படங்கண்டு வந்த பாடல் - 04-09-2017

அறுசீர்க்கெழிநெடிலடி ஆசிரியவிருத்தம்  -- விளம் மா தேமா

உள்ளிரு காற்று ஊதி
....ஓரிசை வெளியே தள்ளிக்
கள்ளனாய்ப் பார்வை தந்தக்
...காதலன், கண்ணன் கொண்ட
வெள்ளையுள் ளத்தைக் கண்டு
....வேண்டிய இளம்பெண், தானும்,
உள்ளதை உணர்ந்து பேசி
.....ஊறுகள் நீங்கக் கண்டாள் !

# உள்ளமொழி == உள்ளத்தில் இருக்கும் / வெளிப்படும் மொழி.
# ஊறுகள் = துன்பங்கள்

5 Comments (கருத்துரைகள்)
:

msuzhi said... [Reply]

ஆகா!
வெண்பாவைத் தாண்டிப் போனால் நிறைய அற்புதங்கள் படிக்கலாம்.. படைக்கலாம்.

நெல்லைத் தமிழன் said... [Reply]

பார்வை தந்த காதலன். இங்கு "க்" வரக்கூடாது. பாடல் நல்லா வந்திருக்கு.

உள்ளமொ ழிதனிற் பேசி - ஏதோ குறையுது. காரணம் மற்ற வரிகளைவிட கொஞ்சம் குறைவா இருக்கு சந்தம். "உள்ளத்தை இருத்திப் பேசி" சரியா வருதா? (மொத்த பாடலையும் நடையோடு பாடும்போது உங்களுக்கு நான் சொல்வது புரியும்)

மிகவும் ரசித்தேன்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

@நெல்லைத் தமிழன்
தங்கள் ஊக்கமளிக்கும் கருத்திற்கு நன்றி.
'உள்ளதை உணர்ந்து பேசி' என மாற்றம் செய்யலாமோ ?

Madhavan Srinivasagopalan said... [Reply]

@Durai A
தங்கள் கருத்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றி.
'தமிழ்ப்பா' முறைப்படி எழுதினால், வரும் மனமகிழ்வை விவரிக்க முடியுமோ ?

நெல்லைத் தமிழன் said... [Reply]

சரியா இருக்கு இப்போ. "க்" வரக்கூடாதில்லையா?

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...