ஜாலி டைம் பாஸ் - 1

கேள்விக்கென்ன பதில் ?
கேள்விகள் :
 1. தமிழ் நாட்டுல முக்கியமான ஊரான திருச்சிராப்பள்ளில இது கெடையாது.. ஆனா அதனைச் சுற்றி  இருக்குற பெரும்பாலான ஊருலலாம்  இது இருக்கும் ..  - அது என்ன ?
 2. இந்த / நம்ம உலகத்துல பிறந்த அனைத்து மனுசங்களும், இந்த வாகனத்துல பயணம் செய்யாம இருக்க முடியாது.. --  எந்த வாகனம் ?
 3. ஒரு மனைவி தனது கணவனுக்கு காட்டாத விஷயம் என்னவாக இருக்கும் ?
 4. ஒரு குட்டி யானை தப்பித் தவறி ஒரு மரத்துல ஏறிடிச்சாம் . அது கீழ வர்றதுக்கு சுலபமான வழி என்ன ?
 5. பூனைக்கு பிடிச்ச பொழுதுபோக்கு என்ன ?
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
- - - - - - - - -
வடைகள்  சாரி.. விடைகள்.. 
 1. திருச்சிரோடு
 2. பூமி  ( சூரியன சுத்தறோமே.. . )
 3. விதவைக்கோலம்
 4. இலை மேல உக்காந்து வெயிட் பண்ணா.. இலையுதிர் காலத்துல இலையோட கீழ வந்திடலாம். 
 5. சங்கீதம் -- அதாங்க -- meow-sic (music)
 ===============================


தெருப்பெயர்

ஒருவருக்கு இருப்பிடம் அவசியம் தேவை. அதனை குறிப்பதற்கு, அதற்கு முகவரி வேண்டும். முகவரியில் வீட்டு / மனை எண், தெருப்பெயர், ஊர்பெயரும் இருக்கும். தெருப் பெயர் இல்லாத முகவரி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்ன ? ஆனால், நான் வசித்த காந்திநகர் (குஜராத்), மற்றும் (சில ?) ஆந்திர நகரங்களில் தெருப் பெயர் இல்லாத இடங்களே அதிகம். முகவரியில், தனியதான (யுனிக்) மனை எண்களும், பகுதியின் பெயரும் மட்டுமே இருக்கும். 

 • காந்திநகர் (குஜராத்) திட்டமிட்டு அனுமானிக்கப் பட்ட தலை நகர் ஆகும். எட்டு பிரிவுகளாக (செக்டார்) ஒவ்வொரு பிரிவிலும் நான்கு உட்பிரிவோடும் (A, B, C or D), இருக்கும். ஒவ்வொரு மனையும் '/1' அல்லது '/2 ' என குறிப்பிடப் பட்டிருக்கும். எனவே ஒரு வீட்டின் முகவரி, தெருப் பெயர் இல்லாமல் இருக்கும்.
உ.ம் -- பிளாட் நம்பர். 184 / 2 , செக்டர் 4 A , காந்தி நகர் 
 • ஆந்திராவில் (ஹைதராபாத், விசாகப்பட்ணம்) XX -YY -ZZZ என்று எண்களுடன், தெருப் பெயர் இல்லாமல், பகுதிப் பெயர் மட்டுமே இருக்கும்.
உ.ம் -- 38-42-12, எம்.வி.பி. காலனி, விசாகப்பட்ணம்

எதுக்கு இதையெல்லாம் சொல்லுற ? ஒங்க கேள்வி புரியுது.. பொறுமையோட படிங்க.. ப்ளீஸ்....

அதாவது.. நானு பொறந்து, வளந்த ஊருல ஒரு சில தெருவோட பேருங்க பொருத்தமா.. அதாவது காரணத்தோட இருக்கும். பேரு வெச்சா காரணம் இருக்கணும்.. இல்லேன்னா.. மேலே சொன்னா மாதிரி தெருவுக்கு பேரு இல்லாமலே அட்ரஸ் வெச்சிடலாம். ஆங்.. எங்க ஊருல இருக்குற ஒருசில தெருவோட பெரும் அதோட அர்த்தத்தையும் படிச்சு பாருங்க.. 

கீழவீதி, மேலவீதி, வடக்குவீதி, தெற்குவீதி --  இவை நான்கும் பொதுவாக பெரிய கோவில்கள் இருக்கும் ஊர்களில் இருப்பது வழக்கம். அதாவது.. முக்கியமான கோவிலை சுற்றி நான்கு புறங்களில் இருக்கும் வீதிகளின் பெயர்களே இவைகள்.

அதே போல முக்கியமாகவும் மிகவும் பெரியதாகவும் இருக்கும் , 'ஹரித்ராநதி' எனும் குளத்தினை சுற்றி அமைந்துள்ள தெருக்கள் கீழகரை, மேல்கரை, வடகரை, தென்கரை, என பெயரிடப்பட்டுள்ளது. 

இதெல்லாம், பல ஊர்களிலும் இருப்பதுதான் என நினைக்கிறேன். ஆனால்.. எங்கள் ஊரில் இருக்கும் வேறு சில தெருப் பெயர்கள் மற்ற ஊர்களில் இருக்கிறதா என்பது சந்தேகம் தான். அப்படி இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.
கீழ(E), தெற்கு(S), மேல(W), வடக்கு(N) வீதிகள் அவற்றின்  'வடம் போக்கித்(VP) தெருக்களுடன்'
ஊர் திருவிழாவில் முக்கியமான தேரோட்டம் நடக்கும் பொது கீழ வீதியிலிருந்து தேர் மேற்கு நோக்கித் திரும்பி தெற்கு வீதியில் நுழைவதற்கு, தேர்வடம் கீழ வீதியின் தொடர்ச்சியாக தெற்கு திசை நோக்கி செல்லும் தெருவிற்குள் நுழைந்து  தேர் திரும்பிய பின்னர் தெற்குத் தெருவிற்குள் தேர்வடம் செல்லும்.  அதனால் அந்தத் தெருவிற்கு 'தெற்கு வடம்போக்கித் தெரு', அதாவது தேர்திருப்ப வடம் (மட்டும்) செல்லும் தெரு  என்றும், அதே போல மற்ற நான்கு வீதிகளிலும் தேரினை திருப்புவதற்கு தேர்வடம் நுழையும் தெருக்களுக்கு, முறையே 'மேல வடம்போக்கித் தெரு, வடக்கு வடம்போக்கித் தெரு, கீழ வடம்போக்கித் தெரு' எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. தாலுகா ஆபீஸ் இருப்பதால், கீழ வடம்போக்கித் தெரு 'தாலுகா ஆபீஸ் ரோடு' எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

ஒற்றைத் தெரு : ஒரு தெருவில் ஒரு பக்கத்தில் மட்டும் வீடுகள்.. எதிர்பக்கம்  பக்கத்துத் தெருவின் வீடுகளின் கொல்லைப் பக்கம் மட்டுமே.  -- ஒற்றை சாரியாக அமைந்த தெருவாதளால் இதன் பெயர் 'ஒற்றைத் தெரு' -- அந்த தெருவின் மேற்கு மூலையில் இருக்கும் பிள்ளையார் -- ஒற்றைத் தெரு பிள்ளையார் எனவர் அழைக்கப் படுகிறார்.

எங்கள் ஊரிலும் மேல / கீழ ராஜ வீதிகள் உண்டு. எனது வீடு இருக்கும் தெரு கோவிலுக்கு மேல்புறம். கோவிலின் கிழக்குப் பக்க வீதியை 'கீழ ராஜ வீதி' என்பார்கள். அதனால், நான் எங்கள் வீட்டுப் பக்கமிருக்கும் ஒரு தெருவை 'மேல ராஜ வீதி' என்று நினைத்திருந்தேன்.. ஆனால், பின்னால் தான் தெரிந்தது.. 'மேல - கீழ' ராஜ வீதிகள் இரண்டுமே கோவிலுக்கு கிழக்குப் பக்கம்தான் இருப்பதாக. அதாவது.. ஒரே ஒரு 'ராஜ வீதிதான்' -- ராஜாவின் வாசலில் இருந்து நேராக செல்லும் வீதி. அந்த வீதி மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் இருப்பதால்.. அந்த வீதியின் கிழக்கு மற்றும் மேற்குப் புறங்கள் தனித் தனியாக 'மேல', 'கீழ' ராஜ வீதிகளாக பிரிக்கப்பட்டு பெயரிடப் பட்டுள்ளது.

பல ஊர்களிலும் பொதுவாக இருக்கும் தெரு / சாலை / ரோடு பெயர்கள் :
 • காந்தி
 • பாரதியார்
 • கம்மாளத் தெரு ( ஆபரணம் செய்யும் தொழிலாளர்கள் வசிக்கும் தெரு )
 • பஸ்டாண்டு ரோடு, ரயில் நிலைய ரோடு.. (ஹி. ஹி.. )
 • பெரிய / சின்ன  கடை தெரு 
 • ராஜ வீதி.. 
 • சன்னதி தெரு (கோவில் வாசலில் இருக்கும் தெரு.. ராஜ வீதி போன்று)
எங்கள் ஊரில் இருக்கும் ஒரு குளத்திற்கு 'ஆந்த்தான் குளம்' எனப் பெயர். 'ஆணை விழுந்தான் குளம்' அது. அதாவது.. 'கஜேந்திர மோக்ஷம்' என்ற சமஸ்க்ரித்த வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்.. -- 'யானை விழுந்த(முக்தி பெற்ற) குளம்' என்பதாகும்.

கப்பல் வராத சமுத்ரம், கடல் இருக்கு - எங்கள் ஊரில் ( பெயரளவில் )
 • சமுத்ரம் (கோபால சமுத்ரம் -- கோவிலை சுற்றியுள்ள பகுதியின் பெயர்)
 • கடல் ( திருப்பாற்கடல்  -- ஒரு பகுதியின் பெயர்)
 • நதி - ( ஹரித்ரா நதி  -- முக்கியமான குளத்தின் பெயர்)
பாமிணி ஆறு ( எங்கள் ஊர் வழியாக ஓடும் ஆற்றின் பெயர் )
    
டிஸ்கி : வித்தியாசமா பதிவு எழுதணும்னுதான் உங்களின் கவனத்தை தெருவிற்கு, மன்னிக்கவும், தெருப்பெயருக்கு கொணர்ந்தேன்.

ஜனநாயகம் - தேர்தல்

நல்லதொரு ஜனநாயகத்திற்கு அறிகுறி : அதிக அளவு வாக்குப் பதிவு.
இந்தமுறை நடைபெற்ற மாநிலப்  பொதுத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் வழக்கத்தைவிட அதிக அளவில் வாக்குப் பதிவு நடைபெற்றது, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அறிகுறிதானே ? இந்த தேர்தலை சிறப்பான முறையில் செய்த தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டுக்கள். ஒரு மாத கால அவகாசத்திற்குப் பின்னரே முடிவுகள் தெரியவரும். அனைவருக்கும் அதுவரை சஸ்பென்ஸ் தானே ? தேர்தலில் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்துவரும் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும், ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். 
------------------------------------------------------------


ஜோக்கு (கண்டுப்பா சிரிக்கோணும்)

ஒருவர் : எதுக்கு நடிகர் ரஜினி ஒட்டு போடுறத வீடியோ எடுத்தாங்க.. எல்லாரும் ஆர்வமா பாத்தாங்க ?
மற்றவர் : அவரு ஒரு ஒட்டு போட்டா நூறு ஒட்டு போட்ட மாதிரியாச்சே ! அதான்.

 ----------------------------------------------------------

நான் சந்தித்த தேர்தல்கள் :
அட.. தேர்தல்ல வேட்பாளரா நிக்குற அளவுக்கு எனக்கு செல்வாக்கு இல்லை. நா சொல்ல வர்றது நானும் ஒரு வாக்களராகி, தேர்தல்ல ஒட்டு போட்டதைப் பத்திதான் சொல்ல வந்தேன். முதல் முறையா நா வாக்காலரானது 1991 ஆகஸ்டு மாசத்துலதான். அதுக்கு முன்னாடியே, 'மே' மாசத்துலேய பொதுத் தேர்தல் வந்திட்டு போயிடிச்சு. 

ஒரு பஞ்சாயத்து தேர்தல்லதான் மொதோ தடவையா ஒட்டு போட்டேன். ஸ்வஸ்திக் வடிவம் கொண்ட அச்சினால் இன்க்கில் தோய்த்து வாக்குச் சீட்டில் ஓட்டுப் அச்சிட்டு, வாக்குப் பெட்டியில் போட்டேன்.

அப்புறமா 1996 பொதுத் தேர்தல்ல ஓட்டுப் போட்டேன். அப்பவும் வாக்குச் சீட்டுதான். யாருக்கு ஒட்டு போட்டேன்னு எனக்கே மறந்து போயிடிச்சு.... அதுக்கப்புறம் 2001 , 2006 ரெண்டுத்துலேயும் ஓட்டுப் போடலை.. ம்ம்ம்ம்.. வாக்காளர் பட்டியல்லையே பேர நீக்கியாச்சு. வேற மாநிலத்துக்கு வேலைக்கு போயிட்டேன்.

என்னால் இந்த முறை(யும்) வாக்களிக்க இயலவில்லை. பன்னிரண்டு வருஷமா, நா தமிழ்நாட்டுக்கு வெளியில இருக்கேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி குஜராத்துல ஒட்டு போட்டேன்.. யாருக்கா ? அஸ்கு புஸ்கு அப்பளம் வடை... நா யாருக்கு போட்டேன்னு நீங்கலாம் தெரிஞ்சிக்குற மாதிரி நா ஒன்னும் பெரியாளு இல்லை. நா ஒட்டு போட்டாலும் ஒரு ஓட்டுதான் கணக்குல வருமாம்.

டிஸ்கி : 'நாக்கு' எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட பல மடங்கு 'வாக்கு' முக்கியம்.
==================================

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் - 'கர'

புதிய ஆண்டு அனைவருக்கும் 'கர கர - மொரு மொரு'வென சுவையானதாக இருக்கட்டும்.

என்னதான் சொல்லுங்க...நம்மளப் போல சில பல  ஆளுங்களுக்கு சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு.. அப்படித்தான் கொண்டாடுறோம்..

கடந்த சில மாதங்களில், நான் பார்த்த, பேசிய,  என்னுடன் தொடர்பு கொண்ட எனது உறவினர்கள் (17 ), என் இளமை பருவ அக்கம்பக்க நண்பர்கள் (13 ) ஆரம்பப் பாடசாலை நண்பர்கள் (8 ), உயர்நிலைப் பள்ளி நண்பர்கள் (26 ) கல்லூரி நண்பர்கள் (14 ), வலை மனை நண்பர்கள் (16 ), அலுவலக நம்பர்கள் (22 )  ம்ம்..ம்ம்.. போதும்... போதும்.. அவர்கள் யாவருமே இன்றும், சித்திரை மாதத்தின் முதல் நாளைத்தான் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிவருவதாகச் சொன்னார்.

நாடு நலம் பெறவும் மக்கள் அனைவரும் நன்றாக இருக்கவும், அனைவருக்கும்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

-: 'கர' வருஷத்திய பலன் வெண்பா :-
கர வருடமாரிபோய்யுங் காசினியுமுய்யும்                
உரமிகுத்து வெள்ளமேங்குமொடும் - நிறைமுகுத்து
நாலுகாற்சீவ னலியுநோயான்மடியும்                     
பாலும்நெய்ய்யுமே சுருங்கும் பார்.                           

இவ்வருஷத்திய தகவல்கள்
வருஷ தேவதை : லட்சுமி நாராயணர் &
பசுனாயகன் (ராமராஜன் ?)  : கோபாலன்.
இவ்வருஷத்திற்கு விந்திய பர்வதத்திற்கு வடக்குதிக்கில் சங்கவர்த்த மேகம் உற்பத்தியாகிறது. மிகுந்த காற்றடிக்கும். தேவமானத்தால் 100 யோஜனை உயரமும்,  60 யோஜனை அகலமும் உள்ள மரக்காலால் 3 மரக்கால் முக்குருணி மழை பொழியும், இதில் 10 பாகம் சமுத்திரத்திலும், 6 பாகம் மலையிலும், 4 பாகம் பூமியிலும் மழை பொழியும்.

இந்த வருடம் வைகாசி மாதம் 32 ம் தேதி (15-06-2011)  புதன்கிழமையும் (இந்திய நேரப்படி இரவு 11 :52 முதல் மறுநாள் அதிகாலை 03 :32 வரை) , கார்த்திகை மாதம் 24 ம் தேதி (10-12-2011) சனிக்கிழமையுமாக (இந்திய நேரப்படி மாலை 06:14 முதல் முன்னிரவு 09:47 வரை) இரண்டு பூரண சந்திரக் கிரகணங்கள் வரவிருக்கிறது.. (Lunar eclipse )
  
 மேலே சொல்லப் பட்ட தகவல்கள் கர வருஷ சுத்த வாக்கிய பஞ்சாங்கம்.. அசல் 28 நே. பாம்பு பஞ்சாங்கத்திலிருந்து படித்தேன். (நன்றி : பாம்பு பஞ்சாங்கம்)
===================================

ஆல்ரவுண்டர்

நம்ம பொண்ணு கூட ஆல்ரவுண்டர்தான்..
ஸ்கூலுல நடந்த பல போட்டிகளுல கந்துக்கிட்டு பல போட்டிகளுல ஜெயிச்சு பரிசு வாங்கி இருக்கா. இன்றைய தினம் பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு போயிட்டு வந்தோம்.
பரிசு பெற்ற அனைத்து மாணவ கண்மணிகளுக்கும் வாழ்த்துக்கள்.
----------------------------------------
நன்றி : கூகிள் இமேஜெஸ்..
இப்பத்தான் உலகக் கோப்பை கிரிக்கெட்டு முடிஞ்சி (சும்மாவா.. இந்தியாதான ஜெயிச்சுது.... ) சந்தோஷமா அதையே நெனைச்சிக்கிட்டு நாலஞ்சு நாள  ஓட்டினா.. தொடர்ச்சியா ஐ.பி.எல் T -20 மேச்சு ஆரம்பிச்சிட்டுது..

உலகக் கோப்பை மாதிரியே, மொதோ மேட்ச்சுல தோணி டீம் ஜெயிச்சுடிச்சு.. கடைசி ஆட்டத்திலேயும் ஜெயிப்பாங்களா ? ம்ம்.. பார்க்கலாம்.
-------------------------------------------------------
ஸ்கூல் காலேஜு டேஸ்ல நாங்க எங்க தெரு கிரவுண்டுல கிரிக்கெட் ஆடுவோம்...  நா எப்படி விளையாடுவேனா .? நானும் ஒரு ஆல்ரவுண்டர்தான்.

ஒரு ஆஷிஷ்  நேரா,  ஒரு காம்பீர்.
அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து செய்த கலைவை நான்..
ஆஷி நேரா மாதிரி பேட்டிங்கும், காம்பீர் மாதிரி பவுலிங்கும் செய்யற ஆளு நானு, மொத்தத்துல ஒரு ஆல் ரவுண்டர் தெரியுமா ?
------------------------------------
ஒரு மேட்சுல ரொம்ப இக்கட்டான / தோத்துப்போற  நெலமையில இருந்த அணியை ஜெயிக்க வெச்சேனே ! எப்படியா ? நானு ஸ்ரீசாந்த் மாதிரில்ல பால் போடுவேன்! எப்படி எதிரணி தோத்துப் போகும் ?
------------------------------------

பெரும்பாலும் பலருக்கு பவுலிங் போடுறத விட பேட்டிங் பண்ணுறதுதான் ரொம்பப் பிடிக்கும். நாங்களும் விதி விலக்கல்ல. எங்கள் தெருவில் இருக்கும் அனைவருக்கும் கிரிகெட்டு விளையாடும்போது பேட்டிங்கின்மீதே நாட்டமிருந்தது, ஒருவர் தவிர.  அவர்--என்னுடைய சின்ன அண்ணன். தனக்கு பவுலிங் போடுவதுதான் ரொம்ப இஷ்டம்னு சொல்லுவாரு. ஏனென்று கேட்டால் அவர் சொல்லும் பதில் "பேட்டிங் நம்ம இஷ்டத்துக்கு செய்ய முடியாது.. ஆனா பவுலிங் நம்ம இஷ்டத்துக்கு எங்க வேணும்னாலும் (வைடு கூட)  போடலாம்".

ம்ம்ம்ம்.. பேட்டால ரவுண்டு கட்டி, பந்தை  அடிப்பாருன்னு பார்த்தா, பந்தை ரவுண்டு கட்டி அடிக்கும்(வீசுற)  ஆளா இருந்தாரு அவரு. அந்த ஆல்(ளும்) ரவுண்டர்தானா ?
======================================

கதம்பம் (ஏப்ரல் ஏழு)


தற்போதைய ஹீரோ :
ஊழலற்ற சமுதாயம் வேண்டும். இது பொதுவான கருத்துதான். அதற்கு யாராவது ஏதாவது செய்யவேண்டுமே ? செய்ய முயற்சி எடுத்துள்ளார்.. அன்னா ஹஸாரே. அவரது முயற்சிக்கு நாம் ஊக்கம் கொடுப்போம்.. நம்மால் முடிந்த ஏதாவது செய்வோம்.. வாழ்வில் நேர்மையாக நடப்போம்.. மற்றவர்களை ஏமாற்றும் எண்ணம் மனதளவிலும் வேண்டாம் நமக்கு. அட்லீஸ்ட் இப்போது அவரை பாராட்டி.. அவருக்கு துணை நிற்போம். அவரது அஹிம்சை முறை போராட்டம் வெற்றி பெறட்டும். இந்திய நாடு நலம் பெறட்டும். வாழ்க வையகம்.. வாழ்க பாரத தேசம்.. பாரத மாதா..  பாரத மக்கள் !!

இந்தியரின் பெருமை :
நமது தேசத்தின் தேசிய கீதம் எழுதியவர் நோபெல் பரிசு பெற்ற ரபீந்தரநாத் தாகூர். அனைவருக்கு தெரிந்திருக்கும். அவர் எழுதிய தேசிய கீதத்தை சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டு ஆட்டம் ஆரம்பிக்கும் முன்னர் மைதானத்தில் பாடப் பட்டது. போட்டியின் முதல் மற்றும் கடைசி போட்டிகளில் பாடப்பட்ட மூன்று தேசிய கீதங்களுக்கும் (இந்தியா, பங்களாதேஷ், இலங்கை) ரபீந்தரநாத் தாகூரோடு தொடர்பிருக்கிறது. முதலிரண்டு தேசிய கீதங்களையும் எழுதியவர் ஷாக்ஷாத் ரபீந்தரநாத் தாகூர் தான். ஆனால் இலங்கை தேச கீதத்துக்கும் அவருக்கு எப்படி தொடர்பு.  இலங்கை தேசிய கீதத்தை எழுதியவர் ஆனந்த சமரகூன். சிறிது காலத்திற்கு அவர் இந்திய மண்ணில்,   ஷாந்திநிகேதனில் இருக்கும் விஷ்வ பாரதி பல்கலைக் கழகத்தில் பயின்ற பொது, ரபீந்தரநாத் தாகூரின் மாணவனாக இருந்தார். தாகூரின் இலக்கியத்தில் பற்று கொண்ட அவர், இலங்கைக்காக எழுதிய கீதம் தாகூரின் கீத்தத்தின் சாயலில் அமைந்ததாக இங்கு குறிப்பு இருக்கிறது. தாகூர்தான் இசையமைத்ததாக நண்பர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்தது.. ஆனால் அதற்கு சுட்டி கிடைக்கவில்லை (இருந்தால் பின்னூட்டத்த்தில் தெரிவிக்கவும்) .   ----  நன்றி :  விக்கிபீடியா .

திறமை, ஆர்வம்  & வாய்ப்பு : 
மகேந்திர சிங் டோனி -- அவரின் தற்போதைய நிலை யாவருக்கும் தெரியும். ஆனால்.. அவர் பத்தாண்டுகளுக்கு முன்னர் எங்கு எப்படி இருந்தார் ? கடக்பூர் ( kharagpur ) ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு சேகரிக்கும் (ticket collector) வேலை பார்த்தார். சூழ்நிலையால் அப்பணியில் (விளையாட்டு கோட்டாவில்) சேர்ந்தாலும், கிரிக்கெட்டே அவருடைய குறிக்கோளாக இருந்தது. பணி வேளையிலும் கிரிக்கெட்டிற்கே  பெரும்பாலான நேரத்தை செலவழித்ததால், அவர் சம்பள பெறாத விடுப்பில் செல்லவும் நேர்ந்ததாம். தனக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் விடாது பின்தொடந்து சென்று கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொண்டு இன்று சாதனையாளராக  இருக்கிறார். சச்சின் டெண்டுல்கரை தனது ரோல் மாடலாக, தெய்வமாக நினைத்த அவரே சச்சின் பங்கு பெரும் அணிக்கு தலைமை தாங்கும் நிலைக்கு உயர்ந்தார். அப்பிடியொரு குறிக்கோள் (தத்தமது விருப்பம் மற்றும் ஆர்வத்தில்)  வேண்டும் ஒவ்வொருவருக்கும்.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆர்வமும் திறமையும் இருக்கும்.. அதனை கண்டறிந்து அதன் பின் சரியான பாதையில் சென்றால், வாய்ப்பு கிடைக்கும்போது சாதனையாளராகலாம். இது அனைத்து பெற்றோருக்கும் தெரிந்தால், அடுத்த தலைமுறையின் ஆற்றலை, திறமையை வீணடிக்காமல் நல்ல சமுதாயத்தை -- அனைவருக்கு பயனுள்ளதாக அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது. தனது பிள்ளைகளை  பெற்றோரது விருப்பத்திற்கிணங்க கட்டுப் படுத்தாமல் அவர்கள் திறமைக்கேற்ப சரியான வழி நடத்துதல் வேண்டும். நம்மால்தான்  டாகராகமுடியலை.. என்ஜினீயர் ஆக முடியலை.. ஜில்லா கலெக்டர், CA   ஆக முடியலை.. என்றெல்லாம் நினைத்து பிள்ளைகளை நீ இதுவாக வேண்டும் அதுவாக வேண்டும் எனக் கட்டுப் படுத்தாமல் இருத்தல் வேண்டும். ஆனால் பிள்ளைகள் மீது கவனம் வேண்டும், அவர்கள் சரியான வழி செல்வதற்கு.
 
நம்ம பொண்ணு ஸ்பெஷல் :

நேத்திக்கு என்னோட நாலு வயசு பொண்ண அழைச்சிக்கிட்டு பைக்குல கடைக்கு போயிட்டு வந்தேன்..  அவள பெட்ரோல் டாங்க்மேல உக்கார வெச்சிருந்தேன்.. போயிட்டு இருந்தப்ப பொண்ணு அவளோட ஃபேவரிட் கார்டூன் வர்ற நேரமாயிட்டுதொணு நெனைச்சி ஆரம்பிச்சா இந்த மாதிரி...

பொண்ணு : இப்ப டயம் என்னப்பா ?
நான் : நா இப்ப ரிஸ்ட்-வாட்ச் கட்டிக்கலை, அதனால டயம் தெரியாது.
பொண்ணு : முன்னாடிதான் க்ளாக் இருக்கே, அதப் பாத்து டயம் சொல்லுப்பா
நான் : முன்னாடி க்ளாக்கா.. எங்க ?
பொண்ணு : இதாம்ப்பா.... ( அந்த க்ளாக், பைக்கோட ஸ்பீடாமீட்டர்)
 நேரம்டா சாமி !
 வேகம்டா சாமி ! 

கேள்விகள்.. உ.கோ.கிரிக்கெட்டு-6பின்வரும் கேள்விகளுக்கு விடை தெரிந்தால் சொல்லவும். எல்லாம் கற்பனை வளத்தினால் வந்தவையே! சும்மா தமாசுக்குத்தான் !!
 1. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆட்ட நாயகனுக்கு $ 1000 போன்ற ராட்சத காசோலை தராதது ஏன் ? (அப்படித்தான பல மேட்சுல பாத்திருக்கோம்..)
 2. ஆட்டத் தொடர் நாயகனுக்கு தருவார்கள் என நான் நினைத்திருந்த -- அடிக்கடி காண்பித்த மோட்டார் சைக்கிள் தராதது ஏன்? ராட்சத சாவி காணவில்லையோ ? ( தந்தாங்களா ? )
 3. டாஸ் தோத்து மேட்ச்சு ஜெயிச்சா ICC ராங்கிங்ல போனஸ் பாயிண்டு கெடைக்காதா ?
 4. வேர்ல்டு கப் ஜெயிச்சா ICC ராங்கிங்ல போனஸ் பாயிண்டு கெடைக்காதா ? (அட உலகத்துல எல்லா அணிகளும் வெளையாடுற ஆட்டமாச்சே.. அதான்)
 5. போலி டாக்டர், போலி பைலட் மாதிரி.. அதென்ன போலி உலகக் கோப்பை (Replica) கஸ்டம்ஸ் கிட்ட இருக்குதாமே ? இனிமேல் இந்த மாதிரி விவகாரம் ஏற்படாம, கச்சிதமா செய்ய வேண்டுகிறோம்.. 
 6. 'Man of the Match' மாதிரி 'Ban of the match'ன்னு ஏன் இல்லை.. [ ஹி.. ஹி.. சில பிளேயர்ஸ நினைச்சுத்தான் இந்தக் கேள்வி ] 
 7. இறுதி ஆட்டத்தின் மைதான நடுவர்கள் ஆஸ்திரேலிய, பாகிஸ்தானியர்கள். இந்தியா, காலிறுதியில் ஆஸ்திரேலியாவையும், அரை இறுதியில் பாகிஸ்தானையும் வென்றது...  --- ரெண்டுக்கும் இருக்கும் தொடர்பு ?
 8. ஆரம்பித்தவரே கடைசியில் பேசும் பட்டிமன்றம் போல, இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய அணியே, கடைசியிலும் துடுப்பெடுத்து ஆடியது எப்படி ? [முதல் / கடைசி  ஃபோர், சிக்ஸ், விக்கெட் எல்லாமே இந்தியா அணியினரது ]
 9. ஃபோரில் துவங்கிய இந்த போட்டிகள் சிக்சரில் முடிந்தது.. இரண்டுமே பவுண்டரிகள்.. எப்படி ?
 10. இறுதி ஆட்டத்தில் டாஸ் குளறுபடி / குழப்பம் ஏன்.. எப்படி வந்தது ? அதெப்படி சங்ககாரா சத்தமா 'கால்' செய்ய வில்லை ? 
இந்த மாதிரி இனி வராமல் தடுக்க..  அம்பயர் அவுட், சிக்ஸர் -- சைகை செய்வது போல.. டாஸ் கேட்பவர் கையால் தலையில் தொட்டு 'ஹெட்'(head )  என்றும், 'டெயில்' என்பதற்கு கையை பூமியை நோக்கி வைத்து 'வால்' (tail ) போல ஆட்டியும் கேட்கலாமே ?

டிஸ்கி : பின்னூட்டத்தில் கேள்விகளும் கேட்கலாம் ...
=============================================

உலகக் கோப்பை கிரிக்கெட் - 5

முதலில்.. வெற்றி பெற்ற இந்தியா அணியினருக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். அந்த வீரர்கள் "இந்த வெற்றி அனைத்து இந்திய மக்களுக்காகவே", எனச் சொன்னதால் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

1987 ல்  முதல் உலகக் கோப்பை கிரிக்கெட்டை டி.வி யில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 1983 ல் கிரிக்கெட் பற்றி தெரியாத வயதில்.. அந்த வெற்றி பற்றி தெரியவும் இல்லை.. கொண்டாடவும் இல்லை. ஆனால் 1987 ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் புது ஆர்வத்தோட தொலைகாட்சி பார்வையாளனாக, கிரிக்கெட் ரசிகனாக நானும் கலந்து கொண்டு.. நாங்களாகவே கற்பனை செய்து இந்திய - பாகிஸ்தான் நாடுகளில் போட்டிகள் நடைபெறுவதால், அவை இரண்டுமே இறுதி ஆட்டத்தில் விளையாடும்.. அதில் இந்திய அணி வெற்றி வாகை சூடும் (அப்போதைய நாளில் நடப்பு சாம்பியன்).. 
--  அப்போது பலிக்கவில்லை எங்களது கற்பனை. அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றோம்.

1992 ல் மழை நடுவே நடந்த பல போட்டிகள், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து நாடுகள் நடத்தியது. முதல் சுற்று ஆட்டங்களில் இந்திய-இலங்கை ஆட்டம் மழையால் நடைபெறாது விட்டது.. இருவருக்கும் தலா ஒரு புள்ளிகள்.. அப்போது இந்திய அணியை விட இலங்கை அணி அந்த அளவிற்கு வலுவானதில்லை --  ம்ம்.. மேச்சு நடந்திருந்தா தெரிஞ்சிருக்கும் (!) இதனாலேயே அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை என அங்களுக்கு சமாதானம் செய்து கொண்டோம். இந்த போட்டிகளில் ஆறுதலான விஷயங்கள்.. அப்போதைய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் முதல் சுற்றோடு வெளியேறியது. மேலும்.. நன்றாக விளையாடி வந்த தென்.ஆப்ரிக்க அணி, மழை காரணமாக தோல்வி கண்டது.. ஒரு நேரத்தில் வெற்றிக் கோட்டை நோக்கி சரியான முறையில் முன்னேறிய அணிக்கு ஒரு பெரிய அதிர்ச்சி.. மழையினால் திடீரென 1 பந்தில் 22 ரன்கள் என புதிய முறையில் சொல்லப் பட்ட இலக்கு.... ( ம்ம்.. கலிகாலம்டோய்.. )

1996 லிலும் நமது கற்பனைக்கு அளவில்லாமல்.. இந்தியா முதல் சுற்றில் ஆஸ்திரேலிய அணி, இலங்கை அணியுடம் தோற்றாலும்.. நமக்கென்னவோ இந்தியா தான் வெற்றி வாகை சூடும் என நினைத்தோம். இலங்கையின் அதிரடி ஆட்டத்தின் விளைவாக.. ஆமாம்.. அந்த முறை இலங்கை அணி மிகவும் சிறப்பாக அனைத்து ஆட்டங்களிலும் ஆடி.. சாம்பியன் ஆகத் தேவையான தகுதியான அணியா இருந்து வெற்றியும் பெற்றது. ஆட்டங்கள் நடத்தும் நாடோ.. இறுதி ஆட்டத்தில் இரண்டாவதாக மட்டை பிடித்து ஆடும் அணியோ வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை என்பதையும் மாற்றியமைத்தது.

1999 -- வழக்கம்போல அந்தளவிற்கு கற்பனை செய்யாமல்.. (சற்று வளந்திருந்ததால்.. யதார்த்தம் தெரிந்ததால்) இந்திய அணிக்கு கண்ணை மூடிக் கொண்டு ஆதரது தெரிவிக்காமல்.. அவர்கல் ஆடும் விதம் கொண்டு இந்திய அணியின் வாய்ப்பை கணிக்கும் வல்லமை இருந்தது எனக்கு. அந்தப் போட்டிகளில் சிறப்பா அடியவர்களை சச்சின் டெண்டுல்கரும் ஒருவர். தனது தந்தைய இழந்து ஒரு போட்டியில் விளையாட முடியாவிட்டாலும் அடுத்த் அபோட்டியில் கலந்து கொண்டு செஞ்சுரி அடித்து.. தனது தந்தைக்கு அற்பணித்ததாகச் சொன்னார். இருந்தும இந்திய அணில் மேற்கொண்டு வெற்றி பெற முடியவில்லை.. கோப்பை பெரும்  வாய்ப்பு இருக்கவில்லை.

2003 -- ஆரம்பத்திலிருந்தே நன்றாக விளையாடி கோப்பை பெருமளவிற்கு நம்பிக்கை அளித்தனர். அரை இறுதியிலும் சிறப்பாக விளையாடினர். ஆனாலும் நம்மை சனி பிடித்தது போல.. இறுதி ஆட்டத்தில் சொதப்பலாக பந்து வீசி.. பலமான ஆஸ்திரேலிய  அணியை மேலும் பலப் படுத்தினார்கள். சாம்பியன் அணி எப்படி இருக்கவேண்டுமோ அதுபோலவே ஆஸ்திரேலிய அணி சிறப்புடன் விளையாடி, இந்திய அணியை நூறிற்கும் மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது.

மேற்சொன்ன அனைத்து உலகக் கோப்பை ஆட்டங்களிலும் (1987 நீங்கலாக, ம்ம்.. இரண்டு அணிகளும் வெவ்வேறு குரூப்புகளில் இருந்ததால், நேரடியாக மோதவில்லை.)   இந்திய அணிக்கு ஆறுதல்.. ஒவ்வொரு முறையும், பாகிஸ்தானை வீழ்த்தியது.

2007 பங்களாதேஷ் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி.... முதல் சுற்றிலேயே வெளியேறியது.. ஒரு நாள் பாகிஸ்தான் அதிர்ச்சித் தோல்வியில் போட்டியிலிருந்து வெளியேறவும்.. மறுநாளே இந்தியாவும் வெளியேறியது. நாம தோத்தாலும், பாகிஸ்தானும் ஏற்கனவே தோற்றிருந்ததால் என்னவோ ஆறுதல்..
 
2011 : தோனியின் தலைமையில் ஆரம்பம் முதலே வெற்றிவாகை சூடத் தகுதியுள்ள அணி எனத் தோன்றியது. அதென்னவோ தெரியல தோனியின் பாணியே தனிதான்.  அவருடைய 'கீப் கூல்' பாணி பாராட்டப் பட வேண்டியதே. சாதித்துக் காட்டிவிட்டார். காலிறுதி.. அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் வலுவான எதிரணியினரை சந்தித்து.. வெற்றி வாகை சூடிய விதம் பாராட்டப் பட வேண்டியது... வாழ்த்துக்களும் நன்றியும் இந்திய அணியினருக்கு...

இந்த முறை அரை இறுதிப் போட்டிக்கு முன்னர் எனக்கு நண்பர் ஒருவர் அனுப்பிய படம்.. இதோ...
ஆமாம் ரஜி(ஜ)னிகாந்த் அவர்களை நேற்று பார்வையாளர்கள் அரங்கில் காண முடிந்தது.....  இந்திய வெற்றி பெறுவதை காண அவருக்கு அப்படியொரு ஆர்வம்.. நமது ஆசைக் கனவு நடந்தேறியது, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில்..

டிஸ்கி : பெரும்பாலும் பலர் நேற்றைய ஆட்டம் பற்றி மட்டுமே எழுதுவார்கள்.. நாமதான் வித்தியாசமா ஏதாவது சொல்லணும்.. அதுவும்.. பழைய விஷயங்களைச் சொன்னா.. தற்போதைய வெற்றியின் அருமை மேலும் விளங்கும் என கற்பனை செய்து கொண்டு இப்படி எழுதினேன்...
=======================================


ராத்திரியில் சூரியன்

இந்தியாவில் வருடத்தில் இரண்டு நாட்கள் இரவில் சூரியன் வரும்.. எங்கு தெரியுமா ?

முன்னுரை :
நள்ளிரவு சூரியன் (Midnight Sun) நாடு எது உங்களுக்குத் தெரியுமா ?
'நார்வே' என்று நீங்கள் படித்திருக்கலாம்.
கனடா, அலாஸ்கா (யு.எஸ்), டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து, ரஷ்யா போன்ற பகுதிகளும் இந்த வகையில் இருப்பதாக விக்கிபீடியா சொல்லுகிறது. இந்தப் பகுதிகள் ஏன் இப்படி அழைக்கப் படுகிறது என்பதையும் விவரமாக சொல்லுகிறது. 
ராத்திரி சூரியன் - நார்வே
சரி இப்போது முதல் வரியில் சொன்ன கேள்விக்கு வருகிறேன். தமிழ் நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி(மதிலழகு) என அழைக்கப் படும் ஊரில், ஹி.. ஹி.. பில்ட் அப் போதுமா.. நா பொறந்த வளர்ந்த ஊருதான்..  அங்க தான் ராத்திரியில் சூரியன் வரும்.. அதுவும் வருஷத்துல ரெண்டு நாளு வரும்.. 

அந்த ரெண்டு நாளுல ஒரு நாள் -- இன்றே.. இன்றுதான்.. ( 1st ஏப்ரல் 2011 ). அட.. உங்களலாம் முட்டாளாக்க இப்படி சொல்லலை.. உண்மையத்தான் சொல்லுறேன். அட நம்புகப்பா..  நம்புங்க.. நா அந்தளவுக்கு டுபாக்கூர் ஆசாமி இல்லை.

ஊர் பேரு ராஜ மன்னார்-குடி, 'குடி' என்றால் கோயில், தெலுங்கு மொழியில். எங்க ஊரு ராஜா ஸ்ரீராஜகோபாலஸ்வாமிக்கு, பங்குனிப் பெருவிழா என்று வருடந்தோறும் திருவிழா வரும். பங்குனி மாதத்தில் ரோஹிணி  நக்ஷத்திரம் வரும் நாளில் தோரோட்டம் நடைபெறும். அது இவ்விழாவின் பதினேழாவது நாளாகும்.  அதாவது தேரோட்ட நாள் வருவதைப் பொறுத்தே மற்ற விழாநாட்கள் அமையும். முதல் பதினெட்டு நாட்கள் வெளி உலாவிலும் பின்னர் பன்னிரண்டு நாட்கள் கோவிலுக்கு உட்பட்ட வெளிப் புறத்திலும், ஆக ஒரு மாதம் முழுவதுமாக கொண்டாட்டம்தான். இறுதி நாளான முப்பதாவது நாளில் தெப்பத் திருவிழா அமையும்.

அந்த விழா நாட்களில் ஒருநாள், அதாவது பத்தாவது நாளில் சூரியப்ரபை எனும் வாகனத்தில் எங்களூர் அரசர் அமர்ந்து வருவார். இந்த நிகழ்ச்சி இரவில் நடைபெறும். அதாவது சூரியனின் மீதமர்ந்து இரவில் வீதி உலா வருவார் எங்க மஹாராஜா. இந்த வருடம் அத்தகைய நாள், இன்றேயாகும். அந்த ராத்திரி சூரியனைப் பார்க்க வேண்டுமா.. இதோ வலது புறத்தில், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளால் செய்யப்பட்ட சூரிய வட்டத்தின்(சூர்யப்ரபை)  நடுவே புல்லாங்குழலூதும் கண்ணன், எங்களூர் மன்னன்.
 
டிஸ்கி :
படங்களுக்கு நன்றி ---
======================================