பெயர்க்குறிப்பு (தொடர்பதிவு )

முதலில் என்னை இந்த தொடர் பதிர்விற்கு அழைத்த ஆர்.வி.எஸ் மற்றும் ஆர்.கோபி இருவருக்கும்  நன்றிகள் (சமத்தா, சமமா பிரிச்சிக்கோணும்,  ஆமா) .

என்னைப் பார்த்து 'பெயர்காரணம் சொல்லு' என்றால், நான் எனது பிள்ளைகளுக்கு வைத்த பெயர் காரணத்தை தான் சொல்ல முடியும்.  எனக்கு என் இந்தப் பெயர் வைத்தார்கள் என்று எனது பெற்றோரைத் தான் கேட்கவேண்டும்.

இருந்தாலும் அவை(வலைதள) அடக்கம் என்று ஒற்று இருக்கிறதே. அதன் பொருட்டு, எனக்கு இந்தப் பெயர் வந்த காரணத்தையும், இந்தப் பெயரின் அர்த்தத்தையும், சின்ன வயதில் எதிரிகள் (கிண்டல் செஞ்சா, அவன் நண்பனா?) மூலம் எனக்கு கிடைத்த பட்டப் பெயர் - ஒரு சிறு குறிப்பும் இந்தப் பதிவில் தருகிறேன். 

மாதவன் - இதுவே எனது முதல் பெயர். நான் பிறந்த பொது பிறப்புப் பதிவு (Registration of Birth) கட்டாயமாக இருந்தாலும், பிறப்புச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப் படவில்லை. எனவே அந்தச் சான்றிழ் மூலம் எனது பெயரை நான் ஆதாரமாக காட்ட முடியாவிட்டாலும் எனது பள்ளிப் பதிவில் இந்த பெயரே தரப் பட்டது. எனவே இதுதான் எனது அதிகாரபூர்வப் பெயராகும். (அதிகாரம் பண்ணறது நானில்லீங்கோ)
 
புதுக்கோட்டை மாவட்டத்தில், இருக்கும் ஊரான திருக்கோஷ்டியூரில் இறைவனை எனது தந்தை தரிசித்துவிட்டு வந்த சிறிது நாட்களில் நான் பிறந்ததால், இப்பெயர் எனக்கு வைத்ததாக எனது அன்னையார் சொல்லியிருக்கிறார்.

எனது பெயருக்கு, வலைதளத்தின் மூலம் தெரிந்து கொண்ட அர்த்தங்கள்..

இவ்ளோ பிரபலமா?
இந்தப் பெயர், ஆயிரம் நாமங்களை உடைய பெருமானின்  பெயர்களுள் ஒன்றாகும். 'மா' என்றால் 'அறிவு / ஞானம்'. 'மா'தவன் அதன் அரசர்  (லார்ட்) ஆவார்.  
 

'மாதவன்'  - 'நற்பேறு / சந்தர்ப்பம்' என்பதன் இறைவியின் கணவர்.
(He is known as Madhav meaning the Husband of Goddess of fortune, Sri Lakshmi.)

வசந்தகாலத்தின் கடவுள். (God of Spring)

இருந்தாலும் நான் நினைக்கும் மற்றொரு அர்த்தம் 
மாதவன் = மாதவத்தோன்,
  • மா - பெரிய
  • தவத்தோன் - தவம் செய்யும் வலிமையைப் பெற்றவன்
கடும் தவத்தினை செய்யவல்ல திறமையை கொண்டவன்  --
(ஹி.. ஹி.. திறமை இருக்கு.. ஆனா அப்படிலாம் செய்ஞ்சு ஒரேயடியா பெரியாளாக வேண்டாமுன்னு பாக்குறேன்..)
 
ஒட்டுகேட்கும் வல்லவர் : பள்ளிப் பருவத்தில் வெவ்வேறு குழுக்களால (குரூப்புதான்) இருந்தப்ப, எதிரிக் குழுவில் நடக்கும் ஆலோசனை / திட்டங்களை தெரிந்து கொண்டு எங்கள் குழு நண்பர்களுக்கு தெருவிக்க வேண்டிய பொறுப்பில் (பொறுப்பான புல்லை நானு) நான் இருந்த போது அதனை தெரிந்து கொண்ட எதிரணியினர் என்னைப் பற்றி இவ்வாறு பாடினார்கள்.  
உள்ளமது உள்ளவரை,
ஒட்டுகேட்கும் வல்லவரை,
எங்களிடம் செரேன்றால்
அந்தக்குழு என்னாகும்.. ?
('ஒளிவிளக்கு' திரைப் படத்தில் வரும்  'ஆண்டவனே உன் பாதங்களை..' பாடலில் கடைசி வரிகளாக வரும் மெட்டில்.. )

பெயரைத் தவிர போட்டோவுல இருப்பவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.

தொடர அழைக்கிறேன் 
  1. சிரிப்பு போலீசு
  2. எங்கள் - ஸ்ரீராம்
  3. எஸ்.கே
===================================== 

22 Comments (கருத்துரைகள்)
:

செல்வா said... [Reply]

vadai!

Chitra said... [Reply]

பெயரைத் தவிர போட்டோவுல இருப்பவருக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.



.....உங்க நேர்மையை பாராட்டாமல் இருக்க முடியல.... ஹா,ஹா,ஹா....

RVS said... [Reply]

மாதவத்தோனைப் பற்றி அறிந்துகொண்டோம்.. நன்றி. ;-)

செல்வா said... [Reply]

மறுபடியும் தொடர் பதிவா ? அது சரி .. உங்க பேருக்கு இம்பூட்டு அர்த்தம் இருக்கா ? ஹி ஹி

எஸ்.கே said... [Reply]

என்னை ஏற்கனவே கோபி வேற கூப்பிட்டிருக்கார் நீங்களுமா! எழுதிடுறேன்!:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

நானும் தொடர அழைக்கிறேன்

1. சிரிப்பு போலீசு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

நானும் தொடர அழைக்கிறேன்

1. சிரிப்பு போலீசு

//

யாரை ஹிஹி

வைகை said... [Reply]

1. சிரிப்பு போலீசு //

இவரு யாரு பதிவரா?

வெங்கட் said... [Reply]

// இதை நீங்கள் 3 வது நபராக வாசிக்கிறீர்கள் //

இதென்ன நான் தான் 3வதுன்னா..
அப்ப எப்படி 11 வோட்டு..?

அப்ப மக்கள் யாரும் பதிவையே
வாசிக்கிறதில்லையா..?# டவுட்டு..

பாலா said... [Reply]

பெயர் காரணத்துக்கு ரேபரன்ஸ் எல்லாம் போட்டு ஆதாரத்தோட சொல்லி இருக்கீங்க. நன்றி

R. Gopi said... [Reply]

கேசவா எனத் தொடங்கும் பன்னிரு நாமன்களுள் ஒன்று மாதவன். பன்னிரு நாமம் குறித்து ஸ்வாமி தேசிகன் சுலோகம் உண்டு. உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அழைப்பை ஏற்றுப் பதிவை இட்டதற்கு மிகக் நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

ஒரு பெயருக்குப் பின்னால இத்தனை இருக்கா?

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

இதுக்குப் போயி யாருங்க மைனஸ் ஓட்டுப் போட்டது?

ஸ்ரீராம். said... [Reply]

உங்கள் பெயர் பற்றிய எல்லா விஷயத்தையும் அறிந்து கொள்ள உதவியது பதிவு. (இரண்டாவது) அழைப்புக்கு நன்றி(கோபி ராமமூர்த்தி 'எங்களை'யும் அழைத்திருக்கார்!).

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

நெகடிவ் வோட்டா..
அப்ப நானும் பிரபல பதிவர் ஆயிட்டேனா ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

அப்படியா ஸ்ரீராம்..
என்ன செய்யுறது.. நண்பர் கோபி எல்லா பதிவரையும் சொல்லிட்டாரு போல..
எனக்கு கூப்புரதுக்கு ஆளே கெடைக்கல..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Gopi Ramamoorthy

ஆம்மாம், நண்பரே.. இதுவும் சரிதான்... விடுபட்டுவிட்டது..

Madhavan Srinivasagopalan said... [Reply]

பின்னூட்டம், வோட்டு போட்ட அனைவருக்கு மிகுந்த நன்றிகள்.
ஆதரவு தொடரட்டும்..

கோமதி அரசு said... [Reply]

திருமாலின் திருநாமத்தில் ஒன்று மாதவன்.

//மாதவா,மதுசூதனா என மனதில் துயரமில்லை
நாரயணமந்திரம் அதுவே நாளும் பேரின்பம்.//
(பாட்டு: பகத பிரகலாதன்)
மாதவத்தோனை தினமும் நினைக்கத்தான் பெற்றவர்கள் வைத்து இருக்கிறார்கள்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கோமதி அரசு

மிகவும் சரியாகச் சொன்னீர்கள்..
மிகுந்த நன்றி மேடம்.

ப்ரியமுடன் வசந்த் said... [Reply]

அப்போ மா தவன் என்றால் பெரிய தவம் செய்து பிறந்த குழந்தை என்று அர்த்தம் இல்லியா சார்?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ப்ரியமுடன் வசந்த்

இந்த ஆங்கிலுல நா யோசிக்கவே இல்லை, வசந்த்.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி..

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...