ம்ம்ம்ம் அப்பலாம் ஒரு
ஈ-மெயில் உண்டா.......
இன்டர்நெட் உண்டா.....
இல்ல, மொபைல் ஃபோனுதான் உண்டா...
வீட்ல லேண்ட்-லயன் கெடையாது..
பேஜர் கூட கெடையாது....
அதான் ரொம்ப பேஜாரா போச்சு..
பெரிசா ஒன்னும் இல்லீங்கோ.....
என்னோட காலேஜில படிச்சப்ப
க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் நாலு பேரு இருந்தாங்க.
அதுவும் ஒரே பெஞ்ச்ல ஒக்காந்து கிளாஸ ஓட்டினோம்...
அவனுக காண்டாக்ட் அட்ரெஸ் என்கிட்டே இல்ல..
என்னோட காண்டாக்ட் அட்ரெஸ்ம் அவனுக கிட்ட இல்ல..
கண்டபடி, இண்டர்நெட்ல அவனுங்க பேரு, ஊரு,
காலேஜ் படிச்ச வருஷம் எல்லாம் போட்டு,
அலசி, பிழிஞ்சி...., வடிகட்டி பாத்தாச்சு..
அவனுகள கண்டு பிடிக்க முடில....
திடீர்னு நேத்து நைட்டு, அவனுகள ரெண்டு பேர நேர்ல
பாத்து ஷாக் ஆயிட்டேன்....
ஆனந்த அதிர்ச்சி....
சரியா பேச்சே வரல..
அவனுக பேசினதும் சரியா என்னோட காதுல விழல (வயசாடிச்சோ ?)
ஆனா உருவம் மட்டும் கண்ணுக்கு சரியா தெரிஞ்சிது.. (ஷார்ப்புதான்)
செத்த நேரம் நெதானிச்சு.. அவனுகளோட
பொன் நம்பர், ஈ-மெயில் இதல்லாம் பல தடவ கேட்டும்...
அவனுக சொல்லுற மாதிரியும் தெரியல...
எழுதி தர்ற மாதிரியும் தெரியல..
ஏன்.. ஏன்.. ஏன்...?
அடப்பாவி....... கடைசி ரெண்டு பாராவும், கனவா...?