இலாவணிச் சிந்து


மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும்
வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக்
கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக்
கண்களுக்குள் கோகுலத்தில் போட்டிப் போட்டி.....!


********************************************
மேற்கண்ட பாடல், இலாவணிச் சிந்து வகைப் பாடலாகும். 'பைந்தமிழ்ச் சோலை' குழுமம், முகப்புக்கம் ஆசான்... பாவலர் அவர்களின் பயிற்சியில் பயனால் எழுதினேன், நான்.

ஆசான் எங்களுக்கு அளித்த  பயிற்சியின் பயனை, நீங்களும் பெற அந்தக் குழுமத்தில் சேரலாமே !
இந்தப் பாடல் பற்றிய செய்திகள், அவர் பதிவிலிருந்து.......
*********************
மேற்கண்ட பாடலில், எட்டுச் சீர்களும்,
ஒவ்வொரு சீரிலும் நான்கு எழுத்துகளும் (ஒற்று நீக்கி) உள்ளன.
7,8 ஆம்சீர்கள் இரண்டெழுத்தே இருந்தாலும் ( அந்த எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும் (நீட்டிப் பாட வேண்டும்) .
பொது இலக்கணம் :
மேற்கண்ட பாடலின்படி...
* ஓரடிக்கு நான்கெழுத்துச் சீர்கள் எட்டு வரவேண்டும்
* செம்பவள...என்பது முதல் கேட்டு என்பது வரை ஓரடி.
உம்பரரும். என்பது முதல், போட்டு என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும்.
* அனைத்து அரையடிகளின் முதற் சீரும் மோனையால் இணைந்து
 * ஏழாம் சீரும், எட்டாம் சீரும் ஒரே மாதிரியான ஈரெழுத்துச் சொல்லை இயைபாகக் கொண்டிருக்கும்
(கேட்டு, கேட்டு, போட்டு, போட்டு)
இந்த இலக்கணப்படி வருவது "இலாவணி " ஆகும்.

  1,3,5ஆம் சீர்களில் மூன்றெழுத்துச் சீர்களும் வரலாம். குறைந்த எழுத்துக்குப் பதில் அந்த இடம் நீண்டிசைக்கும். இந்தச் சலுகை 1,3,5ஆம் சீர்களுக்கு மட்டுமே.

நன்றி : பாவலர் ஐயாவின், முகப்புத்தகப் பதிவு :  

0 Comments (கருத்துரைகள்)
:

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...