வீரனுக்கு ஜகஜம் (IPL-4)

எப்படியோ, இந்த மாசம் நா ரொம்ப பதிவு எழுத முடியலை.. நீங்கலாம் ரொம்ப கஷ்டப் படாம இருந்திருப்பீங்க... 

மாசத்துக்கு சராசரியாக ஒரு பத்து பதிவாவது எழுதிக் கிட்டு இருந்தேன்.. இப்பா பாதிகூட வரலை.. 2500 முதல் 3000 வரை பேஜ் விசிட் இருந்திச்சு.. இந்த மாசம் ஜஸ்ட் 500 கூட தாண்டவில்லை இதுவரை.. 

அதுசரி.. என்னோட கஷ்டம் என்னோட இருக்கட்டும்.. சரி விஷயத்துக்கு வரேன்.

ஐ.பி.எல் - 4ல்  முக்கியமான புதுமை..  முதல் சுற்றுக்குப் பின்னர் நேரடியாக நாக்கவுட் எனப்படும் கால் / அரை  இறுதி போட்டிகள் இல்லாமல் சற்று மாறுபட்டு இருப்பது (New playoffs phenomena of IPL-4, படத்தைப் பார்க்கவும்)
முதல் தகுதிப் போட்டியில் தோற்கும் அணியுடன் (2 ) , இரண்டாம் தகுதிச் சுற்றில் வெற்றிபெறும் அணி மோதும்(3 ) . இதைப் பார்த்தபோது எனக்கு செந்தில் கவுண்டமணி ஜோக்குதான நினைவிற்கு வந்தது. அதாவது செந்தில், அணி எண் 3 ஆகவும், கவுண்டமணி, அணி எண் 2 ஆகவும் கற்பனை செய்து பார்த்தேன்.  

இடம் : ஆடுகளம்
நேரம் : டாஸ் போட்டு முடித்த அடுத்த நிமிடம். 
செந்தில் : ம்ம்.. விளையாடவே வேண்டாம்.. நாங்க ஜெயிச்சதா சொல்லிடலாம்
க.மணி : முட்டை (அடிச்ச) மண்டையா.. இப்ப நீ ஜெயிச்சது டாஸ்லதான். 
செந்தில் : ம்ம்.. நா ஒன்னும் அவ்ளோ முட்டாள் இல்லை.. எனக்கு தெரியும்.
க.மணி : அப்புறம் ஏண்டா அப்படி சொன்னே.
செந்தில் : போன மேட்ச்சு ரிசல்ட்டு ஞாபகம் இருக்கா ?
க.மணி : நாம ரெண்டு பேருமே குவாலிஃபயர் 2ல விளையாட தகுதியடஞ்சோம்.... 
செந்தில் : முக்கியமா -- நாங்க ஜெயிச்சோம்.. நீங்க தோத்தீங்க..
க. மணி : அடேய் ஃபுட்பால் வாயா, நாங்க உங்கள விட ரான்க்ல முன்னாடி இருந்தோம்டா..
செந்தில் : அதெல்லாம் தேவையில்லை..  (எங்களுக்கு கெடைச்ச ) வெற்றி பெரிசா, (உங்களுக்கு கெடைச்ச) தோல்வி பெரிசா ?

[ நினைவிற்கு --- ஒரு padaththil
செந்தில் : நா எட்டாவது பாஸ் அண்ணே.... நீங்க பத்தாவது ஃபெயில் அண்ணே.. 'பாஸ் பெரிசா, ஃபெயில் பெரிசா ? ]

5 Comments (கருத்துரைகள்)
:

A.R.ராஜகோபாலன் said... [Reply]

நல்ல நகைசுவை ததும்பிய பதிவு
அது ஜென்டில்மென் என்ற படம்

ஸ்ரீராம். said... [Reply]

ஹா...ஹா....

Prabu Krishna said... [Reply]

//செந்தில் : நா எட்டாவது பாஸ் அண்ணே.... நீங்க பத்தாவது ஃபெயில் அண்ணே.. 'பாஸ் பெரிசா, ஃபெயில் பெரிசா//

ஆகா ஐ‌பி‌எல் க்கும் செந்தில்,கவுண்டமணி க்கும் லிங்க். அருமை போங்க...

middleclassmadhavi said... [Reply]

:-))

பெசொவி said... [Reply]

இததான் ரூம் போட்டு யோசிக்கறதுன்னு சொல்றாங்களோ?
:)

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...