நான் பார்த்து பேசிய ஆவி

"ஆவியுடன் பேசலாம் வாங்க!"
இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்சேன். அதே தலைப்பு சம்பந்தமா எனக்கு நேர்ந்த அனுபவத்த நீங்களும் அனுபவிக்க உங்களுக்காக சொல்லுறேன், கேட்டுக்க நீங்க ரெடியா ? ஜூட்.

ஆவி வரணும் - அது கூட நீங்க பேசணும் - கேள்வி கேக்கணும் ---- அவ்ளோதானே?

ரொம்ப சிம்பிள்.. நண்பர் எஸ்.கே அங்கிட்டு சொன்ன மாதிரி தரையில கட்டம் போடுறதோ, நம்பரு, 'ஆ'னா, 'ஆ'வண்ணா எழுதுறதோ வேணாம். ஆனா, அதே மாதிரி இருட்டு வேணும். பக்கெட்டுல தண்ணிய நிரப்பி ஒரேயொரு எலெக்ட்ரிக் ஹீட்டர தண்ணீல போடுங்க அப்புறமா அந்த 'காயில்' ஹீட்டரோட வயர (wire ) ப்ளக் பாயிண்டுல சரியா பொருத்துங்க. பொருத்திட்டீங்களா. இப்ப அந்த ப்ளக் பாயிண்டுக்கு கரண்ட கொடுக்கும் சுவிச்சு இருந்துச்சின்ன அதையும் ஆண் பண்ணுங்க. ரூமுல இருக்குற கதவு, ஜன்னல்-கதவுகள் எல்லாத்தையும் மூடிடுங்க. இன்னும் ஒரேயொரு வேலைதான். அதாங்க ரூம்ல எரியுற லைட்ட ஆஃப் பண்ணிடுங்க, அப்பத்தானே ரூம் இருட்டா இருக்கும்.

கொஞ்ச நேரத்துக்கு சுமாரா 15 நிமிடம் கழித்து மெதுவா எழுந்து லைட்ட ஆண் பண்ணுங்க.. உடனே வாளியோட மேல் பக்கம் பாருங்க.

ரொம்ப ஜாக்கிரதையா, கவனிச்சு, உத்துப் பாருங்க.... கொஞ்சம் கொஞ்சமா தண்ணிலேருந்து மேல்நோக்கி கெளம்பி வரும்.. பாத்தீங்களா..

அதாங்க.. கைநீட்டி தொட்டுக் கூட பார்க்கலாம்.. வருதா சுட சுட.. (நீர்)ஆவி ?

எந்த கேள்வி வேணா கேக்கலாம், அனா அதுகிட்டேயிருந்து பதில்தான் வராது.. பரவாயில்லையா..?

இந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா? இருந்தா பின்னூட்டமாவோ, அல்லது உங்கள் வலைப்பூவுலையோ எழுதுங்க..
கண்டிப்பா
இந்த பதிவ மேற்கோள் காட்டவும்.
(நானும், பிரபலம் ஆக வேண்டாமா?)

நன்றி.

32 Comments (கருத்துரைகள்)
:

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

நல்லா இருக்குங்க, உங்க ஆவி மேட்டர். நான் அவசியம் என்னோட ஆவி அனுபவத்தைப் பத்தி எழுதறேன்.

philosophy prabhakaran said... [Reply]

நான் கூட குஷ்பூ இட்லியில் இருந்து கிளம்பிய ஆவியுடன் பேசியிருக்கிறேன்...

கக்கு - மாணிக்கம் said... [Reply]

// எந்த கேள்வி வேணா கேக்கலாம், அனா அதுகிட்டேயிருந்து பதில்தான் வராது.. பரவாயில்லையா..? //

எப்பா சாமிகளா ....முடியல....நல்லாத்தான் இருக்கு.:))))))))))

Madhavan said... [Reply]

@ பே.சோ.வி -- எழுதுங்க,எழுதுங்க ஒங்க அனுபவத்தை.. படிக்க ரெடியா இருக்குறோம்.. நன்றி

@ pholosophy prabhakaran -- 'இட்லி' 'ஆவி'யா? நல்லாத்தான் இருக்கு.. 'இட்லிய' பத்தி நெனைச்ச நீங்க ஒரேயொரு 'ன்' சேத்து, 'இன்ட்லி'ல ஒரு குத்து குத்திட்டீங்கன்ன இன்னும் நல்லா இருக்கும். நன்றி

Madhavan said... [Reply]

//எப்பா சாமிகளா ....முடியல....நல்லாத்தான் இருக்கு.:)))))))))) //

@ கக்கு -- நன்றி நண்பரே. நல்லவேளை நான் டாக்டரு இல்லை.. இல்லேன்னா நா கொழம்பி இருப்பேன்.. நீங்க 'முடியலை'னு சொல்லிட்டு, 'நல்லா இருக்கு' அப்படினும் சொல்லுறீங்களே. (உடம்பு)
இங்க கமெண்டு.. இன்ட்லில ஒட்டு -- ரெண்டுக்கும் நன்றிகள்..

வெறும்பய said... [Reply]

வருவியா.. வருவியா.. நான் அப்பவே சொன்னேன்.. எப்படியும் உன் வாயில மண்ணு தான்னு சொன்னா கேக்காம வந்ததுக்கு அனுபவி..

இம்சைஅரசன் பாபு.. said... [Reply]

நானும் தெரியாம வந்து தொலைச்சுட்டேன் வெறும்பய ..............நானும் உன்னை மாதிரி வாயில் அடித்து கொள்

எஸ்.கே said... [Reply]

அடக்கடவுளே! கடவுளே!

என்னது நானு யாரா? said... [Reply]

உங்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியுமே தலைவா! அதனால நான் ஏமாறலியே!

ஸ்ரீராம். said... [Reply]

//"பக்கெட்டுல தண்ணிய நிரப்பி ஒரேயொரு எலெக்ட்ரிக் ஹீட்டர தண்ணீல போடுங்க அப்புறமா அந்த 'காயில்' ஹீட்டரோட வயர (wire ) ப்ளக் பாயிண்டுல சரியா பொருத்துங்க"//

//"அதாங்க.. கைநீட்டி தொட்டுக் கூட பார்க்கலாம்.. வருதா சுட சுட.. (நீர்)ஆவி "//

ஏன் இந்தக் கொலை வெறி...? நாமலே ஆவியாறதுக்கா?!!

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

எச்சூஸ் மி, ஆவின்னா என்ன சார்?

நாஞ்சில் பிரதாப்™ said... [Reply]

ச்சே..சூப்பர் சார்... உங்க அறிவுக்கும் திறமைக்கும் நீங்க எங்க இப்போ இருக்கீங்ளோ அங்கத்தான இருக்கவேண்டியவரு...:))

Chitra said... [Reply]

எந்த கேள்வி வேணா கேக்கலாம், அனா அதுகிட்டேயிருந்து பதில்தான் வராது.. பரவாயில்லையா..?


...."ஆவி" பறக்க சூடா காபி குடிச்சிக்கிட்டே யோசிச்சீங்களோ? அவ்வ்வ்வவ்.....

Madhavan said... [Reply]

@ வெறும்பய & இம்சைஅரசன் பாபு --- வருவீயா? வரமாட்டியா? வரலேன்ன ஓம் பேச்சி காக் காக் கா..

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

ஏன் இப்படி...

Madhavan said... [Reply]

@ எஸ்.கே. கடவுளே கடவுளே [ நன்றி அண்ணாமலை & பாண்டியன்(குஷ்பு) ]

@ என்னது நானு யாரா --- என்னது நீங்க யாரு.. ஒங்ககிட்டே முடியுமா.. அதான் ஒங்க பேருலேயே தெரியுதே!!

Madhavan said... [Reply]

@ என்னது நானு யாரா --- என்னது நீங்க யாரு.. ஒங்ககிட்டே முடியுமா.. அதான் ஒங்க பேருலேயே தெரியுதே!!

//ஸ்ரீராம் said (asked ) "ஏன் இந்தக் கொலை வெறி...? நாமலே ஆவியாறதுக்கா?!! "//

அட, நா ஆவி மேலதான் கைய வெக்கச் சொன்னேன், நீங்க எதுக்கு வாளித் தண்ணிய தொட்டீங்க. ?

// பன்னிக்குட்டி ராம்சாமி said (asked)... எச்சூஸ் மி, ஆவின்னா என்ன சார்? //

குமுதம், கல்கி, கல்கண்டு மாதிரி ஒரு போக்ச்சகம் மாமூ.. வேணாமா? விட்டுடுங்க..

சென்னையில பாக்கெட்டு பால் பாத்திருக்கீங்களா.. அதாங்க 'ஆவி'ன் பால்..

Madhavan said... [Reply]

@ நாஞ்சிலு. -- என்னையப் பத்தி சரியாச் சொல்லிட்டியே, ராசா..

@ Chitra who said (asked)..."ஆவி" பறக்க சூடா காபி குடிச்சிக்கிட்டே யோசிச்சீங்களோ? அவ்வ்வ்வவ்..... //

அதில்லீங்கோ.. குளிக்குரதுக்கு பாத்ரூமுல 'காயில் ஹீட்டரப்' போட்டேனா.. அப்பா வந்த ஐடியாங்கோ..
(இதுக்குப் பேருதான் ரூம் போட்டு யோசிக்குறதோ ?)


@ புவனேஸ்வரி ராமநாதன் who said (asked)// ஏன் இப்படி... ?//

ஏதாவது வித்தியாசமா ட்ரை பண்ணலாம்னுதான்..

Arun said... [Reply]

//வருதா சுட சுட//
காதுல இருந்து வந்துச்சு brother

வெங்கட் said... [Reply]

@ நாஞ்சில் பிரதாப்.,

// ச்சே..சூப்பர் சார்... உங்க அறிவுக்கும் திறமைக்கும்
நீங்க எங்க இப்போ இருக்கீங்ளோ அங்கத்தான
இருக்கவேண்டியவரு...:)) //

தப்பு., தப்பு.. அவரு இருக்க வேண்டிய
இடமே** வேற..

** கம்பியூட்டர் இல்லாத., ஒரு இருட்டு ரூம்..

Madhavan said... [Reply]

//Arun said... "காதுல இருந்து வந்துச்சு brother "//

மொதொமொதலா வரீங்க.. வரவேற்பு பலமா வேணாமா.. அதுக்குத்தான்..


//வெங்கட் said... * கம்பியூட்டர் இல்லாத., ஒரு இருட்டு ரூம்.. //

ஆமாமா, லேப்டாப்பும் USB -modemu இருக்குதே.. அது போதுமே..

Gopi Ramamoorthy said... [Reply]

:)

Balaji saravana said... [Reply]

ரைட்டு.. செஞ்சுவிட்டுட்டீங்களே பாஸ்!

RVS said... [Reply]

போதும்... இத்தோட நிறுத்திகடலாம்.. ஆவிகளை இப்படி அவமானப்படுத்தவது தெரிந்தால்.....

ers said... [Reply]

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

Madhavan said... [Reply]

@ Gopi ஸ்மைலுக்கு நன்றி

@ Balaji Saravanan ரைட்டுன்னா.. சரிதான்.. ஒக்கே..

@ RVS -- அதான் முடிச்சிட்டேனே, 'தொடரும்' போடலையே..

ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply]

ஃபோட்டோ பயமுறுத்துதப்பா

Madhavan said... [Reply]

//ஆர்.கே.சதீஷ்குமார் said..."ஃபோட்டோ பயமுறுத்துதப்பா //

மேட்டருதான் 'மொக்கை' ஃ போட்டோவாவது சீரியஸா இருக்கட்டும்னுதான்.. Thanks

அருண் பிரசாத் said... [Reply]

நீங்க ஆணியே சே ஆவியே காட்டவேணாம்...

சாவடிக்கறங்களே!

Madhavan said... [Reply]

@ அருண் பிரசாத் -- அட. இதை சொல்லுறத்துக்குதான் இம்புட்டு நேரம் யோசிச்சியா மக்கா..

அப்பாதுரை said... [Reply]

இத்தனை நாள் தெரியாம போச்சே, இந்த ரகசியம்! நீங்க சொன்னதை கேட்டு ஆவியைத் தொடப்போய் அவசரத்துல தண்ணிலயே கைய வச்சுட்டேன் இப்ப

அமைதிச்சாரல் said... [Reply]

ஆவி பறக்க ஒரு சூடான இடுகை :-)))

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...