படங்கண்டு வந்த பாடல் - 04-09-2017

அறுசீர்க்கெழிநெடிலடி ஆசிரியவிருத்தம்  -- விளம் மா தேமா

உள்ளிரு காற்று ஊதி
....ஓரிசை வெளியே தள்ளிக்
கள்ளனாய்ப் பார்வை தந்தக்
...காதலன், கண்ணன் கொண்ட
வெள்ளையுள் ளத்தைக் கண்டு
....வேண்டிய இளம்பெண், தானும்,
உள்ளதை உணர்ந்து பேசி
.....ஊறுகள் நீங்கக் கண்டாள் !

# உள்ளமொழி == உள்ளத்தில் இருக்கும் / வெளிப்படும் மொழி.
# ஊறுகள் = துன்பங்கள்