கமெண்டு மாஸ்டர்..

உங்களுக்கு தினமலர் பத்திரிக்கை டவுட் தனபாலு தெரிஞ்சிருக்கலாம்.. அவரோட கமெண்ட்ட நீங்க, படிச்சிருக்கலாம், அந்த பாணியில் இங்கே என்னோட கமெண்ட்டுகள். ( இங்கிட்டு டவுட்டு தனபாலு....   நான்தானுங்கோ..  )

+++++++++++++++++++++++++

// அதிக விலைக்கு டாஸ்மாக் சரக்கு விற்ற 2 பேர் கைது //

விற்பனையை அதிகமாக்கி லாபத்தை பெருக்கணும்னு  சொன்னத தப்பாப் புரிஞ்சிகிட்டான்களோ என்னவோ ?
-------------------------------------------------------------------------------------------------
// எதிர்கட்சி்கள் அமளி:பார்லி., முடங்கியது //

ஹி.. ஹி.. கும்மியோ கும்மி... எங்கேயும்.. எதிலேயும்..
-------------------------------------------------------------------------------------------------
// தங்கம் விலை சற்று அதிகரிப்பு //

ரெண்டு பைசா ஏறி இருக்குமோ ?
-------------------------------------------------------------------------------------------------
// கள்ளத்தொடர்பு : பாக்., பெண்ணின் மூக்கு அறுப்பு //

அதே இலங்கை பெண்ணா இருந்தா ஆரம்பத்துலேயே அன்னிக்கு கோடு போட்ட 'தம்பி' நடத்தி இருப்பாரு..
-------------------------------------------------------------------------------------------------
 //சி.பி.ஐ., புதிய இயக்குநராக ஏ.பி.சிங் நியமனம் //

அப்படியே, ஹீரோ, ஹீரோயின், வசனகர்த்தா யாராரு.... படம் எப்ப ரிலீசாகும்னு சொன்னாக் கூட நல்லாத்தான் இருக்கும்..
-------------------------------------------------------------------------------------------------
// மதுரையில் சரக்கு அனுப்புவது திடீர் நிறுத்தம்  //

'டாஸ்மாக்க'  அங்கிட்டு அனுப்புவத நிறுத்திட்டாங்களா ?
-------------------------------------------------------------------------------------------------
// சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை //


புவியீர்ப்பு சக்திய கண்டு பிடிக்கலேன்னா இப்படி நடந்திருக்காதோ ?
 -------------------------------------------------------------------------------------------------
// மகனை கொன்ற தந்தைக்கு ஆயுள் //


ஆயுள் : அப்பனுக்கு ஸ்ட்ராங்கு....  மகனுக்கு கம்மி .....
  -------------------------------------------------------------------------------------------------
// பதவி விலகுகிறார் ஊழல் கண்காணிப்பு கமிஷனர்  //


யாரோ அவர 'கண்காணிச்சத', அவரு சரியா 'கண்காணிக்கல' போலருக்கு.....
 -------------------------------------------------------------------------------------------------
// ஜப்பானில் நிலநடுக்கம் //

அங்கிட்டு அந்தளவுக்கு குளிருதோ, நிலமே நடுங்குதாமே? 
-------------------------------------------------------------------------------------------------

டிஸ்கி : செய்தி தினமலர் -- கமெண்ட்டு மாதவன்....

நான்-வெஜ்ஜுதான் சாப்டுவேன். நீங்க?

சண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு..  அவருக்கு இங்கிலீசு அறைகொரையாதான் தெரியும்.. அவரு காய்கறி, கீரை, கிழங்கு எல்லாத்துக்கும் இங்கிலீசுல சொன்னாரு பாருங்க, சிரிச்சு சிரிச்சு வயிறே புண்ணாயிடிச்சு....

ஒங்களால சிரிக்க முடியலேன்னா, சொன்னது புரியலன்னு அர்த்தம்.. சிரிக்காம விடமாட்டீங்களா.. அப்ப சவாலுக்கு தயாரா..?
ரெடி ஸ்டார்ட் மியூசிக்... (நம்ம ராமசாமிய நெனைச்சிகிட்டு..)

 1. Life
 2. Cylinder
 3. Flower-Saturday
 4. Sucrose-Murugan Wife
 5. Coimbatore
 6. Thorndress
 7. Scissors
 8. English
 9. Half
 10. Sin

 டிஸ்கி :

 1. கடைசீல 'காய், கிழங்கு, கீரை' ஏதாவது ஒண்ணு சேர்த்துக் கொள்ளவும்.(சாப்பாட்டுல சேத்துக் கிட்டா ஒடம்புக்கு ரொம்ப நல்லது.... கிழங்குல மட்டும் கொஞ்சம் கண்ட்ரோல்.. ஒக்கே..?)
 2. பின்னோட்டம் தற்போது மாடரேஷன் செய்யப் படுகிறது..(என்னவோ நெறைய பேரு இத்தைலாம் படிச்சு பதில் போடுவாங்கன்னு நெனைச்சி..)

என்னைப் போல் ஒருவன்...

திருமணமான சமயம். மனைவிக்கொ,  புது ஊரு, புது மக்கள், புது பாஷை--  ஆனா, ஜமாய்க்கத்தான் முடியலை.. பேசினா வாய்ல தார் பூசிடுவாங்கனு பயந்துபோயி அவ கத்துக்காத  பாஷையாச்சே....  அவளுக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சி.. அதலாம் அனுபவிச்சாதான் தெரியும் / புரியும்.

அப்படித்தாங்க ஒருநாளு, நா ஆபீஸ்ல இருந்தப்ப செல்போன்ல வூட்டம்மா கூப்டாங்க..

நான் : ஹாய் செல்லம்.. சொல்லு. 

மனைவி : என்னங்க.. என்னோட காலேஜுல படிச்ச பிரண்டு ஒருத்தி.. 'சசி'னு பேரு. இந்த ஊருலதான் இருக்காளாம்போன் நம்பர் கெடைச்சு இப்பத்தான் அரைமணி பேசினேன். நம்ம அட்ரஸ் சொல்லிருக்கேன். ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு அவ குடும்பத்தோட வர்றாளாம், அதனால, நீங்க சீக்ரம் வந்துடுங்க, சொல்லிட்டேன்.

நான் : ! எஸ். கண்டிப்பா சீக்கிரம் வந்துடறேன். நல்ல வேளை ... ஒன்னோட ஏற்கனவே பழகின ஒரு ஆளு  இப்பவாது கெடைச்சாங்களே.. அது சரி அரைமணி நேரம் என்னதான் பேசின ?

மனைவி : அவளோட ஹஸ்பெண்டு, கொழந்தையப் பத்தி சொன்னா, அவ. நா ஒங்களப் பத்தி சொன்னேன். அத அப்புறமா சொல்லுறேன்.. நீங்க டயத்த வேஸ்டு பண்ணாம சீக்கிரம் வீட்டுக்கு வர்ர வழியப் பாருங்க. பை.
( 'போன்' கட் - மெசேஜ் ஓவர்)
  அட பார்ரா, பழைய பிரெண்ட் கிட்ட அரை மணி நேரம், என்கிட்டே ரெண்டெ நிமிஷம், என்ன செய்ய ? "அது சரி, என்னைப் பத்தி சொன்னதா சொன்னாளே, என்ன சொல்லியிருப்பா?" இதுதான் என்னோட மண்டைய கொடஞ்செடுத்த ஒரே கேள்வி. உசைன் போல்ட் கணக்கா 'ஆணியலாம்' புடுங்கி முடிச்சிட்டு  வீட்டுக்கு போனேன். வாசல்லையே வரவேற்பு, என்னோட வொயிஃபுதான்.

"என்னங்க, அவ்ளோ சொல்லியும் லேட்டா வர்றீங்களே?" என்றாள். "ஏம்பா, அதுக்குள்ளே உன் பிரெண்ட் வந்துட்டாங்களா?" என்ற என்னிடம், "இப்பதான் போன் பண்ணினா, இதோ பத்து நிமிஷத்துல ஒங்க வீட்டுல இருப்பேன்னு சொல்லியிருக்கா"

"அது சரி, என்னப் பத்தி உன் பிரெண்ட்கிட்ட என்ன சொல்லியிருக்கே ?", ஆசையோட கேட்டதுக்கு, வொயிஃப் சொல்ல ஆரம்பிச்சா, "உங்களைப் பத்தி சொல்லத்தான் இருக்கவே இருக்கே......   அலைபாயுதே பட ஹீரோ மாதிரி....................".
இவர்(ன்)தான் ... 'பேர்ல'.கேட்ட எனக்கு "ஜிவ்"வென்றிருந்தது, "பேர்ல  மட்டும்!", என்று முடித்தது காதில் விழும்வரை.டிஸ்கி : 'பல்பு' வாங்குதல் என்றால் என்ன? உதாரணம் தருக.

ரசித்த ஜோக்குகள்

காதால் கேட்ட ஜோக்குகள் :
1 ) (நன்றி எனது அண்ணன்)
ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க ?
மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்டெக்ஸ்' போட்டு இருந்தா இன்னும்
வசதியா இருக்கும்னு சொல்லுறாரு ..
ஒருவர் : அதிலென்ன தப்பு..?
மற்றவர் : யோவ், இது 'டிக்ஷனரி'
---------------------------------------------------------------------------------------------


2) லைப்ரரியியனிடம், சர்தார்ஜி :
என்ன புஸ்தகம் இது.. தலைப்பு இருக்கு.. நெறைய கதா
பாத்திரங்களின் பெயர் இருக்கு ஆனா கதையே இல்லையே ?

லைப்ரரியன் : அடப்பாவி காணோம்னு நாங்க தேடிக்கிட்டு இருக்குற
டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனது நீதானா ?
--------------------------------------------------------------------------------------
நெட்டில் நான் ரசித்த சில ஜோக்குகளை இங்கு தந்துள்ளேன்..

3) கையிலே காசு இல்லேன்னா எதுவுமே வாங்க முடியாதுன்னு சொல்லுறாங்க.. 'கடன்' வாங்கலாமே ?
--------------------------------------------------------------------------
4) காருல ரெண்டு பேரு போறாங்க.. அப்ப
டிரைவர் : கொஞ்சம் தலைய வெளியே நீட்டி சைடு இன்டிகேடர்
எரியுதான்னு பாருங்க..
சர்தார்ஜி : எரியுது.. எரியல.. எரியுது. எரியல.. எரியுது.. எரியல..
எரியுது.. எரியல.. எரியுது... எரியல..
------------------------------------------------------------------------------------------
இதேபோல வரும் வேறு ஒரு ஜோக்கு.. (கேள்விப் பட்டது)
6) பார்க்கில் ஒரு சர்தார்ஜி ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.. அப்போது அவரிடம்
ஒருவர் : ஆர் யூ ரிலாக்சிங் ?
சர்தார்ஜி : நோ.. ஐ ஆம் கபீர்சிங்
-------------------------------------------------------------------------------------
-----------------------------------------------
எனக்கு கூட ஜோக்கு எழுதிச் சொல்லவரும்.... நா யோசிச்சு (!) கண்டுபுடிச்ச ஜோக்கு
8 )
ஒருவர் : என்னது அந்தாளு செந்தில் கணக்கா அடி வாங்குறாரு..?
மற்றவர் : ஆளில்லா, ரயில்வே லெவல் கிராசிங்ல ஆக்சிடண்ட
தடுக்குறதுக்கு ஸ்பீட் பிரேக்கர் போடலாம்னு
யோசனை சொன்னாரு..
முதலாமவர் : நல்ல விஷயம்தானே அதுக்கு ஏன் அடிக்குறாங்க ?
மற்றவர் : அவரு சொன்ன ஸ்பீட் பிரேக்கர்... ட்ராக்குல வர்ர
ரயிலுக்காம்..

டிஸ்கி : உண்மைய சொல்லுங்க.. எட்டாவது ஜோக்குதான எல்லாத்தையும் விட சூப்பரு..?
----------------------------------------------------------

நான் போட்ட சதம்..

ஒரு அரசன் தன்னை புகழ்ந்து கவிதை பாடிய புலவரைப் பாராட்டி,
"சற்று நேரம் இருந்து, நான் தரும் 'நூறு பொன்' பரிசினை பெற்றுச் செல்லுங்கள்", எனச் சொன்னான்.

மற்ற அலுவல் இருந்ததால் அப்புலவனுக்கு பரிசு தருவது தாமதமானது....
தன்னை அரசவையில் மறந்து விட்டார்கள் என நினைத்து அப்புலவன் மன்னரிடம்...

புலவர் : மன்னா...!! இருநூறு தருவதாகச் சொன்னீர்களே..?!!. அது இன்னும் வரவில்லை..

அரசன் : இருநூறா..? எப்பொழுது சொன்னேன் ?

புலவர் : முன்னூறு தருவதாகச் சொன்னீர்களே..

அரசன் : முன்னூறா... யார் சொன்னது ?

புலவர் : நானூறு தருகிறேன் என்றீர்கள்.

அரசன் : நான் எவ்வளவு பொன் தருவதாகச் சொன்னேன்,  சற்று விளக்கமாகச் சொல்கிறீர்களா ?

புலவர் : நீங்கள் 'நூறு' பொன் தருவதாகச் சொன்னீர்கள்.

அரசன் : அப்புறம் ஏன் இருநூறு, முந்நூறு, நானூறு என்றெல்லாம் சொன்னீர்கள், புலவரே ?

புலவர் : அரசே, நீங்கள் 'எப்படி சொன்னேன்?' என்பதற்கு 'இரு(ந்தால்) நூறு  தருவதாகவும்',  'எப்போது சொன்னேன்?' என்பதற்கு 'முன்பு -- முன்-நூறு' என்றும்  'யார் சொன்னார்' என்பதற்கு, 'நா(ன்)னூறு, தருவதாகவும் சொன்னீர்கள்', என்றேன்.

அதனை கேட்டு மகிழ்ந்து போய் அரசன், அனைத்தையும் சேர்த்து ஆயிரம் பொன்  கொடுத்தான் அப்புலவனுக்கு.(அமாம் அரசன் கணக்குல ஸ்ட்ராங்கு..)

------------------------------------------------------
எனக்கு பிடித்த  நூறுகள் ( ஹன்ரட்ஸ் )
 • மோகனின் படம் - நூறாவது  நாள்
 • பூஜைப் பொருள் -  துன்-நூறு
 • நன்பேண்டா  -  நூர்-முகமது. 
 • கார்கறி - நூர்-கோல் 
 நூறின் வடிவங்கள்:
 • தமிழ்  --
 • ரோமன் -  C
 • இரண்டடிமானம் (பைனரி) -  1100100 
 • எட்டடிமானம் (ஆக்டால்) - 144  
 • பதினாரடிமானம் (ஹெக்சா டெசிமல் ) -- 64
"என்னது, நூறப் பத்தியே சொல்லுறே ?", அப்படி நீங்கள் நினைத்தால்.... அதான இந்த பதிவோட ஸ்பெஷல்.

 டிஸ்கி : "இதெல்லாம் எனக்குக்தான் ஏற்கனவே தெரியுமே..  இதப் போயி ஒரு பதிவா, அதுவும் நூறாவது பதிவா போட்டுட்டீங்களே / போட்டுட்டியே?" , அப்படின்னா .....
 1. நீங்க பதிவரா இருந்தா.. இதப் பத்தி நீங்க ஏன் ஒங்க நூறாவது பதிவுல எழுதல  ?
 2. பதிவர்தான், நூறாவது பதிவா இதத்தான் எழுத நெனைச்சேன் அப்படீன்னா, ஐ ஆம் வெரி சாரி.. 'பர்ஸ்டு கம் பர்ஸ்டு செர்வ்', ஒக்கே ..?
 3. பதிவர் இல்லேன்னா  --- ஒங்களலாம் நெனைச்சா, ரொம்பப் பாவமா இருக்கு..( வெரி பிடி ஆன் யு )
டிஸ்கி- 2 :வள வளன்னு நான் எழுதிய கதையை, சுருக்கமாகவும் ஸ்மார்ட்டாகவும் மாற்றியமைத்து உதவிய 'வெங்கட்' அவர்களுக்கு நன்றி.

"கவாஸ்கர்" - திரைப்படம்

சுனில் கவாஸ்கர், 80 களில் அகில உலக அளவில் தலை சிறந்த கிரிக்கெட் டெஸ்ட் மேச்சு பேட்ஸ்மன். அவரோட பொறுமையான, நிதானமான ஆட்டத்தினால் எதிரணியை திணறடித்திருக்கிறார். இது பலருக்கும் தெரிந்ததே. ஆனால் அவரைப் பற்றிய இந்த செய்தி உங்களுக்கு தெரியுமா தெரியாதான்னு பின்னூட்டத்துல சொல்லுங்க.. விஷயம் கீழே இருக்கிறது.

80 களிலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பல வெற்றிகளை குவித்து வந்த சமயத்தில், அவருக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு அழைப்பு. 'கவாஸ்கர்' எனத் தலைப்பிட்டு, ஒரு திரைப்படம் வெளியிட இருப்பதாகவும்.. முதல் காட்சிக்கு வந்திருந்து சிறப்பித்து தருமாறும் சொன்னார்கள் அந்தப் பட தயாரிப்பாளர்கள்.

நம்ம ஆளும் ரொம்பவே உச்சி குளிர்ந்து போய், ஆஸ்திரேலியாக்கு போனாராம்.  தன்னோட சாதனைய பத்தி நம்ம நாட்டுல கூட படம் எடுக்கல, ஆனா ஆஸ்திரெலியால , தன்னோட மகிமையைப் புரிஞ்சு 'கவாஸ்கர்' ன்னு பேரு வெச்சு வெளியிடப் போற படத்த பாக்குறதுக்கு ரொம்ப ஆர்வமாயிட்டார். டால்பி ஸ்டீரியோ எபெக்டுல  ஆரம்பிச்சாங்க படத்த... 20 நிமிஷம் ஆச்சு.. 'கவாஸ்கர்' பத்தி எதுவுமோ சொல்ல ஆரம்பிக்கலை. அட.. நம்ம நாட்டுல  சின்ன ஊர் தியேட்டருல படம் போடுறதுக்கு முன்னாடி பிளாக் அண்ட் வொயிட்ல 'டாகுமெண்டரி' போடுவாங்களே(War reel) அது மாதிரி அவங்க நாட்டுலே கலர்ல போடுவாங்க போல இருக்குனு நெனைச்சிகிட்டு காத்திருந்தார்..

ஒருமணி ஆயிடுச்சி... இருந்தாலும் நம்ம ஆளு, பொறுமையாவே இருந்தாரு.. என்னதான் இருந்தாலும் தன்னைப் பத்தின படம் வரும்னு ஆர்வம் கொறையாம இருந்தாரு.... அதுக்கப்புறம் 15 நிமிஷம் கழிச்சு, பிரேக் விட்டாங்க.... அவரும் தனக்கிருந்த களைப்புக்கு தெம்பா பர்கர்-பெப்சி சாப்புட்டு ரெடியானாரு.. தன்னோட படத்த பாக்குறதுக்கு.

இன்டர்வெல்லுக்கு அப்புரமாகவும், அதே மாதிரி கண்டினியூ ஆச்சி..... இப்ப அவருக்கு கொஞ்சம் கொஞ்சமா கடுப்பு வர ஆரம்பிடுச்சு....  ஒரு மணி நேரம் கழித்து ஒரு வழியா படத்துல 'எண்டு' போட்டு முடிச்சிட்டாங்க...... நம்மாளுக்கு ரொம்பவே டெண்ஷனாகிடுச்சு.. நாடு விட்டு நாடு போயி 'கவார்கர்'னு பேரு வச்சி அவங்க எடுத்த படத்தப் பாத்திட்டு போகலாம்னு நனைச்சா.. அவங்க வேற ஏதோ படத்தப் போட்டு அவரோட டயத்த வேஸ்டு பண்ணிட்டாங்க... அவருக்கு வந்த கடுப்புக்கு தயாரிப்பாளர் கிட்ட போயி கேட்டாராம், "கவாஸ்கர்ன்னு படம் போடுறதா சொல்லிட்டு வேற ஏதோ படத்த போட்டீங்களே.. ஏன்.. ஏன்.. இந்த வில்லன்கத்தனம் ?". அதுக்கு, "நீங்க இப்ப பாத்த படம்தான் 'கவாஸ்கர்'" அப்படின்னு சொன்னாராம் அந்த தயாரிப்பாளர்.

கவாஸ்கர் அப்பாவியா கேட்டாரு, "இதென்ன அநியாயமா இருக்கு.. படத்தோட பேருக்காவது என்னப் பத்தி ஏதாவது சொல்லி இருக்கணுமே ?"

அதுக்கு அவங்க சொன்னாங்களாம் "ஏன்யா..  ஒங்க நாட்டுல, நீங்க மட்டும் 'பார்டர்'னு படம் எடுப்பீங்க.. ஆனா 'ஆலன் பார்டர்' பத்தி ஒரு ஃப்ரேமும்  இருக்காது.. அவர பொம்மையா கூட காட்ட மாட்டீங்க, அதுக்குதான் பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம்"....

டிஸ்கி : என்னத் திட்டாதீங்க..  நா பாவம் ( இப்ப 99ல இருக்கேன் ) .. 
ரொம்ப வருஷத்துக்கு முந்தி இ- மெயிலுல வந்த ஜோக்கு இது... தெரியாதவங்க தெரிஞ்சுகட்டுமேனு ஒரு நல்ல எண்ணத்துல தான் இங்கிட்டு எழுதிட்டேன்....
___________________

வட போச்சே !

ரொம்ப நாளா நானும் வூட்டுல எலியோட இம்சை (அட இந்த இம்சை இல்லப்பா..) தாங்காம, எலியப் புடிக்க எலிப்பொறி வெச்சேன்.... அது எப்படியோ தெரியல.. எலி மாட்டாமலே இருந்துச்சி.. ஒவ்வொரு தடவ நா அதப் புடிக்க 'வடை' வெச்சி டிரை பண்ணாலும் எனக்கு கெடச்சது, இந்தப் பதிவோட தலைப்புதான்..

ஆனா அதுக்கான காரணம் நம்ம சிரிப்பு போலிசால தெரிஞ்சிடிச்சி.. வைட்.. வைட்.. நா கம்ப்லேயின்ட்லாம்  தரலை.. தந்தா மட்டும் அவர் FIR போட்டு சரியா  கண்டுபுடிச்சிடுவாரா என்ன?

போலிசோட இந்தப் பதிவ படிச்சிட்டு அதுக்கு நா கமெண்டு போட்டேன் இந்த மாதிரி.. (27 வது கமெண்டு..)

//"....... ஆனா ஒண்ணு மட்டு அழுத்தமா சொல்லுறேன்.. படத்துல இருக்குற 'வீடுதிரும்பல்' மோகன எனக்குத் தெரியும்.. (அவருக்குதான் என்னை ------
அட சொல்ல விடுகப்பா... 'நல்லாவே தெரியுமே') பள்ளி வாழ்க்கையில் எனது சீனியர் அவர்... எங்கள் வீட்டிக்கு வந்திருக்கிறார்."//

அதுக்கு ரமேசு(சிரிப்பு போலிஸ்)  சொன்னாரு பாருங்க ஒரு பதிலு..  (36 வது  கமெண்டு)
//சொன்னாரு. ஒழுங்கா படிக்காம அவர்கிட்ட செம அடி வாங்குநீங்கலாமே//

இப்படிலாம் பதில் போட்டு, தூங்கிட்டு இருந்த சிங்கத்தை கெளப்பி விட்டுட்டாரு.... தேவையா அவருக்கு.. நா ஒடனே ஒரு பதிலுக்கு, பதில் கமென்ட் வித்தியாசமா போட  யோசிச்சேன்.. (ஆனா போடலை..  ஹி.. ஹி.. அத வெச்சிதான் இந்த பதிவே அப்புறம் எதுக்கு கமெண்டு போட்டு வேஸ்டு பண்ணனும் ?).

நா யோசிச்சது இதுதான். //"ஒங்களை நெனைச்சா எனக்கு பரிதாமா இருக்கு போலீசு..
அவருகிட்டே அடி வாங்கினேன்.. அப்புறமா நல்லா படிச்சேன்.. இன்னிக்கு நல்ல நெலமைல இருக்கேன்.... நீங்க பாவம்... சரியான சமயத்துல அடி கொடுக்க ஆளு இல்லாம 'எப்படி' இருக்க வேண்டிய நீங்க 'இப்படி' இருக்கீங்க.."//

'எப்படி' அதுக்காக குகிள் இமஜெஸ்ல தேடினேன் 'ஸ்மார்ட் மென்' கீ வேர்டு போட்டு. அதுக்கு இந்தப் பக்கத்துல கெடைச்சுது, 'எலி பிடிக்கும்' முயற்சித் தோல்விக்கான காரணம்.  பாருங்க இந்த படத்த.. எலிலாம்கூட  எவ்ளோ வெவரமா இருக்குது..


இனிமே எலி பிடிக்க பெரிய பொட்டி டைப்பு பொறிதான் யூஸ் பண்ணனும். இது புரிஞ்சா யாரும் இனிமே 'வட போச்சே'னு பொலம்ப மாட்டாங்க.. 

ஒரே கல்லுல ரெண்டு வடை.. ச்சே..  மாங்காய்..
1) இனிமே எலிய, எளிய முறையில  புடிச்சுடலாம்.. (பெட்டி  வெச்சி..)
2) பெ.சோ.வி யோட இந்த பதிவுக்கான  போட்டி கதை.. அதாங்க.. 'ஆ'னா, 'ஆ'வன்னா... .  இல்லாம கதை சொல்லச் சொன்னாரே ? இந்த எலி படத்த, தலைப்பே  வெக்காம அனுப்பிட்டேன்....

ஜெயிக்கப் போவது (எலிகிட்டேயும், பெ.சோ.வி போட்டிலயும் ) நாந்தான ?

டிஸ்கி : இன்ட்லில இணைப்பதில் ஏதோ தவறு நடந்துவிட்டது..நீங்கள்  இந்த லின்க்கினை (என்மீது கிளிக் செய்து)முயற்சி செய்து இதற்கு ஓட்டளிக்கவும். நன்றி

எனக்கு பிடித்த ரஜினி படங்களிள் டாப் 10

சூப்பர் ஸ்டாரோட படங்களில்  என்னை கவர்ந்த பத்து படங்களை டாப் 10 என வரிசைப் படுத்தி, ஓரிரு வரிகளை எழுதுமாறும், வலைப்பதிவில் என்னுடைய புதிய நண்பர்களுள் ஒருவரான சவுந்தர் அவருடைய பதிவில் அழைத்தமைக்கு முதற்கண் நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடுவர் அவர்களே.. நாள் சொல்லப் போகும் விஷயங்கள் பலருடைய எண்ணங்களையும்  ஒத்து போவதாக இருந்தால், அவற்றின் பெருமை, உங்களுக்கும்,   இதனை படிப்பவர்களுக்கும் நன்றாகத் தெரியும். அப்படி ஒத்துப் போகவில்லை என்றால், எனது வித்தியாசமான எண்ணங்களும் சிந்தனைகளும் உலகிற்கு புரியும். நான் சொல்ல வருவது என்னவென்றால்..  (சரி . சரி.. மேட்டருக்கு வாறன்)

10) தர்மதுரை : ப்ளஸ் டூ படிக்கும்போது, நண்பர்களுடன் 'National Talent Search Examination'  எழுதுவதற்காக தஞ்சாவூர் சென்றபோது, காலைக் காட்சி பார்த்த படம்.  'சந்தைக்கு வந்த கிளி...',  'ஆணென்ன பெண்ணென்ன..' மற்றும் ஜேசுதாசின் இனிய குரலில் 'மாசிமாசம் ஆளான.. ' , பாடல்களுக்காக  மிகவும் பிடித்திருந்தது. சான்ஸ் கிடைத்ததால் மறுபடியும் இரண்டு முறை பார்த்தேன்.
ஒரே வரியில் -- உடன் பிறப்புகளுக்காக  தியாகம்

9) அண்ணாமலை : எளிமையா இருந்தால் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்கிற செய்திதான் முழு நீள திரைச்சித்திரமாக வந்தது. பணக்காரனாவது சினிமாவில் எளிதாக இருந்தாலும், வாழ்க்கையிலும் எளிமை வேண்டும், பணம் மட்டும் 'இன்பமானது இல்லை' என்று சொன்னது. 
ஒரே வரியில் -- நட்பு, எளிமை  பற்றியது..

8) ராஜா சின்ன ரோஜா : தன்நலனுக்காக  இளம் தலைமுறையை போதைக்கு அடிமையாக்கி அழிக்க முனைந்தோரை, வேருடன் அழித்து நாட்டின் எதிர்காலத் தூண்களை நல்வழி படுத்தும் நல்லதொரு காவியம். அனிமேஷன் பாடல் க்ளாசிக் 
ஒரே வரியில் --  குழந்தைகள்(பள்ளி, கல்லூரி) ஸ்பெஷல்..

7-6) குரு சிஷ்யன்  & வேலைக்காரன் : 'பொழுதுபோக்கு' அதுவே இந்த படங்களின் தாரக மந்திரம். ரஜினி படங்ககளுக்கு தனியாக நகைச்சுவை நடிகர்கள் தேவையே இல்லை என்பதனை நிரூபித்த படங்கள்.. இரண்டிற்கும் ஒரே இடங்கள், எனது வரிசைப் பட்டியலில்.
ஒரே வரியில் -- காமெடி, மசாலா ஒருசேரக் கலந்த பொழுது போக்கு.

5) ஸ்ரீ ராகவேந்திரா : மக்கள், ரசிகர்களுக்காக வேடம்(வாழ்க்கையிலும்) போடாமல், தனக்காகவே, தானே விரும்பி தனது நூறாவது படமாக (சினிமாவில் மட்டுமே) நடித்து நமக்களித்தவர். நமது இந்திய மக்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இறையுணர்வோடு  அளித்த  விருந்தாகும் இது.
ஒரே வரியில் -- ராகவேந்த்ராய  நமஹா !

4) எந்திரன் : சமீபத்தில் ரசித்தது....  இந்த படம் எனது மூன்றரை வயது மகளுக்கு எப்படி இருந்தது என்பதை ஏற்கனவே தனிப் பதிவாக போட்டிருக்கிறேன். பிரம்மாண்டம் என்பதற்கு ஒரு சரியான உதாரணம் இந்த படம். அறிவியலின் இன்றைய முன்னேற்ற நிலையை வைத்துக் கொண்டு....  மெஷினே போதும், மனிதர்களே வேண்டாம் என்கிற அபாயகரமான நிலை ஏற்பட வேண்டாமென்பதை தெள்ளத் தெளிவாக சொன்ன படம். அதே நேரத்தில் மனிதன் தனது வாழ்க்கையில் மேன்மை அடைந்து தன்னால் முடியாத வேலைகளுக்கு மெஷினை வைத்து செய்வது நல்ல எதிர்காலமாக நன்றாகவே புலப்படுகிறது. 'ரோபோ'  மற்றும் 'கம்பியூட்டர்' தொழில்நுட்பம் புகுந்து விளையாடுகிறது. சூப்பர் ஸ்டார் வழக்கமான ஸ்டைல், பந்தா இல்லாமல் வெகு இயல்பாக செய்திருப்பது படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக நான் நினைக்கிறேன்.
ஒரே வரியில் -- சயின்ஸ் & டெக்னாலஜி, பிரம்மாண்டம்.

3) தளபதி :  ஆரம்பத் தொன்னூறுகளில்  பெரிய எதிர்பார்ப்பை  வரவழித்த  படம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பாச மகனை விட்டுத் தவிக்கும் தாய், ஒருமுறை செய்த உதவிக்கு உயிரைக் கூட கொடுக்கத தயாராகும் நண்பன், காதலும் சண்டைகளும் கலந்த ஒரு கதம்பம். எஸ்.பி.பி & ஜேசுதாஸ்  இணைந்த 'காட்டுக் குயிலு...', 'ராக்கம்மா கையத் தட்டு..'  மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்கள். அப்போது பத்தாம் வகுப்பில் படித்த மாணவ-மாணவிகளிடம், நான் " 'குவித்த புருவமும்....' பாடலை அடிக்கடி நன்றாகக்  கேளு, மனப்பாடப் பகுதிக்கு தனியாக படிக்க வேண்டியதில்லை", எனச் சொல்லுவேன்.
ஒரே வரியில் -- நட்பு, பாசம், காதல், சண்டை செண்டிமெண்ட். & பாடல்  கலந்த கதம்பம்

2) அருணாச்சலம் (மாலா மால்) : நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம். படத்தின் ஹைலைட்டே.. கடைசி நேரத்தில் மீதமிருப்பதாக வந்த பணத்தினை அரை நிமிடத்தில் தனது காரியதரிசிக்கு சம்பள(ல)மாக கொடுத்து, பணப் பட்டுவாடாவையும் முடித்து போட்டியில் ஜெயிப்பது. எதிபாராத இந்தக் காட்சியை பார்த்தபோதே எனக்கும் புரிய ஆரபித்தது, 'மாத்தி யோசி' என்றால் என்ன என்று. சரியாகவும், தேவைப்   பட்டபோதும் மாத்தி யோசிப்பது வாழ்க்கையில் நமக்கு கை கொடுக்கும் என்பது சரியான பாடம்தானே. ஹிந்தியில் நஸ்ருதீன் ஷா, நடித்து 'மாலா-மால்' என கொடி  கட்டி பறந்த படமாகும் இது. தமிழில் பின்னர் 'ரீமேக்' செய்திருகிறார்கள்.
ஒரே வரியில் -- காமெடி கலந்த மெசேஜ் 

1) தில்லு முல்லு  ( கோல்-மால்) : வேலை கிடைப்பதற்காக, விளையாட்டாக சொன்ன பொய், ஒன்றன் மேல் ஒன்றாக மென்மேலும் பல பொய்களை சொல்ல வைப்பது...  என்னதான் தமாஷாக படம் அமைந்தாலும், வாழ்க்கையில் ஒரு பொய் சொன்னால்.. எவ்வாறான இன்னல் களுக்கு ஆளாக நேரிடும் என்பதி தத்ரூபமாக எடுத்துக் காட்டிய  படம்.  இந்த படமும் ஹிந்தியில், அமோல் பலேகர் நடித்து சூப்பர் ஹிட்டான 'கோல்-மால்' என்பதாகும்.
 ஒரே வரியில் -- காமெடி.. காமெடி...  காமெடி.. வேறென்ன  தேவை ?

சூப்பர் ஸ்டாரு படமே போடலையா ?  அவரு படத்தப் பத்தி என்னோட கருத்த சொல்லத்தான் இந்த பதிவு.. .... சரி சரி..  இன்ட்லில ஓட்டும், இங்கிட்டு கமெண்டும் போட மறந்துராதீங்க.. சரியா.. ?

டிஸ்கி : ஆறு படையப்பனை வணங்கும்,  ரொம்பப் படிக்காத, நமது ராஜாதிராஜாவை  ஹிந்தியில் 'பாட்ஷா'ன்னு  சொல்லுவாங்க. நமது பாண்டிய-மன்னன், தர்மத்தின் தலைவன் எப்பவுமே நல்லவனுக்கு நல்லவன், இவன் ஓர் அதிசயப் பிறவி. குசேலன் போன்று வறுமையில் வாடும் உழைப்பாளியை நேசிக்கும் ஓர் முத்து, இவனது இயற்பெயரோ சிவாஜி.  மேலும் சில மசாலாப் படங்களும் உண்டு.. ஆனால் முதற்பத்தில் இல்லை. ஏனோ தெரியவில்ல 'பாட்ஷா' கூட டாப் டென்னில் வரவில்லை..

விருப்பமிருந்தால் யார் வேண்டுமானாலும் தொடரவும்.  

இன்ட்லியில் இணைப்பதில் ஏதோ தவறு நேர்ந்து விட்டது. நீங்கள்
http://ta.indli.com/search/madhavan73 சென்று சற்று முயற்சி செய்து ஓட்டுப் போடவும்.

குழந்தைகள் தினம்

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான பதினான்கு நவம்பர், ஒவ்வொரு வருடமும் 'குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த விஷயம் நாமெல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் உலகளவில் 'குழந்தைகள் தினம்' நவம்பர் இருபதாம் தேதி கொண்டாடப் படுகிறது. 1959 ம்  வருடம் நவம்பர் 20ம்  நாளில், குழந்தைகளின் உரிமைகள் பற்றிய கொள்கைகளை அமல் படுத்தியது ஐ.நா சபை உலக குழந்தைகள் தினத்தினை அறிமுகப் படுத்தியது. குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை நல்வழி நடத்திடுவோமாக. அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அளிப்பது நமது கடமையாகும்.

இங்கு கொடுக்கப் பட்டுள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் படம், நான் வரைந்து, வண்ணம் தீட்டியது. உங்களுக்காக இங்களித்துள்ளேன். கூகிளில் நேரு படத்த டவுன்லோடு பண்ணி, அதை பாத்து பாத்து வரைஞ்செனுங்க.. பையனோட ஸ்கூலுல குழந்தையர் தின சம்பந்தமா வீட்டுல யார் வேணாலும் படம் வரைஞ்சு தரலாம்ன்னு சொன்னாங்க.. அதுக்குத்தான் இந்த ஏற்பாடு. நா வரைஞ்சத பெஸ்ட் படம்னு நோட்டீஸ் போர்டுல போட்டுருக்காங்க..

இன்று காலை எனது மகன் சிறு குறும்பு செய்ததை கண்டித்து, நான் அவன் அடிக்க முனைந்தபோது, அவன் 'அப்பா, இன்னிக்காவது என்னை அடிக்காம, திட்டாம இருங்கபப்பா. இன்னைக்கு "எங்களோட டெ(ய்)", எனச் சொல்லி தடுத்துவிட்டான்.. சரிதான்.. இன்னிக்காவது (14 நவம்பர்) நம்ம பசங்களுகிட்டே அவங்க வெளையாட்டா குறும்பு செஞ்சா கோவப் படாம, அவங்க இஷ்டத்துக்கு விட்டுவோமே.

ஒரு நிமிஷன் பொறுங்க, எங்கம்மா யாரையோ திட்டிகிட்டு இருக்காங்க.... போய் பாத்துட்டு வாரேன்..

நான்: என்னம்மா யாரை திட்டுறீங்க..? என்ன மேட்டர்..?
 
என்னோட அம்மா : வாடா வா.... எவ்ளோ நாளா சொல்லுறேன்.. என்னோட கண்ணு சரியாவே தெரிய மாட்டேங்குது.. டாக்டரு கிட்டே போயிட்டு வரலாம்னு..
 
நான் : இன்னிக்கி சண்டே மா... இன்னிக்குத் ஹாஸ்பிடல் கெடையாது.. கண்டிப்பா நாளைக்கு கூட்டிக்கிட்டு போறேன்... அதுக்காக குழந்தையை திட்டாதேம்மா.. இன்னிக்கு 'குழந்தைகள்  தினம்'.

அம்மா : நா எங்கே குழந்தையை திட்டினேன்..? ஒன்னத்தானே (கோட்டானத் தானே) திட்டிக்கிட்டு இருக்கேன்..

நான் (ரொம்ப பணிவோட) : நான் குழந்தைன்னு சொன்னது என்னை தாம்மா நீதான் அடிக்கடி சொல்லுவியே.. என்னதான் வளந்துட்டாலும், நா என்னிக்குமெ ஒனக்கு கொழந்ததான்னு....... ஹி.. ஹீ.. அதான் ....

காலேஜு டேஸ்ல நடந்தது..

அன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை.

வழக்கம்போல காலேஜு முடிஞ்சு, பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி.. ஃபிரண்டு போட்டு வெச்சிருந்த சீட்ல உக்காந்து வெயில்ல வெந்து நொந்து கொண்டிருந்தேன். அது என்னாத்துக்கு பஸ்ல காலேஜு ஸ்டாப்புல ரொம்ப நேரம் நிறுத்தறாங்களோ ? அதுக்கு முந்தின நாளுதான் நா கொஞ்சம் லேட்டா வந்தேன்.. ஆனா வண்டிய கெளப்பிட்டு போயிட்டாங்க.. நான்தான் இன்னிக்கு டயத்துக்கு வந்துட்டேனே.. அப்புறம் ஏன் இன்னும் வண்டிய எடுக்கல...... ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.. ஆரம்பமே இப்படியா.. எல்லாம் என்னோட 'ரிஸ்டுல உக்காந்துக்கிட்டு காட்டுது பாரு' அதுதான். எப்படியோ என்னோட கஷ்டம் தெரிஞ்சு டிரைவர் ஸாரு பெரிய மனசு பண்ணி, வண்டிய கேளப்பினதுனால கொஞ்சம் கொஞ்சமா காத்து வர ஆரம்பிச்சுது... தூக்கம்தான் வரலை.. எப்படி வரும் ?

அதான் அன்னைக்குனு பாத்து லாஸ்டு பிரியடுல நல்லா தூங்கிட்டேனே. வழக்கமா 'லாஸ்டு' பிரியடுல நா தூங்க மாட்டேன், ( அதுக்கு ரெண்டு பீரியடுக்கு முன்னாலேய தூங்கிடுவேன் ). அப்பத்தான சொகுசா, பஸ்சுல ரிடர்ன் வர்றப்ப தூங்கலாம். பஸ்ஸ ஓட்டுறது நானா என்ன, ஒன்னேகா மணிநேரத்த ஓட்டினா போதாதா ?

என்ன சொன்னேன், ஆங்.. முன்னாடியே தூங்கினதுனால, பஸ்சுல தூக்கமே வரலை. பேச்சு தொணைக்கு யாருமே இல்லை.. எல்லாருமே தூங்கிட்டானுங்க.. பாவி மனுசனுங்க. முக்கியமான பாவி, சீட்டு போட்டு தந்தானே அவன்தான். அவன்கூட தூங்கிட்டான். என்னையப் பத்தி ஒரு நெனைப்பு வேணாம். வெச்சிக்குறேன் அப்புறமா.. 'every dog has it own day', நாய்க்கே அப்படி ஒரு நாளு இருக்குதுன்னா, நா யாரு.. எனக்கு ஒரு நாளு வராதா என்ன?

அட. இந்த மாதிரி தான், நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாம சுத்தி சுத்தி போயிடுறேன். இனிமே ஸ்ட்ரைட்டா மேட்டருதான்.

எப்படியோ அரைகொரையா தூக்க கலக்கத்தோட ஒருமாதிரியா ஒரு மணி நேரம் ஓடிடுச்சு ... இன்னும் கால் மணி தான்.. அட.. அட.. என்னடா ரோட்ல கூட்டம்.. முன்னால காரு, புஸ்சு, டிரக்கு.. . என்னதான் ஆச்சு ? என்னது முன்னால ஒரு மரம் விழுந்து டிராபிக்க நிறுத்திடுச்சா ? பத்து.. இருபது.. அட முப்பது நிமிஷம் ஆயிடுச்சி.. இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமா டிராபிக்க சரி பண்ணுறதுக்கு..

என்னோட ஃபிரேண்டு  'இதெல்லாம் ஆவுரதுல்ல, நாம நடந்தே போயிடலாம் இன்னும் மூனே மூணு கிலோமீட்டருதானே..', ஐடியா கொடுத்தான். ஏன் சொல்ல மாட்டான்.. அவன்தான் நல்லா ஒன்னவரு தூங்கிட்டானே.. இப்ப ஃபிரெஷ்ஷா இருக்குறானே.. சரி பேச்சு தொணைக்கு இப்பவாது ஆள் கேடைச்சுதே. 'சரி வா போகலாம், வேற யாராவது எங்ககூட வரீங்களா நாங்க லிஃப்டு தாரோம்.. ஒக்கே ஒக்கே கம்பெனி தாரோம்', சொன்னது நாதான்.. என்ன தாராள மனசு எனக்கு.

start music.. ஆரம்பிச்சுது எங்க 'நட-ராஜா' சரிவீஸ். நடந்து.. நடந்து.. மூணு கிலோமீட்டரு, மூணரை மணி வெயிலுல நடகச்சே தூங்காம ஒரு வழியா என்னோட பிரண்டு வீட்டுக் கிட்ட வந்துட்டோம். அதாவது அரை கிலோமீட்டரு தூரம்தான். மனசுக்கு நிம்மதி.. என்னதான் நம்மளோட வீடு இன்னும் ஒன்னரை கிலோமீட்டரு இருந்தாலும் கவலை இல்லை, ஃபிரெண்டோட சைக்கிள்ல போயிடலாம். அட என்னடா இது.. பின்னால என்ன சத்தம்னு திரும்பி பாத்தா.... பாவிங்களா எல்லா காரும் பஸ்சும் வேக வேகமா நம்மள தாண்டி போகுதே.. மரத்த எடுத்துப் போட்டு வழிய கிளியர் பண்ணிட்டாங்களா..?

எப்படி 'நடந்தோம்' பாத்தீங்களா (படிச்சீங்களா)?  
வீதில "நடக்கணும்னு" விதி....................................

டிஸ்கிகள்  :
 1. நல்லவேளை மூணாப்பு படிச்சப்பவே இப்படி நடக்கல.. இல்லேன்னா 10 கிலோ புத்தக மூட்டையோட எப்படி நடந்திருப்பேன்..
 2. என்னது தலைப்பல சொன்னமாதிரி காலேஜுல (டேஸ்ல) என்ன பெரிசா நடந்துச்சா? அம்புட்டு தூரம் நடந்துருக்கோம்..  அத சொல்லத்தான் இந்த மாதிரி..

நான் பார்த்து பேசிய ஆவி

"ஆவியுடன் பேசலாம் வாங்க!"
இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்சேன். அதே தலைப்பு சம்பந்தமா எனக்கு நேர்ந்த அனுபவத்த நீங்களும் அனுபவிக்க உங்களுக்காக சொல்லுறேன், கேட்டுக்க நீங்க ரெடியா ? ஜூட்.

ஆவி வரணும் - அது கூட நீங்க பேசணும் - கேள்வி கேக்கணும் ---- அவ்ளோதானே?

ரொம்ப சிம்பிள்.. நண்பர் எஸ்.கே அங்கிட்டு சொன்ன மாதிரி தரையில கட்டம் போடுறதோ, நம்பரு, 'ஆ'னா, 'ஆ'வண்ணா எழுதுறதோ வேணாம். ஆனா, அதே மாதிரி இருட்டு வேணும். பக்கெட்டுல தண்ணிய நிரப்பி ஒரேயொரு எலெக்ட்ரிக் ஹீட்டர தண்ணீல போடுங்க அப்புறமா அந்த 'காயில்' ஹீட்டரோட வயர (wire ) ப்ளக் பாயிண்டுல சரியா பொருத்துங்க. பொருத்திட்டீங்களா. இப்ப அந்த ப்ளக் பாயிண்டுக்கு கரண்ட கொடுக்கும் சுவிச்சு இருந்துச்சின்ன அதையும் ஆண் பண்ணுங்க. ரூமுல இருக்குற கதவு, ஜன்னல்-கதவுகள் எல்லாத்தையும் மூடிடுங்க. இன்னும் ஒரேயொரு வேலைதான். அதாங்க ரூம்ல எரியுற லைட்ட ஆஃப் பண்ணிடுங்க, அப்பத்தானே ரூம் இருட்டா இருக்கும்.

கொஞ்ச நேரத்துக்கு சுமாரா 15 நிமிடம் கழித்து மெதுவா எழுந்து லைட்ட ஆண் பண்ணுங்க.. உடனே வாளியோட மேல் பக்கம் பாருங்க.

ரொம்ப ஜாக்கிரதையா, கவனிச்சு, உத்துப் பாருங்க.... கொஞ்சம் கொஞ்சமா தண்ணிலேருந்து மேல்நோக்கி கெளம்பி வரும்.. பாத்தீங்களா..

அதாங்க.. கைநீட்டி தொட்டுக் கூட பார்க்கலாம்.. வருதா சுட சுட.. (நீர்)ஆவி ?

எந்த கேள்வி வேணா கேக்கலாம், அனா அதுகிட்டேயிருந்து பதில்தான் வராது.. பரவாயில்லையா..?

இந்த மாதிரி உங்களுக்கு ஏதாவது அனுபவம் இருக்குதா? இருந்தா பின்னூட்டமாவோ, அல்லது உங்கள் வலைப்பூவுலையோ எழுதுங்க..
கண்டிப்பா
இந்த பதிவ மேற்கோள் காட்டவும்.
(நானும், பிரபலம் ஆக வேண்டாமா?)

நன்றி.

தீபாவளி கொண்டாடிய SpiderMan

இந்த தீபாவளி நன்னாளில், எங்கள் இல்லத்திற்கு வந்த சிறப்பு விருந்தினர்.... இவர்.

நம்ம பையன்தான். இந்த உடை, வடிவேலு சொல்லுறாமாதிரி 'பிளான்' பண்ணிலாம் வாங்கவில்லை. பையனுக்கு 'சிலந்திமனிதன்' மீது ஒரு பற்று, பாசம், ஆசை. அவர் உருவம் வரைந்த தேநீர் சட்டையை, அதாங்க T.Shirt, வாங்கித் தருமாறு அன்போடு அடம் பிடித்தான். கடையில் நாங்கள் இந்த மாதிரி உருவம் வரைந்த ஆடையை மனதில் நினைத்துக் கொண்டு '"Spiderman' Dress இருக்கா?" என்றோம். நம்ம பையனுக்கு அடிச்சிதுங்க ஜாக்பாட் . அதான் இந்த முழு 'சிலந்திமனித' ஆடை. பையன் ரொம்ப என்ஜாய் பண்ண ஆரம்பிச்ச்ட்டான்.

போட்டுக்கிட்டு அடிச்ச லூட்டில தண்ணி பாட்டில் மூடி கழண்டு அவன் உடையை பாதி நனைந்திருந்த போதிலும் கழட்ட மாட்டேன்னு சொல்லுறான். கஷ்டப் பட்டு, அவன கன்வின்ஸ் பண்ணி, உலர்ந்த பின்னர் போட்டுக்கலாம்னு சொல்லி சமாதானம் செய்யவேண்டி இருந்தது. அப்புறமா நா, அவன இந்த போட்டோல பாத்ததும், அவன் சொன்னது சரிதான், நல்லா கச்சிதமா இருக்கு.. அவனுக்கு அத கழட்ட எப்படி மனசு வரும்னு தோணிச்சு. நீங்க என்ன சொல்லுறீங்க ?சிலந்தி
-வலை சில தகவல்கள் :
 • . நான் நினைத்த மாதிரி சிலந்தி வலை அமையவில்லை (நினைத்தது - மேலே இடது பக்கம்), அதாவது.. தனித்தனி அடுக்குகளாக, ஒன்றிற்குள் ஒன்றாக கோர்த்து இருப்பதாக நான் நினைத்திருந்தேன். ஆனால் அது ஒரு spiral வடிவம் கொண்டதாக அமைந்திருக்கிறது. எனது நண்பர் ஒரு முறை சிலந்தி வலையை தனது டிஜிடல் காமெரா மூலம் எடுத்த படம் பார்த்த பின்னரே புரிந்தது. அதேபோலமைந்த, கூகிள் வெப்-இமேஜ் ஒன்றை மேலே வலது பக்கம் கொடுத்துள்ளேன்.
 • தனது பசிக்கு, வலைக்குள் பூச்சிகளை மாட்ட வைத்து, சாப்பிடவே இந்த வலை விரிக்கப் படுகிறது. இது பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும்.
 • ஒரு சிலந்தி பின்னிய வலைக்குள் வேறு சிலந்தி கூட மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டாம்.
 • பெண் சிலந்தியை மாட்ட வைத்து, தனது காம வேட்கையை தீர்த்துக் கொள்வதற்கும் இந்த வலையினை ஆண் சிலந்தி பயன் படுத்துமாம்.
 • சிலந்தி வலையின் கோட்பாட்டிலேயே, நாம் அன்றாடம் பயன் படுத்தும் இன்டர்நெட் பெயர் 'வெப் / வலைமனை' என அழைக்கப் படுவது உங்களுள் பலருக்கும் தெரியும் என நம்புகிறேன்.

சிலந்தி பற்றிய செய்திகள் மூலம், விக்கிபீடியா (நன்றி விக்கிபீடியா)

தீபாவளி வாழ்த்துக்கள்


தீபாவளி திருநாள், வருடத்தில் ஒருநாள், இனிய நாள், இன்பத் திருநாள். சின்ன வயதில் எல்லோருக்குமே பிடித்த பண்டிகைத் திருநாள்.

கிருஷ்ணன் கொடிய எண்ணங்கள் கொண்ட நரகாசுரனை, அழிக்கும் வேளையில், அவன் தான் செய்த கொடுமைகளையும் தனது கெட்ட செயல்களையும் நினைத்து, வருந்தி, வேதனைப் பட்டான். தனக்கு இருந்த கொடிய எண்ணங்கள் எவருக்குமே வர வேண்டாம் என்ற நல்லெண்ணத்துடன், மக்கள் தன்னை 'கொடியவர்களுக்கான உதாரணமாக' நினைத்து தங்களது, வாழ்க்கையில் நல்ல எண்ணங்களுடனே நல்வாழ்வு வாழவேண்டும் என்றான். அவனது நினைவாகவே நாம் தீபாவளி கொண்டாடுவது வழக்கமாக வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்.

இந்த இனியநாளில், நாம் நமது கெட்ட எண்ணங்களையும், செயல்களையும் பட்டாசு கொளுத்துவது போல கொளுத்தி, நமது வாழ்க்கையில் நல்லொளி வீசச் செய்யுவோம்.

திருமணம் ஆன பின்னர் வரும் தீபாவளியை 'தலை தீபாவளி' என சிறப்பாகக் கொண்டாடுகிறோம். 'தலை தீபாவளி' பற்றி பல ஜோக்குகள் பல பத்திரிகையில் படித்திருக்கிறோம். அந்த அளவுக்கு 'தலை தீபாவளி' முக்கியத்துவம் வாய்ந்தது. அது சரி, சக்கரவர்த்தித் திருமகன் இராமபிரான், தனது திருமணம் முடிந்த பின்னர் 'தலை தீபாவளி' கொண்டாடிய இடம் எது ?
 1. அயோத்யாவில் (தன்னுடைய வீடு)
 2. மிதிலையில் (மாமானார் வீடு)
 3. வனப்பகுதி

விடை சொல்லிவிட்டீர்களா ? சரியான விடை -- இந்த கேள்வியே 'சரியானது' இல்லை. ஏனென்றால், நரகாசுரன் காலம் கிருஷ்ணரின் அவதாரத்தில் நடந்தாகும். இராமபிரான், காலம், அதற்கு முன்னரே. எனவே 'தீபாவளிப் பண்டிகை' என்பது இராமபிரான் காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை.

அதுசரி.. வடஇந்தியாவில், தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் சம்பந்தமில்லை என நான் நினைக்கிறேன். புரியவில்லையா.. மேலும் படியும்கள்.

தீபங்களில் ஒளியாயான தீபாவளிப் பண்டிகை, வடஇந்தியாவில், நாம் கொண்டாடும் கார்த்திகை தீபத் திருநாள் போல கொண்டாடுகிறார்கள். அங்கு, 'நரகாசுரன்' கதையால் தீபாவளி கொண்டாடுவதாகத் தெரியவில்லை. 'இராமன், இலங்கையில் வெற்றி கண்டு, தனது துணைவி சீதா பிராட்டியுடன்' அரியணை ஏற, அயோத்யா திரும்பிய நாளையே தீபாவளி திருநாளாகக் கொண்டாடுகின்றனர். எனவே மேலே கேட்கப் பட்ட கேள்வி, அவர்களைப் பொறுத்த அளவிலும் 'சரியானது இல்லை'. 'தீபாவளி' இராமபிரான் காலத்தில் கடைப் பிடிக்கப்பட்டு வந்திருந்தாலும், இராமபிரானின் கல்யாணம் முடிந்து பல வருடங்கள் கடந்து, இலங்கை வெற்றிக்குப் பின்னரே, கொண்டாடப்பட்டு வருவதாக நம்பிக்கை.

என்ன நான் சொல்வது சரிதானே?

வெறுமனே 'தீபாவளி வாழ்த்து' எனச் சொல்லி, 'பத்தோட பதினொன்னு' பதிவு போடவேண்டாம்னுதான் இந்தக் குட்டி செய்தியை இப்ப சொல்லுறேன். இந்த பதிவு கணக்குல வரும்தானே ?


ஆங்.. சொல்ல மறந்துட்டேன்... அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.. அனைத்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும், ஜாக்கிரதையாக பட்டாசு கொளுத்தி / வெடித்து கொண்டாடுங்கள்.

பதிவுக்குப் பதிவு..

பதிவுக்கு பின்னூட்டம் போடுறது பழைய ஸ்டைலு.. அதுவும் அரதப் பழசு...
பதிவுக்கு (பதில்) பதிவு போடுறது புதுசு மாமோய்..
அந்த வகையுள நம்ம சக பதிவர் venkat போட்டப் இந்தப் பதிவுல நாலாவதா கேட்டாரே ஒரு கேள்வி.. அதுக்கு நாலுபேரு நாலுவிதமா பதில் சொன்னாலும், நாம ஒரே ஆளு , நாலு விதமா பதில் சொன்னா சும்மா அதிருமில்ல.. அதான்.. சொல்லிட்டேன்
நானா.. ? யாருகிட்டா.. ? என்னையப் பத்தி தெரியாதா ?

"Sum :
Prove that LHS = RHS for
( 2a+3b) X ( 10x+4y)=(9x+6) "
மேலே கொடுக்கப் பட்டுள்ள கணக்கில் இடது பக்கம், வலது பக்கத்திற்கு சமம் என நிருபிக்கவும்.

Method - 1
--->
Let us assume L = ( 2a+3b) X ( 10x+4y)=(9x+6) & R = (9x+6)
As it is given already that ( 2a+3b) X ( 10x+4y) = (9x+6),
LHS = RHS, for any values of 'H' and 'S', hence proved

Method - 2
---->
The Question paper is made by an experienced Teacher. I believe his talent. He could not have asked to prove 'LHS = RHS', if it is not so. Hence it is proved that LHS = RHS.

Method - 3 (everyone mostly knows this)
W.reference to page number 36 of mathematics text book prescribed for our syllabus, one may readily agree that LHS = RHS, hence proved.

Method - 4 :
If you are not convinced, then you may please refer the answer paper of Mr.ABCD, who was the top-ranker of our class, in all previous exams. Thus LHS = RHS

டிஸ்கி : "நானும் ஒரு பதிவர்"தானுங்கோ