தீபாவளி வாழ்த்துக்கள்


தீபாவளி திருநாள், வருடத்தில் ஒருநாள், இனிய நாள், இன்பத் திருநாள். சின்ன வயதில் எல்லோருக்குமே பிடித்த பண்டிகைத் திருநாள்.

கிருஷ்ணன் கொடிய எண்ணங்கள் கொண்ட நரகாசுரனை, அழிக்கும் வேளையில், அவன் தான் செய்த கொடுமைகளையும் தனது கெட்ட செயல்களையும் நினைத்து, வருந்தி, வேதனைப் பட்டான். தனக்கு இருந்த கொடிய எண்ணங்கள் எவருக்குமே வர வேண்டாம் என்ற நல்லெண்ணத்துடன், மக்கள் தன்னை 'கொடியவர்களுக்கான உதாரணமாக' நினைத்து தங்களது, வாழ்க்கையில் நல்ல எண்ணங்களுடனே நல்வாழ்வு வாழவேண்டும் என்றான். அவனது நினைவாகவே நாம் தீபாவளி கொண்டாடுவது வழக்கமாக வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்.

இந்த இனியநாளில், நாம் நமது கெட்ட எண்ணங்களையும், செயல்களையும் பட்டாசு கொளுத்துவது போல கொளுத்தி, நமது வாழ்க்கையில் நல்லொளி வீசச் செய்யுவோம்.

திருமணம் ஆன பின்னர் வரும் தீபாவளியை 'தலை தீபாவளி' என சிறப்பாகக் கொண்டாடுகிறோம். 'தலை தீபாவளி' பற்றி பல ஜோக்குகள் பல பத்திரிகையில் படித்திருக்கிறோம். அந்த அளவுக்கு 'தலை தீபாவளி' முக்கியத்துவம் வாய்ந்தது. அது சரி, சக்கரவர்த்தித் திருமகன் இராமபிரான், தனது திருமணம் முடிந்த பின்னர் 'தலை தீபாவளி' கொண்டாடிய இடம் எது ?
  1. அயோத்யாவில் (தன்னுடைய வீடு)
  2. மிதிலையில் (மாமானார் வீடு)
  3. வனப்பகுதி

விடை சொல்லிவிட்டீர்களா ? சரியான விடை -- இந்த கேள்வியே 'சரியானது' இல்லை. ஏனென்றால், நரகாசுரன் காலம் கிருஷ்ணரின் அவதாரத்தில் நடந்தாகும். இராமபிரான், காலம், அதற்கு முன்னரே. எனவே 'தீபாவளிப் பண்டிகை' என்பது இராமபிரான் காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அதுசரி.. வடஇந்தியாவில், தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் சம்பந்தமில்லை என நான் நினைக்கிறேன். புரியவில்லையா.. மேலும் படியும்கள்.

தீபங்களில் ஒளியாயான தீபாவளிப் பண்டிகை, வடஇந்தியாவில், நாம் கொண்டாடும் கார்த்திகை தீபத் திருநாள் போல கொண்டாடுகிறார்கள். அங்கு, 'நரகாசுரன்' கதையால் தீபாவளி கொண்டாடுவதாகத் தெரியவில்லை. 'இராமன், இலங்கையில் வெற்றி கண்டு, தனது துணைவி சீதா பிராட்டியுடன்' அரியணை ஏற, அயோத்யா திரும்பிய நாளையே தீபாவளி திருநாளாகக் கொண்டாடுகின்றனர். எனவே மேலே கேட்கப் பட்ட கேள்வி, அவர்களைப் பொறுத்த அளவிலும் 'சரியானது இல்லை'. 'தீபாவளி' இராமபிரான் காலத்தில் கடைப் பிடிக்கப்பட்டு வந்திருந்தாலும், இராமபிரானின் கல்யாணம் முடிந்து பல வருடங்கள் கடந்து, இலங்கை வெற்றிக்குப் பின்னரே, கொண்டாடப்பட்டு வருவதாக நம்பிக்கை.

என்ன நான் சொல்வது சரிதானே?

வெறுமனே 'தீபாவளி வாழ்த்து' எனச் சொல்லி, 'பத்தோட பதினொன்னு' பதிவு போடவேண்டாம்னுதான் இந்தக் குட்டி செய்தியை இப்ப சொல்லுறேன். இந்த பதிவு கணக்குல வரும்தானே ?


ஆங்.. சொல்ல மறந்துட்டேன்... அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.. அனைத்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும், ஜாக்கிரதையாக பட்டாசு கொளுத்தி / வெடித்து கொண்டாடுங்கள்.

10 Comments (கருத்துரைகள்)
:

தமிழ் உதயம் said... [Reply]

தீபாவளி வாழ்த்துக்கள்

Anonymous said... [Reply]

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் :)

எஸ்.கே said... [Reply]

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

RVS said... [Reply]

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said... [Reply]

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

பெசொவி said... [Reply]

Happy Diwali!

பாட்டாசு(?) கொளுத்தி / வெடித்து கொண்டாடுங்கள்.

ஸ்ரீராம். said... [Reply]

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

அப்பாதுரை said... [Reply]

சுவையான விவரங்கள்.. தீபாவளி வாழ்த்துக்கள்.
என் பெயரைச் சொல்லி லஷ்மி வெடி ரெண்டு கொளுத்திப் போடுங்க. (வருசக்கணகாச்சு சாமி)

கௌதமன் said... [Reply]

எங்கள் பெயரை சொல்லி இரண்டு ஃபிளவர் பாட் வானம் கொளுத்தும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.
எல்லோருக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ //தமிழ் உதயம், புவனேஸ்வரி ராமநாதன் , Balaji Saravana, எஸ்.கே, RVS, அருண் பிரசாத், பெயர் சொல்ல விருப்பமில்லை,Gopi,ஸ்ரீராம் //

மிக்க நன்றிகள்.

@ அப்பாதுரை -- > உங்க பேரச் சொல்லி, ரெண்டென்ன நாலு லஷ்மி வெடி போட்டாச்சு.. சத்தம் கேட்டுச்சா? இல்லேன்னா சொல்லுங்க, வெடி சத்தத்த mp3யா அனுப்புறேன். (thanks)

@ kgbouthaman --
புஸ்வானம், மத்தாப்பு சாயந்திரம் இருட்டினதுக்கப்புறம் செஞ்சுடுறேன்.. வேணும்னா விடியோவ, பதிவு பண்ணி mp4 அனுப்பவா ? (thanks)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...