டெரர் கும்மி விருதுகள் 2011


முஸ்கி : காப்பி அன் பேஸ்ட் பதிவு..

அனைவருக்கும் வணக்கம்,
ஒரு இனிமையான பொழுதில் மீண்டும் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. முதல் முறையாக இதைப் படிப்பவர்கள் சிரமம் பாராமல் டெரர் கும்மி விருதுகள் அறிவிப்பு மற்றும் டெரர் கும்மி விருதுகள் போட்டி விதிமுறைகள் ஆகிய இரண்டு பதிவுகளையும்  படித்துவிட்டு இதை தொடருங்கள். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று டிசம்பர்  26-ம் தேதி உங்கள் பதிவுகளை இணைப்பதற்கான அறிவிப்போடு வந்துள்ளோம்.

முதலில் நாங்கள் கொடுக்கும் இணைப்பை தொடுத்து எங்கள் போட்டிக்கான தளத்தை திறந்துகொள்ளுங்கள். அதில் உங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து முதலில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பதிவு ( ரெஜிஸ்டர் ) ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால் விரைவில் உங்களுக்கு ஆக்டிவேசன் லிங்க் அனுப்பப்படும் என்ற தகவல் ( மெசேஜ் ) வரும். உங்கள் மின்னச்சல் முகவரிக்கு அந்த லிங்க் வரும்வரை தயவுசெய்து காத்திருங்கள். எதற்கும் உங்களுடைய ஸ்பேம் அல்லது ஜங்க் மெயிலையும் சோதனை செய்துகொள்ளுங்கள். மின்னஞ்சலில் ஆக்டிவேசன் லிங்க் கிடைக்கப்பட்டு அதை அழுத்தினால் நீங்கள் இப்போது பதிவுகளை இணைப்பதற்கு தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

பதிவுகளை இணைப்பதற்கு இரண்டு பிரிவுகளாக வைத்துள்ளோம். பொதுப்பிரிவில் நீங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்ட மூன்று பதிவுகளை மட்டுமே இணைக்கமுடியும். அடுத்து புதுமுக பதிவர்களுக்கான பிரிவு. இதில் அவர்களின் சிறந்த பதிவாகக் கருதும் மூன்று பதிவுகளை இணைக்கலாம். மேலும் புதுமுக பதிவர்கள் மட்டும் பொதுப்பிரிவில் இணைத்த பதிவுகளையும் புதுமுக பிரிவில் இணைக்கலாம். பதிவுகளைஇணைக்க கடைசி தேதி 2012 ஜனவரி 6 என்று விதிமுறைகளில் அறிவித்தோம். பல வாசகர்கள் தொடர்புகொண்டு விடுமுறை நாட்கள் அதிகம் வருவதால் கால அவகாசத்தை நீட்டிக்க சொன்னார்கள். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 2012 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்படுகிறது. அதற்க்கு பிறகு இணைக்கப்படும் பதிவுகள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுடைய விதிமுறைகள் பற்றிய பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள். இதையும் மீறி ஏதேனும் சந்தேகம் அல்லது பதிவு செய்வதில் ( ரெஜிஸ்டர் ) பதிவுகளை இணைப்பதில் பிரச்னை அல்லது குழப்பம் இருந்தால் தயங்காமல் கருத்துரைகளில் கேளுங்கள் அல்லது  contest_2011@terrorkummi.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.உங்களுக்கு  உதவுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது சுலபமான  ஒன்றுதான். கீழே கொடுக்கப்பட்டிருக்கும்  இணைப்பை பயன்படுத்தி எந்த பிரிவில் உங்கள் பதிவுகளை இணைக்கப்போகிறீர்கள் என்று தேர்வு செய்து உங்கள்  பதிவுகளைஇணைக்கவும். இணைப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை சரியான பிரிவில் சரியான பதிவை இணைக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் ஒருமுறை  இணைத்த பதிவை மறுமுறை மாற்ற இயலாது. மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொண்டு தொடர்ந்து உங்களோடு இணைந்திருக்கிறோம். நன்றி. 
                                       

புத்திசாலி புத்திசாலிதான்

ஒரு ஊருல ஒரு புத்திசாலி... அதி புத்திசாலி இருந்தானாம்.. சாரி சாரி.. இருந்தாராம். அவருக்கு ரொம்ப தகவல்கள் தெரியுமாம்... தெசாரஸ், என்சைலோகொபீடியா, விக்கிபீடியா இதுல்லாம் கெடைக்காத தகவல்கள் கூட அவருகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாமாம். தகவல் மட்டும் இல்லாம, அவரு பொறந்ததுலேருந்து நல்லா சிந்திக்கும் அறிவு இருந்திச்சாம். புத்திசாலி இல்லையா ..?

அந்த ஊருக்கு பக்கத்து ஊருல நம்மள மாதிரியும் எடக்கு மடக்கா செய்யற ஒரு சின்னவர் இருந்தாராம். அவரு எதுக்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவாராம். அவர புத்திசாலி ஐயாகிட்ட அனுப்பினா, எப்படியாவது திருத்திடலாம்னு அவங்கப்பா கிட்ட பக்கத்து வீட்டு ஐயா ஐடியா சொன்னாராம். அந்தப்பாவும் அந்தப் சின்னவர புத்திசாலிகிட்ட அழைச்சிகிட்டுபோக முடிவு   பண்ணாராம்.

புத்திசாலிகிட்ட அழைச்சுக்கிட்டு போகப் போறாங்கனு தெரிஞ்சதும் அந்த சின்னவரு அவரப் பத்தி ஊரார்கிட்ட பல தகவல்கள் தெரிஞ்சிக்கிட்டாராம். முக்கியமா அவரோட  மீசை அழகா இருக்கும்னு யாரோ சொன்னாங்களாம். நம்ம சின்னவருக்கு ஒரு வழியா ஐடியா வந்திடிச்சு, எப்படி அவர மடக்கறதுன்னு.

அந்த நல்லநாளும் வந்தது.. சின்னவரோட அப்பா அவர அழைச்சிக்கிட்டு அந்த புத்திசாலி வீட்டுக்கு போனாராம். அங்கப் போயி அவரு கிட்ட அவனப் பத்தி சொன்னாராம். எல்லாத்தையும் நல்லா காது கொடுத்து கேட்ட புத்திசாலி மனுஷரு, யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தார். பையன்கிட்ட எதுக்கெடுத்தாலும் 'பந்தயம்' கட்டறது தப்புன்னு சொன்னார். அவன் பந்தயம் கட்டுறதா நிறுத்தணும்னா, என்ன வேணும்னு கேட்டார். அதுக்கு சின்னவர் சொன்னாரு "உங்க முகத்தில இருக்கே மீசை.. ..ஒருபக்க மீசைய எடுத்துடணும்". கொஞ்ச நேரம் யோசிச்ச புத்திசாலி, "சரி, நா எடுத்துட்டா, நீ வாக்கு கொடுத்தபடி பந்தயம் கட்டுறத நிறுத்திடுவாயா?"னு கேட்டார். "ஆமாம் நிறுத்திடுவேன்", வந்தது பதில். 

அவரும் ஷேவிங் க்ரீம், ரேசர் சகிதமாக வந்தார். அப்ப, கூட இருந்த அப்பா, அவர் கிட்ட, "வேணாம்.. வேணாம்.. இங்க வரும்போது, எப்படியாவது அவர ஒரு பக்க மீசையோட நடமாடச் செய்யறேன்னு வீட்டுல எங்கிட்ட 'பந்தயம்' கட்டிட்டு வந்தான்", என சொன்னார்.

என்னதான் இருந்தாலும் புத்திசாலி புத்திசாலிதான.? அவரு, தான் சொன்னபடி செய்யப் போறேன்னு சொல்லிட்டு, அவங்களுக்கு முன்னால நேர சைடுவாக்ல திரும்பி "ஒருபக்க மீசைய எடுத்திடறேன்"னு சொல்லிட்டு மழிக்க ஆரம்பிச்சாரு..
ஒருபக்கம் (frontside)       மறுபக்கம் (backside)
-----------------------------------------------------------------       
( ஒருபக்க / frontside ) மீசையை எடுத்த பின்னர்
----------------------------------------------------------------

 

டெரர் கும்மியின் இனிய இம்சை

பெரும்பாலும் முன்பின் பார்த்திராத வலை நண்பர்கள் சிலரில் நாங்கள் ஒரு குழுவாக டெரர் கும்மி எனும் வலைத்தளம் சென்ற ஆண்டு இதே நாளில் ஆரம்பித்தோம். முதன்முதலில் blogspot முகவரியிலேய செயல் பட்ட வலைத்தளம் 'terrorkummi.com' என பெயர் மாறியது. சமீபத்தில் அந்த வலைதளத்தில் ஹன்ட் ஃபார் ஹின்ட் என்ற கேம் கலை/களை கட்டியது, உங்களில் பலருக்கும் நினைவில் இருக்கலாம்.

தற்போது முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வலைதள நண்பர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையாக விருது வழங்கவுள்ளோம்.நீங்களும் உங்களுடைய படைப்புகளுடன் இதில் கலந்து கொள்ளலாமே. உங்கள் நண்பர்களுக்கும் கலந்துகொள்ள பரிந்துரைக்கலாமே.

கலந்து கொண்டு இதனை சிறப்பித்து தருமாறு வேண்டுகிறேன். தங்களின் படைப்புகள் அனுப்பப்பட்டு அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவும் வாழ்த்துக்கள்.

நன்றி. 

டவுட்டு சாமி.. டவுட்டு..

:
விசாகப்பட்டினம்: .......இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. 5 விக்கெட் வித்தியாசத்தில் சுலப வெற்றி பெற்றது. -- செய்தி (ஆன்லைன்  நாளேட்டில் செய்தி )

 

டவுட்டு :
மேற்கிந்திய தீவு அணி 9 (ஒம்பது) விக்கெட் இழந்திச்சு ..
இந்திய அணி அஞ்சு (5 ) விக்கெட் இழந்திச்சு.
9 - 5 = 4 தான......?

------------------------------------------

செய்திகளுக்கான பிரத்யேக சின்னத்திரை தொலைக்காட்சி ஒன்றில் மூணு நாளைக்கு முன்னாடி, செய்தி வாசிப்பவர் சொன்னது.. 
"மயிலாடுதுறையில் வசிப்பவர்கள் தங்கள் ஊரை தனி மாவட்டமாக்க வேண்டுமென கோரிக்கை. மக்கள் தொகை அடிப்படையில் இங்கு ஒன்பது புள்ளி ஐம்பது லட்சம் மக்கள் வசிக்கிறார்கள்.. இதை விடக் குறைவாக மக்கள் இருக்கும் பெரம்பலூர் போன்ற ஊர்கள் மாவட்ட தலைமையாக மாக இருக்கும் பொது ஏன், இந்தனையு தனி மாவட்டமாக ஆக்கக் கூடாது  என்று..     "


டவுட்டு : 
அதென்ன 'ஒன்பது புள்ளி ஐம்பது லட்சம்' ?  யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்..!!

------------------------------------------
3
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்
ஊக்கமது கைவிடேல்  -----  இப்படியும் இருக்கு

கிட்டாதாயின் வெட்டென மற -
கெடைக்கறது கெடைக்காம போகாது..
கெடைகாதது கெடைக்கவே கெடைக்காது.. (மாடர்ன்  மேட்டர்) 
 ----------இப்படிலாமும் இருக்கு..

டவுட்டு  :  எதை ஃபாலோ பண்ணுறது ?

கடற்படை தினம் - 2011

நன்றி : cityofvizag.com
1971ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி,  இந்திய கடற்படை பாகிஸ்தான் கடற்படை மீது, கராச்சி கடல்தளம் அருகில் அதிரடித் தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது. அதனை நினைவூட்டும் தினமாக கடற்படை தினம், விசாகப்பட்டினத்தில் வருடாவருடம் டிசெம்பர் நான்காம் தேதி கொண்டாப்படுகிறது. இவ்வருடமும் அவ்வாறு கொண்டாடப்படும் வேளையில் சென்ற வருடம் போல குடும்பத்துடன் சென்று கண்டு களித்து வந்தேன். சென்ற வருடம் அதனை ஒரு குறுஞ்செய்தியாக இந்தப் பதிவில் சொல்லி பின்னர் விளக்கமா எழுதுவதாகச் சொன்னேனே தவிர அதனை சொன்னதுபோல செய்யவில்லை. தற்போது சொல்லாமலே(No BuildUp), நேரடியாக அது பற்றி இந்தப் பதிவில்... 

பிற்பகல் மூன்றரை மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றோம்.. இல்லையென்றால் சரியான இடம் கிடைக்காதே. அகண்டு விரிந்த பீச்சாங்கரை என்றாலும் முக்கியமான நிகழ்ச்சிகளான பாம் வெடிப்பது, ஹெலிகாப்டலிருந்து கடலில் இருக்கும் சிறிய போட் மீதுள்ள ஆட்களை காப்பாற்றி ஹெலிகாப்டரில் ஏற்றுவது.. இதெல்லாம் பார்க்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட இடத்தில் முன்னரே சென்று இடம் பிடிக்க வேண்டும்.

சுமார், மாலை 4:30 மணியளவில் விண்ணை பிளந்து கொண்டு கடற்படை விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிறிய இடைவெளி விட்டு வந்தபடி இருந்தன.
 
முன்பொருமுறை அகமதாபாத்தில் ஏர்-ஷோ (Air-Show) பார்த்திருக்கிறேன். விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் சிறப்பு விமானங்கள் அதில் 'maneuvers '  எனப்படும் வேகமான குட்டிக் கரணங்கள் இருக்கும். அது விமானப் படையின் சாகசங்கள்.

இதிலோ, அந்தளவிற்கு விமான குட்டிக்கரண சாகசங்கள் இல்லை, இது கடற்படைதானே.  ஆனாலும் வேக வேகமாக விமானங்க சத்தத்துடன் கடற்கரை  வான்வெளியில் சென்றது பார்க்க நன்றாக இருந்தது. இடையிடையே சில ஹெலிகாப்டர்களும் வந்து சென்றது. விண்ணைப் பார்த்தபடியே இருந்த கண்கள் கீழே கடல் நீரில் கடற்படை கப்பல்கள் வருவதை முதலில் கவனிக்கவில்லை. ஆயினும் பரவாயில்லை, கப்பலின் வேகம் மிகவும் குறைவானதே.. அதனால் நன்றாக கப்பலை கவனிக்க முடிந்தது.. சுமார் இருபது கப்பல்கள் அணிவகுத்து சென்றன. அவசர வேலை இருந்தால் கல்யாணத்திற்கு சென்று 'தலை காண்பிப்பது' போல, ஒரு நீர்மூழ்கி கப்பலும் தலை(யை மட்டும்) காண்பித்தது. முழுவதுமாக வெளியே தெரிந்தால் அதனுடைய சிறப்பு வெளியே தெரியாமல் போய்விடுமே.
 


மன்னையில்(பிறந்த ஊர்)  இருக்கும் பெரிய குளக்கரையில் அமாவாசை, அந்தி சாய்ந்த வேளை, தெரு விளக்கு இல்லாத போது எதிர் தெருவில் இருக்கும் வீடுகளின் விளக்குகள் குளத்திலுள்ள நீர் மீது பிரதி பலிப்பதுபோல, கடற்கரையிலிருந்து சுமார் இருநூறு மீட்டர் தொலைவில், அக்கரையில் வரிசையாக வீடுகள் இருப்பது போல, கப்பல்களில் ஏற்றப்பட்ட மின்விளக்குகள் அழகாக கடல் தண்ணீரில் பிம்பமாகவும் தெரிந்தது. அந்த இருட்டு நேரத்தில் கடற்கரை மற்றும் மலைப்பகுதி சேரும் மேற்கு திசையிலிருந்து வான வேடிக்கைகள் சுமார் பத்து நிமிடம் நீடித்தது.. அத்துடன் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.....

மொத்தத்தில் வித்தியாசமான ஒரு மாலை நேரம், குடும்பத்துடன் கழிக்க முடிந்தது. இந்த ஊரில் இருக்கும் வரையில்.. இந்த நிகழ்ச்சியை வருடா வருடம் பார்த்தாலும் அலுப்பு தட்டாத ஒன்று என்றே தோன்றியது.

எதிரிகளிடமிருந்து நாட்டினை காக்கும் பொறுப்பில் இருக்கும் முத்தரப்பு  பாதுகாப்பு படை வீரர்களின் தொண்டும் (service), தியாகமும் (sacrifice) இந்தப் பதிவு எழுதும் / படிக்கும் போது நன்கு நினைவில் வருகிறது, இல்லையா ?
 --------------------------------------------------------

சின்னச் சின்ன அனுபவங்கள்..

வெவ்வேற காரணத்துக்காக, மூணு மாநிலத்துக்கு ஃபோன் பண்ண வேண்டி இருந்திச்சு. மூணுமே பி.எஸ்.என்.எல் சர்விஸ்தான்.

1 ) வடமாநிலத்திலிருந்து  வந்த பதில். "ஆப் டயல் கியகயா நம்பர் வியஸ்த் ஹே. க்ருப்யா தோடி தேர் பாத் டயல் கீஜியே. " (நீங்கள்  டயல் செய்த என் தற்போது உபயோகத்தில் உள்ளது..........................)

2 )  மத்தியப்  பிரதேசத்திலிருந்து வந்த பதில் "தி நம்பர் யு ஹாவ் டாயல்ட் ஈஸ் பிஸி, டிரை ஆஃப்டர் சம் டயம்."

3 ) நம்ம தமிழ்நாட்டிலிருந்து வந்த பதில் "நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்சமயத்தில் பிசியாக உள்ளது. தயவு செய்து சிறிது நேரத்திற்கு பின்னர் தொடர்பு கொள்ளவும்"

--- மொத ரெண்டும் சரியாத்தான் இருக்கு மூணாவதுல ஒரு தப்பு இருக்கு கண்டு பிடிங்க பார்க்கலாம்..

--------------------------------------------
மேற்கு மற்று கிழக்கு இந்திய(நாமதான்) அணிகளுக்கிடைய நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் கடைசி பந்து முடிந்தவுடன், முதலில் எனக்குத் தோன்றியது "மேச்சு 'டை' ஆயிட்டுது, ஆனால் எதுக்கு டிரான்னு எழுதி இருக்காங்களே". ஐந்து நிமிடத்திற்கு அப்புறம்தான் அந்த மேட்ச்சு எப்படி 'டிரா'னு புரிஞ்சுது......லேட்டா புரிஞ்சாலும் சரியா புரிஞ்சுதே..!
--------------------------------------------
துவக்கப் பள்ளியில் பயிலும் வயதுள்ள அண்ணனும், கிண்டர் கார்டனுக்கு சென்றுவரும் தங்கையும் மெடல் ஸ்பூன்-லெமன் ரேஸ் விளையாடினாங்க வீட்டுக்குள்ள. பொண்ணு சின்னவ.. லெமன் கீழ விழுதுடிச்சு. உடனே அண்ணனோட லேமனையும் கீழ விழ வைக்குறதுக்காக அவனோட வாயில இருந்த ஸ்பூன தன்னோட கையாள தட்டி விட முயற்சி பண்ணா...  ஸ்பூன் அண்ணனோட வாய் உள்ள போயி வாய்குள்ள மேல் பகுதில, ஸ்பூனோட பின்புறம்  குத்தி காயம் பண்ணிடிச்சு. அஞ்சு நிமிஷம் ரத்தம் வந்து அப்புறமா நின்னுடிச்சி. காயம் மட்டும் ரெண்டு மூணு நாளுல ஆறிடும், கவலை வேணாம்னு டாக்டர் சொன்னாங்க. 
       இந்த மாதிரி விளையாட்ட/போட்டிய  ஸ்கூலுல எதுக்கு சின்னப் பசங்ககிட்ட சொல்லித் தராங்களோ தெரியல...... சின்னப் பசங்க விளையாடச்சே பெரியவங்களோட கவனிப்பு / மேற்பார்வை கண்டிப்பா வேணும்..
------------------------------------------------------- 
அந்த போன் மேட்டர்ல இருந்த தவறு..  "அட, அந்த எண்ணோட தொடர்பு கெடைக்கவே இல்லையே...(பேச முடியலியே) அப்புறம் எப்படி 'நீங்கள் தொடர்பு கொண்ட'னு ஆட்டமேடிக் வாய்ஸ் மெசேஜ் வரலாம் ? 
----------------------------------------------

Y this 'கொலவெறியும்', 'வடகறியும்'

ஒரு மனுஷனுக்கு காதலிகிட்ட பல்ப் வாங்கி  கொலவெறியோட இருந்தா, அவருக்கு ஒரு வடகறியும், ஞாபகத்துக்கு வரலாம்.

எப்படியா ?

இதோ நா (நம்புங்க.. ஸாக்ஷாத் நாந்தேன்..)  எழுதின லிரிக்ஸ் இந்த டெரர்  கும்மி லிங்க்ல இருக்கு போயி படிச்சிட்டு சொல்லுங்க, சரியா இல்லையானு.

அன்புடன் ,
மன்னை மாதவன்.
---------------------------------

அமிதாப்பச்சனின் பேத்தி பெயர்..

எந்த ஒரு பொருளுக்கும், ஆளுக்கும் பேருன்னு ஒன்னு இருக்குது. அது சும்மா (ஜஸ்ட்) ஒரு அடையாளத்துக்குதான். இருந்தாலும் சிலரது பெயர் வித்தியாசமா இருக்கும். குடும்பத்துல இருக்குறவங்களுக்கு பொதுவா அடைமொழி இருக்கும், அது பெயருள வரும். உதாரணமா சர்-நேம் என்பது தமிழ்நாட்ட விட்டு வெளிய போனா கண்டிப்பா நீங்க சந்திப்பீங்க. 'ஷர்மா, வர்மா, சிங், பாட்டில், முகர்ஜி., etc.', இதெல்லாம் சர்நேம். (இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்). அவங்களுக்கெல்லாம் ஒரு வசதி. யாராவது ஒருத்தரு பெயருள ரயில்வே டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு மத்தவங்க  யாராவது ஒருத்தர் பயணம் பண்ணலாம்.  உதாரணம்: ஆர். ஷர்மா டிக்கட்டுல ராகேஷ் ஷர்மா, ராஜீவ் ஷர்மா, ராஜேஷ் ஷர்மா யாரு வேணா போகலாம்.

நம்ம தமிழ்நாட்டுல பெரும்பாலும் சர்-நேம் வச்சுக்குறது வழக்கத்துல இல்லை. ஆனாலும் பாருங்க, சகோதர, சகொதரிக்கேல்லாம் பேருல ஏதாவது பொதுவா இருக்கும். எனக்கு தெரிஞ்சு,
 • ஒரு குடும்பத்துல எல்லாரோட பேரும் 'ராஜ'னு ஆரம்பிக்கும்.
 • இன்னொரு குடும்பத்துல ஏ.ஆர்.னு இனிஷியலோட பெயர் 'ஆர்'ல ஆரம்பிக்கும். அவங்க ஒரு 'ஏ.ஆர்.ஆர்' குடும்பம். 
 • 'ஸ்ரீ'னு ஆரம்பத்துலயும்.. ஒரு குடும்ப உறுப்பினர்கள் பெயருள இருக்கும்  (எனது அண்ணன் பையன்கள் கூட ஒரு உதாரணம்).
 • 'ஸ்ரீ'னு முடியுமாரும் வேற அண்ணன்-தம்பி-சகோதரி பேருல வந்திருக்கு.
 • 'ப்ரியா'னு முடியராமதிரி ஒரு அக்கா-தங்கையை சந்தித்திருக்கேன்.
 • என்னோட சகோதரர்கள் பெயரிலும், எனது பெயர்  உட்பட 'ன்' என்று முடியும் ஒருவர் தவிர. அதன் காரணமாகவோ என்னவோ அவர் மட்டும் அக்கவுண்ட்ஸ் படித்தார், மற்றவர்கள் அறிவியல் படித்தோம் (கல்லூரிப் படிப்பு)

இப்ப எதுக்கு இந்தப் பதிவா?

அமிதாப் பச்சனோட பேத்திப் பெயர் -- அபிஷேக் பச்சனோட பொண்ணுக்கு என்ன பேரு வெப்பாங்களோ, அதுதான். ஓகே.. ஓகே.. அடிக்க வராதீங்க.. ஒரே ஒரு க்ளூ கொடுக்கறேன். 'பச்சன் சாஹிப்' வீட்டுல 'அமிதாப், அபிஷேக் , (ஐ)அய்ஸ்வர்யா' அதே வரிசையில பேபி பச்சனுக்கும் 'அ' வில் ஆரம்பிப்பதுபோல பெயர் இருக்குமென. அபிஷேக்  பச்சன் சொல்லியதாக கேள்விப்பட்டேன்.
டிஸ்கி : பத்திரிகை படிச்சு நானும் இப்படி ஆயிட்டேன். படிக்கத் தூண்டுறமாதிரி தலைப்பு கொடுத்துட்டு, அதப்  பத்தி எழுதாம, சம்பந்தமே இல்லாமே மேட்டர முடிக்கறது.

படங்கள் உதவி கூகிள் இமேஜெஸ். 
---------------------------------------------

குழந்தைகளின் யோசிப்புகள்..


அஞ்சு வயசு பையன் : இதென்னப்பா ? (ஹோட்டலில் இருந்த 'Fire exit ' போர்டை காண்பித்தபடி)
அப்பா : இங்க தீப்பிடிச்சா இந்த கதுவு வழியா போகணும்.
பையன் : இந்த கதவுப் பக்கம் தீப்பிடிச்சா ?
-------------------------------------
பரமதம் போல டாம் அண்ட் ஜெர்ரி கேம்.. அதுல ஒரு சில கட்டங்கள்ல போயிட்டா, பணிஷ்மென்ட் 'மிஸ் எ டர்ன்(turn)'. இந்த ரூல பையன் கிட்ட சொல்லிட்டு இருந்தார்  ஒரு அப்பா. கவனமா கேட்டுக்கிட்டு இருந்த அவரோட அஞ்சு வயசு பையன் கேட்ட கேள்வி..
"ஒரே சமத்துல டாமும் ஜெர்ரியும் அந்த கட்டத்துல வந்திட்டா, எப்படி 'டர்ண மிஸ் பண்றது'?"
-------------------------------------
என்னோட அக்காவின் முதல் குழந்தை மூணு வயசு இருந்தப்ப, அக்காவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. அதிகாலை நேரமானதால், மூணு வயசே ஆன, முதல்  குழந்தையை வீட்டில் மற்றவர்களுடன் தூங்க வைத்திருந்தோம். காலை ஆனதும் அந்தக் குழந்தையை, அம்மாவுக்கு பாப்பா பிறந்திருப்பதாலும், தாயைக் காணும் ஆர்வத்தாலும் என்னோடு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். ஆஸ்பத்ரியில் சில மணிநேரம் தங்கி குழந்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றோம். வீட்டிலிருந்தவர்கள் அந்தப் முதல் குழந்தையிடம் குட்டி பாப்பா பற்றி கேட்ட பொது "பாப்பா நல்லாத்தான்  இருக்கு ஆனா என்கூட பேசவே இல்லை.. ", என்றது.  நாங்கலாம் சிரிச்ச சிரிப்புக்கு அந்தக் குழந்தைக்கு அப்ப அர்த்தம் புரியலை. இப்ப இந்தப் பதிவ படிச்சா கண்டிப்பா புரியும்.
-------------------------------------
ஒரு ஃகிஃப்ட்  ஐட்டம்... அதுல ஒரு க்வார்ட்ஸ் க்ரிஸ்டல் கடிகார இயந்திரம், நிமிட, மணி, வினாடி முள் மூன்று, ஒரு பேட்டரி, அஞ்சு விதமான வாட்டர் கலரிங், பிரஷ் சகிதமா அஞ்சு டயல்.. வெவ்வேற  அவுட்லயனோட நம்ம இஷ்டத்துக்கு கலர் அடிச்சு ஏதாவது எழுதி டயல ரெடி பண்ணலாம். ஒரு கார்ட்போர்டு, பாக்ஸ் மாதிரி மடிச்சு வெக்க கட்டிங் சகிதம். இத கொடுத்து 5 -7 வயசு குழந்தைகள் தாங்களே படம் வரைஞ்சு  ஃபிட் செய்ஞ்சா.. ஒரு வொர்கிங் கிளாக் ரெடி..

இதப் பாத்ததும் ரொம்ப ஆர்வமா பையன் கிளாக் செட் செய்ய ஆரம்பிச்சான். அத ஆர்வமா என்னோட பொண்ணு பார்த்துக் கொண்டிருந்தாள்.

இத ரெடி பண்ணி பேட்டரி மாட்டினதும் என்னோட நாலு வயசு பொண்ணு, "ம்ம்ம்.. மூணு ஹான்ட்ல ரெண்டு வொர்க் பண்ணல.. இந்த ரெட் ஹாண்ட் மட்டும்தான் வொர்க் பண்ணுது", என்றாள் அந்த வினாடி முள்ளை சுட்டிக் காட்டியபடி.
---------------------------------

டிஸ்கி  :  முதலிரண்டும், எனது அலுவலக நண்பரும் அவரது பையனும். மற்ற இரண்டும் நம்ம வீட்டு அனுபவம்.
------------------------------------------

நம்மளோட மதிப்பு

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது ?

சும்மா,  'madhavan73' னு கூகிளாண்டவர் கிட்ட கேட்டப்ப  நம்ம நண்பர்கள் டெரர் பாண்டியன், சிரிப்பு போலீஸ் வந்தா மாதிரி ஒரு ஃபீலிங் / இன்டிகேஷன். என்னடான்னு கூர்ந்து காதுகொடுத்து கேட்டா 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தூதூதூதூதூதூதூதூதூதூதூதூ' னு துப்பிச்சு.. அதான் இதோ படமா இங்க கொடுத்துள்ளேன்..
 

http://www.statshow.com/madhavan73.blogspot.com?update=1

அண்ணன் வீடுதிரும்பல் மோகன் மற்றும் சகோதரி, ராம்வி கேட்டுக் கொண்டதற்கிணங்க, நீங்களும் உங்கள் பிளாகின் மதிப்பை தெரிந்துகொள்ள இப்படி முயற்சி செய்யலாம்.  http://www.statshow.com  என்னும் தளத்திற்கு சென்று உங்கள் வலைப் பதிவின் முகவரியை கொடுத்துப் பாருங்கள்.

கதம்பமாலை

சென்ற 7ம் தேதி முதல் இன்று(14ம் தேதி)  காலை வரை அலுவல் பணி சம்பந்தமாய் வெளியூர் சென்று வந்ததால் வலைமனையில் ஈடுபட முடியவில்லை. முக்கியமாக 10ம்  மற்றும் 11ம் தேதியில் ஓரிரு நிமிடங்கள் வரையில் மட்டுமே எனது ஈ-மெயில் பார்க்க முடிந்தது. நான் வழக்கமாக பின்தொடரும் பதிவுகள் உட்பட எந்த வலைமனை பதிவுகளையும் படிக்கவும் முடியவில்லை. எனவே பல்வேறு பதிவுகளுக்கு எனது பின்னூட்டம் இல்லாதது கண்டு ஏமாற்றமடைந்த (!) பதிவர்கள் அனைவருக்கும் எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊருக்கு திரும்பும் வழியில், வலைமனை நண்பர் வெங்கட் நாகராஜ்  தில்லியில், என்னை ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று ஷாப்பிங்கில் உதவி செய்தும், பின்னர் தனது இல்லத்தில் சுவையான தென்னக-விருந்தை மதிய-உணவாக வழங்கிய அன்னாரின் துணைவியாருக்கும் (இவர் கோவை-டு-டெல்லி என்ற வலைப்பூவின் ஆசிரியர்/உரிமையாளர்) மனமார்ந்த நன்றிகள்.  தமிழ் வலைமனை உலகில் நான் கலந்து கொள்ள ஆரம்பித்த பின்னர், எனக்கு அறிமுகமான (இங்கு வருவதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் தவிர்த்து) வலைமனை நண்பர்களுள், நான் நேரில் சந்தித்த முதல் நபர், வெங்கட் நாகராஜும் அடுத்த நபர் அவரது துணைவியாரும் தான். மூன்றாவது நபர் நீங்களாகவும் இருக்கக் கூடும், காலம்தான் பதில் சொல்லும்.

சவால் சிறுகதையில் நானும் கலந்து கொண்டு எழுதிய கதைக்கு இங்கு சுருக்கமாக விமர்சனம் செய்துள்ளார் நண்பர் ஆதி. அவருக்கு நானும் எனது நன்றியையும் விளக்கமும் கொடுத்துள்ளேன். அந்தப் பதிவின் பின்னூட்டத்தில், சொல்ல மறந்த மேலும் ஒரு விளக்கம்.

"லாப்டாப்பிலிருக்கும் டேட்டாவை பாதுகாக்க ஏகப்பட்ட டெக்னிகல் விஷயங்கள் கதை படிப்பதை அந்நியபடுத்திவிடுகின்றன."

இது அறிவியல் கற்பனைக்கதை  அல்ல. சாத்தியமாகக் கூடிய முறைதான். விவரம் தெரிந்தவர்கள் ஆழ்ந்து படிக்கலாம். விவரம் புரியாதவர்கள் மேலோட்டமாக அப்படி ஒரு முறை இருப்பதை புரிந்துகொள்ளக் கூடிய வகையில் தான் கதை சென்றுள்ளதாக நான் நினைக்கிறேன். மேலும் வாசகர்களுக்கு ஏதாவது எனது கதை பற்றி சந்தேகமிருந்தால் கேளுங்கள், கண்டிப்பாக பதில் சொல்கிறேன். தவறு இருப்பின் ஒற்றுக் கொள்ளக் கூடிய மனநிலை உடையவன் நான் (என்று நம்புகிறேன்).

சென்ற வருடம் போலவே எங்கள் குடியிருப்பு பகுதியில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப் பட்டது. மாணவ மணிகள் இறையுணர்வும், தேசப்பற்றுடனும்  ஆடலும் பாடலும் செய்து காண்பவர்களை மகிழ்ச்சியுறச் செய்தனர். சினிமாப் பாடல் இல்லாத ஒரு நிகழ்ச்சி மன நிறைவைத் தந்தது.

சின்ன வயசு ஞாபகங்கள்.

சின்ன வயசுல நடந்தது எல்லாமே ஞாபகம் இல்லேன்னாலும் சில விஷயங்கள் நெனப்புல  நல்லா பதிஞ்சிருக்கும். அந்த வகையில சில..
  
நானு, ஸ்கூல் படிக்கறப்ப போஸ்ட் கார்டு, பதினஞ்சு பைசாக்கு கெடைச்சுது. இப்ப அதோட விலை என்ன ? இ-மெயில், செல்போன்..  இவை வந்த பின்னர் தபால்-கடிதம் எழுதும் பழக்கம் போயே போச்சு..

எங்க ஊரு கோவில் ரொம்ப பெருசு.. பதினாறு கோபுரம் இருக்கும். அதுல வடக்கு உள்சுவர் கோபுரத்துல, நண்பர்களோட சேர்ந்து உச்சி வரைக்கும் ஏறி ஊர் முழுக்க பாப்போம். அதுல ஏர்றது ரொம்ப ரிஸ்கான காரியம், படிகள் ஒழுங்கா இருக்காது. கால் கைகளால, தூண் இடுக்குல உடம்ப வெச்சு கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறனும். முதல் நிலை  வரைக்கும் வெளிப்புறமா ஏறனும். யாராவது பாத்தா திட்டுவாங்கனு பயந்துக்கிட்டே வேகமா ஏறுவோம். பெரும்பாலும் மதியம் இரண்டரை - மூன்று மணி போல ஆள் நடமாட்டம் இருக்காது அந்த பகுதியில. அப்ப எங்களோட சாகசத்த வெச்சிப்போம். முதல் நிலைக்கப்புறம் உட்புறமா ஏறுவோம். வெளில யாருக்கும் தெரியாது.  மேல் நிலையிலிருந்து உட்புறமா கீழ விழுந்தாலும் யாருக்கும்  தெரியாது, இளங்கன்று பயமரியாதுன்னு சொல்லுறதுகேத்தாப்ல அப்படி தேவையில்லாத ரிஸ்கான வேலைதான். ஆனா, ஆர்வத்தோட ஏறுவோம். இப்ப நெனைச்சா பயமா இருக்கு. உச்சில ஏறி ஊர் முழுக்க சுத்தி சுத்தி பாத்திருக்கோம்.. என்னதான் ரிஸ்க் எடுத்தாலும் அந்த ஏரியல் வியூ செமையாத்தான் இருக்கும்.

சிரிப்போ சிரிப்பு :

சின்னஞ்சிறு கிளி ஏன்  என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையெனும் ஓடம் வழங்கி வந்த பாடும்போது நான் தென்றல் காற்றினிலே வரும் கீதம் சங்கீதம் நீதானே என் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளும் ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலை புஷ்பங்களே என் சோதனைமேல் சோதனை போதுமடா சாமியே சரணமையப் ருவமே நீ புதிய பாடல் பாடு, உன் இளமை இதோ இதோ.. இனிமை இதோ இதொட்டால் பூமலரும் தொடாமால் நான் பாடிய முதல் பாட்டு அவள் பேசிய தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தப் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறக்கும் போதும் அழுகின்றான், இறக்கும் போனால் போகட்டும் போடா. இந்த பூமியில் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. நான்.. நான்..

இது போன்ற தொடர்ச்சியான பாடல்களை உடையது 'முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்'...

--- 'சிரிப்போ சிரிப்பு'   (சிட்டி பாபு & மயில்சாமி )கேசட்டில் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கேட்டது..


கொசுறு : இது பழைய ஞாபகம் அல்ல -- நல்லவர்களுக்கு எந்நாளும் இனிய, நல்ல நாளே. அப்படி இருக்கையில் அதென்ன விசேஷம் 11-11-11. அன்றையத்தினத்தில் குழைந்தை டெலிவரி செய்ய பல மக்கள் ஆர்வமா இருக்காங்களாம், டாக்டர் கிட்ட ஆபரேஷனுக்கு அப்பாயின்மென்ட் வாங்கி இருக்காங்களாம். 'ப்ளான்' பண்ணி பண்ணா நல்லாத்தான் இருக்கும், அதுக்காக இப்படியா ? 

டிஸ்கி : இது எனது 200 வது பதிவு

அர்த்தமுள்ள குறியீடு  (சவால் சிறுகதை-2011)  

செந்தமிழ் நாட்டின் தலைநகரின் மத்தியப் பகுதியில் இருக்கும், நூற்றாண்டு கண்ட ஆளுயர்ந்த மாளிகை பல்கலைக் கழக பேச்சரங்கம், 'எள்' போட்டா எண்ணையாயிடும்னு சொல்லுறமாதிரி அரங்கம் ஓவர் லோடாகி இருந்தது.

"காசு கொஞ்சம் கொஞ்சமாத்தான் சேக்க முடியும், சினிமா தியேட்டருல ஒவ்வொரு ஆளா சேர்றது போல, ஆனா சேந்த காச, சினிமா முடிஞ்சு கூட்டம் வேகமா கலையறதுபோல சீக்கிரம் செலவழிச்சுடலாம்", இதற்கு நேர்மாறா இருக்கும் நமது இளம் புயல் விஷ்ணு பேசற நிகழ்ச்சி இருக்கும். சும்மாவா, பத்து வயசுல பத்தாவது படிச்சவனோட அறிவும், காலேஜ் போகறப்ப பாடம் தவிர அதிவேக  சமயோசித  புத்தியும்  கொண்ட அதிசய பிறவியாச்சே !

கம்பியூட்டர் ஹார்ட்வேர் அன்ட் சாஃப்ட்வேர் ரெண்டுலயும் முனைவர் பட்டம் வாங்கி.. நாட்டோட ராணுவம் மற்றும் முக்கிய பாதுகாப்புத்  துறையில பொறுப்புள்ள பதவில இப்ப இருக்கான். பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில விஷ்ணு பேச ஆரம்பிச்சான்,
"நம்ம நாட்டோட நாளைய தூண்கள் நீங்களே. உங்களுக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது. பொறுப்போடு உங்க கடமையை செய்ய வாழ்த்துக்கள். இன்றைய கால கட்டத்தில் எதற்கெடுத்தாலும் கணணி, கைபேசி இப்படி எலெக்ட்ரானிக் யுகத்தில் எத்தனையோ பயன்கள். கண்டு பிடித்த ஆராய்ச்சியாளர்களும், அதன் மூலம் தொழில்நுட்பத்தை மக்களுக்கு பயன்படும் வகையில் மேம்பாடு பட்டு உயர்த்துபவர்கள் ஒருபுறம். அந்த தொழில்நுட்பத்தை தவறான வழியில் பயன்படுத்தி பணம் பதவி.. இன்னும் என்னென்னவோ. முக்கியமா தீவிரவாதத்த தூண்டிவிட்டு கலவரம் பண்ணி மக்களுக்கு தீமை செய்யறவங்கள நீங்க முக்கியமான எதிரியா நெனைக்கணும். நீங்க நல்லவர்களாகவும், நல்லவர்களுக்கு மட்டுமே துணைபோகவும் வேண்டும். அலுவல் பணி காரணமாக என் சிற்றுரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். புதிய பட்டதாரிகள் அனைவருக்கும், மறுபடியும் வாழ்த்துக்கள்."
அவனது சிற்றுரை முடியட்டும் எனபதற்கு காத்திருந்ததுபோல அவரது கைபேசி சிணுங்கியது.. எடுத்து பேச ஆரம்பித்ததும், முகம் வேகமாக சுருங்க ஆரம்பித்தது. ஆனாலும் அதை உடனே உணர்ந்த  விஷ்ணு, தனது முகபாவத்தை இயல்புநிலைக்கு கொண்டு வந்துகொண்டே பதில் சொன்னான்.. "ம்ம் பத்து நிமிஷத்துல அங்க வந்துடறேன்"
-----------------------------------
சொல்லியபடி பத்தே பத்து நிமிஷத்துல அவனோட அலுவலகத்தின் முதன்மை வாயினுள் தனது காரை நுழைத்தான். அந்த  கட்டிடத்தின் காம்பவுண்ட்  சுவரை சுற்றியுள்ள எல்லா பகுதியிலும் வழக்கமான  செக்யூரிட்டி இல்லாமல் முகம் தெரியாத புதிய ஆட்கள்  டியூட்டியில் இருப்பது முதலில் அவன் கண்ணில் பட்டது. போர்டிகோ சென்று காரை நிறுத்தவும், உயர் ரக துப்பாக்கி ஏந்திய தடித் தடியான மூன்று ஆட்கள் அவனை நெருங்கவும் சரியாக இருந்தது. அதில் இருவர் உடனே அவனுடைய இரு பக்கங்களிலும் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருக்க, மற்றவன் தனது துப்பாக்கியை மடக்கி, அவனை முழுவதுமாக சோதிக்கத் துவங்கினான்.

கடுமையான சோதனைக்குப் பின், அவனிடம் ஆயுதம் எதுவுமே இல்லை என்பதை உறுதி செய்துமுடித்து மிதனான குரலில் அவனிடன் சொன்னான், "நீ, எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால், உள்ள இருக்குற உங்க ஆளுங்க எல்லாரும், நீ உள்பட பிழைக்க முடியும். தப்பித் தவறி எதிர்ப்பு காட்டினாகூட, அப்படி எங்களுக்கு சந்தேகம் வந்தாகூட தயங்க மாட்டோம், தூக்கிடுவோம்", சொல்லிக்கிட்டே விஷ்ணுவோட கண்ணையும், முகத்தையும் உற்றுப் பார்த்து விஷ்ணுவிடம் பயம் இருப்பதை உறுதி படுத்திக் கொண்டான்.

ஐந்து நிமிடத்தில், நால்வரும் மையக் கதவு வழியே உள்ளே செல்ல, லிஃப்ட் அருகே துப்பாக்கி ஏந்தியபடி இருந்த வேறு மூன்று ஆசாமிகளின் பார்வையை ஏந்திக் கொண்டே லிஃப்டினுள் சென்று, இரண்டாவது தளத்தில் முதல் அறையினுள் சென்றார்கள்.

அவர்கள் நோக்கம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு பற்றிய முக்கிய இரகசியங்கள்தான் என்பதை தெள்ளத் தெளிவாக விஷ்ணுவிடம் சுருக்கமாக சொல்லப் பட்டது.  ராணுவ பாதுகாப்பு ரகசியங்கள் அடங்கிய அவனது அலுவலக லேப்டாப், சரியான பாஸ்வேர்டை மட்டுமே விழுங்கி உங்களுக்கு வழிவிடுவேன், இல்லையேல் முகத்தில் காரி துப்புவேன் எனச் சொன்னதால், வேறு வழியின்றி அவன் அழைக்கப் பட்டதும், விஷ்ணுவிற்கு தெரியவந்தது.

விஷ்ணுவின் கண்கள் அவர்களை ஒரு நோட்டம் விட்டன. வந்தர்களில் பாதி பேருக்கு நரைத்த முடி, மற்றவர்களுக்கு கருத்த முடியாக இருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலையை மழித்து பழிவாங்கியது. தலை நரைச்ச ஆளெல்லாம், சொட்டைத் தலையைப் பார்த்து ஆறுதல் பெறுவதும், சொட்டை ஆளெல்லாம், நரைச்ச தலை ஆளை பார்த்து ஆறுதல் பெறுவதும் மனதில் தோன்றியது. மனதினுள் சிரித்தான். கண்ணுக்குக் கீழே கருப்பு முகமூடி, வந்திருந்த அனைவர் முகத்திலும்.

சக அலுவலர்கள் வாயினுள் துணி வைத்து கைகள் கட்டப்பட்டு, துப்பாக்கியை எதிர்கொண்ட வண்ணமிருந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்டான், விஷ்ணு. தனக்கு மட்டுமே அந்த பாஸ்வேர்ட் தெரிந்திருப்பது ஒரு விதத்தில் நல்லது என்று நினைத்தவன், அப்போது மற்றவர்களின் உயிர் அந்தரத்தில் ஊசல் ஆடுவதை நன்கு கணித்தான்.

விஷ்ணு அவர்களின் தலைமை ஆளிடம் கேட்டான். "இந்த லேப்டாப்பில் இருக்குற தகவல்தான உங்களுக்கு முக்கியம் அந்தப் பாஸ்வேர்டு தந்தா இவங்கள விட்டுடுவீங்களா?" என்றான்.

"அதெப்படி போதும். நீ பக்கத்துலேயே இருந்து எல்லா முக்கியமான ஃபைல்களையும்  காமிக்கணும். எங்க பக்கமும் எக்ஸ்பெர்ட் இருக்காங்க. அவங்க தகவல்களோட தன்மைய உறுதி செஞ்சாத்தான் உங்க எல்லாருக்கும் விடுதலை. அதுவும் நாங்க இந்த லேப்டாப்ப  எடுத்திட்டு, இதோ இங்க இருக்காரே எஸ்.பி. கோகுல்  அவரோட நாங்க எல்லாரும் எங்க இடத்துக்கு ஸேஃபா போன பின்னாடிதான்", சொன்னான் ஹெட் முகமூடி

சொந்த பந்தமில்லாத எஸ்.பி. கோகுல், அந்த அலுவகத்திற்கு அமர்த்தப்பட்ட பிரத்யேக போஸில் ஆபீசர். செக்யூரிட்டி வியூகங்கள அமைக்கிறது அவரோட தலையாய கடமை.(!) அவரை மடக்கிப் போட்டுத்தான் இந்த கும்பல் தன்னோட அதிரடி திட்டத்தை  இப்போது நடத்துவதும் சுருக்கமாக சொல்லப் பட்டது.

எஸ்.பி.கோகுல்  தொடர்ந்தார், "ஆமா, நானும் எப்ப பெரிய பணக்காரனாகி வாழ்க்கையில செட்டில் ஆகுறது. இந்த குருப்புக்கு உதவி செஞ்சு, இந்த டீல்ல லம்ப்பா ஒரு தொகைய அடிச்சிட்டு, வசதியா வேற நாட்டுல வேற பேருல வெள்ளைக்கார தோல் பொண்ணோட செட்டில் ஆயிடப் போறேன். அதுக்கு இந்த கும்பல் ஏற்கனவே ஏற்பாடு செஞ்சிட்டாங்க. சரி, சரி வேலைய ஆரம்பிங்க". என்று தனது பங்கிற்கு வாலாட்டினார்.

வேறவழி இல்லை என்பதை உணர்ந்த விஷ்ணு, லேப்டாப்பை உயிர்பித்தான். அவன் செய்வதை கவனமாக ஒரு குள்ள முகமூடி கூர்ந்து கவனிக்கலானான்.
 • username : vishnu
 • password : *********
எஸ்.பி கோகுல், விஷ்ணு தந்த பாஸ்வேர்ட் அடங்கிய துண்டுச் சீட்டை  மேசைமீது வைத்து விட்டு, அதைப் பார்த்து யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டை எழுதிக் கொண்டு, மற்ற  தகவல்களை தனது கையில் இருந்த குறிப்பேடில் எழுத ஆரம்பித்தார். விஷ்ணு அளித்த பாஸ்வேர்ட் மேட்ச் செய்தபின், தான் தேடிக்கொண்டிருந்த மணாளனைக் கண்ட மங்கைபோல கதவை திறந்தது லேப்டாப். லேப்டாப்பினுள் அதிகமாக பைல்கள் இருக்கவில்லை. தேவையான முக்கியமான தகவல்கள் மட்டும், சரியான முறையில் மற்றவர்களுக்கு புரியும்படி வைக்கப்பட்டிருந்தது. குறிப்பெடுத்துக் கொண்டிருந்த குள்ளனுக்கும் எளிதாகப் புரிந்தது. மேம்போக்காக பைல்களின் தன்மையை உறுதிபடுத்திக் கொண்டான்.

அனைத்தும் முடிந்ததும். குண்டன், லேப்டாப்பை ஷட்டவுன் செய்து மீண்டும் அதனை உயிர்பித்தான். எஸ்.பி தந்த குறிப்பேடில் இருந்தபடி யூசர் நேமும், பாஸ்வேர்டையும் டைப் செய்து, மீண்டும் எல்லா ஃபைல்களையும் மேம்போக்காக பார்வையிட்டன. பிறகு தலைமை முகமூடிக்கு பச்சைக் கொடி காட்டுவதுபோல தம்ஸ்-அப்பினான்.

அரை மணி நேரத்தில் அனைத்தையும் முடித்துக் கொண்டு அந்த முகமூடிகள், தங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொண்டு விஷ்ணுவின் வாயிலும் துணியை வைத்து மூடி, கைகளை பின்னால் கட்டிபோட்டு, அலுவலக எல்லா அறைகளையும் மெயின் கேட்டையும் பூட்டிவிட்டு, வந்தவழி திரும்பி சென்றார்கள். இதுவரை எஸ்.பி.யாக இருந்த கோகுலும், 'பி'யை உதறிவிட்டு அவர்களுடன் 'எஸ்' ஆனார்.

பல்கலைக் கழகத்தை விட்டு விஷ்ணு வரும் வழியில் ஓரளவிற்கு ஊகித்து, தனது கைபேசி மூலம், ஒன்றரை மணி நேரம் கழித்து தன்னிடமிருந்து தகவல் வராத நிலையில் தனது அலுவலகத்திற்கு தகுந்த பாதுகாப்போடு வருமாறு இன்ஸ்பெக்டர் கண்ணபிரானிடம் தகவல் தந்திருந்தான். அதன்படி தேவையான அளவிற்கு தகுந்த ஆயுதமேந்திய   காவலர்களுடன் வந்தவர்கள் அனைத்து அலுவலர்களின் கட்டுக்களை அவிழ்த்து விட்டு மேற்கொண்டு ஆக வேண்டிய விஷயம் பற்றி பேசலானார்கள்.

மற்றவர்கள் பட படக்க.. விஷ்ணு அமைதியாக, எந்த தப்பும்  நடக்காதமாதிரி இயல்பாக  இருந்தான். அலுவலகத்தில் இருந்த மற்றவர்களுக்கு ஆச்சர்யம். இந்தளவுக்கு நடந்தும் விஷ்ணுவிடம் பதட்டமோ படபடப்போ இல்லையென்று தான்.

விஷ்ணுவின் உயரதிகாரி விஷ்ணுவிடம் "விஷ்ணு, நீங்க கஷ்டப் பட்டு பாதுகாத்து வந்த முக்கியமான ராணுவ, பாதுகாப்பு ரகசியங்கள் எல்லாம் இருக்குற உங்க லேப்டாப்ப எடுத்துட்டுப் போயிட்டங்களே. என்னதான் உயிர்ச் சேதம் இப்ப இல்லேன்னா கூட, அந்த ரகசியம்லாம் தெரிஞ்சிட்டு நூத்துக்  கணக்கான உயிர்கள கொன்னுடுவாங்களே  உங்க முயற்சிலாம் வீணாப் போயிட்டுதே", என்று ஆதங்கப் பட்டார்.

அவரிடம் சென்று ஒரு துண்டுச் சீட்டை கையில் அழுத்தியபடி, "எனக்கு கொஞ்ச நேரம் டயம் கொடுங்க., குடும்பத்தோட ஊருக்கு போகவேண்டிய நிலை. வீட்டுல எல்லாரும் தயாரா இருக்காங்க. என்னோட நெலமைய  ஃபோன் மூலம் சொல்லிட்டு வந்துடறேன்", எனச் சொல்லியபடியே, பதிலுக்கு காத்திராமல் அறையை விட்டு வெளியேறினான், விஷ்ணு.

துண்டுச் சீட்டில் படித்துப் பார்த்த அவனது உயரதிகாரி மகிழ்ச்சியடைந்தாலும், மிஞ்சி நிற்கும் ஆச்சர்யத்தையே வெளிப்படுத்த முடிந்தது.
------------
சொன்னபடி மீண்டு(ம்) வந்த விஷ்ணு, ஆரம்பித்தான்", யாரும் கவலைப் பட வேண்டாம். யாராவது திருட்டுத்தனம் செய்வாங்கன்னு ஏற்கனவே யோசிச்சு ஒரு வழி செஞ்சிட்டேன் போன மாசமே", என்றான் 

"என்னது? விளக்கமா சொல்லுங்க" என்றார் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான்.

விஷ்ணு பேச ஆரம்பித்தான், "என்னோட லேப்டாப்ல மூணு வித லாகின் இருக்கும். ஒன்னு ஒரிஜினல் டேட்டா இருக்கும். இந்த லாகின் நேம இப்ப சொல்ல விரும்பல. ரெண்டாவது லாகின் 'vishnu',  மூணாவது 'vishnu '. ரெண்டாவது மற்றும் மூணாவது லாகின் நேம் டைப் பண்ணச்சே ஒரேமாதிரிதான் இருக்கும். ஆனா, ரெண்டாவதுக்கு இன்னும் சில லெட்டர்ஸ் இருக்கு. மொதோ ஆறு எழுத்துக்கு மேல டிஸ்ப்ளே ஆகாது. செட்டிங்க்ஸ் அப்படி. மத்த ரெண்டு லாகினுக்கும் பாஸ்வேர்ட் ஒண்ணுதான். அவங்க இருந்தப்ப, நா ரெண்டாவது லாகின்ல என்ட்டர் பண்ணேன். ரெண்டாவது மூணாவது அக்கவுண்ட்ல இருக்குற டேட்டா எல்லாம் போலி. 'சிஸ்டமேடிகலி கரப்டட்' டேட்டாதான். ப்ளான் பண்ணி டேட்டால  தேவையில்லாத அல்லது குழப்பம் தர்ற தகவல, திணிச்சிட்டேன். மேம்போக்கா படிச்சா அத கண்டுபிடிக்க முடியாது. டேட்டாவ கரப்ட் பண்றதுல பல லெவல் இருக்கு. மூணாவது லாகின்ல இருக்குறது ஹைலி கரப்டட் டேட்டா", எனச் சொல்லி சற்று மூச்சு வாங்கினான். தொண்டைக்கு இதமாக இளஞ்சூடு தண்ணீரை தாரை வார்த்தான்.

"எதுக்கு மூணு லாகின் ? ரெண்டாவது லாகின்லையே ஹை லெவல் டேட்டா கரப்ஷன் வெச்சிருக்கலாமே?" எனக் கேட்டார் கண்ணபிரான்.

அங்கதான் விஷயமே இருக்கு. என்னோட ஒரிஜினல் டேட்டா என்னோட லேப்டாப்ல மட்டுமே இருக்கு. நா ரெண்டாது லாகின்ல என்ட்டர் பண்ணி, ஸ்க்ரீன்ல  ஐகான் எதுவும் இல்லாத ஒரு பர்டிகுலர் ஸ்பாட்ல மூணு தடவ க்ளிக் பண்ணா ஒரிஜினல் டேட்டாவ இங்க இருக்கற மெயின் கம்பியூட்டருக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு முதலாவது லாகின் அக்கவுன்ட்ட டெலீட் பண்ணிடும். அப்புறம் லேப்டாப்ப இந்த கட்டிடத்த விட்டு வெளிய எடுத்திட்டு போயி, எப்ப மூணாவது அக்கவுண்ட்ல லாகின்  பண்ணாலும் ரெண்டாவது லாகினையும் அக்கவுண்டையும் டெலீட் பண்ணிட்டு, லாப்டாப் கீழ் பக்கத்துல நா வெச்சிருக்கற அல்ட்ரா-ஸ்லீக் கைபேசியை ஆக்டிவேட் பண்ணிடும். உடனே அந்த சிம் என்னோட மொபைலுக்கு கால் பண்ணும். லேப்டாப்ல இருக்குற மொபைல் சைலென்ட் மோட்ல இருக்கு, அதனால யாருக்கும் நடப்பது என்னனு தெரியாது. இப்பலாம் எல்லா இடத்துலையும் சிக்னல் டவர் இருக்குறதுனால எனக்கு தொடர்ந்து அந்த லேப்டாப் இருக்குற இடம், ஜி.ஆர்.பி.எஸ் மூலமா தெரியவரும்", என அங்கிருந்த மானிட்டரை காண்பித்தான். விஷ்ணு பேசி முடித்து விட்டு, மேடை மீதிருந்த கோகுல் விட்டுச் சென்ற துண்டுச் சீட்டைப் எடுத்து அதனை தனது அருகில் வைத்தான். அதில்,
Mr. கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு கவனம் 
- விஷ்ணு
என்றிருந்தது. 

அதனை கவனித்த அவனது அதிகாரி, விஷ்ணு தனக்குத் தந்த துண்டுச் சீட்டையும்  அதனருகே வைத்தார்.  அதனை கவனித்த இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், விஷ்ணுவின் அருகில் சென்று பார்த்தார். இந்த சீட்டில்
Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்
கவலை வேண்டாம்.
-- விஷ்ணு
என்று இருந்தது.

படம் உதவி :  http://www.parisalkaaran.com/2011/09/2011.
ஏதோ கண்ணபிரான் சொல்ல ஆரம்பிக்க, மேசைமீதிருந்த விஷ்ணுவின் கைபேசியில் 'Vishnu  Informer Calling', என வருவதும் சரியாக இருந்தது. 'லேப்டாப்ல இருக்கற என்னோட வேற மொபைல் தான் அந்த இன்ஃபார்மர்", எனச் சொல்லிக்கொண்டே அழைப்பினை ஏற்றுக் கொள்ளாமல் சிவப்பு பட்டனை அழுத்தினான். நடந்து சென்று வேறு ஒரு எலெக்ட்ரானிக் உபகரணத்தை உயிர்பித்தான். பெரிய மானிட்டரில், லேப்டாப் தற்போது இருக்கும் இடத்தை ஜி.பி.ஆர்.எஸ் மூலம் உடனுக்குடன் தகவல் தர ஆரம்பித்தது.

--- முற்றும் 

பின்குறிப்பு : 'குறியீடு' என்பது பாஸ்வேர்டை மட்டும்  குறிக்க வேண்டுமென்பதல்ல. யூசர் நேமை குறிக்கும் சொல்லாகவும் இருக்கலாமல்லவா?
நாங்களும் மாத்தி யோசிப்போமில்ல !

நன்றி : கும்மிக் குழுவின் 'Hunt for Hint' கடைசி லெவல்.

டிஸ்கி : 
சவால் சிறுகதைப் போட்டி - 2011 க்காக எழுதப்பட்டது. படம், வர்ண வரிகள் இவற்றோடு கதையை தொடர்பு படுத்தவேண்டும் என்பது சவால். நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் 90 % மதிப்பெண்களும், மீதமுள்ள 10  %  யுடான்ஸ் வாக்குகளாலும் தேர்ந்தெடுக்கப்போகிறார்களாம். விதிமுறைகளைப் படிக்க இங்கே செல்க.

தீபாவளியும் நானும் - ஒரு ஃப்ளாஷ் பேக்

வருஷத்துக்கு ஒரு தடவை வர்றதுனால பண்டிகை தினம் எல்லாமே நல்ல ரசிச்சு.. ரசிச்சு கொண்டாடணும். அந்த வகையில எனக்கு தீபாவளி ரொம்ப பிடிக்கும். அது பத்தி ஒரு ஸ்மால் பதிவு.

சின்ன வயசுல.. ஸ்கூல் போற சமயத்துல விஜய தசமி வந்தாலே தீபாவளி பத்தி நெனப்பு ஆரம்பமாயிடும். அப்பலாம் அந்தளவுக்கு ரெடிமேட் ட்ரெஸ் மோகம் அதிகமா கெடையாது. துணி வாங்கி டைலர் கிட்ட கொடுத்து அளவா தைச்சிப்போம். தீபாவளி நெருங்க நெருங்க, டைலர் துணி ஆர்டர் வாங்க மாட்டாரு, கமிட் பண்ணிட்டா தீபாவளிக்குள்ள தைச்சு கொடுக்கணுமே அதான்.

தீபாவளிக்கு கண்டிப்பா மூணு நாலாவது ஸ்கூல் லீவு விட்டுடுவாங்க. சனி, ஞாயிறு சேர்ந்து வந்தா அஞ்சு நாலு லீவு கூட கெடைக்கும். தீபாவளிக்கு முன்னாடி கடைசி ஸ்கூல் டேஸ்ல, அரைநாள் பள்ளிக் கூடம்தான். அந்த மத்தியான நேரத்துலேருந்து நண்பர்களோடு லூட்டிதான்.. கடைக்கு போயி வெடி வாங்குறது.. நண்பர்கள் ஒவ்வொரு வீடா வெடி வெடிக்க ஆரம்பிச்சுவோம்.

தீபாவளி முதல் நாள் காலையில் வெளியூரில் இருக்கும் அண்ணன்கள் வருவார்கள். ஸ்வீட்ஸ் பாக்ஸ், புது ட்ரெஸ்னு ஒவ்வொன்னா எடுத்து எல்லாருக்கும் காமிச்சு, கதை, அரட்டைன்னு.. அப்படியே சாயந்திரம் வந்துடும். ஈவினிங் கலர் மத்தாப்பு, கலர் ராக்கெட், ரயில்னு கண்ணுக்கு விருந்தளிக்கும் பட்டசலாம் கொளுத்துவோம். நைட்டு, அண்ணனோட சேர்ந்துக்கிட்டு, கடைக்குப் போவோம்....  ராத்திரி முழுவதும், ஜன சந்ததியோட கடைத் தெரு ஜக ஜோதியா இருக்கும். எதுவுமே வாங்கலைன்னாலும் இந்த ராத்திரி கடைவீதி விசிட் என்ஜாய் பண்ற மாதிரி இருக்கும்.

அப்புறமா அரையும் கொறையுமா தூங்கும் போது அம்மா எழுப்பி விடுவாங்க.. சூரிய உதயத்துக்கு முன்னாடியே எண்ணெய் தேச்சு குளிக்கணும்னு எழுதப் படாத விதிபோல. இருந்தாலும் அது ஒரு தனி சொகம்தான். குளிச்ச ஒடனே புது ட்ரெஸ், பட்டாசு, தின்பண்டம்னு, காலை பத்து-பதினோரு மணி வரைக்கு ஓடிடும். அப்புறம் நண்பர்கள் வீட்டுக்கு செட்டா விசிட் பண்ணுவோம். லஞ்ச வரைக்கும் ஒவ்வொரு பிரென்ஸ் வீடா போயி.. வெடி, இனிப்பு/காரம்னு வயிறு ரொம்பிடும். ம்ம்ம்ம்.. மனசும்தான்.

இந்த மாதிரி இனி ஒரு தடைவ தீபாவளி கொண்டாட முடியுமா.. ? நண்பர்கள் ஒவ்வொருத்தரும் வெவ்வேற ஊருல செட்டில் ஆயிட்டதால கஷ்டம்தான். அட்லீஸ்ட் சொந்த பந்தகளோட கொண்டாடலாம்.. அதாவது முடியுதே, மகிழ்ச்சி.

தொண்ணூறுகளின் பின்னால் எப்படியோ தீபாவளி கொண்டாட்டத்த டி.வி ஆக்கிரமிக்க ஆரம்பிடிச்சு... நல்ல வேளை இப்பலாம் தீபாவளி சிறப்பு (!) நிகழ்ச்சி பாக்குறதில்ல. பிடிக்கல.

நான் தெரியாமத்தான் கேக்கறேன் சினிமா நடிக நடிகையர்கள் மட்டும்தான் தீபாவளி கொண்டாடுவாங்களா ?

அதென்ன.. எந்த பண்டிகையா இருந்தாலும் சினிமா சம்பந்தப் பட்ட ஆளுங்க மட்டுமே தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சில வராங்க.. அதும் என்னைக்கோ கொண்டாடின தீபாவளி போன்ற ஒரு நிகழ்ச்சியை அன்னைக்கு.. அப்பத்தான் கொண்டாடுற ஒரு பில்ட் அப்.. தேவையா.. ?

நல்ல நாள், பண்டிகையும் அதுவுமா, வயலென்ஸ்.. சண்டை. துப்பாக்கி, பாம்.. பழிவாங்கல். இப்பார் ஒன்னல்லு நாலஞ்சு படம் .. பாத்து பாத்து செலெக்ட் பண்ணுவாங்க போல.

என்னது.. நீங்கலாம் ரொம்ப வருஷமாவே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியை, இந்த ஒரு காரணத்துக்காகவே  பாக்குறதே இல்லையா ? வெரி குட் !

சொந்த பந்த, சுற்றமும் நட்போட, நல்லா ரசிச்சு ருசிச்சு தீபாவளி கொண்டாட
"இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.. "
-----------------------------


பஸ்ஸில பண்ண கலாட்டா

கூகிளில் பஸ்ஸில, ஏதோ என்னால முடிஞ்சத செஞ்சிருக்கேன்.. இதோ உங்களுக்காக.. 

--------------------------------
மாதவன் : பயணம் செய்யமுடியாத பஸ் எதுன்னு சொல்லு..
பன்னிக்குட்டி ராம்சாமி : கொலம்'பஸ்' , சில'பஸ்', & இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு கூகிள்'பஸ்'
 ----------------------------
ரொம்பநாளா வயித்து வலியால செல்வா கஷ்டப் படுறதால, டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணப் போனாரு..

டாக்டர்
Ramesh சுப்புராஜ்  : இந்த பிராப்ளத்துக்கு இதுக்கு முன்னால எந்த டாக்டர்கிட்டயாவது போனீங்களா ?
பேஷன்ட் 
செல்வா : பக்கத்துத் தெரு டாக்டர் பன்னிக்குட்டி ராம்சாமி ஒரு தடவ போயிருக்கேன்..
டாக்டர்
Ramesh சுப்புராஜ்  : அவரா ? ... யாருக்குமே நல்லதா வைத்தியமோ மெடிகல் அட்வைஸோ பண்ணத் தெரியாதே.. என்ன மெடிகல் அட்வைஸ் பண்ணாரு ?
பேஷன்ட்
செல்வா : மேற்கொண்டு உங்கள கன்சல்ட் பண்ணச் சொன்னாரு..
டாக்டர்
Ramesh Subburaj : !!!!!!!!!!!

------------------------------------------------------------
 வாய் மொழி உரையாடல்

Terror Pandian : God இருக்கார்னு நம்புறியா ?
Ramesh Subburaj : அமாம்.. நிச்சயமா இருக்கார்
Terror Pandian: எப்படி சொல்லுற ?
Ramesh Subburaj : நா, நேர்லய பாத்திருக்கேனே !
Terror Pandian : எப்போ ?
Ramesh Subburaj : டிரையிணுல போறப்பலாம் கடைசி பெட்டில பாத்திருக்கேன்..
Terror Pandian : அடப்பாவி.. அவரு 'Gaurd'டா, நா கேட்டது 'ஜி. ஒ. டி' GOD 

------------------------------------------------------------- 
மாதவன்(நெசமாவே நாந்தானுங்கோ ) : ஆராவது(யாராவது) தலையில குட்டினா அதுதான் 'ஆர்குட்'டா ? (டவுட்டு)
 அனு  :  6 times good = ஆறு குட் = ஆர்குட்
-------------------------------------------
என்னோட ஆன்லையன் பேங்கிங் பாஸ்வேர்டு லாக் ஆயிட்டுது.. இன்னைக்கு பூரா ரிலீஸ் ஆகாது.. அதுனால, உங்கள்ள யாரவது உங்க பாஸ்வேர்ட் கொடுத்தா யூஸ் பண்ணிட்டு நாளைக்கு பத்திரமா பாஸ்வேர்ட திருப்பி தந்துடுறேன்..
-------------------------------------------------------

மார்னிங் வாக்கிங் போனப்ப, ஒரு வீட்டு சுவத்துல விளம்பர போஸ்டர் ஒட்டி இருந்தானுங்க.... அதுல அப்படி ஒன்னும் சுவாரஸ்யம் இல்ல. ஏற்கனவே ஏதோ எழுதி இருந்த இடத்துக்கு மேல அத மறைச்சு இந்த போஸ்ட் ஓட்டிட்டாங்க.. எனக்கு, அதுக்கு கீழ என்னதான் எழுதி இருக்குனு பாக்குறதுக்கு ஆசை.. .. போயி அஞ்சு நிமிஷம் கஷ்டப் பட்டு மேல இருந்த போஸ்டர கிழிச்சுப் பாத்தா.. அங்க என்ன எழுதி இருந்திச்சு தெரியுமா ?
.......................................
......................................
................................
................................
......................................
......................................
................................
......................................
...............................
......................................
................................
.................................
......................................
......................................
................................
................................
இங்கு போஸ்டர் / விளம்பரம் செய்யாதீர்கள்.


டிஸ்கி : இதற்கு சிரித்து கமெண்டு போடாதவர்கள் தலை விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளம் சொல்லுவதுபோல சுக்கு நூறாக உடைந்துவிடும்.
------------------------------------------------------

நிகழ்வுகள் (Oct, 2011)

இந்த பிலாகுல, என்னோட சொந்த விஷயங்கள / நடந்த நிகழ்ச்சிகள அதிகமா எழுதினதில்ல.. நம்ம பொலம்பல எதுக்கு இங்க எழுதி வாசகர்கள (!) கஷ்டப் படுத்தணும்னுதான். இருந்தாலும் உபயோகமா (!) இருக்கும்ணு மனசுல பட்டா, அத எழுதுறது வழக்கம். அந்த வரிசையில இதோ...

நேத்திக்கு, ஆன்லயன்ல ரயில் பயண ரிசர்வேஷன் செஞ்சேன்.. தொன்னூத்தி ஒண்ணா நாள் பயணத்துக்கு இப்படி அட்வான்சா ரிசர்வ் செஞ்சாத்தான் உண்டு.. இல்லீன்னா அப்புறம் இடம் கெடைக்காது.. தீபாவளி வர்றத்துக்கு முன்னாடியே, பொங்கல் பயணத்துக்காக.காலையில ஏழு அம்பதுக்கே உக்காந்து ரெடி பண்ணினேன்.. ரிசர்வேஷன் ஆரம்பிச்ச பத்தொம்பதாவது நிமிஷத்துல எனக்கு சான்ஸ் கெடைச்சுது.. சர்வர் அவ்ளோ இழுபறி.. என்ன செய்ய..


வெயிட் லிஸ்ட்லதான் சீட் கெடைச்சுது.. இருந்தாலும் வெயிலிஸ்ட் அம்பதுக்குள்ள இருந்துச்சி, புக் பண்ண நாலஞ்சு மணி நேரத்துக்குள்ள பத்து பேரு கேன்சலும் பண்ணிருக்காங்க.... நம்ம நெலம தொடர்ந்து முன்னேறுமா .. ம்ம் பாக்கலாம்.. 

ரயிவே சர்வர்தான் ஸ்லோன்னு இல்ல பேமென்ட் gateway வங்கியும் ஸ்லோவா இருந்திச்சு.. அந்தக் குழப்பத்துல நானும் தப்புத்தப்பா (எப்படியோ)  பாஸ்வேர்ட் டயிப் பண்ணிட்டேன் போல.. என்னோட ஆன்லையன் அக்கவுன்ட் டிசெபில் ஆயிடிச்சு.. தெரிஞ்ச ஒருத்தரோட அக்கவுன்ட வெச்சு புக் பண்ணினேன். புக்கிங் ஆனா போதுமே.

இந்த ஆன்லையன் அக்கவுன்ட் அடுத்த நாள் ஆக்டிவ் ஆயிடும்.. அதனால கவலை இல்லை.( அப்புறமா ஆக்டிவ் ஆயிடிச்சு.. செக் பண்ணிட்டேன்)

அந்தோ பாருங்க.. நேத்திக்கு ஈவினிங் 'ஏ.டி.எம்'லயும் பாஸ்வேர்ட் தப்பா போயிடிச்சு.. அதுவும் லாக்.. இருப்பத்தி நாலு மணி நேரம் கழிச்சுத்தான் அதுக்கு விடிவு காலம் வருமாம். எவ்ளோவோ பண்ணிருக்கோம்.. வெயிட் பண்ண மாட்டோமா?.

பாஸ்வேர்ட் ரெகவரி சிஸ்டம் இன்னும் பெட்டரா இருந்தா தேவல.. ஆங்.. பாதுகாப்பு ரொம்ப முக்கியம். அதுக்கு எந்த பங்கமும் வரக்கூடாது..

என்னமோ மனசில பட்டது.. எழுதிட்டேன்.. வங்கி/பணபரிமாற்ற  விஷயங்கள்ல கவனமா இருக்குறது எப்பவுமே நல்லது....
--------------------------------------------------------------------

ச்சும்மா ஒரு குசும்பாட்டம் !

எடக்கு  மடக்கா யோசிச்சா அதோட பலன்.. இதோ இந்தப் பதிவு..

ஒன்னும் பெரிசா இல்லைங்க சாமி.. ஜஸ்ட்.. டாஷ்போர்டுல, நான் ஃபாலோ பண்ணும் பிலாகுல அப்டேட் ஆன லேட்டஸ்ட் பதினொன்னு போஸ்டுக்குப் போயி, போஸ்ட் படிச்சேனோ இல்லையோ.. இப்படி பின்னூட்டமிட்டு வந்தேன் (8th Oct 2011, around 4:30 PM IST)

"ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்"
---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..

இதப் படிச்சிட்டு அந்தப் பதிவாசிரியர் எப்படி ரியாக்ட் பண்ணுறார்னு பாத்தேன். ஒவ்வொருத்தரும் ஒரே விஷயத்த தங்களோட அப்போதைய சூழ்நிலைக்கேற்ப புரிஞ்சிப்பாங்க ... ரியாக்ட் பண்ணுவாங்க..  இதோ அவர்களோட ரியாக்ஷன்.
---------------------------------------------------------
1) நண்பர் ஆர்.வீ.எஸ். கலக்கும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்.

RVS said.. @Madhavan Srinivasagopalan
மாதவா! கதை சம்பந்தா சம்பந்தம் இல்லாம இருக்குன்னு குறிப்பால உணர்த்துகிறாயா? :-))
---------------------------------------------------------
2) ரமணி சார் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

Ramani said...@Madhavan Srinivasagopalan
எந்த வகையிலும் புரிந்து கொள்ள முடியாதபடி ஒரு பின்னூட்டமிட்டு கலங்க அடித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சங்கத்தின் புகழ் ஓங்குக..
---------------------------------------------------------
3) மாதவி மேடம் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

middleclassmadhavi said...@ Madhavan Srinivasagopalan
Aamam, enakkum vijay tv-yil, 'athu ithu ethu' program pidikkum! ----- sangath thalaivi post enakku thanE?
-----------------------------------------------------
4) பெயர் சொல்ல விருப்பமில்லையோட இந்தப் பதிவுல கிடைச்ச பதில்

பெசொவி said.. @Madhavan Srinivasagopalan
கீ போர்டு கீ போர்டுன்னு சொல்றீங்களே, அப்போ "லாக்" போர்ட்ன்னு ஒன்னு இருக்குதா?

---- சம்பந்தப் பட்டவர்கிட்ட சம்பந்தமில்லாம பேசுவோர் சங்கம் ---------------------------------------------------------
5) பன்னிகுட்டி ராமசாமி எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

பன்னிக்குட்டி ராம்சாமி said... @ Madhavan Srinivasagopalan...
தண்ணியும் வீணா போயிடுமே,அத ஏன் சொல்லல? (ஆமா நீங்க எந்தத் தண்ணிய சொல்றீங்க?)
--------------------------------------------------------
6) நண்பர் வெங்கட் எழுதும் பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

வெங்கட் said... @ மாதவன்.,
இதென்ன உங்க பரிட்சை பேப்பர்னு
நினைச்சீங்களா..? History-ல கேள்வி
கேட்டா.. Physics-ல இருந்து பதில்
சொல்றீங்க..?!! ( அதுவும் தப்பு தப்பா).
-----------------------------------------------------
7) குழுவாக நடத்தும் 'எங்கள்' பிளாகின் இந்தப் பதிவுல கிடைச்ச பதில்..

எங்கள் said... @Madhavan Srinivasagopalan 
நன்றி (?) மாதவன்

 [ 'எங்களு'க்கு புரியவில்லை போலும், எனவே (?) குறி வந்ததோ ? ]
---------------------------------------------------------

பின்வரும் பதிவர்கள் பதிலேதும் சொல்லவில்லை.. நேரமின்மை காரணமோ ?

8) ஆதிமனிதன் எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

9) தம்பி (மொக்கை)செல்வா எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

10) நண்பர் பாலா எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

11) நண்பர் கோபி எழுதும் பிளாகின் இந்தப் பதிவு

---------------------------------------------------------

ஹி.. ஹி.. நா அப்படி ஒன்னும் வித்தியாசமா செய்யலையோ ?
=====================================

சரஸ்வதி பூஜை - 2011

இன்றைக்கு சரஸ்வதி பூஜை. எதேச்சையாக கூகிள் படங்களில், 'சரஸ்வதி' தெரிந்தாலும், பல படங்களில் ஒன்றே ஒன்று மட்டும் எனது கண்களுக்கு பளிச்செனத் தெரிந்தது.. ஏன்.. ஏன்.. ஏன் ?
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை படித்த நாட்களில், பள்ளியில் சரஸ்வதி பூஜை மதியம் மூன்று மணி சுமாருக்கு நடக்கும். 'படிக்க வேண்டாம், சுண்டலும் கிடைக்கும்', இந்த இரு காரங்களினால் ஆசையாக பள்ளிக்கு செல்லும் ஒரே நாள், இந்த நாள். அங்கு சரஸ்வதியின் படம் (கண்ணாடி ஃபிரேம் போட்டிருக்கும்) வைத்து பூஜை செய்து பின்னர் கருப்பு கொண்டக் கடலை சுண்டல் கொடுப்பார்கள். அந்தப் படத்தினை (நன்றி கூகிள்) பல வருடங்களுக்குப் பின்னர் கூகிள் இமேஜாகப் பார்த்தேன் இன்று.. முப்பது வருடங்களுக்கு முன்னாள் நடந்த நிகழ்ச்சி கண்முன் வந்து போகிறது. 
" மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி..
செந்தமிழ் சொல்லெடுத்து  பாடவந்தோம்.. .."
இந்தப் பாடல் பொதுவாக இன்றைய தினம், கொலு வைத்த எல்லார் வீட்டிலும் பாடப் படும்.  அதுவும் நினைவில் வருகிறது..

இந்தியாவின் நாளைய தூண்கள், இன்றைய மாணவர்கள் நல்ல கல்வி, வித்தை கற்று வாழ்வில் தனக்கும், சமூகத்திற்கும் நல்லது செய்து நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள். கலைவாணி அதற்கு அருள் புரிய வேண்டி இப்பதிவு.

மன்னை எக்ஸ்பிரெஸ் (Mannai Express )

அறிவிப்பு :
ஒரு வார காலமாக அலுவல் பணி நிமித்தமாக அசலூர் சென்றதால் வலைமனையில் நேரம் செலுத்த இயலவில்லை. ஒரு வார காலத்தில், எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் மறுமொழி / நன்றி சொல்ல இயலவில்லை.  -- அனைவருக்கு நன்றிகள். அதே போல நான் பின்தொடரும் பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமோ, ஒட்டுக்களோ அளிக்க இயலவில்லை. -- இவற்றிற்காக போது மன்னிப்பு வேண்டும், உங்கள் 'மன்னையின் மைந்தருள் ஒருவன்'
 -------------------
மன்னை எக்ஸ்பிரஸ் : (இனிமேல்தான் அனுபவிக்க வேண்டும்)
ஒரு காலத்தில் இயங்கிய எங்கள் ஊர் ரயில் நிலையம் எனக்கு நினைவு தெரிந்தது முதல் இயங்கவில்லை. அந்த சின்ன வயதில், எங்கள் ஊரில் ரயில் நிலையம் இல்லாததால், பேருந்தில் வெளியூர்களுக்கு செல்லும் வழியில் ரயில்வே கேட் கடக்கும் போது கேட் மூடப் பட்டிருந்தால், ரயிலை பார்த்து ரசிப்பேன். அவ்வளவு ஆசை ரயில் மீது. ஏக்கம் எங்கள் ஊரில் ரயில் நிலையம் இல்லாதது. கடந்த இருபத்தியேழாம் தேதி முதல் எங்கள் ஊரில் ரயில் நிலையம் ஆரம்பிக்கப் பட்டு, சென்னைக்கு நேரடியாக 'மன்னை' எக்ஸ்பிரெஸ் எனும் பெயரில் தொடர் வண்டி இயக்கப் படுகிறது. இனி எங்கள் ஊருக்கு செல்லும் போது நேரடியாக ரயிலில் செல்லலாமே !   Something to be happy about.
------------------
மும்பை எக்ஸ்பிரெஸ் ரயில் பயண அனுபவம்
அலுவல் பணி நிமித்தம் மும்பை சென்று ஊர் திரும்பும் வழியில், எனது நண்பரின்(!) செல்ஃபோன் காணாமல் போய்விட்டது. ஆதலால், (அவசியமாக!!)தேவைப்படும் போது எனது செல்ஃபோனை பயன் படுத்தலாமென (உதவி செய்வதாக நினைத்து) சொன்னேன். இருந்தாலும் அப்படியொரு நண்பர் இருக்க வேண்டாம்.. ..  காலையில் சுகமாக தூங்கிக்கொண்டு இருந்த வேளையில் (சுமார் ஐந்தரை மணி போல) எனை எழுப்பி..  ஃபோன் வேண்டுமெனக் கேட்டார்.  தனது மனைவிக்கு ஃபோன் செய்து தான் காலையில் எழுந்து பல் தேய்த்து டீ குடித்து விட்டதாகவும் சொன்னார். இரண்டு மணிக்கொருதரம் எனது ஃபோன் மூலம், மனைவிக்கு லைவ் அப்டேட் செய்து வந்த வண்ணமிருந்தார். ரோமிங்கில் இது தேவையா? அதுவும் அடுத்தவரின் ஃபோனிலிருந்து இப்படி செய்வதா? கடைசி ஒரு மணி நேரத்தில் நான்கு முறை தனது மனைவிக்கு ஃபோனில் பேசியவண்ணம் பயணம் செய்தார். ஊர் வந்தவுடன், இறங்கிய பின்னரும் லேட்டஸ்ட் அப்டேட், எனது ஃபோன் மூலம்தான். 

இதெல்லாம் பரவாயில்லை.. கடைசியில் நன்றி கூட சொல்லாமல் ஆட்டோ பிடித்து பறந்து சென்றுவிட்டார். இத்தனைக்கும் இவர் புதுக் கணவர் அல்ல.. ஆறேழு வருட மண வாழ்க்கை அனுபவம் கொண்டவர். 

ஆண்டவா.. இனிமேல் இவருடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு வேண்டவே வேண்டாம்.. அப்படி தவிர்க்க முடியவில்லை என்றால், அவரது செல் ஃபோன் காணாமல் போக வேண்டாம். அட்லீஸ்ட் அவரோட செல்ஃபோன் பத்திரமாக இருக்க நான் பார்த்துக் கொள்ள வேண்டும்..

செல் ஃபோனால் வரும் தொந்தரவில் இதையும் சேர்த்துக் கொள்ளலாமா ?

டிஸ்கி : நல்ல வேளை.. அவரால இந்த பதிவ படிக்க முடியாது..  அவருக்கு தமிழ் தெரியாதில்ல.. !!

ரெண்டு கேள்விகள்

ரெண்டு கேள்விகள் சார்...  தெரிஞ்சா பதில் சொல்லுங்க....

ஒண்ணு :
சின்னப் பொண்ணு.. யு.கே.ஜி படிக்கறா....
கணக்குல நம்பர் நூறுக்கு மேல சொல்லிக் கொடுக்கறாங்க..
one zero zero = hundred..  = 100
one zero one = one hundred one  101
......
....
...
one zero nine = one hundred nine = 109
one zero ten = one hundred ten  = 1010

எப்படி சின்ன பொண்ணுக்கு புரிய வெப்பேன்.. அவ ரொம்ப கன்பியூஸ் ஆயிடுறா.

ரெண்டு

பையன் மூணாவது படிக்கறான்.. அவன் பொறந்த மாசம் சம்மர் ஹாலிடேஸ்ல வரும்..
ஸ்கூலுல மத்த பசங்கலாம் பிறந்த நாள் சாக்லேட் தராங்களாம்.. என்னோட சின்ன பொண்ணு, கூட பர்த் டே வந்தா சாக்லேட் கிளாஸ்ல டிஸ்ட்ரிபூட் பண்ணுவா.. அதெலாம் பாத்தா என்னோட பையனுக்கு வருத்தம்.... தன்னோட பிறந்த நாளுக்கு சாக்லேட் கொடுக்க முடியல..

போன வருஷம், நவம்பர் பதினாலு, குழந்தைகள்  தினத்துல ஸ்கூலுல சாக்லேட் தர ஏற்பாடு பண்ணோம்.. அவனுக்கு அதில திருப்தி இல்ல.... அவன் இப்ப கேக்குறான்
"அம்மா பர்த்-டே வ செர்டிபிகேட்ல மாத்த கவர்மென்ட்கிட்ட அப்ளை பண்ணலாமா ?"

போன வாரம் பிரண்டு ஒருத்தரோட பேர மாத்த கவர்மென்ட் கிட்ட அப்ளை பண்ணி கேசட்ல பப்ளிஷ் பண்ணலாம்னு நாங்க பேசிக்கிட்டு இருந்தத காதால கேட்டதால இப்படி கேக்குறான் போல.. !!


16ல் மூன்று மட்டும்.. (பாகம் - 3)

முஸ்கி 1 : பார்ட் - 1 & பார்ட் - 2 படிச்சிட்டீங்களா ?

11. பிடிச்ச மூன்று உணவு வகை? 
சர்க்கரைப் பொங்கல் (இனிப்பு)        
பாகற்காய் பிட்லே (கசப்பு)
மிளகாய் பஜ்ஜி (காரம்)                     

12. அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்? 
ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)       
நடந்த கால்கள் நொந்தவோ.. (பிரபந்தம்)
அஞ்சல் மட அன்னமே (நளவெண்பா பாடல்)  

13) பிடித்த மூன்று படங்கள்? 
தாத்தா பாட்டி (தந்தையின் பெற்றோர்) கருப்பு வெள்ளை (புகை)படம்.
   ---  இந்த ஒரே ஒரு புகைப்படம் மட்டுமே எங்களிடம் உள்ளது. :-)
   ---  தாயின் பெற்றோரின் புகைப்படம் ஒன்று கூட இல்லை    :-(
 
எங்கள் தந்தையின் பிறந்த நாளில்.. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டது...(டிஜிட்டல் முறையில் கலர் புகைப்படம்)
இந்திய மூவர்ணக் கோடி பட்டொளி வீசி பறக்குது  (மூவர்ணப் படம்)
மத்தபடி.. திரைப்படம்லாம்  என்னை ரொம்ப கவரல. சரியாச் சொல்லனும்னா, திரைப்படம் இப்பலாம் பணம் பண்ணுற தொழிலா இருக்கு.. எனக்கு பிரயோஜனம் இருப்பதா தெரியல.

14 ) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்று விஷயம்
HIJKLMNO (H20 -- நீலு, பாணி, தண்ணீர்)            
O & O (ரெண்டு ஒ, அதான்.. O2 --- பிராண வாயு)
உடை ( மானம் போனபின் வாழ்வது ஒரு வாழ்வா ? )


15) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்? 
கோபத்தை கட்டுப் படுத்துவது (முக்கியமாக குழந்தைகளிடம்)
இசை 
ஏரோப்ளேன் ஓட்டுவது.                                                    

16 ) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள் (மனிதர்கள்)?   
ஆதிமனிதன்  (வலையுலக நண்பர்)                                             
wwவெப்மனிதன் (வலையுலக மனிதன்-நன்றி கூகிள் தேடல்) 
ஆகாயமனிதன் (நன்றி கூகிள் தேடல் )                                      

அம்புட்டுதேன்....  பொறுமையாக (!) படித்த அனைவருக்கும் நன்றி !

16ல் மூன்று மட்டும்.. (பாகம் - 2)

முஸ்கி 1 : தொடர அழைத்த எங்கள் ப்ளாக் மறுபடியும் நன்றி..
முஸ்கி 2 : பார்ட் - 1  படிச்சிட்டீங்களா ? .. அப்ப இத தாராளமா படிக்கலாம்.
முஸ்கி 3 : ரெண்டு முஸ்கிதான் போட முடிஞ்சுது.
தொடர்ச்சி..........

6) உங்களைச் சிரிக்க வைக்கும் மூன்று விஷயங்கள் அல்லது மனிதர்கள்.
நைட்ரஸ் ஆக்சைட் (Nitrous Oxide)                          
திரு. அவரைப்  பருப்பு  (Mr. Bean )
காமெடி ஜோக்குகள்.                                                 

7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்:
படித்தேன் -- எனவே யோசனை.. "அட்லீஸ்ட் ஒரு வயசுல கெளம்பி ஒளி வேகத்துல போயிருந்தா.. இந்நேரம் அந்த வேற்றுக் கிரகத்த அடைந்திருக்கலாம்.."
வீட்டு ஃபோன்ல வயர் காண்டாக்ட் பிராப்ளம்.. ஓபன் பண்ணி சரி செஞ்சேன் (ஃபோன் வயர் பிஞ்சு நாலு மணி நேரம் ஆச்சு..)
அட.. ஒடனே யாரோ ஃபோன் பண்ணுறாங்க.. அட்டென்ட் பண்ணிட்டு வரேன்.. வெயிட்.

8) வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்.
எப்படியாவது நோபெல் பிரைஸ் வாங்கிடணும் ..                               
முனைவர் பட்டம் வாங்கணும்  (கூடிய சீக்கிரம்)
உலகத்துக்கு உருப்படியா பயன் படுறமாதிரி ஏதாவது செய்யணும்    

9) உங்களால் செய்து முடிக்க கூடிய மூன்று விஷயங்கள்.
முனைவர் பட்டமாவது வாங்க முடியும் (!)                                            
புரிந்து கொண்டு, ஆர்வமுள்ள திசையில் செல்ல
மாணவர்களுக்குஊக்கம் தருவது.
எப்படியாவது மூணாவது விஷயத்தையும் எழுத முடியும்.. (இப்படித்தான்) 

10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்:
இதை எங்கிட்ட கேக்குறது  (யோசிக்க வெச்சதுக்காக) 
ஜனாதிபதி போஸ்டுக்கு அப்ளை பண்ணுங்க(!)
இப்படி தப்பு செஞ்சிட்டீங்களே !                                         

டிஸ்கி : இந்தப் பதிவ தொடர் பதிவா எழுதுனதுக்கு மூணு காரணங்கள்
 1. வளவளனு எழுதினா படிக்க சலிப்பு தட்டிடும் (இப்ப மட்டும் என்னவாம்)
 2. யோசிச்சு யோசிச்சு பொறுமையா எழுதலாம் (எழுத நேரம் கிடைக்கும்) 
 3. தொடர்பதிவ தொடர்ந்து எழுதி புதுமை செய்வது... (ரொம்ப முக்கியம்)
                   ------------ தொடர்(ரும்)பதிவு