படம் வரையலாம் வாங்க..

'எங்கள்'  ஞாயிறு 40 பதிவின் தூண்டுதலால், இந்த பதிவு (எதோ எனக்குத் தெரிந்தது).
 நன்றி.. எங்கள் ப்ளாக்.

1 ) மாம்பழம்  வரைவது எப்படி.
ஸ்டேப் - 1
பின்வருமாறு 'C' யை   மாற்றி எழுதவும்.

ஸ்டேப் - 2
'S ' போன்ற வடிவத்தினை (மஞ்சள் வர்ணத்தில் உள்ளது போல)  பின்வருமாறு வரையவும்.


 ஸ்டேப் -3
 இலை வரையவும்.. ..  சரியான வர்ணங்களை இடவும்..

வந்துவிட்டது 'கோடைகால' ஸ்பெஷல் -- மாம்பழம்
 
2 ) ஆப்பிள் :
ஆப்பிள்  வரையனும்னா, 'C ' யை அப்படியே போட்டு, பக்கத்தில் 'C ' யை வலது இடமாக மாற்றிப் போட்டு,  கீழே , சிறியதாக ஒரு 'w ' போட்டு இரண்டு 'C ' க்களையும் சேர்க்கவும்.

இலை போட்டு, வர்ணமிடவும்.
3 ) ஆரஞ்சு (Orange )
இதை வரைவது  வெகு சுலபம்...  கீழே காணவும் ..
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
       ----------------------
    
          6 5


 

பார்த்தேன்... ரசித்தேன்... publish பண்ண நினைத்தேன்..

மனசு ரொம்ப கஷ்டமா இருக்குதா சார்.. , பாருங்க இந்த படத்தை...  ஆஸ்வாசமா  இருக்கும்..!
மழலைப் புன்னகை.. விலை மதிப்பற்றது இல்லையா..?

கார்டூன் ஜோக்


ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி எனக்கு வந்த  இ-மெயில் அட்டாச்சுமெண்டு..

மாதவா மாத்தி யோசி..!

வூடு, வீதி.., நகரம், வட்டம், மாவட்டம்.. எல்லாத்தையும் விட்டு வெளியே வந்து,  வித்தியாசமா.. / மாத்தி யோசிச்சா பல பிராப்ளத்துக்கு விடை கிடைக்கும்.. அதுக்குப் பேருதான் "மாத்தி யோசித்தல் (lateral thinking )". நல்ல 'creativity' தன்மை  இருந்தால் அப்படி எல்லாம் யோசிக்க முடியுமாம்..  நீங்களே மேல படிச்சுட்டு, என்னோட 'creativity ' எப்படி இருக்குன்னு சொல்லுங்க...  ப்ளீஸ்..
  1. சத்தியமா சொல்லுறோம், இவருதான் 'ஹீரோ', அவருதான் 'வில்லன்' அப்படி ரெண்டுபேரையும் டைட்டில் போட்டு அறிமுகபடுத்திட்டு, 'ஹீரோ' எல்லா வகையான அயோக்கியத்தனத்தையும் செய்யுமாறும், 'ஹீரோ' செய்யுற அநியாயத்த எதிர்த்து 'வில்லன்' அவரோடு சண்டை போட்டு  நியாயத்தை நிலைநாட்டி, எல்லோருக்கும் நல்லதே செய்யுறதாவும்,  ஒரு படம் எடுத்தால் ?
  2. சாலை மற்றும் ரயில் பாதை சந்திக்கும் இடங்களில் 'ரயில்வே கேட்' பார்த்திருக்கிறோம்..  அங்கு,  ரயில் வண்டி முதலில் வந்து நின்று கொண்டு,  வரப்போகும் பஸ், லாரிகளுக்காக காத்திருந்து (முன்னுரிமை 'சாலை வாகனங்களுக்கு')  அவைகள் சென்றபின், ரயில் செல்ல 'கேட்'  திறந்து வழி விட்டா ?
  3. ரயில் பயணக் கட்டண முறையில்  சாதாரண படுக்கை (sleeper class )  வகுப்பு மிகவும்  அதிகமாகவும், மூன்றாம் வகுப்பு (III AC )குளிரூட்டப் பட்ட பெட்டியில் பயணிக்க அடுத்தபடியாகவும்,  II AC குறைந்த கட்டணத்திலும், I AC மிகக் குறைந்த கட்டணத்திலும் அமைந்தால் ?
  4. இப்பெல்லாம்  யார் யாருக்கோ (கவுரவ) டாக்டர் பட்டம் கொடுக்கறாங்க..  முக்கியமா ஆட்சியாளர்களுக்கு டாக்டர் பட்டத்தவிட, BBA , MBA போன்ற பட்டங்களை தந்தா  ..?          ( 'Ar' - Administrator, instead of 'Dr'-Doctor).
  5. புதுசா  கார், பைக் வாங்கினா, எல்லோரும், 'treat' கேப்பாங்க..  எப்படி சார்.. ஏற்கனவே அவரு நெறைய செலவு பண்ணித்தான் அத வாங்கி இருக்கார்.. மேலும் செலவு வைக்குறது நல்லா இல்லை.. அதனால, யாராவது புதுசா ஏதாவது வாங்கினா, மத்தவங்க தான்  அவருக்கு 'treat ' தரனும்.. இல்லையா ?
மொறைக்காதீங்க..   இத்தோட நிறுத்திக்கறேன்....(இப்போதைக்கு)

தேவையில்லாத  பின் குறிப்பு : 'கைபேசி' இல்லாத / தெரியாத, எண்பதுகளிலேயே (1980s ) "ஒருவர் மற்றவருடன் தகவல் பரிமாறிக்கொள்ள ஒரு 'கையடக்கக் கருவி' இருந்தால் ?" என சர்வ சாதாரணமா  யோசிச்சுப் பார்த்தவன் நான்..   நானே தான்,  நம்புங்க தோழர்களே..!

உங்கள் கருத்துக்களை பின்னூட்டமா  போடுங்க.. என்னது பின்னூட்டம்லாம் போடத்தெரியாத.. நா சொல்லித் தாரேன்.. உதாரணமா... "மாதவா எப்பிடிடா இந்த மாதிரி யோசிக்குற.. என்னவோ.. போடா.."
விக்னத்தை அழிக்கும் விநாயகன்

இன்று விநாயகச்சதுர்த்தில்ல  ?
இல்லையே... ஏன் ?
நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்' சொல்ல வர்ற செய்திய இன்னிக்கு 'இடுகை' இடக் கூடாதா ?
'படம்' சொல்லும் 'பாடம்'.. வாழ்க்கைக்கு ரொம்ப உதவும் பாருங்க.