விடைகள் - மொக்கைக் கேள்விகளுக்கு

என்னுடைய முந்தைய பதிவில்  ஆறு கேள்விகள் கேட்டிருந்தேன்.... நண்பர்கள் கண்டு பிடித்துச் சொன்ன  விடைகளையும் பிரசுரம் செய்துள்ளேன். எனினும் இங்கும் நான் நினைத்த விடைகளை தந்துள்ளேன். கேள்விகள் இருக்கின்ற முந்தைய பதிவையும் படித்து விட்டு மேற்கொண்டு தொடரவும். இங்கு விடைகள் மட்டும் தரப்பட்டுள்ளது..

1) 'மஞ்சு' --  வீட்டில் அழைக்கும் பெயர்..  'மாலா' அவளது பள்ளிக்கூட சான்றிதழில் இருக்கும் பெயர். -- இருவருமே ஒருவர் தான். சுந்தரும் ஒருவர்தான்.

2 ) o,t,t,f,f,s, s , _ , _, _ , e  --> 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 இவைகளின் ஆங்கிலப் பெயர்களின் முதலெழுத்து மட்டும். எனவே விடை   'e', 'n', 't'.

3) இதற்கு ரயில்வேத் துறைதான் சரியான பதில் சொல்ல முடியும். குறும்பாக நான் ஊகித்த வாய்ப்புக்கள், கீழே படம் வடிவில், கொடுத்துள்ளேன். அதாவது இரண்டு படங்களிலும் 'அகமதாபாத் - வாபி' இருப்புப் பாதை சற்று (1 கி.மீ) தூரம் அதிகம். வாபி, அகமதாபாத்ல ஒரு பக்க பிளாட்பாரம் அரை கி.மீ அதிகமோ.. அல்லது.. வாபில ஒரு பாக்க பிளாட்பாரம் 1 கி.மீ (நம்ப முடிலையாள) அதிகமோ ?

4) "No 'one' Under stands" (no-one undersands)

5) 20 Horses have Forty -fore legs -- இருபது குதிரைகளுக்கு நாற்பது முன்னங்கால்கள்  -- சரிதானே..

6) 60 ஆப்பிள்கள் --  60 sick soldiers ( நோயடைந்த வீர்கள்) 
                             --  60 sikhs soldiers (சீக்கிய வீரர்கள்)

சரியாக விடைகளைச் சொன்ன அனவருக்கும் பாராட்டும் நன்றியும்
படித்தும், பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
==========================
  


30 Comments (கருத்துரைகள்)
:

மாணவன் said... [Reply]

வடை....

மாணவன் said... [Reply]

வடை ரொம்ப லேட்டோ.. சரி ஏதோ முடிஞ்சவரைக்கும் பார்த்து கொடுங்க ... :))

மாணவன் said... [Reply]

ஹையா முதல் வடைதான்.. :))

எஸ்.கே said... [Reply]

விடை எதுவுமே சரியில்ல. அதனால எங்க விடைகளுக்கு தகுந்த மாதிரி கேள்விகளை மாத்திடுங்க!

மாணவன் said... [Reply]

//எஸ்.கே said... [Reply] 3
விடை எதுவுமே சரியில்ல. அதனால எங்க விடைகளுக்கு தகுந்த மாதிரி கேள்விகளை மாத்திடுங்க!//

வழி மொழிகிறேன்.......ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

மாணவன் said... [Reply] 1

வடை....
//

யோவ் இது வடை இல்லை. விடை

சக்தி கல்வி மையம் said... [Reply]

Nice..

சக்தி கல்வி மையம் said... [Reply]

நானும் வந்துட்டேன் உள்ளே ஹா ஹா ஹா....
இனி தினமும் வருவேன்.

சக்தி கல்வி மையம் said... [Reply]

ஓட்டும் போட்டுட்டோமில்ல..

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

வெளங்கிருச்சு

RVS said... [Reply]

மாதவா.. எங்கியோ போய்ட்டப்பா!!! ;-)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மாணவன்
ஒங்க ஆர்வத்தைப் பாத்து புல்லரிக்குது..

ஸ்ரீராம். said... [Reply]

"ஏய்... அப்போ நான்...(கையை காற்றில் வட்டம் போடவும்) ஸீரோவா ..?" (நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதா போல படிக்கவும்!!).

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே
'வடை' சரியில்லேன்னா மாத்தி தரலாம்..
'விடை' சரியில்லையா.. அதற்கு மாற்று இல்லையே, எஸ்.கே..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
ஹா... ஹா.. ரைட்டு.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@sakthistudycentre-கருன்
வாங்க கருண்.. புகுந்து வெளையாடுங்க.. .

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி
அப்ப சரி.. ரொம்ப வெளக்க வேணாம்..

எஸ்.கே said... [Reply]

//"ஏய்... அப்போ நான்...(கையை காற்றில் வட்டம் போடவும்) ஸீரோவா ..?" (நினைத்தாலே இனிக்கும் ஜெயப்பிரதா போல படிக்கவும்!!).//

அடக்கடவுளே இதுக்காக மும்பைக்கு போய் ஆபரேசனெல்லாம் பண்ணிட்டு வரணும் போல இருக்கே!:-))

Madhavan Srinivasagopalan said... [Reply]

@RVS
அமாம்.. அகமதாபாத்துக்கு (வாபி வழியா) போயிட்டு வந்திட்டேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.
இல்லை ஸ்ரீராம்.. உங்க ரேஞ்சுக்கு எனக்கு கேள்வி கேக்கத் தெரியலை..
இந்த மாதிரி ஜுஜுபி கேள்விக்குலாம் நீங்க அட்டென்ட் பண்ணா உங்க சட்ட டாஸுக்கு தகுமா.. ? சாரி.. சாரி... தெரியாம கேட்டுட்டேன்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@எஸ்.கே
அதான.. எஸ்.கே சரியா கேட்டீங்க.. நாம எப்படி ஜெயப்ரதா ஆக முடியும், அந்த மாதிரி படிக்குறதுக்கு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.
//நீங்க அட்டென்ட் பண்ணா உங்க சட்ட டாஸுக்கு தகுமா.. ?//

"ஸ்டேட்டஸுக்கு தகுமானு" சொல்ல வந்தேன்.. ஸ்பெல்லிங் மிஸ்டேக்கு ஆகிடிச்சு..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Chitra

புன்னகைக்கு(அரசியோ?) நன்றி..

CS. Mohan Kumar said... [Reply]

//இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்//

No. not coming. Is this also a quiz??:))

Madhavan Srinivasagopalan said... [Reply]

@மோகன் குமார்

இதை நீங்கள் 67 வது நபராக வாசிக்கிறீர்கள்

May be that time, the link had some problem.

வினோ said... [Reply]

ரொம்ப யோசிச்சா இப்படி தான் :(

R. Gopi said... [Reply]

ஐயோ, ஐயோ முடியலை.

ஆனாலும் உங்களுக்கு மூளை ஜாஸ்தி என்பதை லேசான பொறாமையுடன் ஒப்புக் கொள்கிறேன்

அனு said... [Reply]

நல்ல யோசிச்சிருக்கீங்க.. you are great!!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@வினோ
@Gopi Ramamoorthy
@அனு

உங்கள் வருகைக்கும்..
ஆதரவிற்கும் நன்றி..
அடிக்கடி வாங்க ..

பெசொவி said... [Reply]

வோட்டு போட்டுட்டேன்.

கமெண்ட் எழுதத் தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...