IRCTC -- என் மனதில் தோன்றியவை.

ஐ.ஆர்.சி.டி.சி  மூலம் இன்டர்நெட்டில் இந்திய ரயில் முன்பதிவு செய்பவர்களுள் நானும் ஒருவன். ஆறேழு வருடங்களாகவே அந்த வசதியை பெற்று வருகிறேன். தற்போது அதிக நபர்கள் இன்டர்நெட் முறையில் முன்பதிவு செய்து வருதாதால் பயன்பாட்டு முறைக்கு அந்த சர்வர் அடிக்கடி அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. முக்கியமாக காலை எட்டு மணிபோல அதனுள் நுழையவே முடியவில்லை. 

நூறு கோடிக்கணக்கில் மக்கள் இருக்கும் நாட்டில் இதுபோன்ற சேவைகளை எவ்வளவு கஷ்டத்தில் லாகவமாக செய்ய முயற்சிக்கு பாராட்டுக்கள். எனினும் ஒன்றிரண்டு குறைபாடுகள். எங்கு இது பற்றி எழுதினால் சரி செய்வார்கள்.

உதாரணம் 1  : பயணியர்கள் மாஸ்டர் லிஸ்டில் பெயர் சேர்க்கும் பொது பிறந்த தேதி தகவலும் சேர்க்கப் படுகிறது. அந்த லிஸ்டின்படி நபர்களை சேர்த்தால் அவர்களின் வயதும் கணக்கிடப் பட்டு வருகிறது. ஆனால் அந்த கணக்கு முறை பயணமுன்பதிவு செய்யும் தேதியின்படி இருக்கிறது. பயணத் தேதி முறையின்படிதான இருக்க வேண்டும் ?

உதாரணம் 2  : மாஸ்டர் லிஸ்டில் முதல் முறையில் ஒரு நபரை சேர்க்கும் பொது கடைசியில், பிறந்த தேதி கொடுத்தபின்னும் சீனியர் சிடிசன் வாய்ப்பு வேண்டுமா வேண்டாமா எனக் கேட்கப் படுகிறது. ஒருவருக்கு வயது 20  மட்டுமே ஆகி இருந்தாலும் இப்படி ஒரு கடைசி (சீனியர் சிட்டிசன்) கேள்வி தேவையா ?  அதாவது, பிறந்த தேதிப்படி வயதினை கணக்கிட்டு.. விதிமுறையின்படி சீனியர் சிட்டிசன் வயதினைத் தாண்டியவர்களின் சேர்க்கைக்கு மட்டும் இந்த கேள்வி கேட்கப் படலாமே !!

அல்லது முதல் முறையில் வயது நேரடியாக கணக்கிடப் படாமல் இருந்தால்... இந்த ஆப்ஷனை பின்னர் முன்பதிவு செய்யும் பொது வயதிற்கேற்றபடி கேட்கப் படலாமே !!

எனினும் இந்திய ரயில்வேக்கு பாராட்டுக்கள்.. நன்றிகள் அவர்களின் சேவைக்கு.  

பயண அனுபவம்...

முன்னுரை :
ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு.. நா பதிவு எழுதி. சில சமயங்கள்ல சில ஐடியா கெடைச்சாலும்.. அத நோட் பண்ணிட்டு இங்க பதிவா எழுதுறதுக்கு அந்தளவுக்கு ஆர்வம் இல்ல. இருந்தாலும் வழக்கா நான் தொடரும் வலைப் பூ பதிவுகள படிச்சிட்டு வர்றேன். 

முகப் புத்தகம் ஷார்ட்டா இருக்குறதால அங்க ஓரளவுக்கு கமெண்டு போட்டுட்டு வர்றேன். 

சமீபத்துல மும்பை போயிட்டு வந்தேன்.. அந்தப் பயணத்துல நடந்த ஒருசில அனுபவங்கள இங்க சொல்லுறேன்.   

மெயின் மேட்டர் :

பதிமூணு வருஷத்துக்கு அப்புறம் சந்திச்ச ரெண்டு நபர்...  --- அந்த ரெண்டு பெரும் நா அஹமாதாபாத்ல வேலை செஞ்சப்ப என்னோட அலுவலகத்துல குறைந்த கால நேரத்துல வேலை செஞ்சவங்க.. ஒருவர் அங்க இருக்கார்னு தெரிஞ்சு நானே சென்று அவர சந்திச்சேன்.. மற்றவரோட சந்திப்பு நூறு சதவிகிதம் எதிர்பாராதது.. ரெண்டு மணி நேரம் ஜாலியா பழைய நினைவுகள பகிர்ந்துகிட்டோம்.....  பசுமை நினைவுகள்.

இதுவரைக்கும் செக்கின் கவுன்ட்டர்லதான் போர்டிங் பாஸ் பாங்கி இருக்கேன். இந்தக் தடைவை ஒரு சேஞ்சுக்கு நேரடியா கயாஸ்க் (kyosk) மெஷின்ல செக்கின் பண்ணலாம்னு ஒரு ட்ரை(என்கிட்டே செக்கின் லக்கேஜ் இல்லாததால)..

டச் ஸ்க்ரீன் மெஷின். முதல்ல பி.என்.ஆர் நம்பர்.. அப்புறம் முதல் பெயர்.. இரண்டாம் பெயர்.. இதுல ஒரு சங்கடம்.. பெரும்பாலும் நா என்னோட பெயர S Madhavan ன்னு பயன் படுத்துவேன். இதுல எது முதல் பெயர்.. எது இரண்டாம் பெயர்னு சந்தேகம் வரும். ஏன்னா, ஆபீஸ் டிராவல் செக்ஷனால் எத மோதபெயரா கொடுக்கரான்களோ எனக்குத் தெரியாது. நாமளும் துணைப் பெயர் வைச்சிருந்தா இந்த பிரச்சனை இருக்காது போல. எப்படியோ இந்த பாகத்தையும் ஒரு Guessல   கடந்து.. அப்புறம் 'எங்கிருந்து' ... 'செல்லவேண்டிய இடம்' -- இதலாம் கேட்டபடி சொல்லி.. இருக்கையைக் கூட செலெக்ட் பண்ணி கடைசியில ஏதோ அது கேக்க.. அதப் படிக்காம 'எஸ்' ன்னு தட்ட.. 'sorry, your boarding pass cannot be proccessed you are denied to board' ன்னு வந்திச்சு.. 

இதென்னடா மன்னார்குடி மாதவனுக்கு வந்த சோதனைன்னு திரும்பவும் அதே டிரை ...   ஆனா இந்தத் முறை கவனமா.. கடைசி கட்டத்துல சரியா படிச்சுப் பாத்தா.. அதுல இந்த மாதிரி இருந்திச்சு..
"நீங்கள் கீழ் கண்ட பொருட்களில் ஏதாவது உங்கள் கேபின் பேகேஜில் எடுத்துச் செல்கிறீர்களா ?", எனக் கேள்வி. இருந்த படங்கள்.. கத்தி, துப்பாக்கி, வெடிபொருள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள். சரியா படிச்சுப் பாக்காததுனால.. படத்தக் கூட பாக்காம, ஆல்வேஸ் பாசிடிவ் திங்கிங் இருந்ததால நானும் எதார்த்தமா 'எஸ்'ன்னு சொல்லி இருக்கேன்... அதான் எனக்கு மொத தடவ போர்டிங் பாஸ் தரல அந்த 'இடியட் பாக்ஸ்'(கம்பியூட்டர்). இடியட் பாக்ஸ் எப்படி சரியா வேலை செய்யுது பாருங்க.. ஆறறிவு படைச்ச மனுஷன் தான் (நானேதான்) சரியா படிக்காம எடக்கு மடக்கா பதில் சொல்லிட்டு.. நெனச்சது நடக்கலன்னு ஒரு பொலம்பல் வேற..
வெயிடிங் லவுன்ஜ்ல நாலு இலவச இன்டர்நெட் பிரவுசர் வெச்சிருந்தாங்க.. அந்த நாலு மானிடர்ளையும் ஒரு சமயத்துல 'முகப்புத்தகம்' தெரிஞ்சது... நானும் என்னோட தரன் வந்தப்ப 'முகப் புத்தகம், ஜி-மெயில், ப்ளாக்' மூனையும் ஒரு எட்டு பாத்திட்டு போர்டிங் கேட்டுக்கு(gate) போனேன். 

பிளைட்டுல பயணம் செஞ்சப்ப, என்டேர்டைன்மேன்ட்ல சானல் ஒண்ணுல 'டர்டி-பிக்சர்' ஓடிட்டு இருந்திச்சு..  இன்னைக்கு(22-04-2012) சோனி சானல்ல இந்தப் படம் போடுறதா இருந்தாங்க.. இருந்தாலும் ஒலிபரப்புத் துறையின் ஆணையால் இந்தப் படத்த ராத்திரி பதினோரு மணிக்கு மேலத்தான் போடணும்னு சொன்னதால.. அந்தப் படத்தை சுத்தமா தூக்கிட்டு, 'த்ரீ இடியட்ஸ்' ஓடுது அதே சானல்ல, அதே டயத்துல.

முடிவுரை..  :
எரோப்லேணுல 'Dirty Picture' screening தடையில்ல போல... .... சின்னத்திரையில தடை...  என்ன லாஜிக்.. புரியல !