வஞ்சப்புகழ்ச்சி அணி - 1 (12-08-2017)

வஞ்சப்புகழ்ச்சி அணி  :
  வஞ்சம் + புகழ்ச்சி = வஞ்சப்புகழ்ச்சி;
  தமிழின் அணி வகைகளுள் ஒன்று வஞ்சப்புகழ்ச்சி அணி.    
  ஒருவரை புகழ்வது போல இகழ்வதும், இகழ்வது போல புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி எனப்படும்.

(மா விளம் தேமா --- அறுசீர் கலிவிருத்தம் )

அறிவி லாதவன் நீரே
...அன்பி லாதவன் நீரே
குறிப்பி லாதவன் நீரே
....கூர்மை யிலாதவன் நீரே
மதியி லாதவன் நீரே
...வலிமை யிலாதவன்  நீரே
சதியில் எழுந்தவிப் பாடல்
...சரிந்து மாறிய தேகாண் !

# சதியில் - விரைவில் , சீக்கிரத்தில்
# சரிந்து மாறிய தேகாண் -- சொல்லிய பொருள் 'சரிந்து' வேறு பொருள் தருமாறு மாறியதை காண்பாயோ !

அறிவில்லாதவன் = அறிவில் + ஆதவன் ( சூரியன் ) போன்று பிரகாசிப்பவன் 

4 Comments (கருத்துரைகள்)
:

நெல்லைத் தமிழன் said... [Reply]

நன்று. நேற்றுத்தான் 23ம் புலிகேசியின் புலவர் நகைச்சுவை காட்சியைப் பார்த்தேன். "ஒரே வார்த்தையை-ஆதவன்" பயன்படுத்தாமல் பல்வேறு வார்த்தைகளை உபயோகப்படுத்திப் பாருங்கள்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

ஆமாம். ஒரே சொல்லினை பயன் படுத்துவது அவ்வளவு பொருத்தமன்று. முயற்சி செய்கிறேன். நன்றி.

middleclassmadhavi said... [Reply]

nice

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நன்று.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...