திருமணமான சமயம். மனைவிக்கொ, புது ஊரு, புது மக்கள், புது பாஷை-- ஆனா, ஜமாய்க்கத்தான் முடியலை.. பேசினா வாய்ல தார் பூசிடுவாங்கனு பயந்துபோயி அவ கத்துக்காத பாஷையாச்சே.... அவளுக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருந்துச்சி.. அதலாம் அனுபவிச்சாதான் தெரியும் / புரியும்.
அப்படித்தாங்க ஒருநாளு, நா ஆபீஸ்ல இருந்தப்ப செல்போன்ல வூட்டம்மா கூப்டாங்க..
நான் : ஹாய் செல்லம்.. சொல்லு.
மனைவி : என்னங்க.. என்னோட காலேஜுல படிச்ச பிரண்டு ஒருத்தி.. 'சசி'னு பேரு. இந்த ஊருலதான் இருக்காளாம். போன் நம்பர் கெடைச்சு இப்பத்தான் அரைமணி பேசினேன். நம்ம அட்ரஸ் சொல்லிருக்கேன். ஈவ்னிங் நம்ம வீட்டுக்கு அவ குடும்பத்தோட வர்றாளாம், அதனால, நீங்க சீக்ரம் வந்துடுங்க, சொல்லிட்டேன்.
நான் : ஓ! எஸ். கண்டிப்பா சீக்கிரம் வந்துடறேன். நல்ல வேளை ... ஒன்னோட ஏற்கனவே பழகின ஒரு ஆளு இப்பவாது கெடைச்சாங்களே.. அது சரி அரைமணி நேரம் என்னதான் பேசின ?
மனைவி : அவளோட ஹஸ்பெண்டு, கொழந்தையப் பத்தி சொன்னா, அவ. நா ஒங்களப் பத்தி சொன்னேன். அத அப்புறமா சொல்லுறேன்.. நீங்க டயத்த வேஸ்டு பண்ணாம சீக்கிரம் வீட்டுக்கு வர்ர வழியப் பாருங்க. பை.
( 'போன்' கட் - மெசேஜ் ஓவர்)
அட பார்ரா, பழைய பிரெண்ட் கிட்ட அரை மணி நேரம், என்கிட்டே ரெண்டெ நிமிஷம், என்ன செய்ய ? "அது சரி, என்னைப் பத்தி சொன்னதா சொன்னாளே, என்ன சொல்லியிருப்பா?" இதுதான் என்னோட மண்டைய கொடஞ்செடுத்த ஒரே கேள்வி. உசைன் போல்ட் கணக்கா 'ஆணியலாம்' புடுங்கி முடிச்சிட்டு வீட்டுக்கு போனேன். வாசல்லையே வரவேற்பு, என்னோட வொயிஃபுதான்.
"என்னங்க, அவ்ளோ சொல்லியும் லேட்டா வர்றீங்களே?" என்றாள். "ஏம்பா, அதுக்குள்ளே உன் பிரெண்ட் வந்துட்டாங்களா?" என்ற என்னிடம், "இப்பதான் போன் பண்ணினா, இதோ பத்து நிமிஷத்துல ஒங்க வீட்டுல இருப்பேன்னு சொல்லியிருக்கா"
"அது சரி, என்னப் பத்தி உன் பிரெண்ட்கிட்ட என்ன சொல்லியிருக்கே ?", ஆசையோட கேட்டதுக்கு, வொயிஃப் சொல்ல ஆரம்பிச்சா, "உங்களைப் பத்தி சொல்லத்தான் இருக்கவே இருக்கே...... அலைபாயுதே பட ஹீரோ மாதிரி....................".
இவர்(ன்)தான் ... 'பேர்ல'. |
கேட்ட எனக்கு "ஜிவ்"வென்றிருந்தது, "பேர்ல மட்டும்!", என்று முடித்தது காதில் விழும்வரை.
டிஸ்கி : 'பல்பு' வாங்குதல் என்றால் என்ன? உதாரணம் தருக.
51 Comments (கருத்துரைகள்)
:
வடை எனக்கே ..!!
என்னா ஒரு வில்லத்தனம்...? 0^0
//அது சரி அரைமணிநேரம் என்னதான் பேசின ?/
நீங்க ஆணாதிக்க வாதியா ..?
ஆஹா!
//டிஸ்கி : 'பல்பு' வாங்குதல் என்றால் என்ன? உதாரணம் தருக./
பல்பு வாங்குவது என்பது கடையில் சென்று பணம் கொடுத்து பல்பு வாங்குவது ஆகும் ..!!
நீங்க பல்பு வாங்கிறத பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இங்கே சென்று பார்க்கவும்.
//திருமணமான சமயம். //
அப்ப ரைட்டு.
http://vaarththai.wordpress.com
@ப.செல்வக்குமார்
வடை உனக்கே..
(நீ வடை வாங்குற ரகசியம் இப்ப தெரிஞ்சிக் கிட்டேன்.)
//நீங்க ஆணாதிக்க வாதியா ..? //
பாதி ரைட்டு.. (ஆண்வாதி)
//பல்பு வாங்குவது என்பது கடையில் சென்று பணம் கொடுத்து பல்பு வாங்குவது ஆகும் ..!! //
தெரியுது.. தெரியுது.. 'ப்ளடி பேச்சிலர்'..
// 'பல்பு' வாங்குதல் என்றால் என்ன? உதாரணம் தருக. //
ஹா ஹா எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறீங்க பாஸ் .. :)
@பன்னிக்குட்டி ராம்சாமி
//என்னா ஒரு வில்லத்தனம்...? 0^0 //
ஆமா.. அதான.. (நீ என்னாத்துக்கு சொன்னா, வெளங்கலையே ?)
@எஸ்.கே
//ஆஹா! //
பல்பு மேட்டரா ? இல்லேன்னா எதுன்னு சொல்லுங்க.. (thanks)
@ப.செல்வக்குமார் said... [Reply] 3
//அது சரி அரைமணிநேரம் என்னதான் பேசின ?/
//நீங்க ஆணாதிக்க வாதியா ..?//
இந்த சீசன் இன்னும் முடியலயா...!!!!
கவலைப்படாதீங்க! என்னைக்காவது ஒருநாள் உங்களோட உண்மையான மதிப்பு தெரியும்!
//அலைபாயுதே பட ஹீரோ மாதிரி//
உங்க கற்பனை அழகாக இருக்கு. ஆனால் நிஜம் எப்படி இருக்கும்னு தெரியலையே?
இந்த மாதிரி வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் பல்பு வாங்கியிருப்போம்! எல்லாமே இனிமையான பல்புகள்!
//டிஸ்கி : 'பல்பு' வாங்குதல் என்றால் என்ன? உதாரணம் தருக.//
உதாரணம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக!
@வார்த்தை
ரெண்டே வார்த்தை.. -- உங்களுக்கும் நன்றி..
//உதாரணம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக!///
உதாரணம் என்பது ஒரு இரண்டுகால் இயந்திரம் ஆகும் ..
இது பாதிநேரம் உயிருடைய பூசியைப்போலவும் பாதிநேரம் பெட்ரோலில் ஓடும் வாகனம் போலவும் இருக்கும் ..!!
@Balaji saravana
//ஹா ஹா எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறீங்க பாஸ் .. :) //
வடிவேலுவாய நமஹா.. (வலிக்காமலிருக்க சொல்லும் மந்திரம்)
@எஸ்.கே
//கவலைப்படாதீங்க! என்னைக்காவது ஒருநாள் உங்களோட உண்மையான மதிப்பு தெரியும்!
//
அந்தக் காலம் வந்துடிச்சு.. அதான் கடந்தகாலத்த நெனைச்சு இந்த பதிவு.
அடப்பாவி மக்கா.. நீ கவலப்படாதையா... எல்லாம் சரியாயிரும்..
@நாகராஜசோழன் MA
//உங்க கற்பனை அழகாக இருக்கு. ஆனால் நிஜம் எப்படி இருக்கும்னு தெரியலையே? //
உண்மையிலே அதே மாதிரிதான்.. 'பேருல'....
@எஸ்.கே
//இந்த மாதிரி வாழ்க்கையில் எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் பல்பு வாங்கியிருப்போம்! எல்லாமே இனிமையான பல்புகள்!//
ஹி.. ஹி.. வீட்டுக்கு வீடு வாசப்படி.
நாகராஜசோழன் MA said...
// உதாரணம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக! //
ஸ்போர்ட்ஸ் ஷூ போட்ட காலால, உதச்சா வரும் 'ரணம்' தான் 'உதாரணம்'. ஷூவ எடுத்து(ஒதைச்சு) காட்டவா ?
ஹ .........ஹா .......ரொம்ப அழுகாச்சி .......அழுகாச்சி யா வந்திருக்குமே ..............
பரவாயில்லை விடுங்க....இதெல்லாம் சகஜம்தானே...
ம்மாதவா.... கலக்கறே......!
:))
@இம்சைஅரசன் பாபு..
ok..ok.. கண்ட்ரோல் யுவர் ஃபீலிங்க்ஸ்.. பப்ளிக்...பப்ளிக்...
@ஸ்ரீராம்.
நீங்க சொன்னா சரிதான் அண்ணே..
@பன்னிக்குட்டி ராம்சாமி
என்னாத்த....?
ஸ்மைலிக்கு நன்றி, மோகன் குமார்.
parattugal nallathu ippadi neraya thanga polurdhayanithi
bun bulb thakkaali idhellaam namaku pudhusaa thalaivaa
ஹா,ஹா,ஹா ............ விடுங்க , விடுங்க ....கொஞ்ச நாள்ல எல்லாம் பழகிடும்
// புது ஊரு, புது மக்கள், புது பாஷை-- ஆனா, ஜமாய்க்கத்தான் முடியலை.. //
அரே..ஹிந்தி is a சோட்டா Language ஹை..!!
It is a Very Easy Language ஹை..!!
ஆப் ஹிந்தி போல்..
முஜே Understand கர்தா ஹை..!!
அரே.. தும் கஹா.. Running ஹை..?
இதர் ஆவ் பாய்..
இதர் ஆவ் பாய்..
@ polurdhayanithi --
Thanks
@ Arun
-- அதான, நாம பாக்காததா ?
@ மங்குனி அமைச்சர்
-- அமாம், ஆரம்பத்துல அப்படித்தான்.. அப்புறம்.. --- 'நீங்க சொன்னதுதான்'
@வெங்கட்
அரே வெங்கட் பையா.. ஆப் கே ஹிந்தி சுன்கே ஹம்கொ பஹூத் குஷ் மிலா.. தன்யவாத்
अरे वेंकट भैया, आप के हिंदी सुनके हमको बहूत खुश मिला -- दन्यवाद.
---
தமிழ்ல ஹிந்திய எழுதிப் படிச்சா உச்சரிப்பு சரியா வராது அதுனால
ஹிந்திலயும்
('ழ' என்ற வார்த்தையை 'zha' என்று ஆங்கிலத்தில் எழுதுவதுமாதிரி.... கண்டிப்பா இங்லீஷ்காரன் 'zha'வ 'ழ'னு சொல்லமாட்டான்.. )
செம பல்பு... உங்க எழுத்து நடை அருமை... உசேன் போல்டுக்கு விக்கிபீடியா லிங்க் கொடுத்ததெல்லாம் ரொம்ப ஓவர்...
மாதவா.. ஏன் இதையெல்லாம் வெளியில சொல்லிக்கிட்டு.. ஏதோ மானமும் மரியாதையுமா இருங்கப்பா.. ;-) ;-) ;-)
@philosophy prabhakaran
நன்றி பி.பிரபாகரன். ஒரு சிலருக்கு உசை போல்டத் தெரியாதொனுதான் லின்க்லாம்.. சாரி.. ஒன்கலப் போல உள்ளவங்களை தாப்பா எடை போட்டுட்டேன்..
நன்றி.. எழுத்து நடையை பாராட்டியதற்கு..
@ @RVS
இருக்குற நல்லத (பேரத்தான்) தம்பட்டம் அடிச்சிக்கலாமேனுதான், இந்த பில்டப்பு..
:)..
ஓ ஆயுத எழுத்து மாதவனா? ஓகே ஓகே
lol super ponga. bulbena paduvathu yaadhenil,
yethirparkum pozhudhu unmay velivarum , varatha yethirpaarkum pozhudhu
hahaha kozhapitenaa
ha,ha,ha,... :-))
:))))))))))
//ப.செல்வக்குமார் said... [Reply] 5
//டிஸ்கி : 'பல்பு' வாங்குதல் என்றால் என்ன? உதாரணம் தருக./
பல்பு வாங்குவது என்பது கடையில் சென்று பணம் கொடுத்து பல்பு வாங்குவது ஆகும் ..!!.//
தாங்க முடியல சாமீ...
அருமை தொடருங்கள்.....
நான் எழுதின கதை தலைப்புலேயே என்னமோ இருக்கேன்னு தான் ஆர்வமா வந்தேன்... ஹா ஹா ஹ... அப்புறம் தான் தெரிஞ்சுது இது சொந்த கதை சோக கதைன்னு...சூப்பர்.. ஹா ஹா ஹா
sema செம பதிவு
Thanks to
Terror, Arun, Gayathri, Thangamani(appaavi, ofcourse), Harish, Gopi, Ramesh, Chitra, Maanavan(be obedient to ur teachers), சி.பி.செந்தில்குமார்
ha ha. nalla irunthathu unga sirippu kacheri!,,;)
Post a Comment