சங்கத்தின் அங்கமானேன்..

யு.கே.ஜி படிக்கிற என் பொண்ணு பாத்ரூம்ல தண்ணிய கொட்டி விளையாடிக்கிட்டு இருந்தா. அவகிட்ட நான் சொன்னேன்.. "தண்ணிலையே  ரொம்ப நேரம் இருந்தா சளி பிடிக்கும் ஜுரம் வரும்". அதுக்கு பொண்ணு என்னைய கேட்டா, "இந்த Tap உள்ள தண்ணி எப்பவுமே இருக்குல்ல .. அப்ப இந்த Tap க்கும்  ஜுரம் வருமா ?".

யோசிச்சேன்.. யோசிச்சேன்.. என்னோட லக், கெய்சர்ல கொஞ்சம் சுடு தண்ணீர் இருந்திச்சு.. அத பைப்புல ஓபன் பண்ணிட்டு.. பொண்ண மெதுவா பைப்போட மேல்பக்கம் தொட்டுப் பாக்கச் சொன்னேன். தொட்டுப் பாத்திட்டு "அமாம் ஜுரம் வந்துடிச்சு போல".

அப்பா, சமாளிச்சாச்சுனு  நெனைச்சா... உடனே.. பொண்ணு சொல்லுறா, "ஆனா சளி அதுக்கு பிடிக்காது.. அதுக்குத்தான் மூக்கே இல்லையே..!"


ஒருவழியா தண்ணில வெளையாடுறத நிறுத்திட்டு சோப்ப எடுத்து கொழைக்க ஆரம்பிச்சிட்டா பொண்ணு.  "சோப்ப எடுக்காத.. அத தேச்சா சீக்கிரமே கரைஞ்சிடும்", அப்படி சொன்னேன். அதுக்கு பொண்ணு கேட்டா "சோப்ப உடம்புல போட்டுக்கிட்டா, ஏம்பா சோப்பு மட்டும் தேயுது.. உடம்பு தேயமாட்டேங்குது ?"

--- இதுக்கு பதில் தெரிஞ்சா, வெயிட்....வெயிட்.. ஒன் மோர் கொஸ்டின், பொண்ணுக்கிட்டேருந்துதான் .. "நம்மள பூச்சி கடிச்சா நமக்கு மட்டும் வலிக்குது. ஏன் பூச்சிக்கு வலிக்க மாட்டேங்குது.. ?"

--- இதுக்கும் சேத்து பதில் தெரிஞ்சா யாராவது சொல்லுங்க.. ப்ளீஸ்,

ஏன்னா, நானும் "பாபு, அருண், வெங்கட்" நடத்துற 'பல்பொ-பல்பு' சங்கத்துல சேர்ந்திட்டேன். 
=======================

நான் -ஸ்டாப் நான்சென்ஸ் !


ஒரு முறை செல்வா வேலை நிமித்தமாக சென்னைக்கு அருகில் இருக்கும் கூடுவாஞ்சேரி  செல்ல நேரிட்டது. அவர் இருக்கும் ஊரிலிருந்து கிளம்பி சென்னைக்கு நேரடியாச் செல்லும் பேருந்தில் செல்வா ஏறிக்கொண்டார். கண்டக்டர் வந்ததும், அவரிடம். 

செல்வா     : இந்த பஸ் சென்னை போகும்தான ?

கண்டக்டர் : போர்டை பாக்காம ஏற வேண்டியது.
கேள்வியப் பாரு.. கேள்விய.. ம்ம்.. போகும்.. போகும்.

செல்வா     : கூடுவாஞ்சேரி வழியாத் தான போகும் ?

கண்டக்டர் : போகும்.. ஆமா.. அமா..    ம்ம்..  வந்துட்டானுக.. கூடுவாஞ்சேரி.. கூம்மிடிப்பூண்டினு.. சொல்லிக்கிட்டு..

செல்வா     : எனக்கு கூடுவாஞ்சேரி ஒரு டிக்கட் தாங்க.

கண்டக்டர் : ஸ்ஸ்ஸ்.. கூடுவாஞ்சேரிலாம்  நிக்காது..  ஒன்லி சென்னை டிக்கெட் தருவேன்..  சென்னை மட்டும் ஏறு..

செல்வா     : ஏன். ஏன்.. அது வழியாத் தான போகுது.. அங்க போனதும் வண்டிய நிறுத்த வேண்டியதுதான.. நா இறங்கிப்பேன்..

கண்டக்டர் : இவரு பெரிய ------------------ ? வந்துட்டானுக.. யோவ், இது 'Non-Stop' வண்டி.. மொதல்ல முன்னாடி போயி  போர்டைப் பாத்துட்டு வா..

செல்வா முன்புறம் சென்று 'சென்னை' மற்றும் 'Non-Stop' போர்டுகளை பார்த்து விட்டு கண்டக்டரிடம் மீண்டும்..

செல்வா : இது 'Non-Stop' தான். ஆனா,  அதுக்கு என்ன அர்த்தம் ?

கண்டக்டர் : அப்படிக் கேளு.. ஜிம்பலக்கடி பம்பா.. -- இந்த வண்டி கெளம்பினா எங்கயுமே நிக்காது.... அதாம்பா.. நோ ஸ்டாப்பு.. -- நான் ஸ்டாப்பு..

செல்வா : அப்போ சென்னையில  மட்டும் எப்படி நிக்கும் ?

கண்டக்டர் : (கடுப்பாகி) ம்ம்.. சென்னை போன ஒடனே.. இந்த போர்டை எடுத்துடுவோம்..  வண்டி தானா நின்னுடும்..

செல்வா : (நன்றாக யோசித்து) ஓகே.. எனக்கு சென்னை ஒரு டிக்கட் கொடுங்க.. நா கூடுவாஞ்சேரில இறங்கிக்கறேன்..

கண்டக்டர் : யோவ்.. சொல்லுறது புரியலையா.. அங்க வண்டி நிக்காது..

செல்வா : அத நா பாத்துக்கறேன்.. நீங்க டிக்கெட் கொடுங்க..

பயணம் இனிதே(!) ஆரம்பித்தது ..
------------------------- தொடர்ந்தது..

இன்னும் சற்று நேரத்தில் கூடுவாஞ்சேரி வரவிருந்தது..

செல்வா தனது மூட்டை முடிச்சுக்களை எடுத்துக் கொண்டு.. வண்டியின் முன்புறம் நோக்கி நடந்தார்.. நேரே சென்று 'Non-Stop' என்று எழுதி இருந்த பலகையை எடுக்க முயற்சித்தார்.. பலனில்லை.. போல்ட் நெட் போட்டு இரும்புப் ப்ளேட்டில் நன்கு  ஃபிக்ஸாகி இருந்தது. 

திடீர் யோசனை..  உடனே செயல் படுத்த செல்வா ரெடி..

தனது பையிலிருந்து ஒரு  ப்ளாங்க்   பேப்பர் மற்றும் ஃபெவி-ஸ்டிக் எடுத்தார். பேப்பரில்  ஒரு பக்கம் ஃபெவி-ஸ்டிக் தடவி பலகையில் எழுதி இருந்த 'Non-' என்பதன்மேல், பேப்பரை ஒட்டும் பணியில் தீவிரமாக இறங்கினார்....
============================ 

ஞாபகம் வருதா ? வரணுமே ....


எந்த ஒரு தகவலையும் மறக்காம இருக்க ஏதாவது ஷார்ட்-பார்ம், கோட்-வேர்ட், அல்லது பாட்டு வடிவில் ---  குறிப்பு வெச்சுக்கலாம்.

என்னோட பையனுக்கு ஆங்கில வார்த்தைகள் 'stationary' & 'stationery' ரெண்டுக்கும் இருக்கும் அர்த்தத்த இப்படி ஞாபகம் வெச்சுக்கலாம்னு சொன்னேன். "stationery மற்றும் --pen , pensil , note -- இதுல்லாம் 'e ' காமனா இருக்கு.. அதாவது 'stationery' என்று சொன்னால் 'பெண்', 'பென்சில்', 'நோட்' இதெல்லாம் இருக்கும் கடையைக் குறிக்கும்" என்றேன். குழப்பமில்லாமல் புரிந்துகொண்டான். நெஜமாவே.. இது எனக்கே தோன்றியதுதான்..

பின்னர் கூகிள் தேடலில் 'stationary stationery' என்று தேடியதன் மூலம் ஒரு வெப்சைட் கிடைத்தது.. உங்களுக்கும் பயன் படலாம். எனவே அதன் இணைப்பு.. இதோ..
எலெக்ட்ரானிக்ஸ் Labல, Resistance(தடுப்பான் ?) மதிப்பு, கலர்  கோடிங் 'BBROY of Great Britain had a Very Good Wife' என்று, ஞாபகம் கொள்ள சுலப வழி சொன்னார்கள். (விவரம் இங்கும்[1], அங்கும்[2] இருக்கிறது)

சிறு வயதில் வார நாட்களை நினைவில் கொள்வதற்கு ஒரு பாடல் உண்டு.  ஒரே பாட்டுலே மூன்று தகவல்கள்... (1)வார நாட்கள் வரிசை, (2) திருடாதே பாப்பா திருடாதே மேசெஜு மற்றும் (3) வார்த்தைகளின் ஒசைக்கேற்ற 'மோனையுடன்' பாடல்......  இதோ.. கீழே கொடுத்துள்ளேன்.....  நம்ம கமேண்டோட........

ஞாயிற்றுக்கிழமை கையைக் காணும்
      (வீட்டப் பூட்டிட்டு குடும்பத்தோட ஊர் சுத்தினா அப்படித்தான்)
திங்கட்கிழமை திருடன் பிடிபட்டான்.
      (அந்த காலத்துல போலீசு செமையா வேலை செஞ்சாங்க)
செவ்வாக் கிழமை ஜெ(செ)யிலுக்குப் போனான்
      (ம்ம்ம்.. அப்ப நீதித் துறையும் செமையா இருந்திச்சு போல..)
புதன்கிழமை புத்தி வந்தது..
      (பொன் ஆப்டாலும், புதன் ஆப்டாதுன்னு சும்மாவா சொன்னாங்க..)
வியாக்கிழமை விரதம் இருந்தான்.
      (ஸ்ரீ ராகவேந்தர் சீடன் ஆயிட்டான் போல..)
வெள்ளிக் கிழமை விடுதலை ஆனான்..
      (இங்கப் பாருடா.. விரதத்தொட உடனடிப் பலன்..)
னிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்...
      (ரெஸ்ட் வேணும்தான்.. நாளைக்கு வேலை இருக்கோ என்னவோ..  ம்ம் மறுபடியும் மோதலேருந்தா..!)

 படங்கள் உதவி : கூகிள் இமேஜெஸ்..(நன்றி)
 ---------------------------------------------

செல்வாவும் ஆங்கில இலக்கணமும்

ஏதாவது எடக்கு மடக்கா.. நடந்தா.. உடனே நண்பர் செல்வாதான் நினைவில் வருகிறார். எனவே எனது மனதில் தோன்றியதை செல்வாவை வைத்து செல்வா கதையாக எழுதியுள்ளேன்..

மொழிகள் பல கற்பதால் என்றைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை உணர்ந்த செல்வா, ஆரம்பப் பள்ளியில் தமிழ் படித்துத் தேர்ந்தபின், நடுநிலைப் பள்ளியில் ஆங்கிலம் பயிலச் சென்றார். செல்வா, ஆங்கில இலக்கணம் மீது மிகுந்த பற்றும் ஆர்வமும் கொண்டிருந்ததால் வகுப்பில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

ஒருநாள் ஆங்கில இலக்கண ஆசிரியர் வகுப்பில் "மாணவர்களே நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்.. ஆங்கில வாக்கியத்தில் Subject, Third person மற்றும் Singular ஆக வந்தால் வரும் வர்பில் (verb) 's' சேர்க்க வேண்டும். உதாரணம் 'Child plays with ball', 'Dog runs'..

வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் நமது செல்வாவைப் பார்த்து ஆசிரியர், "செல்வா, இங்க்லீஷ்ல சொல்லு.. 'முரளி விஜய் கிரிக்கெட் விளையாடுகிறார்' என்றார். அதற்கு, செல்வா, "Murali Vijay plays Cricket" என்றார். ஆசிரியர், "எனது தம்பி ஓடுகிறான்", என்றார். அதற்கு, செல்வா, "My Brother run" என்றார்.
கிளாஸ்னா இப்படித்தான் இருக்கும்..
ஆசிரியர் ஒரு கணம் ஆச்சர்யப்பட்டார்.. இரண்டாவது வாக்கியத்தினை ஏன் தவறாக சொன்னாய் எனக் கேட்டார் ஆசிரியர்.

செல்வாவின் பதில், "என்னோட தம்பிய எப்படி சார் மூணாவது(Third ) மனுசனா(person ) நெனைக்க முடியும் ?"

"நல்ல வேளை.. ஒன்னையாவது சரியா சொன்னாயே!" என்றார்  ஆசிரியர்.

அதற்கு செல்வாவா, "எனக்குத் தெரியாதா சார். முரளி விஜய் இன்னும் சிங்கள் தான்.. நீங்க அவருக்குப் பதிலா Dhoniனு  சொல்லி இருந்தா, 'Dhoni play cricket'னு பதில் சொல்லி இருப்பேன்.. ஏன்னா, Dhoni Single இல்லை.. அவருக்குத்தான் கல்யாணம் ஆயிடிச்சே..", என்றாரே பார்க்கலாம்.. ஆசிரியர் விட்டாரு.. ஜூட்.. 


 

diski : நன்றி வெங்கட் -படித்துவிட்டு ஆலோசனை சொன்னதற்கு..
===========================

தெப்பத் திருவிழா - நினைவலைகள்

ஊர் ஒன்று கூடி கொண்டாடப் படுவதுதான் திருவிழா..

அவ்வகையில் எங்கள் ஊரில் அமைந்த பெரிய குளத்தில் தெப்பத் திருவிழா மிகவும் பிரசித்தம். பரந்து விரிந்துள்ள ஹரித்ராநதி எனும் குளத்தில் வருடா வருடம் ஆனி மாதம் பவுர்ணமி நன்னாளில் நடந்தேறும் இவ்விழா (Mannargudi Haridhranadhi Theppam), பத்து நாட்கள் கொண்டது. எட்டு நாட்கள் பாம்பு, கருடன், அனுமன், பல்லக்கு, குதிரை போன்ற வாகனத்தில் (பைக், கார், சைக்கிள், லாரி.. இதெல்லாம் நமக்குத்தான்.. ), ஸ்வாமியின் நகர் வலம் நடந்தேறும். ஒன்பதாவது நாளில் தெப்பத்தில் குளம் வலம் வரும் அவனை தரிசிக்கும் நமக்கோ குலம் வளம்.

தெப்பம் ஆடி ஆடி(ஆனி மாதத்தில்) அசைந்து குளத்தில் செல்வது தெப்பத்தினுள் இருந்தாலும், குளக் கரையில் இருந்து பார்த்தாலும் இனிமையாக இருக்கும். தெப்பம் குளத்தினுள் 3 முறை வலம் வரும். ஆனால் 3 முறையும் கரை ஓரமாகவே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக பாதி கரையின் வழியாக ஒருமுறை மட்டுமே செல்லும். மற்ற பாதி வழியாக இரு முறையும்.. மையத்தில் இருக்கும் மண்டபத்தை அடைந்து அதனை ஒட்டி ஒன்றரை முறையும் செல்லும்.. (மூணு -- கணக்கு சரிதான  ?). மேலும் விளக்கம் படத்தில் இருக்கிறது.. பார்க்கவும். 
தெப்பம் பற்றி நினைத்தவுடன், எனது நினைவுகள் இவ்வாறாக செல்கிறது..
தெப்பத்தினுள் இருந்த படியே இரவு முழுவதும் தூங்காமல் வெண்ணில வானையும், இதமான இயற்கை குளிரையும் அனுபவித்த சுகமும் உண்டு. பின்னிரவின் பொது.. அதிக குளிர் ஆரம்பபமாகும். மைய மண்டபத்தில் சுமார் நாற்பது நிமிட ஓய்வும்  கிடைக்கும்.

எனது சிறிய தகப்பனார் வீடு இந்த குளக் கரையின் வடக்குப் பகுதியில் இருப்பதால் அந்நாட்களில், நாங்கள் இவ்விழாவின்போது அவர் இல்லம் சென்று கொண்டாடி மகிழ்வோம். ஹரித்ராநதி நண்பர்கள் குழு ஒரு சமயம் இந்நாளில், பஜ்ஜி வகை கடை போட்டனர். (வருடம் மறந்து விட்டது). நான் சென்றபோது, எனக்கு இலவசமாகத் தந்தனர் உண்பதற்கு.

வேறு ஒரு வருடம் ம்ம்.. 1990 ல்,  தெப்பத் திருவிழாவின்போது உலகக் கோப்பை கால்பந்து இறுதியாட்டம் நடந்தது.. எனது சித்தப்பா வீட்டில் தெப்பத் திருவிழாவிற்குப் போன நான், இரவு இங்கிருந்தே உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நேரடி ஒளிபரப்பு பார்த்ததும் நினைவிற்கு வருகிறது. ஜெர்மனி அணி, அர்ஜென்டினானை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அன்று நடந்த விம்பிள்டன் போட்டிகளிலும் ஜெர்மன் வீரர் பெக்கர் ஆண்கள் பிரிவில் பட்டம் வென்றார் .. அதற்கு முதல் நாள் ஜெர்மனியின் ஸ்டேஃபிஃகிராப் பெண்கள் பிரிவில் பட்டம் வென்றார்.

வேறு ஒரு வருடம் 'மணல் கயிறு' திரைப் படம் -- சாலையின் நடுவில் பெரிய திரை கட்டி, ஓபன் ஏர் சினி-ஷோ, இலவசமாக.. மற்றொரு வருடம் 'தங்கப்பதுமை' படம்... ஒருமுறை நாட்டிய / கிராமிய / கலை நிகழ்ச்சிகள்.. ஒருமுறை திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி.. 

இப்படி வருடா வருடம் வெவ்வேறு விதமாக அமையும். இன்றைய இயந்திர வாழ்வில் வெளியூரில் உழன்று வரும் நான், எனது பிள்ளைகளுக்கு இந்த மாதிரி கொண்டாட்டங்களை நேரில் சென்று காண்பித்து  யாம் பெற்ற மகிழ்வை, அவர்களுக்கு  அளிக்க முடியவில்லையே..! ஆதங்கம்தான் வேறென்ன செய்வது தற்போது ?


இன்று (15 July) ஆனிப் பவுர்ணமி..

படங்கள் உதவி.. கூகிள் தேடல்.
தெப்பப் பாதை படம்..  சில படங்களை வைத்து நான் கணணி உதவியுடன், x -fig மூலம் உருவாக்கியது.
======================== 

சுத்தமா ஒழுக்கத்த ஃபாலோ பண்ணு..

நண்பரோட வீட்டுக்கு போயிருந்தேன்..
நண்பர் அவரோட ஏழு வயசு பையனுக்கு ஒழுக்கம் கத்துக் கொடுத்துக் கிட்டு இருந்தாரு.  அட.. நல்லதுதான.. காது கொடுத்து கேட்டேன் அவர் சொல்லுறத..

"நல்லா கேட்டுக்கோ.. எந்த இடத்துக்குப் போனாலும், அங்க ஏதாவது எழுதி இருந்தா சரியா அத கடை பிடிக்கணும்..... உதாரணமா.. லைப்ரரில 'Silence / சத்தம் செய்யாதீர்'னு இருக்கும்.. அங்க அமைதியா இருக்கணும்..,  'வரிசையில்  வரவும் / Q ப்ளீஸ்' னு எழுதி இருந்தா' -- ஒழுங்கா வரிசையா போகணும்..."

இப்படி ரெண்டு மூணு உதாரணம் சொல்லிக்கிட்டு இருந்தாரு... அவரோட பையனும் கவனமா கேட்டுக் கிட்டு இருந்தான். அஹா.. நாமளும் நம்ம பையனுக்கு இப்படிலாம் சொல்லித் தரணும்னு தோணிச்சு எனக்கு.
--------------
அப்புறமா வேற ஒரு நாள், நாங்க ரெண்டுபேரும் குடும்ப சகிதமா, ஈவினிங் டின்னருக்கு ஒரு ஹோட்டல் போயி சாப்பிட ஆர்டர் பண்ணிட்டு காத்திருந்தோம். நண்பரோட பையன் சாப்புடுறதுக்கு முன்னாடி, 'கை'ய சுத்தம் செய்யணும்னு சொன்னான்.  ஆமாம்.. ஒழுக்கம், சுத்தம் அதலாம் சரியான அளவுல கலந்து, கரைச்சு குடிச்சவனாச்சே..

அவன் கை அலம்பப் போயி நாலஞ்சு நிமிஷம் ஆகியும் எங்களோட டேபிளுக்கு திரும்ப வரலை.. நானும், நண்பரும் கை அலம்பற இடத்துக்கு போயிப் பாத்தா.. அவரோட பையன் அங்க இருந்த Basina சுத்தமா துடைச்சிக் கிட்டு இருந்தான்.. (அடப்பாவி.. இவ்ளோ சுத்தம் தேவையா).

நண்பர் அவன்கிட்ட எதுக்குடா அத சுத்தம் செய்றனு கேட்ட உடனே.. பையன் மேல என்ன எழுதி இருக்குனு பாருங்கன்னு சொன்னான்..  அங்க என்ன எழுதி இருந்திச்சின்னா..

"WASH BASIN"
 
டி(இ)ஸ்கி :
  1. து செல்வா கதைகளுக்கு எதிர் பதிவு என யார் நினைத்தாலும், கம்பெனி பொறுப்பில்லை.. சொல்லிப் புட்டேன் ஆமா. 
  2. ருந்தாலும் WASH & BASIN க்கு நடுவில 'gap' கொடுத்தது போர்டு எழுதின ஆளோட தப்புத்தான.. பையன் என்ன செய்வான்.. 
  3. து பத்து வருஷத்துக்கு முன்னால வந்த இ-மெயில் (சர்தார்) ஜோக்க உல்டா பண்ணி எழுதினது..

தமிழ் தட்டச்சு செய்வதில் மாறுதல்

இதென்னப்பா...


ஒரு வாரமா நானே சரியான சரக்கு இல்லாம, பதிவெதுவும் பொஸ்ட் பண்ணல...
இன்னைக்கு ஒரு சின்ன ஐடியா வந்ததுனால எடிட் பக்கத்துல போயி டைப் பண்ணலாம்னு நெனைச்செனா......  அதென்னமொ தெரியலை.. தமிழ் எடிட்டிங் காணாம.. என்ன பண்ணுறதுனு தெரியாம முழி முழினு முழிச்சேன்.....

ஒருவழியா.. வேறவழி  தெரிஞ்சுது. ..  இருந்தாலும் கொஞ்ஜம்  பழக்கம் வேணும்  அப்பத்தான் சரியா .. வெகமா.. டைப் பண்ண முடியும்.. ம்ம் பாக்கலாம்..

எனக்கு டைப்பீங் சரியா  வர்ர வரைக்கும்  நீங்கல்லாம்... என்னொட தொந்தரவு இல்லாம இருக்கலாம்.. அதுவரைக்கும்.. .. என்ஜாய்..நான் படும் கஷ்டங்கள்....
ல - ள, ய, இ- ஈ, பெ-பே, ர-ற, .. போன்ற  வேறுபாடுகள்..

முன்னலாம்.. 'zh' - ழ ..
இப்ப 'z' மட்டுமே....

இப்ப நான் பயன்படுத்தும்  'தமிழ்விசை' -- 'அஞ்சல்'


25 பைசா இனி இல்லை..

இனிமேல 25 பைசா காயின பணப் பட்டுவாடாவிற்கு பயன்படுத்த முடியாது. கேள்விப் பட்டதும் ஒரு சில சிந்தனைகள்.. மனதில் தோன்றியவை..முழுக்க முழுக்க சொந்தக் கற்பனையே..  மறைமுகமாகவும் எவரையும் குறிப்பிடவில்லை இப்பதிவு.

ரெடி ஸ்டார்ட்.. 

கோவில் உண்டியலுல இப்போது இருக்குற(!) 25 பைசா காசெல்லாம் என்ன ஆகும் ?
இதுக்குத்தான் நாலு நாளு முன்னாடியே உண்டியல ஓபன் பண்ணி.. 25 பைசாவலாம் கோவில் கணக்குல பேங்குல கட்டி இருக்கணும்...
------------------------------
நண்பர் (செல்வாமாதிரி ஒரு ஆளு) சொன்னாரு..
நண்பர் : நா 25 பைசா காயின இப்பவும் 'செல்ல' வைப்பேன்..
நான்     :  எப்படி ?
நண்பர் : இப்படித்தான் பாருங்க, http://www.youtube.com/watch?v=C4ohRdGFvBM
எப்படி செமையா உருண்டு போகுது (செல்லுது) பாருங்க..
நீங்கதான்.. கையால சரியா சுழட்டி விடனும்.. அப்பத்தான் அது சரியாச் 'செல்லும்
-----------------------------
அதே நண்பர் மளிகை கடையில சிப்பந்தியா வேலை பாத்தாருன்னா..
கடை சிப்பந்தி  : உங்க பில்லு அமவுண்டு அம்பது ரூபாய் 75 பைசா..
வந்தவர்  : இந்தாப்பா அம்பது ரூபாய் நோட்டு.. ம்ம்.. ஒரு ரூபாய் காயின்.
கடை சிப்பந்தி : ம்ம்.. 25 பைசா காயின் செல்லாது......
                            ஒரு ரூபாய் காயின் வேணாம், பாக்கி தரமுடியாது......
                            ஒரு ரூபாய் நோட்டு தாங்க...........
வந்தவர் : ஒரு ரூபாய் காயின், ஒரு ரூபாய் நோட்டுல என்ன வித்தியாசம். நோட்டு கொடுத்தா பாக்கி எப்படி சில்லறை தருவ ?
கடை சிப்பந்தி : இப்படித்தான்.. 
நாலு பாகமாக  'ஒரு ரூபாய்' நோட்டை சரியாக மடித்து அதில் ஒரு பாகத்தை கிழித்துத் தொடுத்தார் பாக்கி சில்லறைக்கு பதிலாக. 
----------------------------------------
என்னது, 25 பைசா காயின் செல்லாதா ? அதை ஏன் இவ்ளோ லேட்டா சொல்லுறாங்க ?
நாங்கதான் எங்க ஊருல அம்பது பைசா கூட யூஸ் பண்ணுறதில்லையே..  
நாங்கலாம் அவ்ளோ 'அட்வான்ஸா' இருக்கோமில்ல.. 
----------------------------------------
சரியான முடிவு !!
நிக்கல் உலோகத்தால செய்யப்பட்ட, ஓரூ 25 பைசா காயினோட எடை 2 .5 கிராம் (தகவல் : விக்கிபீடியா ). நாற்பது 25 பைசா காயினோட மொத்த எடை 100 கிராம்.... ஒரு கிலோ நிக்கல் விலை கிட்டத் தட்ட ஆயிரம் ரூபாய் (தகவல் : கூகிள் தேடல்)

அப்ப, பத்து ரூபாய் மதிப்புள்ள, நாற்பது 25 பைசா காயின்கள் செய்ய குறைந்தது  நூறு ரூபாய் செலவு..  இது உலோகத்திற்கான செலவு மட்டும்.. அப்பப்பா .. கண்ணக் கட்டுதே.. 
-----------------------------------------