டவுட்டு..... (தமாசுக்குதான்)

எனது திருமணத்தின் போது, எனது சட்டத்தினுள் சகோதரர் (ப்ரதர்-இன்-லா) , ஒரு ஜோடி கைகடிகாரங்களை அளித்தார். அதனுள் இருந்த இரண்டு கைகடிகாரங்களில் ஒன்று பெரியது(big size - ஆண் அணிவது), மற்றது சிறியது (smaal size - பெண் அணிவது).
டவுட்டு  1 : அது ஏன் பெண் அணியும் கைகடிகாரங்கள் சிறியதாக இருக்கிறது ?
டவுட்டு  2 : எதற்கு சிறிய கடிகாரத்தில் 'தேதி' காண்பிக்கும் வசதி இல்லை (பெரிய கடிகாரத்தில் அந்த வசதி உள்ளது-  ஆணாதிக்கமோ )  ?  உண்மையில் இந்த டவுட்டு என்னோட மனைவி கேட்டது.
டவுட்டு 3 : கைக்கடிகாரத்திலும் ஆண், பெண் என வெவ்வேறு இருப்பது ஏன் ?
டவுட்டு 4 : சைக்கிளில் கூட ஆண், பெண் பாகுபாடு இருக்கிறது. இந்தக் காலத்தில் பெண்கள் பெரும்பாலோனோர் சுடிதார் அணிவதால் இந்தப் பாகுபாடு இனியும் தேவையா ?

ரெண்டாவது டவுட்டிற்கு, நான், எனது மனைவியிடம், "பெண்களுக்கு ஞாபக சக்தி அதிகம்.. தேதியை, கடிகாரம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் அவர்கள் இல்லை", என்று சொல்லி சமாளித்தேன் (!).

சாவிகளில் கூட ஆண் சாவி, பெண் சாவி என இருவகை உண்டு, தெரியுமா, நீங்கள் கேள்விப்பட்டதுண்டா ?  (உண்மையில் அப்படி உள்ளது.. male pin, femal pin என்பதைப் போன்று)

கடிகள் :
டைப்ரைட்டர் ஆனா பெண்ணா ?  விடை : ஆண்  -- காரணம் : அதில் ரிப்பன் கட்டப் பட்டுள்ளதே..!

எழுதுகோல் ஆனா பெண்ணா ?   விடை : அது ஒரு pen . (சரிதான...?)

தகவல் : (உங்களுக்கு தெரியாது பாருங்க.. அதான் சொல்லுறேன்)

ஆங்கிலம், தமிழ், சமஸ்க்ரிதம் போன்ற மொழிகளில் எந்த ஒரு பொருளும், 'ஆண்', 'பெண்', 'போது(அஃ றினை)' என மூன்று வகை 'பால்'(gender )  உண்டு.

ஆனால் ஹிந்தியில் 'ஆண்' அல்லது 'பெண்' என இரு வகை மட்டுமே.
பொதுவாக 'இ' எனும் ஒலியில் முடிபவை பெண்பாலாகவும், (விதிவிலக்கு : பாணி - நீர் -- இது ஆண் பாலாகும்)
மற்றவை 'ஆண்' பாலாகவும் இருக்கும் (விதிவிலக்கு - ஹவா - காற்று -- பெண்பாலாகும்)

டிஸ்கி : இந்தப் பதிவு கணக்குல வருமா ? (சும்மா, எப்படியோ தேத்துனது..)
------------------------------------------------

இமெயில் --- ஜிமெயில்

எனது 'சுய புராணம்'(என்னைப் பற்றி), நீங்கள் படித்திருந்தால், உங்களுக்குத் தெரிந்திருக்கும், நான் ஒரு ஆராய்ச்சியாளனென்று. அப்படி என்னதான் ஆராய்ச்சி செய்தேனா? என்ன கண்டு பிடித்தேனா ?

எனக்குத் தேவையில்லாத மின்னஞ்சல் ஒன்று வந்தது..  டு அட்ரஸ்ஸ பாத்தா.. என்னோட மின்னஞ்சல் முகவரியில எக்ஸ்ட்ராவா ஒரு புள்ளியுடன் (.) இருந்ததால் எனது ஜிமெயில் முகவரிக்கு வந்து விட்டது.

எனக்கு ஆச்சரியம்.. ஆரம்பித்தது எனது ஆராய்ச்சி..


zyxvutsrq@gmail.com   என்று ஒருவரது முகவரி, ஜிமெயில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
  1. .zyxvutsrq@gmail.com 
  2. z.yxvutsrq@gmail.com 
  3. zy.xvutsrq@gmail.com  
  4. zyx.vutsrq@gmail.com 
  5. zyxv.utsrq@gmail.com  
  6. zyxvu.tsrq@gmail.com 
  7. zyxvut.srq@gmail.com  
  8. zyxvuts.rq@gmail.com 
  9. zyxvutsr.q@gmail.com  
  10. zyxvutsrq.@gmail.com

 மேற்கண்டவாறு புள்ளியை (.) எங்கு சேர்த்தாலும், அவையெல்லாம் ஒரே ஜிமெயில் முகவரியைத் தான் போய்சேரும் (zyxvutsrq@gmail.com)

எனது ஆராய்ச்சி இத்துடன்  முடிவடையவில்லை.
அதே ஜிமெயிலுக்கு பதிலாக யாஹூவாக இருந்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு முகவரிகளை குறிக்கும்.

எப்படி என்னோட ஆராய்ச்சி ?

ஹி.. ஹி...  இந்த மாதிரி ஜிமெயில் முகவரி இருந்தா எப்படி ?
.......................@ஜிமெயில்.com

வீரனுக்கு ஜகஜம் (IPL-4)

எப்படியோ, இந்த மாசம் நா ரொம்ப பதிவு எழுத முடியலை.. நீங்கலாம் ரொம்ப கஷ்டப் படாம இருந்திருப்பீங்க... 

மாசத்துக்கு சராசரியாக ஒரு பத்து பதிவாவது எழுதிக் கிட்டு இருந்தேன்.. இப்பா பாதிகூட வரலை.. 2500 முதல் 3000 வரை பேஜ் விசிட் இருந்திச்சு.. இந்த மாசம் ஜஸ்ட் 500 கூட தாண்டவில்லை இதுவரை.. 

அதுசரி.. என்னோட கஷ்டம் என்னோட இருக்கட்டும்.. சரி விஷயத்துக்கு வரேன்.

ஐ.பி.எல் - 4ல்  முக்கியமான புதுமை..  முதல் சுற்றுக்குப் பின்னர் நேரடியாக நாக்கவுட் எனப்படும் கால் / அரை  இறுதி போட்டிகள் இல்லாமல் சற்று மாறுபட்டு இருப்பது (New playoffs phenomena of IPL-4, படத்தைப் பார்க்கவும்)
முதல் தகுதிப் போட்டியில் தோற்கும் அணியுடன் (2 ) , இரண்டாம் தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணி மோதும்(3 ) . இதைப் பார்த்தபோது எனக்கு செந்தில் கவுண்டமணி ஜோக்குதான நினைவிற்கு வந்தது. அதாவது செந்தில், அணி எண் 3 ஆகவும், கவுண்டமணி, அணி எண் 2 ஆகவும் கற்பனை செய்து பார்த்தேன்.  

இடம் : ஆடுகளம்
நேரம் : டாஸ் போட்டு முடித்த அடுத்த நிமிடம். 
செந்தில் : ம்ம்.. விளையாடவே வேண்டாம்.. நாங்க ஜெயிச்சதா சொல்லிடலாம்
க.மணி : முட்டை (அடிச்ச) மண்டையா.. இப்ப நீ ஜெயிச்சது டாஸ்லதான். 
செந்தில் : ம்ம்.. நா ஒன்னும் அவ்ளோ முட்டாள் இல்லை.. எனக்கு தெரியும்.
க.மணி : அப்புறம் ஏண்டா அப்படி சொன்னே.
செந்தில் : போன மேட்ச்சு ரிசல்ட்டு ஞாபகம் இருக்கா ?
க.மணி : நாம ரெண்டு பேருமே குவாலிஃபயர் 2ல விளையாட தகுதியடஞ்சோம்.... 
செந்தில் : முக்கியமா -- நாங்க ஜெயிச்சோம்.. நீங்க தோத்தீங்க..
க. மணி : அடேய் ஃபுட்பால் வாயா, நாங்க உங்கள விட ரான்க்ல முன்னாடி இருந்தோம்டா..
செந்தில் : அதெல்லாம் தேவையில்லை..  (எங்களுக்கு கெடைச்ச ) வெற்றி பெரிசா, (உங்களுக்கு கெடைச்ச) தோல்வி பெரிசா ?

[ நினைவிற்கு --- ஒரு padaththil
செந்தில் : நா எட்டாவது பாஸ் அண்ணே.... நீங்க பத்தாவது ஃபெயில் அண்ணே.. 'பாஸ் பெரிசா, ஃபெயில் பெரிசா ? ]

டைம் பாஸ்.. 18-05-2011

கண்டுபிடித்து சொல்லுங்கள் : 
  1. "ஹி ஈஸ் உமன் " -- இலக்கணப் படி இப்படி எழுதமுடியுமா  சரியா ?
  2. "I is _________" -- கோடிட்ட இடத்தில் என்ன எழுதினால், சரியான வாக்கியம் வரும் ?
  3. ஒரு டாக்டரும், ஒரு இஞ்சினியரும் ஒரே பெண்ணை காதல் செய்தார்கள்.. அந்த இஞ்சினியர் அந்தப் பெண்ணிடம் தினமும் ஒரு 'ஆப்பிள்' பழம் கொடுத்து வந்தார்,  ஏன் ?
சமீபத்தில் படித்தது :

சொல்லும் போதும், எழுதும் போதும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் ( unambiguous ) இருத்தல் வேண்டும். உதாரணமாக,
"பாறாங்கல் தரையில் விழுந்தது, எனினும் அது உடையவில்லை",
என்ற வாக்கியத்தில் 'அது' என்பதை தவித்து 'பாறாங்கல்' அல்லது 'தரை' என்று குறிப்பிட்டு சொல்லுதல் குழப்பத்தை ஏற்படுத்தாது. 

ஒரு ஜோக் : 

ஒரு மாணவர் தேர்வில் கேட்கும் பொதுக் கட்டுரைக்கு  'நண்பன்' என்ற தலைப்பில் படித்துவிட்டுச் சென்றான். ஆனால் கேட்கப்பட்ட தலைப்போ 'அப்பா'. சற்றும் தளராத அம்மாணவனோ இவ்வாறு எழுதினான்.
  • ஒரு நல்ல அப்பாவின் குணங்களை உடையவன் நான்.
  • எனக்கு பல அப்பாக்கள் இருக்கிறார்கள்.
  • அவர்களில் சிலர் ஆண்கள்.. சிலர் பெண்கள்.
  • எங்கள் பக்கத்து வீட்டில் புதியதாக ஒருவர் வந்துள்ளார். விரைவில் அவரையும் எனது அப்பாவாக மாற்றுவேன்.
  • எனது அப்பாவின் அப்பா,  எனக்கும் அப்பாவே.
  • அதுபோலவே, ஒரு அப்பாவின் எதிரியை தனது எதிரியாகப் பார்ப்பவனே சிறந்த அப்பா.
  • இரு அப்பாக்களிடையே தொடர்பு எப்படி இருக்க வேண்டுமென ஒரு அதிகாரத்தில் சொல்லியிருக்கிறார், வள்ளுவப் பெருந்தகை.  
  • அப்பாடா..

நினைத்தேன் எழுதினேன்

பெட்ரோல் : 
எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல் / டீசல் விலைகளை நிர்ணயம் செய்துகொள்ளலாம்னு சொன்னதுக்கப்புறம் கடந்த அஞ்சாறு மாசமா, பெட்ரோல் விலை ஏறுகிறதே தவிர இறங்கவே இல்லை. சுமார் 8 வருடங்களுக்கு முன், எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்தபோது, உலக எண்ணெய் வர்த்தக விலைப்படி, பெட்ரோல் விலை ஏறியும், இறங்கியும் வந்தது நினைவில் வருகிறது. எனது டூ வீலர் ரிசர்வில் இருந்தாலும், இரவு செய்தி பார்த்து.. ஒரு வேளை பெட்ரோல் விலை இறங்கினால், மறுநாள் சென்று பெட்ரோல் வாங்கியதும் நினைவில் வருகிறது. ஆனால் தற்போது, செய்தி பார்த்து உடனே சென்று பெட்ரோல் வாங்கவேண்டிய நிலையில் இன்றும் பெட்ரோல் வாங்கி (ரிசர்வே வரவில்லை என்றாலும்) நிரப்பி வந்தேன்.

அதாவது பரவாயில்லை.. பெட்ரோல் போடுவதற்கு ஒருவர் பணம் வாங்குவார்.. அவர் எத்துனை பணம் நான் கொடுத்தேன் எனச் சொல்வதை கேட்டு (கண்ணால் பார்த்தும்) மற்ற நபர் நமது வண்டி டாங்க்கில் பெட்ரோல் நிரப்புவார். நான் கொடுத்த பணம் ரூ .500   பெட்ரோல் கேட்டதோ ரூ.200 க்கு. பணம் வாங்கிய நபர் மற்றவரிடம் இருநூறு ரூபாய்க்கு போடு எனச் சொன்னது எனது காதில் நன்றாக விழுந்தது.. நானும் அந்த நபரிடம் "இருநூறு ரூபாய்க்கு", எனச் சொன்னேன். அது அந்த நபருக்கு காதில் தெளிவாக விழுந்தாலும், நான் 500 ரூபாய் தாள் கொடுத்து மீதம் மூன்று நூறு ரூபாய் பெறுவதைப் பார்த்தும், பெட்ரோல் போடுவதை இரண்டு லிட்டருடன் நிறுத்தி விட்டார்.

நான் அவரிடம் அது பற்றி கேட்டபோது, "நீங்கள் இரண்டு லிட்டர் கேட்டதாக நினைத்துவிட்டேன்'" என்றார். மீதி சில்லறை கேட்டு வாங்கவும் என்பதைப் போல , மீதி பெட்ரோலையும் கேட்டு வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டேன். நான் சரியாகக் கவனிக்காவிடில், விலை ஏற்றத்திருக்கு  முன்னர் வாங்கினால், மூன்று லிட்டருக்கு ரூபாய் 15 மிச்சமாகுமென நினைத்த நான், 1.13  லிட்டருக்கான  பணம் ரூபாய் 72 ஏமாந்திருப்பேன்.

பெட்ரோல் விலையில் நாம் அதிக வரிகள் செளுத்துகிரோமென கீழ்க் கண்ட படம் சொல்கிறது (பழைய படம்.. பழைய விலை  -- உதாரணத்திற்காகவே  ) . பெற்றோலை எண்ணெய் நிறுவனங்கள் வாங்கி அதற்கான விலையுடன் விற்பனை வரி அல்லது 'வாட்' வரி மட்டுமே இருந்தால் போதாதா ? எதற்காக சுங்க மற்றும் கலால் வரிகளும் விதிக்கப் படுகிறது ? மக்கள் நலன் கருதி வரிகளை குறைக்க முடியாதா ? (டவுட்டு) 
சட்டசபை தேர்தல் 2011 :
நேற்று தேர்தல் முடிவுகள் பார்த்தே பொழுது போய்விட்டது. மின்னணு வாக்கு வந்தபின்னும், என்ன காரணத்தினால் மாலை வரை அனைத்து முடிவிற்கும் காத்திருக்கவேண்டியதாயிற்று எனத் தெரியவில்லை. தமிழக முடிவிற்கு மட்டுமே இப்படி. மற்ற மாநிங்களுக்கான முடிவு மதியத்திற்குள் வந்து விட்டது.
எனக்குத் தெரிந்தவரை, எங்கள் ஊரில் வெற்றி பெரும் கட்சியின் அல்லது அந்த கட்சி ஆதரிக்கும் கட்சியின் ஆட்சியே இதுவரை இருந்து வந்தது.. (கண்டிப்பாக 1984 க்குப் பின்னர் ). இந்தமுறை, அந்த நிலை இல்லை. 'உலகில் நிலையானது எதுவுமே இல்லை' -- இதெல்லாம் எம்மாத்திரம். 
==================================

அட்ஷய திருதியை 2011

இன்று அட்ஷய திருதியை..

அட்ஷய பாத்திரம் போல பல்கிப் பெருகவைக்கும் நாள்..

ஆனால் தங்கம், வெள்ளி வாங்கித்தான் --- அதாவது materialistic விஷயங்களைத்தான் பல்கிப் பெருக்க வேண்டுமா ?

இன்று 
நல்ல எண்ணங்களை மனதில் வைப்போம்.. 
நல்ல செயல்களை செய்வோம்.
கோபத்தை நீக்குவோம்
அன்புடன் இருப்போம்..
ஆசையாகப் பேசுவோம் 
இனிமை / மகிழ்ச்சி  வேண்டுவோம் 

இதுபோன்ற விஷயங்கள் இன்று வேண்டி / செய்து.. அவை நமது வாழ்வில் என்றுமே நிலைத்து.. பல்கிப்  பெருத்தால்.. ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் நல்லதன்றோ !!

கமெண்ட்டு கண்ணாயிரம்..

வலைதளத்தில் / தினசரிகளில் படித்த செய்திகளிலிருந்து (நண்பர் 'Eye-Thousand' அவர்களில் கமேன்ட்டோடு..  . )

-------------------------------------------------------
 (CSK-DC IPL 20-20 dt. 1s May)

--- > ம்ம்ம்.. அவுட் ஆகுறதுதான் அவரோட பொறுப்புபோல... !
-------------------------------------------------------
அமெரிக்க டாலர் -- ரூ. 44.23 
ஆஸ்திரேலியா டாலர்-- ரூ.48.5
சிங்கப்பூர் டாலர்  -- ரூ.37.17 //

---> திருப்பதி, பழனில பத்து ரூபாய்க்கு வாங்கலாமே , கறுப்புக் கயிரோட..  !..
-------------------------------------------------------

---> வேட்புமனு தாக்கல் செஞ்சுதான்.. !!
-------------------------------------------------------

---> துப்பாக்கி வீசியவனை, வலை வீசி தேடுங்க....!
-------------------------------------------------------

--> இல்லையா பின்ன..  தலைக்கு அம்பதாயிரம் ரூபாய் கொடுத்தாக் கூட ஒரே ஒரு வினாத்தாள்தான வாங்க 
முடியும்.. !
-------------------------------------------------------