அ(ன)ர்த்தமுள்ள கிரிக்கெட்

ஹி... ஹி.. உலகக் கோப்பை கிரிக்கெட் ஆரம்பிச்சிடிச்சி.. அதோட விளைவுதான் இந்த ப்   பதிவு.. ஏதோ என்னால முடிஞ்சது.. சில கிரிக்கெட் வார்த்தைகளுக்கு குறும்பான  அர்த்தங்கள்..

  1. point - புள்ளி 
  2. silly point  - விஷமப் புள்ளி 
  3. short leg - குட்டைக் கால்
  4. forward short leg - முன் குட்டைக் கால் 
  5. long leg -  யானைக் கால் (பெரிய காலுங்க அதான்) 
  6. square leg  - வர்க்கக்  கால் 
  7. fine leg  - செம காலு
  8. deep fine leg - ஆழமான செம காலு..   
  9. mid wicket  - நடு குச்சி 
  10. deep mid wicket  - ஆழ(மான) நடு குச்சி 
  11. cover  - மூடி
  12. deep cover   - ஆழமான மூடி 
  13. country - நாடு / தேசம்
  14. wicket keeper  - குச்சி (யை) வைத்திருப்பவர் / காப்பவர் (ஹி.. ஹி.. அப்புறம் என்னாத்துக்கு பந்து விக்கெட் மேல பட்டா அழுவாம கொண்டாடுறாரு ?)
  15. first slip  - முதல் வழுக்கல்
  16. second slip  - இரண்டாவது வழுக்கல் 
  17. thirdman - மூணாம் மனுஷன்
  18. gully   - கள்ளி(ப்பயல் )
  19. delivery - பிரசவம்
  20. good delivery - சுகப் பிரசவம்  
  21. full length delivery - முழு நீள பிரசவம் (ரொம்ப நேரம் ஆச்சு..)
  22. no ball - இல்லாத பந்து
  23. chainaman - சீனஆளு 
  24. swing - ஊஞ்சல்
  25. in -swing -  (வீட்டு ) உள் - ஊஞ்சல் 
  26. out -swing  - தோட்டத்து ஊஞ்சல் 
  27. wide - வெளிக்குத்து 
  28. square cut - வர்க்க வெட்டு (வர்க்கத்தையே வெட்டு -- பூண்டோட வெட்டு)
  29. french cut - பிரான்சு வெட்டு...
  30. striker -  அடியாளு
  31. all rounder  - அல்லாரும் சுத்துறவங்க.. 
  32. front   / back foot = முன்னடி  / பின்னடி 
  33. Googly   - கூகிளாண்டவர்..
  34. leg break - காலை (எலும்ப) உடை.
  35. leg cutter - காலை வெட்டுபவர்  
  36. late cut -  அப்பால வெட்டு
  37. Free 'hit ' -  இலவச கொசுமருந்து 
  38. extra - அதிகப்படி..
  39. Single - திருமணம் ஆகாதவர். 
  40. doosra - சின்னவீடு (ரெண்டாவது...)
  41. Umpire          - நாட்டாமை ( நன்றி எனது மச்சான்)
  42. Leg Umpire    -  குவாட்டர்(கால்) நாட்டாமை
  43. Umpire Review - நாட்டாமை தீர்ப்ப மாத்து..
  44. over - முடிஞ்சிடிச்சு..
  45. Bye - வர்ட்டா  

மிச்ச சொச்சம் இருந்தா பின்னூட்டத்துல அ(ன)ர்த்ததொட சொல்லுங்க..

நன்றி (படங்கள்)  -- http://www.cricketupdates.org/cricket-fielding-positions.html  மற்றும் கூகிள் தேடல்..  
========================= ====

19 Comments (கருத்துரைகள்)
:

மாணவன் said... [Reply]

சூப்பரு.... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

நல்ல தூஸ்ரா கிடைக்க வாழ்த்துக்கள்!

வெங்கட் said... [Reply]

// Bye - வர்ட்டா //

அப்ப Leg Bye..? - காலை வாரட்டாவா..?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

catch...?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

powerplay....?

CS. Mohan Kumar said... [Reply]

முடியல.. கண்ணை கட்டுது

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

boundary...?

எஸ்.கே said... [Reply]

கலக்கல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

leg before wicket, bowled, caught and bowled, run, run-out, stumping

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

full toss, yorker

Anonymous said... [Reply]

Single - திருமணம் ஆகாதவர்//
இது யாரு சிரிப்பு போலிஸ் ரமேஸ்??

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஆர்.கே.சதீஷ்குமார்

ஹி.. ஹி.. .. சூப்பரப்பு..

Unknown said... [Reply]

கலக்கல்

ஸ்ரீராம். said... [Reply]

சும்மா புகுந்து விளையாடி இருக்கீங்க...

சாய்ராம் கோபாலன் said... [Reply]

மாதவன்

ஏன் இந்த கொலைவெறி. கிரிக்கெட்டர் ஆர்.வி.எஸ். நொந்துபோவார் !!

RVS said... [Reply]

//ஏன் இந்த கொலைவெறி. கிரிக்கெட்டர் ஆர்.வி.எஸ். நொந்துபோவார் !!
//
சாய்! ரொம்ப பயமா இருக்கு... நீங்க கொஞ்சம் துணைக்கு வரீங்களா... இந்த இடத்தை விட்டு ஓடிப் போய்டலாம்.. ;-)))))))))))))))

டக்கால்டி said... [Reply]

Tucker

Unknown said... [Reply]

சூப்பர் காமடி. அப்படியே பன்னிக்குட்டி ராம்சாமியோடத சேத்துக்குங்க

தமிழ்வாசி பிரகாஷ் said... [Reply]

ஹி..ஹி...

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...