கதம்பம் - ஒண்ணு, ரெண்டு மூணு

ஒரு செய்தி :
கொஞ்சநாளாவே கணக்கு, புதிர் போன்றவற்றை, எனது வலைப்பூவில் எழுதலாமா  என நினைத்து வந்தேன். அப்போதுதான்  பி.எஸ்.வி என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும், பெயர் சொல்ல விருப்பமில்லை அவர்கள் கணக்கு, புதிர் போன்றவற்றிக்கு தனியாக வலைப்பூ ஆரம்பித்து ஒருசில கணக்குப் புத்திரிகளையும் பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. அதனால் நானும் எனக்கு தோன்றிய / தெரிந்த புதிர், கணக்கு போன்றவற்றை அந்த வலைப்பூவில் எழுத ஆரம்பித்துள்ளேன்.

நேற்று ஒரு புதிரினை அங்கு சொல்லியுள்ளேன்... விருப்பமிருந்தால், முயற்சி செய்து பாருங்களேன்.

ரெண்டு கார்டூன்ஸ் (நன்றி கூகிள்) :
 













மூன்று எஸ்.எம்.எஸ் சமீபத்தில் ரசித்தது (நன்றி நண்பனுக்கு):
  1. Every person is a FREEDON FIGHTER.. Immediately after marriage !
  2. The rain makes all things beautiful. The grass & flowers , etc . If rain makes all things beautiful why doesn’t it rain on you?
  3. "Darling, will you give me a RING on our engagement?", girlfriend asked. "Sure, I have ur mobile number", replied Mr.X
--------------------------------------------------------------

ச்செஸ் - என்னிடம் தோற்ற கணணி

நான் சுமாராக சதுரங்கம், அதான் ச்செஸ் விளையாடுவேன். எனது அண்ணன் தேசிய அளவில் சதுரங்கப் போட்டிகளில் கலந்து ஒரு சில பரிசுகளை வென்றிருக்கிறார். பில்டப் போதும்னு நெனைக்கிறேன்.

என்னதான் கணணி ச்செஸ் நல்லா வெளையாடும்னாலும்....  நா அதத் தோக்கடிக்க செமையான ஐடியா கண்டுபுடிச்சிட்டேன்.... அதான், கணணிக்கிட்ட அடிக்கடி தோத்துப்போற ஒங்கள மாதிரி ஆளுங்களுக்கு இனிமே கவலையே இல்லை.. சொடக்கு (சுடோக்கு இல்லை.. அது வேற வெளையாட்டு..) போட்டு நீங்க கணணிய  ச்செஸ் ஆட்டத்தில தோக்கடிக்கலாம். உங்களுக்கு கெடைச்ச காய்கள்(பீசெஸ்) வெள்ளையா கருப்பா அது முக்கியமில்லை.. எது கெடைச்சாலும் நா சொல்லுறபடி நீங்க ஃ பாலோ பண்ணீங்கன்னா வெற்றி ஒங்களுக்குத்தான்.  

உதாரணமா நீங்க வெள்ளை காய்கள உங்களுக்கும், கருப்பு காய்கள  கணணிக்கும்    ச்சூஸ் பண்ணதா ஒரு பேச்சுக்கு வெச்சுப்போம். மொதல்ல சாதரணமா அமெச்சூர் மாதிரியே ஒரு சில மூவ் பண்ண ஆரம்பிங்க.. அப்புறம் ச்சான்ஸ் எவ்ளோ சீக்கிரம் கெடைக்குதோ அவ்ளோ சீக்கிரம் உங்களோட குவீன (இராணி) தியாகம் பண்ணுங்க.. கணணி யோசிக்க ஆரம்பிக்கும்.. பின்ன யாராவது அவ்ளோ ஈசியா வேணுமின்னே  'சக்' (sack) பண்ணுவாங்களா... கணணி அப்படி கன்பியூஸ் ஆகும்போது அடுத்து  பிஷப்,(மந்திரி)  ரூக்(யானை), நைட்(குதிரை)   அப்படீன்னு ரெண்டு மூனு பீஸ்களை  காவு கொடுத்துடுங்க.. ஆனா ஜாக்கிரதை.... அதுக்குள்ள நீங்க தோத்துடக்கூடாது.... ஓரளவுக்கு நீங்க நெறைய கைகளை காவு கொடுத்துடணும்.. 

கிட்டத்தட்ட வெள்ளைக்காக ஆடுறவர் (நீங்கதாங்க..) தோக்கப் போற நேரம் வருதான்னு பாத்துக்கிட்டே இருக்கணும் (ரொம்ப கவனமா இருக்கணும்.. தோத்துடக் கூடாது).....  வந்துச்சின்னா உடனே நம்ம ஐடியாவ எடுத்து உட்டுட வேண்டியதுதான்.. அதேன்னவா..?

சட்டுன்னு, கணணி வெள்ளை காய்களுக்கும் நீங்க கருப்பு காய்களுக்கும், ஆடுற மாதிரி செட்டிங்க மாத்திடணும். அப்புறம் பாருங்க.. நீங்க தான் வின்னர்..


எப்படி நம்ம ஐடியா ? இதே பாணில ஒரு அம்பதுக்கும் தடவைக்கும் மேல கணணிய தோக்கடிச்சிருக்கேன், என்ன சொல்லுறீங்க என்னோட தெறமயப் பத்தி..?

ஆடும்போது நடுவுல, வெள்ளை - கருப்பு இண்டர்சேன்ஜ்  ஆப்ஷன்  உங்க கணணி ச்செஸ் சாஃப்ட்வர்ல இல்லியா ? பரவாயில்லை, நீங்க தோக்கக் கூடாது அதுதான, அப்ப கருப்பு வெள்ளை ரெண்டுக்குமே கணணியே  (மெஷின்) விளையாடும்படி செய்துடுங்க.. நீங்க தோக்கவே மாட்டீங்க..  கணணி தோத்துடும்..

அந்த ஆப்ஷனும் இல்லியா.. பரவாயில்லை.. நீங்க தோக்குறா  மாதிரி  ஆயிட்டா, கணணிய ஷட் டவுன் பண்ணிடுங்க.. தோக்காம தப்பிச்சிடலாம்..
---------------------------------------

மொக்கைக் கேள்விகள் ?

  1. எஞ்சினியரிங் காலேஜுல படிச்சு பாஸ் பண்ணா, நிச்சியமா எஞ்சினியர் ஆகிடலாம், ஆனா பிரசிடென்சி காலேஜுல படிச்சு பாஸ் பண்ணாலும் 'பிரசிடென்ட்' ஆகுறது நிச்சயமா ?
  2. மெக்கானிகல் எஞ்சினியர் மெக்கானிக் ஆகலாம், சாஃப்ட்வேர்  எஞ்சினியர் எவ்ளோ  சாஃப்டா இருந்தாலும்  'சாஃப்ட்வேர்' ஆக முடியுமா ?
  3. பஸ் ஸ்டாப்புல பஸ்ஸ எதிர்பாக்கலாம்.. ஆனா, ஃபுல்ஸ்டாப்புல ஃபுல்ல எதிர் பாக்கலாமா ? (அப்படி கெடைச்சா யாரும் 'டாக்மாக்'[டாஸ்மாக் ] போகவேணாம்..)
  4. டீ-கப்புல டீ இருக்கலாம், ஆனா வேர்ல்ட் கப்புல, 'வேர்ல்ட்' எதிர்பாக்கலாமா ?
  5. கீ-போர்டுல கீ இருக்கும், மதர் போர்டுல 'மதர்' இருப்பாங்களா ?
  6. ஒருத்தரு படிச்சோ / வெளையாடியோ என்னென்ன சர்டிபிகேட்  வாங்கினாலும் அவரால அவரோட 'டெத்' சர்டிபிகேட்ட வாங்க முடியுமா ?
  7. உங்களிடம் ஏர்டெல், பி.எஸ்.என்.எல், யுனினார், எம்.டி.பி, ஏர்செல் எந்த கனெக்ஷன் இருந்தாலும் தும்மல் வந்தா, 'ஹட்ச்'னு தான் தும்மணும்.. 
நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி.. ? வேணாம்.. வேணாம்.... விட்டுடுங்க..  'மீ'  பாவம்...  சொன்னாக் கேளுங்க..  
'ஐ யாம் வெரி சாரி'.

டிஸ்கி : நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து..
தமிழாக்கம் உதவி : நா.. நா.. நானேதான்..
---------------------------------------

விர்சுவல் பொங்கல் கொண்டாட்டம்... !


 
decorated_pot.jpgturmeric_plant.gif


எங்களது கும்மி குழுவில் இருக்கும் நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் தங்களின் உற்றாருடன் பொங்கல் கொண்டாடினாலும், இதுவரை செய்யாத முறையில் எங்களது கும்மி ஃபோரம் மூலம் ஒன்று சேர்ந்து கொண்டாடிய பொங்கல் - ஓர் விர்ச்சுவல் பொங்கல். அது பற்றி..

நாள், 15-01-2011 , தைத்திங்கள் 1 ,    மதியம் மூன்று மணிபோல் (ஐ.எஸ்.டி) எங்கள் 'கும்மி ஃபோரத்தில்' நண்பர் டெரர் பாண்டியன்தான் ஆரம்பித்தார்.


மேலும் படிக்க  --  இதோ லிங்க்..

அப்புறம்.. 

இன்ட்லில இணைச்சிருக்கேன் ஒட்டு போடுங்க - லிங்க் (இன்டலி ஒட்டு)
தமிழ்மனத்துல  இணைச்சிருக்கேன் ஒட்டு போடுங்க - கும்மி பிலாகுல இருக்கு லிங்க். 
இந்த பதிவில் கீழ் உள்ள ஒட்டு பட்டிகளில் லிங்க் தரப் படவில்லை. அங்கு சென்று ஒட்டு போடும் லிங்கின் மூலம் ஓட்டுப் போடவும்.  நன்றி
---------------------------------------------------

பொங்கல் வாழ்த்துக்கள் ! (2011)

அருமை நண்பர்களே,
அனைவருக்கு முதற்கண் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !

பொருளீட்டும் காரணமாக பிறந்த ஊர் விட்டு வேறு ஊரில் (நாடுகளில்) நம்மில் பலர் வசித்து வருகிறோம். சின்ன வயதில், பள்ளி, கல்லூரி நாட்களில் நாம், நமது சொந்த ஊரில் கொண்டாடிய கொண்டாட்டங்கள் மனதிலிருந்து நீங்காததாகும். அதான் இந்த மலரும் நினைவுகள்.

போகித் திருநாள் : தீய எண்ணங்களை கொளுத்துவதாக, பழைய பொருட்களை கொளுத்தி வீட்டினை சுத்தமாக வைத்து, எண்ணெய் நீராட்டம் கொண்டு ஆரம்பிப்போம், பொங்கல் திருநாட்கள் கொண்டாட்டத்தினை. இன்றையதினம் எங்கள் அன்னை செய்யும் 'போளி' எனும் இனிப்புவகை பலகாரம். சுத்தமான நெய்யும், சுண்டக் காய்ச்சிய பாலும் சேர்த்து சாப்பிட்டால், இது மிகவும் சுவையா இருக்கும். இதுதான் இன்றைய ஸ்பெஷல். (படம் உதவி, கூகிள் இமேஜ்.)

பொங்கல் திருநாள் :
ஏனோ
. இன்று கொண்டாடும் முறையும் அன்று கொண்டாடிய முறையும் மனதில் மாறி மாறி வருகிறது. அன்று, பாரம்பரிய முறைப்படி, விறகு அடுப்பில் பொங்கல் பானை வைப்பார் எனது தாயார். நகர்புறத்தில் விறகு எங்கு கிடைக்கிறது, கிடைத்தாலும் விறகு அடுப்பில் வேலை செய்வதற்கு யாருக்கு பழக்கம் இருக்கிறது. இருக்கவே இருக்கிறது காஸ் அடுப்பு. ஹி.. ஹி.. நாங்களும் மாடர்ன்(!) தான்
பொங்கல் பானை வைத்து பொங்கல் செய்து இறைவனுக்கு பூஜை செய்து, இயற்கை வளங்களைத் தரும் சூரியன், பூமி முதலியவற்றிக்கு நன்றி செலுத்திய பின்னர்தான் எங்கள் வீட்டில் யாவரும் கரும்பின் சுவையறிவோம். அதற்கு முன்னர், அந்தந்த சீசனில் கரும்பு சுவைக்காமலிருப்பது எங்கள் குடும்ப வழக்கம். அதில் கூட, பெண்கள் பொங்கல் படையலிட்ட அன்றே கரும்பு சுவைக்க மாட்டார்கள். அடுத்த தினமான, 'கனுப் பொங்கல்' நன்நாளில், 'கனு' வைத்தப் பின்னரே கரும்பின் சுவை பார்ப்பர்.
கனுப் பொங்கல் திருநாள் :
மேலுள்ள படத்தில் இருப்பது போல் மஞ்சள் பயிரின் (பச்சை) இலைகளைப் தரையில் பரப்பி, அவற்றின் மேல் முந்தைய தினம் செய்த பொங்கல், மற்றும், வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிற அன்னங்களையும், மஞ்சள், இஞ்சி, கதளிபழம், கரும்புத் துண்டுகள் இவற்றோடு வெற்றிலை பாக்கும் வைத்து, இயற்கை தெய்வங்களை வழிபடுவது பாரம்பரிய வழக்கம். இவ்வாறு செய்வது, உடன் பிறந்த சகோதர்களின் நல்வாழ்விர்காகவே என்பது மரபு. உடன் பிறந்த சகோதரிகளுக்கு, சகோதர்கள், பணம், உடைகள் போன்ற பயன்படும் பொருட்களை தருவது வழக்கம். எங்கள் வீட்டில் மாடுகள் இல்லாததால், நாங்கள் அக்கம் பக்கமுள்ள வீடுகளில் வளர்க்கப்படும் 'மாடுகளுக்கு' பழம், காய், இலை, தழைகள் அளிப்போம். (அதான, மாட்டுப் பொங்கல் நாளுல 'மாடுகளை' கவனிக்கலேன்னா என்ன அர்த்தம் ? )

காணும் பொங்கல் :
மேற்சொன்ன முறையில் மூன்று தினங்களும் குடும்பத்தாருடன் ஒன்று கூடி கொண்டாடுவதால், மூன்று நாட்களுமே எங்களுக்கு 'காணும்' பொங்கல்தான். அதான் தனியாக இதற்கு நாள் ஒதுக்குவதில்லை நாங்கள். (எழுத மேட்டரு இல்லையின்னா எப்படிலாம் சமாளிக்க வேண்டி இருக்குது. )

மறுபடியும் உங்களனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் ! நன்றி.
---------------------------------------------------------------

இதப் படிங்கல ...

எல்லா  பொருளோட விலையும் வானத்த தொடுறமாதிரி ஒசந்துக்கிட்டே இருந்தாலும், பாருங்க எலக்ட்ரானிக் ஐடெம்  வெலை கொறஞ்சிகிட்டே வருது. அப்படி இல்லைன்னா  பழைய வெலையில புதுசு புதுசா 'features ' வருது. (முன்னுரை போதும்)

போன மாசம், சென்னைக்கு போயிட்டு வந்தேங்க, சொந்த வேலையா. சொந்தக் காரங்க வீட்டுல தங்கினப்ப, அவங்க வீட்டு வேலைக்காரன் கையில ஒரு 'கைபேசி' .. அட அது பெரிய விஷயமில்லீங்க.. அந்த ஹான்ட்செட்டுல பெரிய சைஸு டிஸ்ப்ளே  இருந்திச்சி , key-pad இல்லை.

மெதுவா அவனுகிட்டே பேச்சு கொடுத்தேன்..
"எங்க வாங்கினீங்க இதை ?", நாங்கேட்டேன்.
"பர்மால, பஜாருல", அவரு பதில் சொன்னாரு.

நா எனக்குள்ள நெனைச்சி கிட்டேன், "நாமலாம், மிஞ்சிப் போனா பக்கத்து ஸ்டேட்டுக்குதான்  போயிருக்குறோம், இவரு பக்கத்து நாட்டுக்கே போயிட்டு வந்திருக்காரு. அதுவும், இந்த மாதிரி வேலை செஞ்சிகிட்டு, பாஸ்போர்டு விசா-லாம் எடுத்துக்கிட்டு செலவு செஞ்சு 'பர்மா' வரைக்கும் போயி.. அங்கிட்டு ஷாப்பிங் பண்ணிட்டு வந்திருக்காரு.. ஃபாரின் ரிட்டன்..". அதான் 'அவனுகிட்டே'னு ஆரம்பிச்சத, உடனே 'அவரு .. ', மாத்திட்டேன்.

"ஒங்க (மரியாதை.. மரியாதை) 'கை-பேசி' நா பாக்கலாமா ? ", கேட்டேன் அவருகிட்ட. 

"வாயாதான் பேசுவேன்  (திட்டுவேன்).... யாரையும் அடிக்க மாட்டேன். சரி என்ன தப்புல..  யாரு தப்பு பண்ணது, தெரிஞ்சாத்தான் பேசுவேன்- ?", சொல்லிகிட்டே கேட்டாரு இப்படி.

[ எனக்குள் : " ஓ !, 'கை-பேசி'க்கு அப்படி ஒரு அர்த்தம் இருக்குதோ ?" ]

"அட அதில்லீங்க, ஒங்க கையில இருக்கே, அதப் பாத்துட்டு தாரேன்", நான்.

செட்ட வாங்கி பாத்தப்போ, அதுல 4G -5G னு  இனிமேதான் வரலாம்னு இருக்குற எதிர்கால அப்ளிகேஷன் கூட இருக்குறது புரிஞ்சுது..  ரொம்ப காஸ்ட்லியான ஐடெம் மாதிரி பட்டுச்சி.

"என்ன வெலை இது ?"
(ஜெனரல் நாலட்ஜுக்குதான் கேட்டேன்)

"இதுவா, ஆயிரம்ல", அவர் சொன்னாரு.

என்ன  புரியுதா ஒங்களுக்கு..?
அவரு அடிக்கடி '' போட்டு பேசினப்பவே நா யோசிச்சிருக்கணும்  .. இது 'பர்மா, பஜாருல' வாங்கினது இல்லை''..  நம்ம 'பர்மா பஜார்' த்தான் வாங்கினது !
------------------------------------------------------------

எங்கயோ, எதுலயோ தப்பு !


[ மொதல்ல புரியல.. எனக்குப் புரியலே.. என்ன காரணத்துக்காக அப்படி நடந்துதுன்னு புரியலை...... ]
எல்லாரும் என்னை ஒரு தடவை மன்னிச்சிடுங்க..  'டெரர் கும்மி' பிலாகுல போட வேண்டிய பதிவ தவறுதலா இந்த பிலாகுல ஒரு தடவை பப்ளிஷ் பண்ணிட்டேன்.. அதான் என்னைய பாலோ பண்ணுறவங்க  டாஷ்போர்ட்ல நான் 'மன்னை மைந்தர்களில் ஒருவன்' வலைப்பூவுல புதிய பதிவு போட்டதா (அதாங்க இதே தலைப்புலதான்) தகவல் வந்துடிச்சு. வந்ததுதான் வந்துட்டீங்க.. ஒரு எட்டு 'டெரர் கும்மி' பிளாகுக்கு போயி நா எழுதின பதிவப் படிச்சிட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க, சரியா? மேல இருக்குற படத்தப் பாத்த உடனே படிக்கணும்னு ஆசை இருக்குதானே ?

இந்த மேட்டரு என்னோட அனுபவத்துல வந்தது (அனுபவிச்சி எழுதினது)

ஆங் சொல்ல மறந்திட்டேன்.. நேத்திக்கு கணக்கு போடலாமான்னு கேக்குற வலைப்பூவுல 'எண்களில் எத்தனை விஷயங்கள் ?' தலைப்புல பதிவு போட்டேன். அதையும் முடிஞ்சா பாத்துட்டு வாங்க. இதுக்கென்ன படமா ? கீழப் பாருங்க..


டிஸ்கி : அந்த ரெண்டு பதிவையும் அங்கிருந்தே இன்டலி, தமிழ்மணம், தமிழ்-10 ல இணைச்சிருக்கேன், ஒட்டு போடுறதுக்கு. இங்கே இணைப்பு எதுக்குத் தரணும் ?
------------------------------------------

2010 - நினைத்தேன், எழுதினேன்.

சென்ற ஆண்டி நடந்தவைகளை (2010 - நினைவலைகள்) நினைவுகூர்ந்து எழுதுமாறு புவனேஸ்வரி ராமனாதான் மேடம் (மரகதம்.பிளாக்ஸ்பாட்) அழைத்தற்கிணங்க, இதோ, எனது 2010 ம் வருட அனுபவங்கள். ரொம்ப யோசிக்க முடியலை, டக்குனு மனசுல ஞாபகம் வந்தத எழுதி இருக்கேன். நன்றி மேடம் !
பொங்கல் லீவுல பக்கத்து வீடுகளில் வந்திருந்த இளைஞர் பட்டாளத்துடன் 'ஹவுஸ்-கிரிக்கெட்' விளையாடினோம். விளையாடுறது ரொம்ப கஷ்டம். வீட்டுக்குள்ள சின்ன இடத்துல பௌலர் உள்பட நாலு பேரு பீல்ட் பண்ணுவாங்க. ஓன் பிட்ச் காட்ச் பிடிச்சாலும்  அவுட். கொஞ்சம் வேகமா அடிச்சு, வீட்டுக்கு வெளிய ஸ்ட்ரைட்டா பந்து  போயிட்டாலும் அவுட். அதுல கூட திறைமையா, என்னமா விளையாடுறானுக? (ரூம் போட்டு பிராக்டீஸ் பண்ணுவாங்களோ ! ) நம்மளால ஏழெட்டு பந்து கூட தாண்ட முடியலை. கிரிக்கெட் விளையாடி பல வருஷமாச்சே. இருந்தாலும் நல்ல என்ஜாயின்ட்மென்ட் தான்.

சம்மர் லீவுல சொந்த ஊருக்கு போனபோது, நா படிச்ச ஸ்கூலுல என்னோட சீனியர்சலாம் சேர்ந்து ஆசிரியர்களை படித்த பள்ளிக்கு அழைத்து மரியாதை  செஞ்சாங்க. நல்லதொரு சந்திப்பு. நானும் அந்த சந்திப்புல கலந்துக்கிட்டு ரொம்ப வருஷத்துக்கப்புறம் எனக்கு கற்பித்த எனது ஆசிரியர்களையும் மற்றும் என்னோடு படித்த  நண்பர் ஒருவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மறக்க முடியாத நிகழ்வு அது. நன்றி எனது சீனியர் மாணவர்களுக்கு.

குட்டிப் பொண்ணு எல்.கே.ஜி போக ஆரம்பிச்சா, 2010 ல. போனவருஷமே, ப்ரி-கே.ஜி  (ஃப்ரி இல்லை, காசு கொடுத்துதான்) போனாலும். அந்தக் குட்டிக்கு அண்ணனோட சேர்ந்து ஆட்டோல ஸ்கூலுக்கு போகணும்னு இருந்த ஆசை இந்த வருஷத்துல நடந்திச்சு. பொண்ணு சந்தோஷமா இருந்தா, நாமளும் சந்தோஷமா இருப்போம், இல்லையா ? இப்பலாம் பொண்ணு சொல்லுறா, கிளாசுல அண்ணன் அவளோட பக்கத்துல ஒக்காந்துக்கணுமாம், நா என்ன செய்ய ? ஐடியா தாங்களேன்.

டிசம்பர் மாசத்துல எனது பெற்றோர்களும், மனைவியின் பெற்றோர்களும், என் அண்ணனின் குடும்பமும் நான் இப்போதிருக்கும் ஊருக்கு வந்திருந்த பொது. அவர்களுடன் ஊர் சுற்றிப் பார்த்தோம். இனிமையான நாட்கள் அவைகள். மலை ஒரு பக்கம், கடல் மறுபக்கம். எப்படிச் சொல்வது இயற்கையின் அழகை !

அலுவலக மேட்டரப் பொறுத்த வரைக்கும், தேசிய அளவில நடந்த ஒரு கான்ஃபெரன்ஸ்ல கலந்துக்கிட்டு  நா செஞ்ச ஒரு வோர்க பிரசென்ட் பண்ணினேன். மத்த ஆபீஸ் மேட்டர்லாம் சொல்லக் கூடாது, அப்புறம் என்னைப் பார்த்து 'அட, இதானா நீ வேலை செய்யுற லட்ஷனம்னு' சொல்லிடுவீங்க.

வலையுலக அனுபவ வகையில் :
  • இந்த வருட ஆரம்பத்தில்தான் பிலாகுல தீவிரமா, (அட தீவிரவாதம் இல்ல) எழுத ஆரம்பிச்சேன். புதியதாக வலைப்பூ நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்தார்கள்.
  • வலைச்சரத்துல ஒரு வார காலம் எழுதினது நல்ல மனத் திருப்த்தியா இருந்தது. 
  • ஃபாலோயர் எண்ணிக்கை 100 ஐத் தாண்டியது..
  • கும்மி  குழுவுல சேர்ந்து திறமை, புத்திசாலித் தனம், நகைச்சுவை உணர்வுள்ள பலப் புதிய நண்பர்களை அடைந்தேன். 

நான் தொடர அழைப்பது

  1. வெங்கட் (கோகுலத்தில் சூரியன்)
  2. பெயர் சொல்ல விருப்பமில்லை 

-------------------------------------------------------------------------


எனது (வெளையாட்டு ) நிலை!

தம்பி செல்வா, எப்படியாவது 'ரேடியோ ஜாக்கி' ஆகிடனும்னு துடிப்பா இருக்குறதப் பாத்து எனக்கும் என்னோட ரொம்ப நாள் ஆசைய தீர்த்துக்க ஆர்வம் வந்திச்சு..

சின்ன வயசுல எனக்கு வெளையாட்டு ரொம்ப பிடிக்கும்.. அதுலயும் தடகள வெளையாட்டுன்னா எனக்கு உசிரு.. பள்ளிக்கூடத்துல படிச்சப்ப ஸ்போர்ட்ஸ் சீசன்ல, ஏதாவது மூணு-நாலு ஈவண்டுள கலந்துகிட்டு, ரெண்டு பரிசாவது வாங்காம விடமாட்டேன். ஆனாலும் படிப்புதான் முக்கியம்னு சொல்லி எங்க அப்பா, படிக்குறதுக்கு என்னைய நல்லா படிக்க வெச்சாங்க.. அதனால 'படிக்குறதுக்கு', 'தடை' - 'கல்' மாதிரி ஆயிடிச்சு.

ஏதோ நா நல்லா படிக்குறதுக்கு அவங்க செஞ்ச ஊக்கத்துனால இன்னிக்கு நல்ல நெலைமேலதான் இருக்கேன். இருந்தாலும் சின்ன வயசு ஆசையான 'வெளையாட்டு வீரர்' என்ற பெருமை மிஸ்ஸிங். நா மட்டும் தொடர்ந்து வெளையாட்டுல ஈடுபட்டிருந்தா கண்டிப்பா நம்ம நாட்டுக்கு ஒலிம்பிக்குல மெடலு வாங்கித் தந்திருப்பேன்.. (!)

என்னாது.. இப்ப கூட நா நெனைச்சா வெளையாட்டுல ஜொலிக்க முடியுமா ? போங்க சார்.. என்னோட பிரண்டு அனுப்பின இந்த வீடியோவ பாத்ததுக்கு அப்புறமும், நா இந்த வெளையாட்டு வீரர் ஆகுற கனவெலாம் மறந்திருக்க மாட்டேனா?

வீடியோவப் பாருங்க (உஷார் : வீடியோ 3.23 MB ) .. என்னோட முடிவு சரிதானா..?

கிரைம் நாவல் ஸ்பெஷலிஸ்ட்

பள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு பதிமூன்று வயதிருக்கலாம்.. என்னை விட மூன்று வயது இளைய சிறுவனின் பரிந்துரையின் பேரில் ராஜேஷ் குமார் கதைகளை படிக்க ஆரம்பித்தேன். ராஜேஷ் குமார் நாவல்களில் பெரும்பாலும் சஸ்பென்ஸ்-கிரைம், துப்பு துலக்குதல் (டிடெக்டிவ்), சயன்ஸ் ஃபிக்ஷன் இதெல்லாம் கதையுடன் ஒட்டி இருக்கும். ஒரு சில சமூக நாவல்களும் எழுதி இருக்காரு. (உதா : 'காவ்யாவின் கருப்பு தினங்கள்')


கிரைம் நாவல் புத்தகத்தில் முக்கிய நாவலைத் தவிர ஐந்தாறு பக்கத்தில் வரும் சிறுகதைகளும் நன்றாக இருக்கும். அவருடைய கற்பனை கதா நாயகன் விவேக் தனது மனிவி ரூபலாவுடன் நடத்தும் 'அர்த்தமுள்ள அரட்டை' தகவல் களஞ்சியமாகவும் இருக்கும். நான் படித்த கிரைம் நாவல்களில் சிலவற்றைப் பற்றி சிறு குறிப்புடன் பட்டியல் இட்டுள்ளேன். இந்தக் கதைகள் அனேகமாக 1985 - 88 வருடங்களில் வந்தவை என நினைக்கிறேன்.
  • 'ஹலோ டெட் மார்னிங்' -- இதுதான் நான் படித்த முதல் நாவலாகும். இது 'கிரைம் நாவல்' வரிசையில் நான்காவதாக வெளி வந்தது. கொலை போல ஆரம்பிக்கும் கதையினை, அது தற்கொலை என்று சரியான லாஜிக்குடன் முடித்திருப்பார்.
  • திக் திக் திவ்யா - 'திவ்யா' ஒரே ஆளா.. இல்லை மூவரா என ஆச்சரியப் படும்படி கதை செல்லும். சொத்துக்கு ஆசைப் பட்டு திவ்யாவை கொலை செய்யும் நோக்குடன் அவரோட மாமா, சித்தப்பா இரண்டு பேரும் செய்கிற குற்றங்களை சஸ்பென்சாக சொல்லி இருக்கிறார் கதாசிரியர்.
  • கற்றது டைமண்ட் களவு : கதைகேற்ற ஆனால் தெரிந்த பழமொழியை மாற்றி அதே மாதிரி ஒலிக்கும் ஓசை வருமாறு அமைந்த தலைப்பு. தலைப்பில் உள்ளது போல கதை 'டயமன்ட்' கடத்தலை மையமாகக் கொண்டது.
  • நாளை யாரோ : கதை சரியாக ஞாபகமில்லை.. 'அற்புதா' என்ற வீரமிகுந்த பெண்துணிச்சலுடன் கெட்டவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்வது போல வரும். கடைசி வரிகள் 'இன்று அற்புதா.. நாளையாரோ ?' என முடியும்.
  • மற்றுமொரு கதையில் (தலைப்பை மறந்துவிட்டேன்) விவேக்கின் கண்களை கட்டி, கெட்டவர்கள் தங்கள் இடத்திற்கு அழைத்து செல்வார்கள். பின்னர் விவேக்கை விட்டு விடுவார்கள். அவர்களிடம் மாட்டிக் கொண்டுள்ள மற்றவர்களை விடுவிக்க விவேக் அதேபோல கண்களை கட்டிக் கொண்டு காதில் விழும் சப்தங்களையும், வினாடிகளையும், காலால் வைக்கும் அடிகளையும் மனதில் கொண்டு அதேபோல செய்து, கயவர்களின் இடத்தை அடைந்து காப்பாற்றுவதாக வரும். 'குருதிப்புனல்' திரைப் படத்தில், ஒருவர் தனது அலுவல் மற்றும் சொந்த நண்பரை காப்பாற்ற அதே பாணியில் வருவது கண்டு 'காப்பி' அடிப்பதென்றால் என்ன என்பதை உதாரணத்துடன் தெரிந்து கொண்டேன். (ராஜேஷ் குமாரே வேறு ஒரு இடத்திலிருந்து காப்பி அடித்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவ்வாறு வருவதை, நான் முதலில் படித்தது ராஜேஷ் குமார் கதையில் தான்)

மொத்தத்தில் ராஜேஷ் குமாரின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்போதெல்லாம் ராஜேஷ் குமார் நாவல்களை படிப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதில்லை வேறு மாநிலத்தில் இருப்பதால்.
(ஹி.. ஹி.. அதான் நாமளே பிலாகு எழுத ஆரம்பிச்சிட்டோமே ? )

நண்பர் மங்குனி அமைச்சர், அவர்களை இந்த பதிவினை தொடருமாறு வேண்டி (!) விரும்பி (!!) கேட்டுக் கொள்கிறேன்.
----------------------------------------------

வலைச்சர ஆசிரியர் அனுபவம் --




சென்ற டிசெம்பர் 13 ம் தேதி முதல் வலைச்சரத்துல நான் ஒரு வார கால ஆசிரியர் பொறுப்பு ஏற்று எழுதினது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம். எனக்கு ரொம்ப ராசியான நம்பரு 13 . 
  • **** ^^^ 13 ம் தேதி தான் என்னோட கல்யாண நாள் (டிசெம்பர் அல்ல). 
  • **** , அக்டோபர் 13 ம் தேதி, பிரமொஷனுக்கான நேர்முகத் தேர்வு நடந்து பதவி உயர்வு கிடைத்தது. 
  • முக்கியமான அலுவலக  அசைன்மென்ட் 13 மார்ச் **** ல ஒரே நாளுல வெற்றிகரமா முடிச்சேன்.
இந்த வகையில நான் வலைச்சரத்துல 13 ம் தேதி முதல் எழுதினது ரொம்ப ராசியா உணர்ந்தேன்.

வலைச்சரத்துல நான் எழுதின வாரமான டிசெம்பர் 13 முதல் டிசெம்பர் 20 வரை வழக்கமா நா, பாலோ பண்ணுற பிலாகலாம் படிக்க முடியலை... என்னோட  நண்பரு ஒருத்தரு , நா அவரோட பிலாக பாலோ பண்ணுறத நிப்பாட்டிடேனானு கேட்டாரு. அந்தளவுக்கு நா பிசியா இருந்தேன்.

முடிஞ்சவரை வலைச்சரத்துல எழுதின பதிவுக்குலாம் வந்த காமெண்டுகளுக்கு பதில் கமெண்டு போட டிரை பண்ணேன்.. இருந்தாலும் ரெண்டு மூனு பதிவத் தவிர எதுவும் 70 கமேன்டத் தாண்டலை..

எனக்கு முன்னாடி எழுதின பன்னிக்குட்டு ராமசாமி எப்படித்தான் எல்லா போஸ்டுலேயும் சளைக்காம பதில் எழுதினாரு, தெரியலை. அவரோட தேறமையே தனிதான்.

நன்மைகள் :
  • பலதரப் பட்ட பதிவுகள செலெக்ட் பண்ணுறதுக்காக படிச்சேன்.
  • என்னோட வலைப்பூவுல 10 பர்சென்ட் பாலோயர்ஸ் அதிகரிச்சாங்க..
தீமைகள் (!):
தினமும், 'நெட்'டுல ரொம்ப நேரம் ஒக்காந்ததுனால.. வீட்டுல நல்லா திட்டு  வாங்கினேன்.  இருந்தாலும் தங்ஸுகிட்ட   "ஒரு வாரம்தான.. பிளீஸ்", போட்டு பெர்மிஷன் வாங்கினேன். அடுத்த ரெண்டு வாரத்துக்கு வீட்டுலே NET பாக்க முடியாத கண்டிஷனல் பெர்மிஷன். ( ச்சே.. பிலாகுல எழுதுறதுக்கு சரக்கு இல்லாததுனால என்னலாம் சொல்லி சமாளிக்க வேண்டியதா இருக்கு..)

வலைப்பூ அனுபவத்தில், வித்தியாசமான நாட்களாகச் சென்றது அந்த வாரம்.

 டிஸ்கி :  ****   நாலு இலக்க வருடத்திற்கு பதிலாக.
மாசம் , வருசம் முக்கியமில்லை.. தேதி..  தேதியை மையப் படுத்தவே அப்படி..  -- இதெப்படி ?
-----------------------------------------------------