வெள்ளொத்தாழிசை - 03-10-2017

வெள்ளொத்தாழிசை :
 <a href="https://facebook.com/groups/914195052001517?view=permalinkid=1534070003347349&_rdr">நன்றி/மூலம் முகநூல்</a> 

இஃது வெண்பாவின் இனமாகிய "வெள்ளொத்தாழிசை." வகையாகும். (வெண்பாவின் தாழிசை இனமாகும்.)
இது மூன்று பாடல்கள் பொருளில் ஒத்து வருவதால் "வெள்ளொத்தாழிசை" எனப்படும்.
பொது இலக்கணம் :
* வெண்டளையைப் பெற்றுவரும்.
* மூன்றடிகளால் வரும்.
* மூன்றடிகளும் ஓரெதுகையைப் பெற்று
* அடிதோறும் பொழிப்பு மோனை (1,3 ஆம் சீர்களில்) பெற்று
* ஈற்றடி முச்சீராய், முன்னிரண்டு அடிகள் நாற்சீராய்,
* ஈற்றுச்சீர் நாள்,மலர், காசு,பிறப்பு ஆகியவற்றுள் ஒன்றனைக் கொண்டு முடியும்.
* ஒரு பொருள்மேல் மூன்று பாடல்கள் வரவேண்டும்.
* மூன்று பாடல்களுக்கும் ஒரே எதுகை வேண்டுமென்பதில்லை.

இறைவனின் பண்பிணை 'வெள்ளொத்தாழிசையாக' இதோ ஒரு பாடல் : 
**********************************
வான்வெளியும் மண்ணும் வளியுஞ் சுடுதீயும்
ஊன்பருகு நீரும் உணவுமளிக் குந்தெய்வந்
தான்காத்துச் செய்யுந் தலை  !  (1)
------------
ஊராருள் தன்னை யுணர்ந்தார்க்குக் கேடென்றும்
வாராமற் தான்காத்து வாழ்விக்க, வோர்பக்கஞ் 
சாராமற் செய்யுந் தலை !   (2)
------------
மரிக்கும் உடலல்ல, மண்வந்த மைந்தர்
தரித்திடும் வேடத்தின் சாரமுங் காட்டிச்
சரியாகச் செய்யுந் தலை ! (3)
*********************************

படங்கண்டு வந்த பாடல் - 04-09-2017

அறுசீர்க்கெழிநெடிலடி ஆசிரியவிருத்தம்  -- விளம் மா தேமா

உள்ளிரு காற்று ஊதி
....ஓரிசை வெளியே தள்ளிக்
கள்ளனாய்ப் பார்வை தந்தக்
...காதலன், கண்ணன் கொண்ட
வெள்ளையுள் ளத்தைக் கண்டு
....வேண்டிய இளம்பெண், தானும்,
உள்ளதை உணர்ந்து பேசி
.....ஊறுகள் நீங்கக் கண்டாள் !

# உள்ளமொழி == உள்ளத்தில் இருக்கும் / வெளிப்படும் மொழி.
# ஊறுகள் = துன்பங்கள்