உலகக் கோப்பை கிரிக்கெட் - 5

முதலில்.. வெற்றி பெற்ற இந்தியா அணியினருக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். அந்த வீரர்கள் "இந்த வெற்றி அனைத்து இந்திய மக்களுக்காகவே", எனச் சொன்னதால் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

1987 ல்  முதல் உலகக் கோப்பை கிரிக்கெட்டை டி.வி யில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 1983 ல் கிரிக்கெட் பற்றி தெரியாத வயதில்.. அந்த வெற்றி பற்றி தெரியவும் இல்லை.. கொண்டாடவும் இல்லை. ஆனால் 1987 ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் புது ஆர்வத்தோட தொலைகாட்சி பார்வையாளனாக, கிரிக்கெட் ரசிகனாக நானும் கலந்து கொண்டு.. நாங்களாகவே கற்பனை செய்து இந்திய - பாகிஸ்தான் நாடுகளில் போட்டிகள் நடைபெறுவதால், அவை இரண்டுமே இறுதி ஆட்டத்தில் விளையாடும்.. அதில் இந்திய அணி வெற்றி வாகை சூடும் (அப்போதைய நாளில் நடப்பு சாம்பியன்).. 
--  அப்போது பலிக்கவில்லை எங்களது கற்பனை. அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றோம்.

1992 ல் மழை நடுவே நடந்த பல போட்டிகள், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து நாடுகள் நடத்தியது. முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய-இலங்கை ஆட்டம் மழையால் நடைபெறாது விட்டது.. இருவருக்கும் தலா ஒரு புள்ளிகள்.. அப்போது இந்திய அணியை விட இலங்கை அணி அந்த அளவிற்கு வலுவானதில்லை --  ம்ம்.. மேச்சு நடந்திருந்தா தெரிஞ்சிருக்கும் (!) இதனாலேயே அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை என அங்களுக்கு சமாதானம் செய்து கொண்டோம். இந்த போட்டிகளில் ஆறுதலான விஷயங்கள்.. அப்போதைய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் முதல் சுற்றோடு வெளியேறியது. மேலும்.. நன்றாக விளையாடி வந்த தென்.ஆப்ரிக்க அணி, மழை காரணமாக தோல்வி கண்டது.. ஒரு நேரத்தில் வெற்றிக் கோட்டை நோக்கி சரியான முறையில் முன்னேறிய அணிக்கு ஒரு பெரிய அதிர்ச்சி.. மழையினால் திடீரென 1 பந்தில் 22 ரன்கள் என புதிய முறையில் சொல்லப் பட்ட இலக்கு.... ( ம்ம்.. கலிகாலம்டோய்.. )

1996 லிலும் நமது கற்பனைக்கு அளவில்லாமல்.. இந்தியா முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியுடம் தோற்றாலும்.. நமக்கென்னவோ இந்தியா தான் வெற்றி வாகை சூடும் என நினைத்தோம். இலங்கையின் அதிரடி ஆட்டத்தின் விளைவாக.. ஆமாம்.. அந்த முறை இலங்கை அணி மிகவும் சிறப்பாக அனைத்து ஆட்டங்களிலும் ஆடி.. சாம்பியன் ஆகத் தேவையான தகுதியான அணியா இருந்து வெற்றியும் பெற்றது. ஆட்டங்கள் நடத்தும் நாடோ.. இறுதி ஆட்டத்தில் இரண்டாவதாக மட்டை பிடித்து ஆடும் அணியோ வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை என்பதையும் மாற்றியமைத்தது.

1999 -- வழக்கம்போல அந்தளவிற்கு கற்பனை செய்யாமல்.. (சற்று வளந்திருந்ததால்.. யதார்த்தம் தெரிந்ததால்) இந்திய அணிக்கு கண்ணை மூடிக் கொண்டு ஆதரது தெரிவிக்காமல்.. அவர்கல் ஆடும் விதம் கொண்டு இந்திய அணியின் வாய்ப்பை கணிக்கும் வல்லமை இருந்தது எனக்கு. அந்தப் போட்டிகளில் சிறப்பா அடியவர்களை சச்சின் டெண்டுல்கரும் ஒருவர். தனது தந்தைய இழந்து ஒரு போட்டியில் விளையாட முடியாவிட்டாலும் அடுத்த் அபோட்டியில் கலந்து கொண்டு செஞ்சுரி அடித்து.. தனது தந்தைக்கு அற்பணித்ததாகச் சொன்னார். இருந்தும இந்திய அணில் மேற்கொண்டு வெற்றி பெற முடியவில்லை.. கோப்பை பெரும்  வாய்ப்பு இருக்கவில்லை.

2003 -- ஆரம்பத்திலிருந்தே நன்றாக விளையாடி கோப்பை பெருமளவிற்கு நம்பிக்கை அளித்தனர். அரை இறுதியிலும் சிறப்பாக விளையாடினர். ஆனாலும் நம்மை சனி பிடித்தது போல.. இறுதி ஆட்டத்தில் சொதப்பலாக பந்து வீசி.. பலமான ஆஸ்திரேலிய  அணியை மேலும் பலப் படுத்தினார்கள். சாம்பியன் அணி எப்படி இருக்கவேண்டுமோ அதுபோலவே ஆஸ்திரேலிய அணி சிறப்புடன் விளையாடி, இந்திய அணியை நூறிற்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது.

மேற்சொன்ன அனைத்து உலகக் கோப்பை ஆட்டங்களிலும் (1987 நீங்கலாக, ம்ம்.. இரண்டு அணிகளும் வெவ்வேறு குரூப்புகளில் இருந்ததால், நேரடியாக மோதவில்லை.)   இந்திய அணிக்கு ஆறுதல்.. ஒவ்வொரு முறையும், பாகிஸ்தானை வீழ்த்தியது.

2007 பங்களாதேஷ் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி.... முதல் சுற்றிலேயே வெளியேறியது.. ஒரு நாள் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வியில் போட்டியிலிருந்து வெளியேறவும்.. மறுநாளே இந்தியாவும் வெளியேறியது. நாம தோத்தாலும், பாகிஸ்தானும் ஏற்கனவே தோற்றிருந்ததால் என்னவோ ஆறுதல்..
 
2011 : தோனியின் தலைமையில் ஆரம்பம் முதலே வெற்றிவாகை சூடத் தகுதியுள்ள அணி எனத் தோன்றியது. அதென்னவோ தெரியல தோனியின் பாணியே தனிதான்.  அவருடைய 'கீப் கூல்' பாணி பாராட்டப் பட வேண்டியதே. சாதித்துக் காட்டிவிட்டார். காலிறுதி.. அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் வலுவான எதிரணியினரை சந்தித்து.. வெற்றி வாகை சூடிய விதம் பாராட்டப் பட வேண்டியது... வாழ்த்துக்களும் நன்றியும் இந்திய அணியினருக்கு...

இந்த முறை அரை இறுதிப் போட்டிக்கு முன்னர் எனக்கு நண்பர் ஒருவர் அனுப்பிய படம்.. இதோ...
ஆமாம் ரஜி(ஜ)னிகாந்த் அவர்களை நேற்று பார்வையாளர்கள் அரங்கில் காண முடிந்தது.....  இந்திய வெற்றி பெறுவதை காண அவருக்கு அப்படியொரு ஆர்வம்.. நமது ஆசைக் கனவு நடந்தேறியது, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில்..

டிஸ்கி : பெரும்பாலும் பலர் நேற்றைய ஆட்டம் பற்றி மட்டுமே எழுதுவார்கள்.. நாமதான் வித்தியாசமா ஏதாவது சொல்லணும்.. அதுவும்.. பழைய விஷயங்களைச் சொன்னா.. தற்போதைய வெற்றியின் அருமை மேலும் விளங்கும் என கற்பனை செய்து கொண்டு இப்படி எழுதினேன்...
=======================================


10 Comments (கருத்துரைகள்)
:

Unknown said... [Reply]

WELL DONE INDIA!

R. Gopi said... [Reply]

\\மேற்சொன்ன அனைத்து உலகக் கோப்பை ஆட்டங்களிலும் (1987 நீங்கலாக) இந்திய அணிக்கு ஆறுதல்.. ஒவ்வொரு முறையும், பாகிஸ்தானை வீழ்த்தியது.\\

வேற வேற குரூப்ல இருந்ததால இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கவில்லை என்பதைத் தெளிவா சொல்லுங்க சார்.

\\கற்பனை செய்து கொண்டு\\

சொன்னது பூரா உண்மை. கற்பனை எங்கேருந்து வந்துது:-)

ஆஸ்தராலியாவிலும் நியூசியிலும் மேட்ச் நடக்கும்போது விடிகாலை எழுந்து பாப்பேன். அப்போ நாம இங்கிலாந்து கிட்ட தோத்த மேட்சிலும் மழை வந்து நம் வெற்றி வாய்ப்பைக் குறைத்தது. தோற்றோம்.

R. Gopi said... [Reply]

சவுத் ஆப்ரிகா கூட விளையாடும்போதும் மழை வந்து ஓவர்கள் குறைக்கப்பட்டன. ஐம்பது ஓவர் நாம் ஒழுங்கா விளையாடிய மேட்ச் ரொம்பக் கம்மி அந்த நேரத்தில்

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

சூப்பர் மாதவன்.......... well done Team India......!

ஸ்ரீராம். said... [Reply]

சங்கக்காராவிடம் பரிசளிப்பு விழாவின் போது ரவி சாஸ்திரி கேட்டிருக்க வேண்டிய இரண்டு கேள்விகள்...!!இலங்கை அரையிறுதியில் வென்றபோது சங்கக்காரா சிங்களத்தில் சொன்னது என்ன (ஓரளவு யூகிக்க முடியும் என்றாலும்...), டாசில் முதல்ல காதுல விழலைன்னு சொன்னது பொய்தானே

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Gopi Ramamoorthy

//வேற வேற குரூப்ல இருந்ததால இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கவில்லை என்பதைத் தெளிவா சொல்லுங்க சார்.//

சொல்லிவிட்டேன். நன்றி கோபி சார்..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பன்னிக்குட்டி ராம்சாமி

நன்றி ராம்ஸ்..
இருந்தாலும் 'வெல்டன்' டீம் இந்தியான்னு சொல்லுங்க..

Madhavan Srinivasagopalan said... [Reply]

@கலாநேசன்

ஆமாம்.. 'வெல்டன்' டீம் இந்தியா

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ஸ்ரீராம்.

ஆமாம்.. ஸ்ரீராம்.. அவருகிட்ட கேட்டிருக்கலாம்..
அவரு சிங்களத்துல என்ன சொன்னாரு ?
டாஸ்ல நடந்த குழறுபடி என்ன ..?

போனாப் போகுது.. டாஸ்லயாவது அவங்க ஜெயிச்சாங்களே..!

RVS said... [Reply]

ரஜினிகாந்த் பேர்ல இந்திய வீரர்களை அடக்கியது அற்புதம். நல்ல கம்பைலேஷன். ;-))

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...