"கவாஸ்கர்" - திரைப்படம்

சுனில் கவாஸ்கர், 80 களில் அகில உலக அளவில் தலை சிறந்த கிரிக்கெட் டெஸ்ட் மேச்சு பேட்ஸ்மன். அவரோட பொறுமையான, நிதானமான ஆட்டத்தினால் எதிரணியை திணறடித்திருக்கிறார். இது பலருக்கும் தெரிந்ததே. ஆனால் அவரைப் பற்றிய இந்த செய்தி உங்களுக்கு தெரியுமா தெரியாதான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க.. விஷயம் கீழே இருக்கிறது.

80 களிலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பல வெற்றிகளை குவித்து வந்த சமயத்தில், அவருக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு அழைப்பு. 'கவாஸ்கர்' எனத் தலைப்பிட்டு, ஒரு திரைப்படம் வெளியிட இருப்பதாகவும்.. முதல் காட்சிக்கு வந்திருந்து சிறப்பித்து தருமாறும் சொன்னார்கள் அந்தப் பட தயாரிப்பாளர்கள்.

நம்ம ஆளும் ரொம்பவே உச்சி குளிர்ந்து போய், ஆஸ்திரேலியாக்கு போனாராம்.  தன்னோட சாதனைய பத்தி நம்ம நாட்டுல கூட படம் எடுக்கல, ஆனா ஆஸ்திரெலியால , தன்னோட மகிமையைப் புரிஞ்சு 'கவாஸ்கர்' ன்னு பேரு வெச்சு வெளியிடப் போற படத்த பாக்குறதுக்கு ரொம்ப ஆர்வமாயிட்டார். டால்பி ஸ்டீரியோ எபெக்டுல  ஆரம்பிச்சாங்க படத்த... 20 நிமிஷம் ஆச்சு.. 'கவாஸ்கர்' பத்தி எதுவுமோ சொல்ல ஆரம்பிக்கலை. அட.. நம்ம நாட்டுல  சின்ன ஊர் தியேட்டருல படம் போடுறதுக்கு முன்னாடி பிளாக் அண்ட் வொயிட்ல 'டாகுமெண்டரி' போடுவாங்களே(War reel) அது மாதிரி அவங்க நாட்டுலே கலர்ல போடுவாங்க போல இருக்குனு நெனைச்சிகிட்டு காத்திருந்தார்..

ஒருமணி ஆயிடுச்சி... இருந்தாலும் நம்ம ஆளு, பொறுமையாவே இருந்தாரு.. என்னதான் இருந்தாலும் தன்னைப் பத்தின படம் வரும்னு ஆர்வம் கொறையாம இருந்தாரு.... அதுக்கப்புறம் 15 நிமிஷம் கழிச்சு, பிரேக் விட்டாங்க.... அவரும் தனக்கிருந்த களைப்புக்கு தெம்பா பர்கர்-பெப்சி சாப்புட்டு ரெடியானாரு.. தன்னோட படத்த பாக்குறதுக்கு.

இன்டர்வெல்லுக்கு அப்புரமாகவும், அதே மாதிரி கண்டினியூ ஆச்சி..... இப்ப அவருக்கு கொஞ்சம் கொஞ்சமா கடுப்பு வர ஆரம்பிடுச்சு....  ஒரு மணி நேரம் கழித்து ஒரு வழியா படத்துல 'எண்டு' போட்டு முடிச்சிட்டாங்க...... நம்மாளுக்கு ரொம்பவே டெண்ஷனாகிடுச்சு.. நாடு விட்டு நாடு போயி 'கவார்கர்'னு பேரு வச்சி அவங்க எடுத்த படத்தப் பாத்திட்டு போகலாம்னு நனைச்சா.. அவங்க வேற ஏதோ படத்தப் போட்டு அவரோட டயத்த வேஸ்டு பண்ணிட்டாங்க... அவருக்கு வந்த கடுப்புக்கு தயாரிப்பாளர் கிட்ட போயி கேட்டாராம், "கவாஸ்கர்ன்னு படம் போடுறதா சொல்லிட்டு வேற ஏதோ படத்த போட்டீங்களே.. ஏன்.. ஏன்.. இந்த வில்லன்கத்தனம் ?". அதுக்கு, "நீங்க இப்ப பாத்த படம்தான் 'கவாஸ்கர்'" அப்படின்னு சொன்னாராம் அந்த தயாரிப்பாளர்.

கவாஸ்கர் அப்பாவியா கேட்டாரு, "இதென்ன அநியாயமா இருக்கு.. படத்தோட பேருக்காவது என்னப் பத்தி ஏதாவது சொல்லி இருக்கணுமே ?"

அதுக்கு அவங்க சொன்னாங்களாம் "ஏன்யா..  ஒங்க நாட்டுல, நீங்க மட்டும் 'பார்டர்'னு படம் எடுப்பீங்க.. ஆனா 'ஆலன் பார்டர்' பத்தி ஒரு ஃப்ரேமும்  இருக்காது.. அவர பொம்மையா கூட காட்ட மாட்டீங்க, அதுக்குதான் பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம்"....

டிஸ்கி : என்னத் திட்டாதீங்க..  நா பாவம் ( இப்ப 99ல இருக்கேன் ) .. 
ரொம்ப வருஷத்துக்கு முந்தி இ- மெயிலுல வந்த ஜோக்கு இது... தெரியாதவங்க தெரிஞ்சுகட்டுமேனு ஒரு நல்ல எண்ணத்துல தான் இங்கிட்டு எழுதிட்டேன்....
___________________

32 Comments (கருத்துரைகள்)
:

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

இதுக்கு நீங்க ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கான்னு கேட்டிருக்கலாம்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

vadai enakke

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

athavathu 2vatu vadai

NaSo said... [Reply]

1. வடை எனக்கே!!

NaSo said... [Reply]

நிஜமாலுமே வாய் விட்டு சிரிச்சிட்டேன்.

NaSo said... [Reply]

//பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] 1

இதுக்கு நீங்க ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கான்னு கேட்டிருக்கலாம்!
//

கரெக்ட் மாம்ஸ். இந்த மெயில் கவாஸ்கருக்கு போயிருக்குமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

@??????????? MA

ஏன் போகலின்னா நீ அனுப்பப் போறியா?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கா ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

just miss..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

///Madhavan Srinivasagopalan said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கா ?///

அது சாப்புடறவங்களப் பொறுத்து!

NaSo said... [Reply]

//பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] 7

@??????????? MA

ஏன் போகலின்னா நீ அனுப்பப் போறியா?
//

இல்லை மாம்ஸ். அவன் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
athavathu 2vatu vadai////

இதுக்கு நீய்யி கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு கக்கூச கழுவலாம்!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நாகராஜசோழன் MA

ஜஸ்ட் மிஸ்..
தாங்க்ஸ்.. நீங்க ரசிச்சு சிரிச்சதுக்கு..

NaSo said... [Reply]

//பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] 10

///Madhavan Srinivasagopalan said...
@பன்னிக்குட்டி ராம்சாமி

ஞானப்பழத்துக்கு கொட்டை இருக்கா ?///

அது சாப்புடறவங்களப் பொறுத்து!
//

எனக்கு புரிஞ்சிடிச்சி.

NaSo said... [Reply]

//பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] 12

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
athavathu 2vatu vadai////

இதுக்கு நீய்யி கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு கக்கூச கழுவலாம்!
//

இல்லனா சென்ட்ரல் ஸ்டேஷன்ல அதையே செய்யலாம்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ மாதவன் ( அட.. எனக்குத்தானே பேசிக்கறேன்)

ஏதாவது எடா கூடமா நா கேட்டு, பன்னிக்குட்டி, சோழன் கிட்ட மாட்டிக்கப்டாது.. ராத்திரி வேளை.. .. இதான் சமயம்.. எஸ்கேப்பு..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

டேய்... கடை ஓனரு தப்பிக்க பாக்குறாரு, விடாதே புடி புடி....!

NaSo said... [Reply]

//Madhavan Srinivasagopalan said... [Reply] 16

@ மாதவன் ( அட.. எனக்குத்தானே பேசிக்கறேன்)

ஏதாவது எடா கூடமா நா கேட்டு, பன்னிக்குட்டி, சோழன் கிட்ட மாட்டிக்கப்டாது.. ராத்திரி வேளை.. .. இதான் சமயம்.. எஸ்கேப்பு..
//

அட வெக்கப்படாம வாங்க. நாங்க இருக்கிறோம். (மாம்ஸ் மஞ்ச தண்ணிய ரெடி பண்ணுங்க.)

Philosophy Prabhakaran said... [Reply]

தலைப்பை பார்த்ததும் இதுவா தான் இருக்கும்னு நெனச்சேன்... ஆனா சீரியஸா ஆரம்பித்ததும் கன்பியூஸ் ஆயிட்டேன்... நூறுக்கு வாழ்த்துக்கள்...

Madhavan Srinivasagopalan said... [Reply]

@philosophy prabhakaran

உங்கள் வருகைக்கும் கமேன்டிற்கும் மிக்க நன்றிகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

//என்னத் திட்டாதீங்க.. நா பாவம் ( இப்ப 99ல இருக்கேன் ) .. //

ச்சே ச்சே 99 வயசாகுதுன்னு சொல்றீங்க பின்ன எப்படி திட்டுவோம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

/

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply] 12

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
athavathu 2vatu vadai////

இதுக்கு நீய்யி கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு கக்கூச கழுவலாம்!//
ச்சே ச்சே உங்களுக்கு போட்டிக்கு நான் வரமாட்டேன்

ஸ்ரீராம். said... [Reply]

நல்ல ஜோக். ஏற்கெனவே கேள்விப் பட்டதுதான். மீண்டும் ரசித்தேன்.

சௌந்தர் said... [Reply]

சரி சரி உங்களை ஏன் திட்ட போறோம் வயசானவர் நீங்க... கவாஸ்கர் கிளின் போல்ட் ஆகிட்டார் விடுங்க

சௌந்தர் said... [Reply]

உங்க 99 வயதில் வந்த இ மெயில் எங்களுக்காக பாதுகாத்து பதிவு போட்டதுக்கு நன்றி

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

நல்லா தான் இருக்கு ....பரவாஇல்லை ரத்தத்தை துடச்சிகிட்டேன் ............
100 பதிவுக்கு வாழ்த்துக்கள் .........

எஸ்.கே said... [Reply]

ரொம்பவே ரசிச்சேன்! சிரிச்சேன்!

பெசொவி said... [Reply]

Gavaskarukku ithu thevaithaan
:)

RVS said... [Reply]

This is Tooooooooo Much...... ;-)

ஜெயந்த் கிருஷ்ணா said... [Reply]

நல்லா தான் இருக்கு ...

வெங்கட் said... [Reply]

படிச்ச ஜோக் தான்..
இருந்தாலும் ரசித்தேன்..

சொன்ன விதம் அருமை..!!

Unknown said... [Reply]

கடி

முடியல


அழுதுருவேன் ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...