சினிமா பெயரை நினைக்கையில்

'குடைக்குள் மழை'
-- குடைய தப்பா பிடிச்சா அப்படித்தான்.

'விடிஞ்சா கல்யாணம்'
-- இப்போ மாப்பிள்ளை அழைப்பு..

'24 மணி நேரம்'
-- டாகுடருனாலே அப்படித்தான்.

'வெள்ளை ரோஜா'
-- சுண்ணாம்புச் சத்து அதிகமோ ?

'தூறல் நின்னு போச்சி'
-- குடைய மடக்குங்க..


'உயர்ந்த உள்ளம்'
 --  என்ன ஒரு எட்டடி இருக்குமா ?

'எங்கள் தங்கம்' 
 -- காஸ்ட்லியான பட்ஜெட்டோ ?

'ஊமைத்துரை'  
-- தொரைக்கு இங்கிலீசு கூட வராதோ ?


'படிக்காதவன்'
-- எவன்டாது, எனக்குப் போட்டியா ?


'பாண்டவர்பூமி'
-- அர்ஜுன்தான ஹீரோ ?


இதப் போல நெறையா எழுதலாம்.. ஜஸ்ட் சாம்பிளிக்கு ஒரு பத்து மட்டும்..


டிஸ்கி : மாசக் கடைசி..  கேசு புடிச்சு கணக்கு காட்டனுமில்ல.. அதான்..
  ==========================  சினிமா
 

1-2-1

ஒரு  கேள்வி :

'தமையன் ஆயிரம்' -- இது  யார் / என்ன ?
  (நா, கண்டுபிடிச்சதுதான்.  க்ளூ : சமீப பிரபலம்)

 &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இரண்டு ஜோக் : (இதுவும் சொந்த சரக்குதான்)

ஒருமுறை செல்வா 'ஆப்பிள்' பற்றிய கட்டுரை  மட்டுமே படித்திருந்தார் (!) ஆனால் தேர்வில் 'அன்னாசிப் பழம்' பற்றி கட்டுரை எழுதத் சொல்லியிருந்தது..

தான் படித்த 'ஆப்பிள்' பற்றிய கட்டுரையை எழுதிவிட்டு செல்வா கடைசி வரியாக "இவ்வாறாக ஃபைனாக இருக்கும் ஆப்பிளை 'பைனாப்பிள்' என்று சொல்கிறோம்",  என முடித்திருந்தார்.
  --------------------
ஆசிரியர் : ஒரு சதுர நிலத்தின் பக்கம் 40 அடி, அதன் பரப்பளவு  என்ன ?
செல்வாவின் சக மாணவர் : 1600 சதுரஅடி சார்.
ஆசிரியர் : ஒரு செவ்வக நிலத்தின் நீளம் 60 அடி, அகலம்  40 அடி, அதன் பரப்பளவு  என்ன செல்வா ?
செல்வா : 2400 செவ்வகஅடி, சார்
ஆசிரியர் : !#$%^&*@!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஒரு கவிதை : (இதுவும் சொந்த சரக்குதான், பாரதியாருக்கு !)

கேசவன்(கண்ணன்) என் சேகவன் - ஸ்ரீஜெயந்தி ஸ்பெஷல் 
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; ... 5

பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்; ... 10

சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் ... 15

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; ... 20

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் ங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் ... 25

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்
என்றுபல சொல்லி நின்றான் ஏது பெயர்? சொல் என்றேன்
ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்.
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்; ... 30

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு கென்றேன். ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் ... 35

ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை யென்றான்.
பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை . ... 40

ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் ... 45

வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் ... 50

பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான். ... 55

இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!
கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், ... 60

தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்!
கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே

(நன்றி : Wiki-source)

// நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய் //


எனக்குப் பிடித்த வரிகள்..
========================

HUNT FOR HINT - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்

நண்பர்களே,


சிறுகதை போட்டி, கவிதைப்போட்டிகளை மட்டுமே பார்த்து கொண்டு இருந்த நம் பதிவுலகம், முதல் முறையாக ஒரு அறிவுசார் புதிர் போட்டியை விளையாட இருக்கிறது. ஆம், நாங்கள் ஏற்கனவே அறிவித்தது போல இதோ இன்று “HUNT FOR HINT” போட்டியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த போட்டியை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். புகழ் பெற்ற ஆன்லைன் விளையாட்டான க்ளூலெஸ் விளையாட்டின் தாக்கத்தால் டெரர்கும்மி நண்பர்களால் உருவான விளையாட்டு "HUNT FOR HINT". இது ஒரு பல லெவல்களை கொண்ட ஆன்லைன் விளையாட்டு.

கேள்விகள் படமாகவோ, எழுத்தாகவோ, அல்லது வேறு ஏதாவது ஒரு விதத்திலோ இருக்கலாம். ஆங்காங்கே இருக்கும் க்ளூக்களை கண்டுபிடித்து அடுத்த லெவலுக்கு முன்னேற வேண்டும்.

விளையாடும் முறை, விதிகள் மற்றும் பரிசு விவரங்களை விளையாட்டின் பிரத்தியேக தளத்தில் கொடுத்து இருக்கிறோம்.  விளையாடும் முன்பு அவற்றை படித்தல் நலம்.


இந்த விளையாட்டை வடிவமைக்க பலர் தங்களின் உழைப்பையும் நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு உள்ளனர். அவர்களுக்கு எங்களின் சிறப்பு நன்றியை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொண்டு, போட்டியாளர்கள் இந்த போட்டியை நேர்மையான முறையில் அணுகுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியை தொடங்குகிறோம்.....

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி விளையாட தொடங்குங்கள்....

வாழ்த்துக்கள்....




For Non Tamil Players:

Dear Friends,

Hunt for Hint is created by Terror Kummi Team, based on the concept of the popular online game Klueless. It is a multilevel game and each level is a web page. The questions will be in the form of picture, text, or some data. All you have to do is to hunt for the hints to cross each level and win.

Please read the Rules of the Game and play with a high integrity.

With the above hope, We declaring that the Game to begins now...

சுதந்திரதின வாழ்த்துக்கள் (2011)


 முதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.

பாரதியார் அளித்த கவிதை :
                                                                       
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்


வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)

------------------------------------------
இந்த மண்ணின் மைந்தருள் ஒருவனான எனது ஆசை...

இந்தியத் திருநாடு...
வளமுடன் செழிக்கட்டும்...
ஒற்றுமை ஓங்கட்டும்..
சகோதரத்துவம் பெருகட்டும்...
மண்ணின் பெருமை மக்களுக்கு மேலும் விளங்கட்டும்.
நாட்டினை நல்வழிப் பாதையில் செலுத்த வேண்டி.. 
இளைய பெருமக்களை வேண்டுகிறேன்....

இந்நாளில்.. இந்திய சுதந்திரத்திற்கு அரும்பாடு பட்ட அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து, நம்முடன் இல்லாமல் போன போராட்ட வீரர்களுக்கு எனது அஞ்சலிகளை செலுத்துகிறேன்.. ஜெய் ஹிந்த்...
 ------------------------------------------------------------

கலந்த அனுபவங்கள் (Aug'11)

எலி :
நாமெல்லாம் எலிய மொதல்ல பாத்திருப்போம்..  அப்புறமா பல வருஷம் கழித்து கம்பியூட்டர் மௌஸ்.. பாத்தோம்..  என்னோட பொண்ணு எலியப் பாத்துட்டு சொல்லுறா,

"அப்பா.. இது கம்பியூட்டர் மௌஸ் போல இருக்கு.. 'இங்க ஓடுது.. அங்க ஓடுது'.. 'வால் இருக்கு'.."

# இதுவும் generation கேப் தான் !


டேபிள் டென்னிஸ் பந்து :
என்னோட பையன் இந்த வருஷம் டேபிள் டென்னிஸ் கத்துக்கறான். இந்த ஆட்டத்துல முக்கியமான பிரச்சனை... பந்து தரையில விழும்போது தெரியாம.. எக்குக் தப்பா காலை அதுமேல வெச்சிட்டா.. நசுங்கிடும். ரெண்டு பந்து அப்படி நசுங்கி போச்சு... மொதோ பந்து நசுங்கி போனப்ப.. என்னமோ நா ஒரு பெரிய 'பந்து  இஞ்சினியர்' போல அதை இப்படி அப்படி அமுக்கி சரி பண்ணிடலாம்னு நெனைச்சேன்.. பந்து விரிசல் விட்டதுதான் மிச்சம். மூணாவது தடவை அப்படி கால் பட்டு நசுங்கிப் போனபோது அத கவனிச்ச ட்ரைனர் வெந்நீர்ல போட்டா சரியாகிடும்னு சொன்னாராம்.. அட.. நல்ல ஐடியா தான்.. இது மொதல்லேயே தெரியாமப் போயிடிச்சே..

சினிமா :
இந்த சொல்லுக்கு சரியான அர்த்தம் 'திரைப்படம்' --- அப்படித்தான் நானும் சின்ன வயசுலேருந்து நெனைச்சுக் கிட்டு இருந்தேன். அதை திரையிடும் அரங்கத்திருக்கும் 'சினிமா ' என்ற வார்த்தை பொருந்தும்.

நா, சினிமால(அரங்கம்), சினிமா(மூவி) பாத்து எத்தனை வருஷம் இருக்கும் தெரியுமா..? ம்ம்ம்.. 2004 ல 'விருமாண்டி' பாத்ததா ஞாபகம்.... அதுவும் தமிழ் நாட்டுக்கு வெளியில. தமிழ்நாட்டுல நா இதுக்கு முன்னாடி பாத்தா படம் 'இந்தியன்' (1996). எப்படியோ.. சினிமா ஒரு பெரிய விஷயமா எனக்குத் தெரியல.. இப்போ தெரியுதா அருண், உங்க சினிமா புதிர்ல, ஏன் என்னால 50-60% க்கு மேல வாங்க முடியலன்னு.. ?

டவுட்டு : 
'நகரும் படி' அதாங்க 'escalator'  ..  escalator is a moving staircase).
One which drives is called driver.
One which drills is driller.
One which rotates is rotator...

அதே மாதிரி, 'One which escalates is escalator'. 'escalate' meaning 'Increase rapidly'. ஆனா எஸ்கலேடர் ஸ்மூத்தா தான போகுது.......!

எச்சூஸ் மீ.. ஒன் லாஸ்ட் டவுட்..
டீச் பண்றவரு..  டீச்சர்
ரன் பண்றவரு.. ரன்னர்..
அப்ப, ஆஃபீஸ  பண்ணவரு (கட்டின கொத்தனார்) ஆஃபீஸரா  ?


டிஸ்கி : எதலாம் பிலாகுல எழுதலாம்னு தெரியாதோர் சங்கம்.. 
==========================

ஒரு அறிவிப்பு..

நண்பர்களே..
 இதுநாள் வரை.. நா, ஏதோ எனக்குத் தெரிஞ்சதை கேள்வியாவோ  புதிராவோ, கணக்காவோ கேட்டு பதில் சொன்னவங்கள பாராட்டினதோட இருந்துட்டேன். நம்ம நண்பர்கள் குழு terrorkummi.com ல புதுசா ஒரு விளையாட்டு ஆரம்பிக்கறாங்க. 

வாங்க...  வாங்க.... வாங்க டெரர்கும்மி டாக் காமுக்கு வாங்க... !
உங்களால முடிஞ்சத முயற்சி பண்ணுங்க.. திறமையும் அதிர்ஷ்டமும் (பர்ஸ்ட் ஆளா வரணுமில்ல அதான் அதிர்ஷ்டமும் தேவை..) இருந்தா பரிசையும் வெல்லுங்க..

அட்லீஸ்ட் உங்களுக்கு ஒரு சந்தோஷமாவது கெடைக்கும்னு நெனைக்கிறேன். எனக்கே இந்தப் போட்டி புதுசுதான்....  அதனால போட்டியப் பத்தி ரொம்ப சொல்ல முடியலை.. ஆனா கண்டிப்பா நல்லா இருக்கும்னுதான் தோணுது..  ம்ம் பாக்கலாம்.. 

உங்க மூளைய தயார் நிலைக்கு கொண்டு வந்துடுங்க மொதல்ல.... அதுக்குத்தான் ஒரு வாரம் முன்னாலேயே இந்த அறிவிப்பு..

 ஒகே.. ஆல் தி பெஸ்ட் . 
============== 

சில கேள்விகள்.. பல பதில்கள்..

இன்டர்நெட் உதவி இல்லாமல்.. அதாவது கூகிள் யாஹூ போன்ற எந்த ஒரு தேடும் இயந்திரத்தின் உதவி இல்லாம கீழ்க் கண்ட கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் சொல்லவும்.

விடைகள் மட்டறுத்தப்படுகிறது.. 


1 ) 'CM' என்றால் உங்கள் நினைவிற்கு வருவது என்னென்ன ?
2 ) 'XL' என்றால் உங்கள் நினைவிற்கு வருவது என்னென்ன ?
3) 'L V M I D C X' -- இவைகளுள் சில/பல/அனைத்தும் பயன்படுத்தி அர்த்தமுள்ள எதையாவது உங்களால் சொல்ல முடியுமா.?

க்ளூ : மேலுள்ள அனைத்திற்கும் பொதுவான தொடர்பு இருக்கிறது.. 
டிஸ்கி : ரொம்ப நாளா பதிவு எழுத முடியல.. .. எனது பையனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது சட்டுன்னு இது தோணியது மனதில்.. .. எனவே இங்கு கேட்டிருக்கிறேன். பதில்கள்.. விரைவில்..