாற்றிக் கொண்டான்.

அதனைக் கேட்ட விவசாயியும், அவளது மகளும், அடைந் அதிர்ச்சிக்கு எல்லையே இல்லை. (அதான.. இள வயசு கன்னிப் பெண், 65 வயசுக் கிழவரை திருமணம் செய்து கொள்வதா ?). அது சரியான செயலல்ல என மறுத்தனர். அதற்கு அந்த செல்வந்தரோ, வேண்டுமானால் இப்படி செய்யலாம். ஒரு பையில் ஒரு கருப்பு, மற்றும் ஒரு வெள்ளை கூழாங்கல்லை போட்டு, உனது மகள் கண்ணை மூடிக் கொண்டே அதிலிருந்து ஒரு கல்லை எடுக்கட்டும். அவள் எடுத்தது கருப்பு கல்லாக இருப்பின், என்னை மணமுடிக்க வேண்டும். அத்துடன் உனது கடன், வட்டியுடன் தள்ளுபடி செய்யப் படும். ஆனால், வெள்ளை கல்லாக இருப்பின், என்னை மணமுடிக்க வேண்டாம்... உனது கடனும் வட்டியுடம் தள்ளுபடி செய்யப்படும் என்றார். என்ன ஒரு விபரீத விளையாட்டு?.. (கேம்ப்ளிங்) .. வேறு வழில்லாததால், அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

ஊரார் முன், அந்த செல்வந்தர் ஒரு காலிப் (empty) பையில், கருப்பு-வெள்ளை கலந்திருந்த கற்குவியல் இருந்த இடத்தில், ஒரு கருப்பு, ஒரு வெள்ளை கற்களை எடுத்துப் போடும் பொது தனது தந்திரத்தினால் (trick) இரு கறுப்புக் கற்களை போட்டுவிட்டார். ஆனால் அதனை நமது ஹீரோ பார்த்துவிட்டாள்
(ள் .. ஆமாம் அவள் பெண்தானே).

இப்போது என்ன செய்திருப்பாள்.. (சாதாரண மனநிலை உள்ளவர்கள் மனதில் தோன்றுபவை)
1) இரண்டுமே கருப்பு என்பதை எல்லோருக்கும் சொல்லி, சோதனை செய்யுமாறு கேட்டிருக்கலாம்.
2) தனது விதியை நினைத்து நொந்து பொய், அவரை திருமணம் செய்திருக்கலாம்.
3) தனக்கு இதில் இஷ்டமில்லை.. தன்னை வற்புறுத்தி இந்த செயலை செய்வதாக சொல்லியிருக்கலாம்..

ஆனால் அவளோ புத்திசாலியல்லவா.. அவள் செய்ததெல்லாம்...
--------என்னவாக இருக்கும் ............. நீங்க, கொஞ்சம் ட்ரை பண்ணுங்களேன்.. முடியலையா?
----------
-----------
--------------
------------------
--------------------------
---------------------------------
----------------------------------------
-------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------------
------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------
இப்படித்தான்.. மேலே.. சாரி.. சாரி. தொடர்ந்து (கீழே) படியுங்கள்.

நேரே அந்த பையை நோக்கி சென்று தனது கண்களை கட்டிக்கொண்டு (மூடிக் கொண்டு), பையிலிருந்து மிகவும் பத்திரமாக, கல்லை கையால் முழுவதும் மூடிக் கொண்டு வெளியே எடுத்தாள். அதே சமயத்தில், தனது கால்கள் தடுமாறி தன்னால் சரியாக நிற்க முடியாமல் கீழே விழுந்து .. தன் கையிலிருந்த கல் (கருப்பு-வெள்ளை) கற்குவியலில் உருண்டு கலந்துவிடுமாறு செய்துவிட்டாள். தன்னை சுதாரித்து கொள்வது போல பாசாங்கு செய்து.. அனைவரும் தன்னை மன்னிக்கும் படி கேட்டுக் கொண்டாள். பின்னர் அவர்களிடம், "பரவாயில்லை.. நான் எடுத்தது போக வேறு நிறக்கல் அந்த பையில் இருப்பதால்.. நான் எடுத்த கல்லின் நிறம் தெரிந்துவிடுமல்லவா?" என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம்.

இப்ப சொல்லுங்க.. 'இவள்'தானே இந்த கதையின் ஹீரோ ?

நீதி : எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு இருக்கு. நாம்தான் குறுகிய வட்டத்தினை விட்டு வெளியே வந்து அதனை கண்டு பிடிக்கவேண்டும். "Be Creative.. & Show your Creativity"

நான் உடன் படவில்லை !





என்னம்மா கண்ணு ?.. இன்னிக்கு இந்திய, இலங்கை கிரிகெட்டு மேச்சு பாத்தியா ? (யார்ராவன்.. இப்பலேலாம்.. கிரிகெட்டு கிரிக்கெட்டாவா இருக்குது.... அதலாம் எவன் பார்த்து டயத்த வேஸ்டு செய்வான்..?)

ஜெயிப்பதற்கு இன்னும் ஒரு 5 ரன்னு தேவைப்பட்டப்ப, பைசாக(byes) நான்கு ரன்னு கெடைச்சதுனால .. ரெண்டு டீமோட ரன்னும் சேமாயிடுச்சி (Scores level).. .. ஆனாப் பாருங்க.. சேவாக்குக்கு 99ல இருந்தார்..

பரவாயில்லை நெறையா பந்து பாக்கி இருக்குறப்ப.. ஒரே ரன்னு சேவக்கு அடிச்சு டீமையும் ஜெயிக்க வெச்சு.. தான் செஞ்சுரியும் முடிப்பாருன்னு ரொம்ப ஆவலா பாத்துகிட்டு இருந்தேன்..

அடுத்தப் பந்து... அடிச்சாரு பாரு நம்ம 'வீரேந்திர சேவாக்கு'.. ஒரு சிக்சரு.. அஹா.. செஞ்சுரின்னு கை தட்டி கொண்டாடினா.. அட.. அது நோ பாலாமுல்ல.. எப்படி இருந்தா என்ன.. நோ பாலுல பேட்சுமனு அடிச்சு ரன்னு எடுத்தா, அவரோட ரன்னும் அதிகமாகும்னு நெனச்சா..

நோ பால் ன்னு சொன்ன உடனே ஆட்டம் முடிஞ்சிடுசாமுள்ள.. அவருக்கு ரன்னுலாம் கெடையாதாம்.. அவரு 99 நாட் அவுட்டாம்.. இதென்ன .. அளுகுநியாட்டம் மாதிரி இல்லை இருக்குது.. .. நா இதை ஒத்துக்க மாட்டேன்..

இது எப்படி நியாயம் ?

Courtesy.. http://www.cricinfo.com/sl-tri2010/engine/current/match/456663.html

Chris Harris in the studio has no doubt it was a deliberate no-ball. Well it didn't look accidental. That back foot was where his front foot usually is.

34.4 Randiv to Sehwag, 1 no ball, match is over, but Sehwag has been denied the century. And this is a big no-ball, must I point out? His back foot was close to over-steeping, forget about the front foot. Anyway Sehwag smashed it for six over long-off, but they don't count because the game finishes at no-ball. He raises his arms, but then realises the century is not completed. Doesn't matter to him. He says: "It often happens. When a batsman is on 99 and the scores are level, bowlers try to bowl no-balls and wides. It happens in cricket. Fair enough." What a man ...

இதப் பாருடா.. ' 'வீரேந்திர சேவாக்கு' உண்மையிலேயே.. இத எப்படி ஸ்போர்டிவா எடுத்துக்கிட்டாரு.. நல்ல விளையாட்டு ஆளுதான்..

நேர்மையா வெளையாட வேண்டிய ஒரு பவுலரு, இப்படி குறுக்கு புத்திய காமிச்சிட்டாரே.. நம்ம வடிவேலு சொல்லுற (மாதிரி)... 'சின்னபுள்ளத் தனமா' இருக்குல்ல..?

எனக்கு நல்லா நெனப்பிருக்கு... ஒரு மேச்சுல.. இந்தியா வெற்றி இலக்கை தாண்டின போனாலும்.. சேட்டன் சர்மா செஞ்சுரிய மயிரிழைல மிஸ் பண்ணக்கூடாதுன்னு, ஃபில்டிங் டீமான இங்கிலாந்து.. மேலும் ஒரு பால போட ரெடியா இருந்ததுனால எக்ஸ்ட்ராவா ஒரு பாலப் போட, அதுல சேட்டன் சர்மா ரன்னு அடிச்சு தனது செஞ்சுரி முடிச்சாரு.. (courtesy --- http://www.cricinfo.com/ci/engine/match/65923.html. )



இப்பல்லாம்.. ரூல்ஸ ரொம்பத்தான் மாத்துறாங்க..
ஒரு 'நோ பாலு' போட்டா. அடுத்த பந்து 'FREE HIT' .....
அந்த அடுத்த பந்தும் 'நோ பாலா' இருந்துச்சின்னா ?

இப்பலாம்.. கிரிக்கெட்டு அவ்வளவா பிடிக்க மாட்டேங்குது..(ஆஹா இதுவேறையா..?)

சுதந்திர தின வாழ்த்துக்கள்..


1947ம் வருடம் ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி நமது முன்னோர்களான அன்றைய இந்தியர்கள் அனைவரும் எவ்வளவு மகிழ்ச்சியடைதிருப்பார்கள்.... அடிமை வாழ்வில் பட்ட அவலங்கள் நீங்கி ஆனந்தமாக சுதந்திரக் காற்றை சுசாசிக்க அவர்கள் எத்தனை நாட்கள் கஷ்டப்பட்டனரோ?

அனால் இன்றோ.. நாம் சுதந்திர தினத்தினை எந்த அளவிற்கு போற்றி வணங்குகிறோம் ?
உங்கள் உள்மனதை தொட்டு சொல்லுங்கள். இன்றைய நிலையில் 'சுதந்திரதினக் கொண்டாட்டம்' ஒரு சம்பிரதாயமாகவே உள்ளதாக நான் நினைக்கிறேன்.

கசப்பான உண்மைகள் என்னவெனில்.. நமக்கு 'சுதந்திர தினத்தின்' அருமை சரியாக தெரியவில்லை. அடிமை பட்டிருந்தால் தானே தெரியும். பள்ளி, அலுவலக விடுப்பில், வீட்டிலிருந்து தனியார் தொலைக்காட்சியை கண்டு இந்த நாளை கொண்டாடுகிறோம் (ஆமாம்.. அப்படித்தான் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கொண்டாடச் சொல்லுவதாக நான் நினைக்கிறேன்)

இந்த நாளில், சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும், ஈடுபட்டு, நமக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த அத்தனை முன்னோர்களுக்கும், நமது பாரத மாதாவிற்கும் முழு ஈடுபாட்டுடன் வணக்கங்களை செலுத்துவோம். இந்த நாளில், இனிப்புகளை பலருக்கும் வழங்கியும், முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதாவது உதவியோ செய்து நமது முன்னோர்களின் பணிகளை போற்றுவோமாக.

'சுதந்திரம்' மேலுள்ள கொடிபோலவே எல்லோரிடத்திலும் ஜொலிக்கட்டும் !
ஜெய் ஹிந்த் !! பாரத மாதாவிற்கு ஜே !!!

எனக்கு பிடிச்ச கணக்கு..




சிலபேருக்கு கணக்கு கரும்பு ஜூஸ் பருகுவதுபோல் இனிக்கும்..
மற்ற சிலருக்கு.. வேம்பு ஜூஸ் (அப்படி ஒண்ணு இருக்குதா ?) பருகுவதுபோல இருக்கும்.
பாரதியார் கூட, கணக்கு பிடிக்காமல், 'கணக்கு, பிணக்கு.. ஆமணக்கு..' அப்படி சொன்னதாக எனது பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியர் சொன்னது போன்ற நினைவு. (தப்புன்னா பெருசு பண்ணாம, ஆனா, பெரிய மனசோட மன்னிச்சு விட்டுடுங்க..)

எனது ஃ பெமிலியே அந்த வழில வந்ததுனால..நாங்கல்லாம் முதலாவது வகையைச் சேர்ந்தவங்க.
நான் கூட அதனைப் போன்ற வழியினை தொடர முடிந்தது.. எனது ஒரு அண்ணன், 'அறிவியல்' படித்துவிட்டு தேர்வெழுத பள்ளிக்கூடம் சென்றபின்னரே தெரிய வந்தது, அன்றையதினத் தேர்வு கணிதமென..
(மீண்டும் இந்த பாராவின் முதல் வரியினை படிக்கவும்)... 'அவ்ளோதான'.. பரவாயில்லை என்று, எனது அண்ணனும் தேர்வெழுதி 100 % வாங்கியிருந்தார்....(நம்ம பெமிளிக்கே அதுலாம் சகஜமப்பா)..

[உங்க அண்ணன் திறமைசாலிதான் .. உங்களைப் பத்தி சொல்ல வந்தத சொல்லுங்க.. ] அடாடா நம்மளப் பத்தி சரியாவே புரிஞ்சு வெச்சிருக்காங்க.. (எல்லாம் பக்கத்து இலைக்கு பாயசம் கேக்குற கதைதான்)

என்னையப் பத்தி ரொம்ப விரிவா சொல்ல வேண்டியதில்லை.. ஒரே ஒரு சாம்பிள் கொடுத்திட்டாப் போதுமே..

நான்'பெருக்கல்'( http://madhavan73.blogspot.com/2010/08/18.html' வருகிற பெருக்க அல்ல ) -- அதாங்க 'multiplication' ரொம்ப வேகமா பண்ணி உடனே விடைய சொல்லுவேன்.. என்ன ஒரே ஒரு நிபந்தனையோட..

இப்படித்தான் சொல்லி எனது உறவினர்கள்,.. நண்பர்கள், சக அலுவலர்களை அசத்தி வருகிறேன்.
உங்களிடமும் எனது திறமையை காண்பிக்க.. இதோ.. இப்ப.. நா ரெடி.. நீங்க ரெடியா..?

ஒக்கே.. ஒக்கே..

நீங்க எவ்வளவு எண்கள் வேண்டுமானாலும் தொடர்ந்து சொல்லலாம்.. நீங்கள் சொல்லி முடித்த அடுத்த அடுத்த நொடிக்குள், அதனோட பெருக்குத் தொகையை, நான் சொல்லிவிடுவேன்..

ஆச்சரியமா இருக்குதா..... அதான் ஒரு நிபந்தனைனு சொன்னேனே.. அது என்னனு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா..... கொஞ்சம் கீழே பாருங்க சார் / மேடம்

....................
...............
...........................
......................................
.......................................
..........................................
............................................
...................................................
...........................................................
.........................................
..............................
......................................
..............................
நீங்க சொல்லுற எண்களில் ஒன்றாவது 'ஜீரோ' (சைஃபர்) வாக இருக்க வேண்டும்..

பலகை செய்திகள்..

பின்வரும் படங்களை பார்க்க நேர்ந்தது.. சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டியதால், இதனை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். விளக்கம் வேண்டியதில்லையாதலால் கீழே படங்கள் மட்டும் கொடுக்கப் பட்டுள்ளன.









அளவா ஆனா முழுசா - 3 (விளம்பரமல்ல)

இந்த படங்கள் சொல்லும் விஷயங்கள் மதிப்பற்றது.. பார்த்துவிட்டு சொல்லுங்களேன், நான் சொல்வது சரியா, தவறா என்று




பெண்சிசு வதையை தடுக்க விழிப்புணர்ச்சி..





















அஹா.. இதோட மகிமைதான் என்னவென்பது.. ... பெண் குழந்தை ஒரு பாரமல்ல, பிற்காலத்தில் நம்மைக் கூட தாங்கும் ஒரு அற்புத மனிதப் பிறவியாகும்..











சரியாச் சொன்னாங்க..

இதை.. இதை.. இதைத்தான் இதே கருத்தை சொல்லுற வாசகங்களை, இன்று காலையில், அலுவலகம் வரும் வழில் சாலையில் பார்த்து அதை பற்றி இந்து சொல்லாலாம்னு இருந்தே.. எதேச்சையா இந்த படம் கிடைச்சுது..

என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுதா..?



என்னமா, ஒரு ஏக்கப் பார்வை..

விருப்பமுடன் (தொடர்ந்து) சொல்கிறேன் !

இது ஒரு தொடர்பதிவு. அழைத்த பெயர் சொல்ல விருப்பமில்லை க்கு நன்றி!

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ஸ்ரீ மாதவன்
என்னடா இவன், தனக்குத்தான மரியாதையா முன்னாலே 'ஸ்ரீ' போடுவதாக நினைக்கிறீர்களா? எனது தந்தை பெயரின் முதல் எழுத்து 'ஸ்ரீ'... ஹீ.. ஹீ.. எனது இனிஷியல்..

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


நிச்சயமாக அந்தப் பெயர் உண்மைப் பெயர்தான்.
இன்னமும் நம்பலேன்னா சொல்லுங்க.. SSLC சர்டிபிகேட்ட ஸ்கேன் பண்ணி இங்க போடுறேன் (தனிப்பதிவா)


3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

சொந்தமா எழுதின கிறுக்கல்கள் பல, அச்சுப்-பத்திரிக்கைல பிரசுரம் செய்யும் ஆசையில அனுப்பின சரக்கு எல்லாம், சச்சின், சேவாக்கு அடிக்குற சிக்சர் மாதிரி திரும்ப வந்துடிச்சு.. அப்பத்தான் வலைப்பூ பத்தி கேள்வி பட்டேன்.. அஹா.. இங்கிட்டு சச்சின், சேவாக்கு இல்லை.. நம்ம மனீந்தர் சிங்கு, வெங்கடேஷ் பிரசாத்துலாந்தான் இருக்குறாங்க.. நம்ம சரக்கு திரும்ப வராதுன்னு தெரிஞ்சதுனால, கடைய விரிச்சிட்டேன்...
ஒக்கே. ஒக்கே.. உண்மையான காரணத்த சொல்லிப் புடுறேன்.. எனது மரியாதை மற்றும் அன்புக்குரிய அண்ணனும், ஒரு பிரபில வலைப்பதிவாலருமான திரு ___________ அவர்களின் வலைப்பூ மோகத்தினால், நானும் உந்தப்பட்டு ஏதோ என்னால் ஆனா சேவையை செய்து வருகிறேன்.
(இடியாப்பம் இல்லீங்கோ, சேவைன்னா சர்வீஸ்)

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

பிரபலமா ?.. எனக்கு அப்படித் தெரியவில்லை..உண்மையிலே பிரபலம் அடைஞ்ச பின்னாடி மறக்காம இதைப் பத்தி எழுதுகிறேன். (சந்தடி சாக்குல, வேற ஒரு பதிவுக்கு சான்சு கிடைச்சுடிச்சு.. அடாடா.. சரக்கு இல்லாம என்னோட நிலைமையை வெளிப் படுத்திட்டேனே..! பரவாயில்லை இதப் படிக்கிறவர்கள் http://madhavan73.blogspot.com/2010/07/blog-post_07.html படிச்சிருப்பாங்க.. இல்லைன்னா இந்த பதிவ படிச்ச பின்னாடி படிப்பாங்க.. நோ பிராபிளம்.. )

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

பெரிய "இல்லை" (big NO )
சொந்த விஷயங்கள் யார் யாருக்குத் தெரியனுமோ / தெரிவிக்க வேண்டுமோ, அதனை செய்ய இன்னும் பிற ஊடகங்கள் இருக்கிறது.... இந்த ஊடகத்தின் மூலம் (வலைப் பதிவு), பொழுது போக்கு, வாழ்க்கைப் பயன் போன்ற விஷயங்களை பகிரலாமே என்ற (உயர்ந்த) சிந்தனை (எண்ணம்) தான். ( நா என்ன அலைபாயுதே 'மாதவனா' ?, இல்லையே.. என்னைய பத்தி தெரிஞ்சுக்க யாருக்குத்தான் ஆசை..)

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

எழுதினாலும் சம்பாதிப்பேன், எழுதலேன்னாலும் சம்பாதிப்பேன்.. ஹீ.. ஹீ.. ஆபீசு நேரத்துலதானே எழுதுறேன்.. (நல்ல வேளை, என்னோட பாஸுக்கு, நம்ம மொழி தெரியாது..)
மற்றபடி வீட்டிலிருந்து எழுதுவதெல்லாம், பொழுதுபோக்குக்காகவே.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

இது என்னால், என் பெயரிலேய துவங்கி, நடத்தப் பட்டு வருவது. நானும் எங்கள் கிரியேஷன்ஸ் வலைதளத்தில் சில படங்களை வரைந்து அதைப் பதிவாக வெளியிட்டிருக்கிறார்கள். (நன்றி, ஸ்ரீராம், கே.ஜி .கௌதமன், காசு ஷோபனா)

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

கோபமில்லை.... கொஞ்சம் போறாமையுண்டு.. ஆமாம் எனக்குப் பின்னர் எழுத ஆரம்பித்தவர்கள்கூட 100 க்கும் மேலான இடுகைகளை வெளியிட்டுள்ளனர். கொஞ்சமாக இடுகைகளின் எண்ணிக்கை இட்டாலும் சிலருக்கு 50 க்கும் மேற்பட்ட 'பின்தொடருனர் (ஃ பாலோயர்). / 30க்கு மேல பின்னூட்டம் . ஹூம்.., அவர்களாவது மேன்மேலும் பல ஃ பாலோயர் பெற்று, மேலும் பல பயனுள்ள இடுகைகளை இட்டு .. (ஏன் ... . ஏன்..? எதுக்கு என்னோட ரெண்டு காதுகளையும் பார்க்குறீங்க.... புகை உங்க கண்ணுக்கு தெரியாது.... அது என்னோட ஸ்பெஷல் டெக்குனிக்கு..)

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

எப்படி.. எப்படி பாராட்டுவாங்க? நான்தான் சொந்த விஷயங்களை (ஃ பொன் நம்பர், முகவரி) சொல்லவே இல்லையே....
(வேறென்னத்த சொல்லுறது... பாராட்டற மாதிரி எழுதினாதான.., நல்ல வேளை, என்னோட கணணி IP கண்டுபிடிச்சி ஆட்டோ அனுப்பாம இருக்காங்களே.. அந்த மட்டில் சந்தோஷம்... )

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

நா ரொம்ப, ரொம்ப ரெம்பவே நல்லவன்..
நம்பிட்டீங்களா ? தொடர்ந்து இங்கிட்டு வந்து என்னோட போஸ்ட்லாம் படிச்சிட்டு, உங்களோட கருத்த பின்னூட்டமா எழுதுங்க பிளீஸ்..
நம்பலையா.. தொடர்ந்து என்னோட போஸ்ட்லாம் படிங்க.. உங்களுக்கு போகப் போக புரியும்..

இந்தப் பதிவுத் தொடருக்கு நான் அழைக்கும் பதிவர்கள் (வாங்க.. வந்து கலக்குங்க ) :
  1. அநன்யா மகாதேவன்
  2. தீராத விளையாட்டுப் பிள்ளை
  3. வீடுதிரும்பல் மோகன் குமார்

சந்தோஷமான 18

இன்றைய ஸ்பெஷல் :
அனைவருக்கும்
(ஆடி)
(பெருக்கு )வாழ்த்துக்கள்  !

சின்ன வயசுல.. இன்றைய தின மாலை நேரத்தில், உறவினர், நண்பர்களுடன், சப்பரவண்டி கட்டிக் கொண்டு தேர் போல இழுத்து வீதி வழியாக, பட்டாசுகளை வெடித்துக் கொண்டு காவேரி ஆற்றங்கரை சென்று, காவிரித் தாயை வழிபட்டு, பலவித அன்னம், எல்லோருக்கும் பரிமாறி உண்டு, இனிய மாலைப் பொழுதை கழிக்கும் சுகம்...   ஆஹா.. என்னவென்பது.

ஆம், இன்றைய தினம் அடிப் பதினெட்டு... இதனை நாங்கள் பதினெட்டாம் பேர் (ஆடிப் பேருக்கு  -- காண்க படம் மேலே) எனச் சொல்லி மேலே சொன்னவாறு கொண்டாடுவோம்.   20-25 வருடகளுக்கு முன்னால் நடந்ததை நினைக்க மனம் புத்துணர்ச்சி பெறுகிறது, சந்தோஷத்தில்.

பின்குறிப்பு  : 'ஆடி' -> 'ஆடி' மாதத்தினையும், 'பெருக்கு' - >'நீர், நில வளங்களை மென்மேலும் உயர்த்து -- பெருக்கு' என்கிற வகையிலும் அமைத்ததாகும்.  சும்மா தமாசுக்கு அணிமஷன் படங்களை 'வார்த்தைக்காக மட்டுமே'(செயலுக்கு அல்ல) போட்டுள்ளேன்.