நேரிசை வெண்பா : (28-07-2017) சென்ற வார, ஆடிப்பூர தேர்த்திருவிழா கண்டதன் விளைவு இப்பாடல்.
சிலேடை - பூமியும் தேரும் -- (#மாதவன்_சிலேடை 4)
******************************
பைய நகர்ந்து, பருவமோர் வட்டமிட்டு,
மெய்யிலே மேடுகாட்டி, வெம்மையுடை - ஐயனை
மையமாக்கி, யென்றும் மறுபாதை செல்லாத,
வையம், வடத்தேராய் வந்து
******************************
* பருவம் -- தொடர்ந்து சுழற்சியாக நடக்கும் செயல் -- இவ்விடத்தில் ஆண்டு/வருடம்.
* "மேடு" == பூமியுள்ள மலை, தேரின் உடற்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளச் சிலை (பொம்மை)
* "வெம்மையுடை(ய) ஐயன்" -- வெப்பம் பொருந்திய சூரியன், பராக்கிரமம்(வெம்மை) பொருந்திய தெய்வம்