உலகக் கோப்பை கிரிக்கெட் - 2011 (4)

எனக்கு நல்லா நினைவு இருக்கு.. 1992 ல இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி, உலகக் கோப்பை லீக் ஆட்டங்களில்.. ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகள்.
முதலில் இந்தியா ஆடி.. 216 ரன்கள் மட்டுமே எடுத்தது..  ஸ்ரீகாந்த் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது.. ஆனா, ஜடேஜா, அசாருதீன், முக்கியமா, டெண்டுல்கர், கபில் தேவ் நல்லா ஆடி 200 க்கும் மேல ரன்களைச் சேர்த்தார்கள்.

பாகிஸ்தான் ஆமிர் ஷோஹில் செமையா விளையாடினாரு.. ஆனா டெண்டுல்கர் வீசிய பந்த அடிச்சு ஸ்ரீகாந்துக்கு கேட்சு கொடுத்து அவுட் ஆனாரு..  கபில் நல்லா பந்து வீசி.. இந்திய வெற்றிக்கு வழி வகுத்தார். 
ஒரு வழியா இந்திய பாகிஸ்தான 173 ரன்களில்  சுருட்டி வெற்றி பெற்றது..

அப்புறமா 1996 காலிறுதிப் போட்டி  -- பெங்களூருல நடந்தது. 
டெண்டுல்கர் & சித்து நல்ல ஆரம்ப ஆட்டம் தொடங்க.. அப்புறமா ஜடேஜா மட்டைய சுத்தின சுத்துல பந்து பறந்து. பறந்து.. இந்திய அணிக்கு ரன்கள் குவிஞ்சுது. ஜடேஜா பைன் லெக்குல அடிச்ச சிக்சர மறக்கவே முடியாது.

வக்கார் யூனுஸ், ஆக்விப் ஜாவித், முஷ்தாக் அஹமது விக்கெட்டு எடுத்தாலும் மூணு பேருமா சேர்ந்து 30 ஓவருல 190 ரன்கள தாரை வாத்தாங்க. . 287 என்ற வலுவான நிலையில இந்திய தனது ஆட்டத்தின் 50 ஓவரையும் முடிச்சுது.. 

தொடர்ந்து பாகிஸ்தா ஆட ஆரம்பிச்சாங்க . ரெண்டு வலுவான ஆரம்ப ஆட்டக் காரர்கள் நல்ல ஆரம்பம் தந்தாலும்.. 83 ரன்னுல சயீத் அன்வர் அவுட் ஆனதும். இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலை உருவானது. ஒரு பந்துல ஆமீர் ஷோஹைல் நான்கு ரன்கள் அடிச்சிட்டு பவுலர் பிரசாத்துக்கு பவுண்டரிய பேட்டால காட்டினாரு.. அடுத்த பந்துலேயே அவர போல்ட் அவுட் ஆக்கி.. அவருக்கு பெவிலியனுக்கு கைகாட்டி போகச் சொன்னாரு பிரசாத். இது தான் இந்த ஆட்டத்தின் ஹைலைட்

தகுந்த இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து வர.. இந்தியா வெற்றிப் பாதை நோக்கி முன்னேறியது. முக்கியமா வயசான மியந்தத் 64 பாலுல வெறும் 38 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய வெற்றிக்கு துணை பண்ணினாரு..  

ஒரு வழியா இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.. 

மத்த ரெண்டு உலகக் கோப்பை இந்தியா பாகிஸ்தான் நேருக்கு நேர் - போட்டிகளையும் நான் டி.வியில் கண்டு களித்திருந்தாலும்.. இங்கு சொல்லுமளவிற்கு ஞாபகம் இல்லை.  ( நீங்க தப்பிச்சீங்க..)

இப்ப.. இன்றைய (இந்திய) தினம்  :
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும்.. இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம்.. உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி.. இன்று (30 மார்ச் 2011 )

ம்ம்..  'விளையாட்டை' விளையாட்டாக மட்டுமே எடுத்துக் கொள்வோம்..

-- அமைதியும், மகிழ்சிசியும் நிலவட்டும்.. ஏனென்றால் உலக மக்கள் அனனவரும் ஒருவருக் கொருவர் 'நன்பேண்டா..'

டிஸ்கி : "இப்ப.. இன்றைய தினம்" என டைப்  அடிக்கும் பொது 'indraiya'  என்பதில் 'indaiya ' என தற்செயலாக டைப் அடித்ததால் அது, 'இந்திய' என வந்தது.
இன்று உண்மையில் 'இந்திய' தினமோ ?

======================================

8 Comments (கருத்துரைகள்)
:

பெசொவி said... [Reply]

படிக்கற காலத்தில கிரிக்கெட் பார்திருக்கறீங்க,உங்களை.............................
(ஒண்ணும் பண்ண முடியாது, ஹிஹி, நானும் அப்படி இருந்தவன்தான்!)

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

மலரும் நினைவுகள்

CS. Mohan Kumar said... [Reply]

Fingers crossed

middleclassmadhavi said... [Reply]

சேவாக் lbw ஆன சோகத்தில் கணிணிக்கு வந்தேன்... பார்ப்போம். Let us keep our fingers crossed

குறையொன்றுமில்லை. said... [Reply]

எல்லாருமே இண்டியாதான் கோப்பை வெல்லும்
என்று நம்புகிறார்கள். நம்பினோர் கெடுவதில்லைதானே.

ஸ்ரீராம். said... [Reply]

இப்போ சந்தோஷம்தானே...!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ sriraam..

பாகிஸ்தானோட ஜெயிச்சாலே உலகக் கோப்பை ஜெயிச்சா மாதிரிதான்.. - நம்மளுக்கு
ஆனா அது ஐ.சி.சிக்குத் தெரியாதே.. அதுனால.. அதுனால.. ஃபை நாளிலும் ஜெயிக்கனுமாமே.. அப்புறம்தான் கப் தருவாங்களாம்...

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said... [Reply]

// 'விளையாட்டை' விளையாட்டாக மட்டுமே எடுத்துக் கொள்வோம்.. //
பொதுவாக ஓகே... ஆனால் பாகிஸ்தானுடன் விளையாடும் பொது ஒரு யுத்தம் மாதிரி மீடியா(க்கள்) ஆக்கிடுதே!! விசிட்

www.sagamanithan.blogspot.com

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...