காலேஜு டேஸ்ல நடந்தது..

அன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை.

வழக்கம்போல காலேஜு முடிஞ்சு, பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி.. ஃபிரண்டு போட்டு வெச்சிருந்த சீட்ல உக்காந்து வெயில்ல வெந்து நொந்து கொண்டிருந்தேன். அது என்னாத்துக்கு பஸ்ல காலேஜு ஸ்டாப்புல ரொம்ப நேரம் நிறுத்தறாங்களோ ? அதுக்கு முந்தின நாளுதான் நா கொஞ்சம் லேட்டா வந்தேன்.. ஆனா வண்டிய கெளப்பிட்டு போயிட்டாங்க.. நான்தான் இன்னிக்கு டயத்துக்கு வந்துட்டேனே.. அப்புறம் ஏன் இன்னும் வண்டிய எடுக்கல...... ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.. ஆரம்பமே இப்படியா.. எல்லாம் என்னோட 'ரிஸ்டுல உக்காந்துக்கிட்டு காட்டுது பாரு' அதுதான். எப்படியோ என்னோட கஷ்டம் தெரிஞ்சு டிரைவர் ஸாரு பெரிய மனசு பண்ணி, வண்டிய கேளப்பினதுனால கொஞ்சம் கொஞ்சமா காத்து வர ஆரம்பிச்சுது... தூக்கம்தான் வரலை.. எப்படி வரும் ?

அதான் அன்னைக்குனு பாத்து லாஸ்டு பிரியடுல நல்லா தூங்கிட்டேனே. வழக்கமா 'லாஸ்டு' பிரியடுல நா தூங்க மாட்டேன், ( அதுக்கு ரெண்டு பீரியடுக்கு முன்னாலேய தூங்கிடுவேன் ). அப்பத்தான சொகுசா, பஸ்சுல ரிடர்ன் வர்றப்ப தூங்கலாம். பஸ்ஸ ஓட்டுறது நானா என்ன, ஒன்னேகா மணிநேரத்த ஓட்டினா போதாதா ?

என்ன சொன்னேன், ஆங்.. முன்னாடியே தூங்கினதுனால, பஸ்சுல தூக்கமே வரலை. பேச்சு தொணைக்கு யாருமே இல்லை.. எல்லாருமே தூங்கிட்டானுங்க.. பாவி மனுசனுங்க. முக்கியமான பாவி, சீட்டு போட்டு தந்தானே அவன்தான். அவன்கூட தூங்கிட்டான். என்னையப் பத்தி ஒரு நெனைப்பு வேணாம். வெச்சிக்குறேன் அப்புறமா.. 'every dog has it own day', நாய்க்கே அப்படி ஒரு நாளு இருக்குதுன்னா, நா யாரு.. எனக்கு ஒரு நாளு வராதா என்ன?

அட. இந்த மாதிரி தான், நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாம சுத்தி சுத்தி போயிடுறேன். இனிமே ஸ்ட்ரைட்டா மேட்டருதான்.

எப்படியோ அரைகொரையா தூக்க கலக்கத்தோட ஒருமாதிரியா ஒரு மணி நேரம் ஓடிடுச்சு ... இன்னும் கால் மணி தான்.. அட.. அட.. என்னடா ரோட்ல கூட்டம்.. முன்னால காரு, புஸ்சு, டிரக்கு.. . என்னதான் ஆச்சு ? என்னது முன்னால ஒரு மரம் விழுந்து டிராபிக்க நிறுத்திடுச்சா ? பத்து.. இருபது.. அட முப்பது நிமிஷம் ஆயிடுச்சி.. இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமா டிராபிக்க சரி பண்ணுறதுக்கு..

என்னோட ஃபிரேண்டு  'இதெல்லாம் ஆவுரதுல்ல, நாம நடந்தே போயிடலாம் இன்னும் மூனே மூணு கிலோமீட்டருதானே..', ஐடியா கொடுத்தான். ஏன் சொல்ல மாட்டான்.. அவன்தான் நல்லா ஒன்னவரு தூங்கிட்டானே.. இப்ப ஃபிரெஷ்ஷா இருக்குறானே.. சரி பேச்சு தொணைக்கு இப்பவாது ஆள் கேடைச்சுதே. 'சரி வா போகலாம், வேற யாராவது எங்ககூட வரீங்களா நாங்க லிஃப்டு தாரோம்.. ஒக்கே ஒக்கே கம்பெனி தாரோம்', சொன்னது நாதான்.. என்ன தாராள மனசு எனக்கு.

start music.. ஆரம்பிச்சுது எங்க 'நட-ராஜா' சரிவீஸ். நடந்து.. நடந்து.. மூணு கிலோமீட்டரு, மூணரை மணி வெயிலுல நடகச்சே தூங்காம ஒரு வழியா என்னோட பிரண்டு வீட்டுக் கிட்ட வந்துட்டோம். அதாவது அரை கிலோமீட்டரு தூரம்தான். மனசுக்கு நிம்மதி.. என்னதான் நம்மளோட வீடு இன்னும் ஒன்னரை கிலோமீட்டரு இருந்தாலும் கவலை இல்லை, ஃபிரெண்டோட சைக்கிள்ல போயிடலாம். அட என்னடா இது.. பின்னால என்ன சத்தம்னு திரும்பி பாத்தா.... பாவிங்களா எல்லா காரும் பஸ்சும் வேக வேகமா நம்மள தாண்டி போகுதே.. மரத்த எடுத்துப் போட்டு வழிய கிளியர் பண்ணிட்டாங்களா..?

எப்படி 'நடந்தோம்' பாத்தீங்களா (படிச்சீங்களா)?  
வீதில "நடக்கணும்னு" விதி....................................

டிஸ்கிகள்  :
  1. நல்லவேளை மூணாப்பு படிச்சப்பவே இப்படி நடக்கல.. இல்லேன்னா 10 கிலோ புத்தக மூட்டையோட எப்படி நடந்திருப்பேன்..
  2. என்னது தலைப்பல சொன்னமாதிரி காலேஜுல (டேஸ்ல) என்ன பெரிசா நடந்துச்சா? அம்புட்டு தூரம் நடந்துருக்கோம்..  அத சொல்லத்தான் இந்த மாதிரி..

33 Comments (கருத்துரைகள்)
:

ப.செல்வக்குமார் said... [Reply]

வடை எனக்கே ..!!

Madhavan said... [Reply]

அதெப்படி.. படிக்காமலே மொதோ கமெண்டா.. வடைக்கு என்னமா போட்டி போடுறாணுக..

சரி.. சரி.. வடை, உங்களுக்குத்தான் செல்வா.

எஸ்.கே said... [Reply]

நேர்கொண்ட நிமிர்ந்த நன்னடை! சிறப்பான நடை! அதிரடி நடை! அழகான நடை!

Madhavan said... [Reply]

@ எஸ்.கே on "நன்னடை! சிறப்பான நடை! அதிரடி நடை! அழகான நடை! " --

எந்த நடை, 'நடந்த'நடையா அல்லது 'எழுத்து'நடையா ?

எஸ்.கே said... [Reply]

இரண்டுமே!!!

ப.செல்வக்குமார் said... [Reply]

// நான்தான்இன்னிக்கு டயத்துக்கு வந்துட்டேனே..அப்புறம் ஏன் இன்னும் வண்டிய எடுக்கல...... ///

அவுங்க கிட்ட கேட்டீங்களா ..?

Dhosai said... [Reply]

hey ennapa indha vadaiku poi ippadi adichikirenga.. vadayai pichi pichi sapidunga ok va

ப.செல்வக்குமார் said... [Reply]

///அட. இந்த மாதிரி தான், நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாம சுத்தி சுத்திபோயிடுறேன். இனிமே ஸ்ட்ரைட்டா மேட்டருதான்.///

சுத்தி சுத்தி எங்க போறீங்க ,,

வெங்கட் said... [Reply]

// அதான் அன்னைக்குனு பாத்து லாஸ்டு
பிரியடுல நல்லா தூங்கிட்டேனே. //

என்ன இது கெட்ட பழக்கம்..?

கலேஜ்ல போயி லாஸ்டு பிரியடுல
தூங்கறது..!!

I Don't like it..!!

அப்ப மத்த பிரியடுல எல்லாம்
முழிச்சிட்டு இருக்கணுமா..??!!

Again I Don't Like it..!!

Madhavan said... [Reply]

@ selva //அவுங்க கிட்ட கேட்டீங்களா ..? //

கேக்குறதா.. அப்புறம் ஒழுங்கா வீடு போய்சேர வேண்டாமா ?

@ Dhosai..அதானே.. உங்களைப் பத்தி யாராவது நேனைக்கிராங்களா ? (தோசை) அடுக்குமா.., ஞாயமா, தர்மமா ?

RVS said... [Reply]

ஸ்...ப்பா..முடியலை.. அழுதுருவேன்.. விட்டுடு.... ;-) ;-) ;-)

Madhavan said... [Reply]

@ RVS
உண்மையா அப்படி 'நடந்த' நிகழ்ச்சி, என்னோட காலேஜு டேஸ்ல நடந்துச்சி.. அன்னிக்கி வேணா அது சோகமா இருந்துருக்கலாம்.. இப்ப அதையே கொஞ்சம் நகைச்சுவையா எழுதலாம்னு தான் இந்த ரிஸ்கு....'காலாஞ்சிமேடு' ஷட்டர்லேருந்து நானும் ஸ்ரீராமும் நடந்தே வந்தோம்.

அழாம சிரிச்சிகிட்டே இன்ட்லில ஒரு ஒட்டு போட்டுடு, நீ ரொம்ப சமத்துதான..?

ப.செல்வக்குமார் said... [Reply]

//
என்னது தலைப்பல சொன்னமாதிரி காலேஜுல (டேஸ்ல) என்ன பெரிசா நடந்துச்சா? அம்புட்டு தூரம் நடந்துருக்கோம்.. அத சொல்லத்தான் இந்த மாதிரி..
///
நல்லா சொன்னீங்க போங்க ..

Gayathri said... [Reply]

aahaaa nadandhadha ezhduha nadandadhaa oru thaippaa nalla irukku ponga

RVS said... [Reply]

எவ்ளோ தடவை போடுவாங்க... இன்ட்லில விட மாட்டாங்கப்பா...

Madhavan said... [Reply]

@ RVS ok.. நான்தான் தப்புக் கணக்கு போட்டுட்டேன்.. இனிமே சரியா போடுறேன்.

Chitra said... [Reply]

எப்படி 'நடந்தோம்' பாத்தீங்களா (படிச்சீங்களா)?
வீதில "நடக்கணும்னு" விதி....................................


.....விதி "வலி"யது???? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

Madhavan said... [Reply]

@ chitra -- ஆமா, அந்த ராத்திரி கால்(பூரா) 'வலி'..

ஆர்.கே.சதீஷ்குமார் said... [Reply]

நல்ல நடை

மோகன் குமார் said... [Reply]

மாதவன் பிரபல பதிவர் ஆயிடீங்களா? சொல்லவே இல்ல.:)) அதுக்குள் இத்தனை பின்னூட்டங்கள்!! வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said... [Reply]

வீதில்யில் நடந்தது விதி...பாதியில் வந்த பஸ் செய்தது சதி...அதனால்தான் இந்த கதி..!

நாகராஜசோழன் MA said... [Reply]

ஓட்டுப் போட்டுட்டேன்.

அருண் பிரசாத் said... [Reply]

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... உங்கள இன்னும் 10 கிமீ நடக்க வெச்சி இருக்கனும்

சௌந்தர் said... [Reply]

அட டா இந்த கமெண்ட் போடவா இவ்வளவு தூரம் நடந்து வந்தேன்...

Madhavan said... [Reply]

Satheesh, Naagaraaj -- thanks

@ மோகன் குமார் அப்படியா.. அட இனிமே, நானும் 'பிரபல பதிவர்' தானே.. (thanks)

@ Sriram -- ஒரே ஒரு மடக்கு சரியான எடத்துல போட்டுருந்தா, 'கவிதை.. கவிதை' .. (நன்றி)

@ அருண் - சரியா சொல்லிட்டேன்களே, சைபருக்கு மதிப்பில்லைன்னு ஒங்களுக்கும் தெரியுமா ?

Gopi Ramamoorthy said... [Reply]

என்ன பழக்கம் இது காலேசுக்கேல்லாம் போறது?

Madhavan said... [Reply]

//Gopi Ramamoorthy said..."என்ன பழக்கம் இது காலேசுக்கேல்லாம் போறது?" //

ஏதே நல்லது கேட்டது தெரியாத வயசுல தெரியமா போயிட்டேன்
இப்பலாம் போறதில்லை.. சரியா ?

வெறும்பய said... [Reply]

நான் வந்திட்டு போனது மட்டும் ஞாபகமிருக்கட்டும்...

Madhavan said... [Reply]

//வெறும்பய said..."நான் வந்திட்டு போனது மட்டும் ஞாபகமிருக்கட்டும்... //

வந்து போனா மட்டும் போதாது..
இன்ட்லில ஓட்டும் போடணும் ஆமா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]

ok. athukkenna ippo?

Madhavan said... [Reply]

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said..."ok. athukkenna ippo ? " //

இப்போ என்னவா? 95வது பதிவுக்கு வேற என்னா பண்ணிருப்பேன்...?

பெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]

சிங்கப்பூர் சுத்தி காட்டினவன் நானு, எனக்கு நடந்த கதை சொல்றீங்களா? இது ரொம்ப ஓவர்

cho visiri said... [Reply]

Let me now tell you my experience.

In 1974 I went to Poodi College Correspondent's House on a holiday. [The previous day, Office peon had advised me to meet the correspondent on the next day (saturday) at the latter's home in connection with a Scholarship i had applied for (Ramalingaswamigal Educational Trust run by Poondi Vandaiyars). Accordingly I went. While going I went by train (season ticket). I reached his office cum home at poondi by o900 Hours. At about 1100hours he called me in. I went. Semidark air conditioned room, illuminated bright table (Table lamp was on).
My shirt was unironed, slightly torn and semi yellowish, because of lack of application of soap and over a year old.). Thulasi Ayya Vandayar looked at me and my shirt too. Without wasting his (mine too) time- within five seconds, he told me in curt tone that he would not recommend me for scholarship.

I cursed myself. I thought it not fit to waste money on Bus fare (The return train was scheduled at 1705 hours only as 1430hours train had been remaining suspended).
I walked the entire distance (Poondi to Mannaargudi - 19 plus 14 kms). Since I had no trust on myself, ( fearing that I would stop a bus enroute if I walked down the bus road) and board it I opted the small path adjoining the Railway track.
My return journey started at about 1110 Hrs and ended at about 2000 hrs.

On Monday, I got a pleasant surprise when the Correspondent (Thulasi Ayya vaandaiyaar) called me at about 1130 hours. He told me in a very kind tone, " if I do not give you scholarship there would be no meaning in running the Trust." He handed over a Chit bearing his signature and the lovely Sanction Order.

What a great man! ( Shri Thulasi Ayya Vaandaiyar).

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...