குழந்தைகள் தினம்

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான பதினான்கு நவம்பர், ஒவ்வொரு வருடமும் 'குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த விஷயம் நாமெல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் உலகளவில் 'குழந்தைகள் தினம்' நவம்பர் இருபதாம் தேதி கொண்டாடப் படுகிறது. 1959 ம்  வருடம் நவம்பர் 20ம்  நாளில், குழந்தைகளின் உரிமைகள் பற்றிய கொள்கைகளை அமல் படுத்தியது ஐ.நா சபை உலக குழந்தைகள் தினத்தினை அறிமுகப் படுத்தியது. குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை நல்வழி நடத்திடுவோமாக. அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அளிப்பது நமது கடமையாகும்.

இங்கு கொடுக்கப் பட்டுள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் படம், நான் வரைந்து, வண்ணம் தீட்டியது. உங்களுக்காக இங்களித்துள்ளேன். கூகிளில் நேரு படத்த டவுன்லோடு பண்ணி, அதை பாத்து பாத்து வரைஞ்செனுங்க.. பையனோட ஸ்கூலுல குழந்தையர் தின சம்பந்தமா வீட்டுல யார் வேணாலும் படம் வரைஞ்சு தரலாம்ன்னு சொன்னாங்க.. அதுக்குத்தான் இந்த ஏற்பாடு. நா வரைஞ்சத பெஸ்ட் படம்னு நோட்டீஸ் போர்டுல போட்டுருக்காங்க..

இன்று காலை எனது மகன் சிறு குறும்பு செய்ததை கண்டித்து, நான் அவன் அடிக்க முனைந்தபோது, அவன் 'அப்பா, இன்னிக்காவது என்னை அடிக்காம, திட்டாம இருங்கபப்பா. இன்னைக்கு "எங்களோட டெ(ய்)", எனச் சொல்லி தடுத்துவிட்டான்.. சரிதான்.. இன்னிக்காவது (14 நவம்பர்) நம்ம பசங்களுகிட்டே அவங்க வெளையாட்டா குறும்பு செஞ்சா கோவப் படாம, அவங்க இஷ்டத்துக்கு விட்டுவோமே.

ஒரு நிமிஷன் பொறுங்க, எங்கம்மா யாரையோ திட்டிகிட்டு இருக்காங்க.... போய் பாத்துட்டு வாரேன்..

நான்: என்னம்மா யாரை திட்டுறீங்க..? என்ன மேட்டர்..?
 
என்னோட அம்மா : வாடா வா.... எவ்ளோ நாளா சொல்லுறேன்.. என்னோட கண்ணு சரியாவே தெரிய மாட்டேங்குது.. டாக்டரு கிட்டே போயிட்டு வரலாம்னு..
 
நான் : இன்னிக்கி சண்டே மா... இன்னிக்குத் ஹாஸ்பிடல் கெடையாது.. கண்டிப்பா நாளைக்கு கூட்டிக்கிட்டு போறேன்... அதுக்காக குழந்தையை திட்டாதேம்மா.. இன்னிக்கு 'குழந்தைகள்  தினம்'.

அம்மா : நா எங்கே குழந்தையை திட்டினேன்..? ஒன்னத்தானே (கோட்டானத் தானே) திட்டிக்கிட்டு இருக்கேன்..

நான் (ரொம்ப பணிவோட) : நான் குழந்தைன்னு சொன்னது என்னை தாம்மா நீதான் அடிக்கடி சொல்லுவியே.. என்னதான் வளந்துட்டாலும், நா என்னிக்குமெ ஒனக்கு கொழந்ததான்னு....... ஹி.. ஹீ.. அதான் ....





29 Comments (கருத்துரைகள்)
:

பெசொவி said... [Reply]

//குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை நல்வழி நடத்திடுவோமாக. அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அளிப்பது நமது கடமையாகும்.
//

சரியான வார்த்தைகள்!

The Drawing is very nice!

சௌந்தர் said... [Reply]

மக்கா நீ இன்னும் குழந்தையாகவே இருக்கே அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

NaSo said... [Reply]

நேரு படம் சூப்பர். உண்மையை சொல்லுங்க வரைந்தது உங்க பையன் தானே?

NaSo said... [Reply]

ஓட்டு போடசொன்னால் முதலில் இன்ட்லில இணைக்கனும்.

ராமலக்ஷ்மி said... [Reply]

படம் அருமை.

//"எங்களோட டெ(ய்)",//

க்யூட்:)!

//என்னோட கண்ணு சரியாவே தெரிய மாட்டேங்குது.. டாக்டரு கிட்டே போயிட்டு வரலாம்னு..//

கொழந்த முதுகுல ரெண்டு வையுங்கம்மா!

குழந்தைகள் தின வாழ்த்துக்கள், உங்களுக்கும் சேர்த்து:)!

Unknown said... [Reply]

நேரு படம் அருமை.

கருடன் said... [Reply]

நீங்க வரஞ்சி இருக்க நேரு படம் தப்பு... அவருக்கு தாடி, மீசை போட மறந்துடிங்க... நம்ம தேசியகீதம் எழுதியவர் படத்தகூட நீங்க ஒழுங்க வரையலனா எப்படி?? ஆன படம் அருமை...

கருடன் said... [Reply]

@நாகராஜசோழன் MA

//ஓட்டு போடசொன்னால் முதலில் இன்ட்லில இணைக்கனும்.//

மச்சி இண்டலில எதோ பிரச்சனை போல இப்பவும் submit கேக்குது. நம்ம டீம் எதிரா இண்டலி சதி பண்ணுது ஒரு புனைவு எழுதினா தான் சரி வரும் போல... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

//TERROR-PANDIYAN(VAS) said... நீங்க வரஞ்சி இருக்க நேரு படம் தப்பு... அவருக்கு தாடி, மீசை போட மறந்துடிங்க... நம்ம தேசியகீதம் எழுதியவர் படத்தகூட நீங்க ஒழுங்க வரையலனா எப்படி?? ஆன படம் அருமை...//

மூதேவி அது காந்தி தாத்தா. அவருக்கு எது தாடி. ஆனாலும் உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..

கருடன் said... [Reply]

@ரமேஷ்

//மூதேவி அது காந்தி தாத்தா. அவருக்கு எது தாடி. ஆனாலும் உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..//

காந்தி ரஷ்ய புரட்சிக்கு போரடியவர் அவரை ஏன் இங்க இழுக்கர?? லூசாடா நீ??

சௌந்தர் said... [Reply]

TERROR-PANDIYAN(VAS) said...
நீங்க வரஞ்சி இருக்க நேரு படம் தப்பு... அவருக்கு தாடி, மீசை போட மறந்துடிங்க... நம்ம தேசியகீதம் எழுதியவர் படத்தகூட நீங்க ஒழுங்க வரையலனா எப்படி?? ஆன படம் அருமை..///

@@@TERROR-PANDIYAN(VAS)

அது பெரியார் தானே...?

எஸ்.கே said... [Reply]

படம் மிக அழகாக உள்ளது! பதிவும் நல்லாயிருக்கு!
அனைவருக்க்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said... [Reply]

நேரு படம் நல்லாயிருக்கு.... உங்களுக்கும் உங்க பயனுக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்....

Madhavan Srinivasagopalan said... [Reply]

நன்றி பே.சோ.வி, ராமலக்ஷ்மி, கலாநேசன்

@ Soundar who said "மக்கா நீ இன்னும் குழந்தையாகவே இருக்கே"

ஒத்துகிட்டியா.. அப்பா எனக்கு ஐஸ்க்ரீமு, லால்லி-பாப் பார்சல், பண்ண மறந்துடாத ..

//நாகராஜசோழன் MA said... "நேரு படம் சூப்பர். உண்மையை சொல்லுங்க வரைந்தது உங்க பையன் தானே? "//

என்னாத்துக்கு எங்கப்பாகிட்டே கேக்குறீங்க.... நான்தான் முன்னமே சொல்லிட்டேனே, யார் வரஞ்சதுன்னு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

//TERROR-PANDIYAN(VAS) said...

@நாகராஜசோழன் MA

//ஓட்டு போடசொன்னால் முதலில் இன்ட்லில இணைக்கனும்.//

மச்சி இண்டலில எதோ பிரச்சனை போல இப்பவும் submit கேக்குது. நம்ம டீம் எதிரா இண்டலி சதி பண்ணுது ஒரு புனைவு எழுதினா தான் சரி வரும் போல... :)) //

ஆமாம்.. நாம் இதுக்கு போராட்டம் நடத்துவோம்.. சரிவரலென்ன..
அடுத்த வாரம் முழுக்க நம்ம குழு மக்கா எல்லாரும் தினமும் மூணு வேலை மட்டும் சாப்பிட்டிட்டு, மத்த நேரலாம் உண்ணா விரதம் இருப்போம்.. சரியா ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) --- நீங்க ஐ.பி.எஸ் போலீசா..? ரொம்ப வெவரமா இருக்கீங்க..!

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

படம் ரொம்ப நல்லாயிருக்கு.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ எஸ்.கே, வெறும்பய & புவனேஸ்வரி ராமநாதன்

மிக்க நன்றி

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

படம் நன்றாக இருக்கு .......எல்லோருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

ஆஹா படம் டக்கரு! அதெல்லாம் சரி னேரு மாமாவுக்கு ஏன் லிப்ஸ்டிக் போட்டு விட்டீங்க?

வெங்கட் said... [Reply]

நேரு படம் அருமை..!!

இன்னிக்கு குழந்தைகளை
திட்ட கூடாது தான்.. ஆனா
இந்த மாதிரி ( மாதவன் மாதிரி )
குழந்தைகளை நாலு சாத்து சாத்தலாம்..!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

//வெங்கட் said..."நேரு படம் அருமை..!!" --- thanks

// இன்னிக்கு குழந்தைகளை
திட்ட கூடாது தான்.. ஆனா
இந்த மாதிரி ( மாதவன் மாதிரி )
குழந்தைகளை நாலு சாத்து சாத்தலாம்..!! //

. சாத்திப்புட்டீங்கல்ல பொ.. பொ..
"பி கேர்ஃபுல் !"
நா என்னையச் சொன்னேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

//இம்சைஅரசன் பாபு.. said..." படம் நன்றாக இருக்கு .......எல்லோருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள் "//

&

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஆஹா படம் டக்கரு! //

Thanks..

-------
//பன்னிக்குட்டி ராம்சாமி asked..." அதெல்லாம் சரி னேரு மாமாவுக்கு ஏன் லிப்ஸ்டிக் போட்டு விட்டீங்க? "

கொஞ்சம் கலர் ஃபுல்லா இருக்கனும்னுதான்..

கோமதி அரசு said... [Reply]

நேரு படம் நல்லா வரைந்த வளர்ந்த குழந்தைக்கும்,மற்ற குழந்தைகளுக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.

செல்வா said... [Reply]

உண்மைலேயே நேரு படம் நல்லா இருக்குங்க .!

போளூர் தயாநிதி said... [Reply]

m
polurdhayanithi

அருண் பிரசாத் said... [Reply]

சரி யார் அங்கே இந்த மாதவன் ”பச்சை” புள்ளைக்கு குச்சிமிட்டாய் + குருவி ரொட்டி பார்சல்

தமிழ்க்காதலன் said... [Reply]

nalla irukku? vaazhththukkal. varukai thaarungal.. ( ithayasaaral.blogspot.com )

cheena (சீனா) said... [Reply]

மாது - கொழந்தங்க தின இடுகை சூப்பர் - நேரு படத்துக்கு பாராட்டுகள் - நோட்டீஸ் போர்டிலே போட்டாங்களா - பலெ பலெ ! நல்வாழ்த்துகள் - ஊருக்கு ராசாவானாலும் அம்மாக்கு புள்ளதானே !

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...