கதம்பம் - June 15 2012

ரொம்ப நாளா பதிவே எழுதல....
சில சமயத்துல எண்ணங்கள் தோணினாலும் இங்க பதிவா எழுத சோம்பல்.. (எழுதி என்ன ஆகப் போறதுன்னு சலிப்பு) .

வளவளனு எழுதாம பாயிண்டு பாயிண்டா எழுதினா படிக்கறதுக்கு சலிப்பு வராதுதான.. இப்ப பாயிண்டு பாயிண்டா படிங்க..

1) குடும்பத்தோட சொந்த ஊருக்கு போயி ரெண்டு வாரம் இருந்துட்டு வந்தேன் (ஜூன்ல) ..
2) இங்க வீட்டுல நாலு சுவத்துக்குள்ள குளிக்கறத்துக்கும், சொந்த ஊருல பரந்து விரிந்த ஹரித்ராநதி குளத்துல குளிக்கறதுக்கும், எவ்ளோ வித்தியாசம் ! என்னோட பசங்க நல்லா என்ஜாய் பண்ணாங்க குளக்குளியல !!
3) எங்க ஊருல அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி பெரிய கோவில் பிரசத்தி. கோவிலுக்கு தினமும் போயி தரிசனம் செய்தேன்.
4) அதுல ஒரு நாள், 'கருட சேவை'... வைகாசி விசாகம் / பவுர்ணமி அன்னைக்கு.
5) தொண்ணூறு ஆரம்பத்தில் சென்னை தொலைக்காட்சியில் வந்த 'என் இனிய இயந்திரா' தொடர்ல ஒவ்வொரு பிரஜைக்கும் பேரு கெடையாது.. ஆல்ஃபா நியூமரிக் கோட்  தான். அந்த வகையில பேரோட(Name) பன்னெண்டிலக்க எண்கொண்ட அடையாள மற்றும் முகவரி அட்தாச்சி அட்டைதான் 'ஆதார்'.
      ஹையா.. எனக்கு ஆதார் (Aadhaar) அடையாள அட்டை வந்துடிச்சு..
6) சின்ன வயசில (ஆறாம் வகுப்பு படிச்சேன்னு நெனைக்கிறேன்), குரங்கு பெடல் அடிச்சு அடிச்சு, ஓட்ட கத்துக்கிட்ட சைக்கிள்(சைக்கிளோட மிச்ச சொச்சம்) இன்னைக்கும் எங்க வீட்டுல இருக்கு.. ஊருக்கு போனப்ப அதப் பாத்ததும் படும் பிடிச்சிட்டேன்..

டிஸ்கி : இந்தப் பதிவு ஜூன் மாசம் எழுதி ட்ராஃப்ட்ல வெச்சிருந்தது.... வெளியிட மறந்திட்டேன் இதோ இப்ப வெளியிடுறேன் 

9 Comments (கருத்துரைகள்)
:

நாய் நக்ஸ் said... [Reply]

அவ்வளவுதானா...?????????

அந்த சைக்கிள் நல்லா இருக்கு...
அத ஒலிம்பிக் எடுத்துக்கிட்டு போனா கண்டிப்பா....
பரிசு உண்டு.....

ஹும்...யாரு கேக்கபோறா....

Yaathoramani.blogspot.com said... [Reply]

மிகத் தாமதமாக பூத்த கதம்பமாயினும்
மணம் அருமை
இனியேனும் அடிக்கடி பூக்க வேண்டுகிறேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said... [Reply]

நீண்ட நாட்களுக்குப் பிறகு சொந்த ஊர் சென்று வருவதே சுகம்தான். பேட்டரி சார்ஜ் செய்து கொண்டாற்போல ஃபிரெஷாக இருக்கும்!

CS. Mohan Kumar said... [Reply]

தம்ப்ப்ப்ப்பி நீங்கள் இவ்ளோ எளிமையா கூட எழுதுவீங்களா ?

நன்றி

குறையொன்றுமில்லை. said... [Reply]

இனி அடிக்கடி வந்து பேசுங்க. வெயிட்டிங்க்

பெசொவி said... [Reply]

//இந்தப் பதிவு ஜூன் மாசம் எழுதி ட்ராஃப்ட்ல வெச்சிருந்தது.... வெளியிட மறந்திட்டேன் இதோ இப்ப வெளியிடுறேன்//

அதுக்காக தலைப்பைக் கூட மாத்த மாட்டீங்களா?

பெசொவி said... [Reply]

@mohankumar
//தம்ப்ப்ப்ப்பி நீங்கள் இவ்ளோ எளிமையா கூட எழுதுவீங்களா ?//

பதிவுலகத்துல இதெல்லாம் சகஜம் மோகன்

திண்டுக்கல் தனபாலன் said... [Reply]

இனி தொடருங்கள்... நன்றி...

கோமதி அரசு said... [Reply]

பழைய இரும்புகடைக்கு போடாமல் வீட்டின் பின்புறம் நினைவு சின்னமாய் இருப்பதே பெரிய சந்தோஷம்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...