Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

கண்டுபிடிச்சேன் தொலைந்த நண்பர்களை..


ம்ம்ம்ம்  அப்பலாம் ஒரு
ஈ-மெயில் உண்டா.......
இன்டர்நெட் உண்டா.....
இல்ல, மொபைல் ஃபோனுதான் உண்டா...

வீட்ல லேண்ட்-லயன்  கெடையாது..
பேஜர் கூட கெடையாது....
அதான் ரொம்ப பேஜாரா போச்சு..

பெரிசா ஒன்னும் இல்லீங்கோ.....
என்னோட காலேஜில படிச்சப்ப
க்ளோஸ்  ஃப்ரண்ட்ஸ்  நாலு பேரு இருந்தாங்க.
அதுவும் ஒரே பெஞ்ச்ல ஒக்காந்து கிளாஸ ஓட்டினோம்...
அவனுக காண்டாக்ட் அட்ரெஸ் என்கிட்டே இல்ல..
என்னோட காண்டாக்ட் அட்ரெஸ்ம் அவனுக கிட்ட இல்ல..
 
கண்டபடி, இண்டர்நெட்ல அவனுங்க பேரு, ஊரு,
காலேஜ் படிச்ச வருஷம் எல்லாம் போட்டு,
அலசி, பிழிஞ்சி...., வடிகட்டி பாத்தாச்சு..
அவனுகள கண்டு பிடிக்க முடில....

திடீர்னு நேத்து நைட்டு, அவனுகள ரெண்டு பேர நேர்ல
பாத்து ஷாக் ஆயிட்டேன்....
ஆனந்த அதிர்ச்சி....
சரியா பேச்சே வரல..
அவனுக பேசினதும் சரியா என்னோட காதுல விழல (வயசாடிச்சோ ?)
ஆனா உருவம் மட்டும் கண்ணுக்கு சரியா தெரிஞ்சிது.. (ஷார்ப்புதான்)

செத்த நேரம் நெதானிச்சு.. அவனுகளோட
பொன் நம்பர், ஈ-மெயில் இதல்லாம் பல தடவ கேட்டும்...
அவனுக சொல்லுற மாதிரியும் தெரியல...
எழுதி தர்ற மாதிரியும் தெரியல..
ஏன்.. ஏன்.. ஏன்...?


அடப்பாவி....... கடைசி ரெண்டு பாராவும், கனவா...?  

IRCTC -- என் மனதில் தோன்றியவை.

ஐ.ஆர்.சி.டி.சி  மூலம் இன்டர்நெட்டில் இந்திய ரயில் முன்பதிவு செய்பவர்களுள் நானும் ஒருவன். ஆறேழு வருடங்களாகவே அந்த வசதியை பெற்று வருகிறேன். தற்போது அதிக நபர்கள் இன்டர்நெட் முறையில் முன்பதிவு செய்து வருதாதால் பயன்பாட்டு முறைக்கு அந்த சர்வர் அடிக்கடி அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. முக்கியமாக காலை எட்டு மணிபோல அதனுள் நுழையவே முடியவில்லை. 

நூறு கோடிக்கணக்கில் மக்கள் இருக்கும் நாட்டில் இதுபோன்ற சேவைகளை எவ்வளவு கஷ்டத்தில் லாகவமாக செய்ய முயற்சிக்கு பாராட்டுக்கள். எனினும் ஒன்றிரண்டு குறைபாடுகள். எங்கு இது பற்றி எழுதினால் சரி செய்வார்கள்.

உதாரணம் 1  : பயணியர்கள் மாஸ்டர் லிஸ்டில் பெயர் சேர்க்கும் பொது பிறந்த தேதி தகவலும் சேர்க்கப் படுகிறது. அந்த லிஸ்டின்படி நபர்களை சேர்த்தால் அவர்களின் வயதும் கணக்கிடப் பட்டு வருகிறது. ஆனால் அந்த கணக்கு முறை பயணமுன்பதிவு செய்யும் தேதியின்படி இருக்கிறது. பயணத் தேதி முறையின்படிதான இருக்க வேண்டும் ?

உதாரணம் 2  : மாஸ்டர் லிஸ்டில் முதல் முறையில் ஒரு நபரை சேர்க்கும் பொது கடைசியில், பிறந்த தேதி கொடுத்தபின்னும் சீனியர் சிடிசன் வாய்ப்பு வேண்டுமா வேண்டாமா எனக் கேட்கப் படுகிறது. ஒருவருக்கு வயது 20  மட்டுமே ஆகி இருந்தாலும் இப்படி ஒரு கடைசி (சீனியர் சிட்டிசன்) கேள்வி தேவையா ?  அதாவது, பிறந்த தேதிப்படி வயதினை கணக்கிட்டு.. விதிமுறையின்படி சீனியர் சிட்டிசன் வயதினைத் தாண்டியவர்களின் சேர்க்கைக்கு மட்டும் இந்த கேள்வி கேட்கப் படலாமே !!

அல்லது முதல் முறையில் வயது நேரடியாக கணக்கிடப் படாமல் இருந்தால்... இந்த ஆப்ஷனை பின்னர் முன்பதிவு செய்யும் பொது வயதிற்கேற்றபடி கேட்கப் படலாமே !!

எனினும் இந்திய ரயில்வேக்கு பாராட்டுக்கள்.. நன்றிகள் அவர்களின் சேவைக்கு.  

பொங்கல் - சுவையான அனுபவம்


பொங்கல் பண்டிகைனா வீர சாகசம் இருக்கணுமே.. 'காளைய' அடக்கலாமா.. ம்ம்.. அது நம்ம ரேஞ்சுக்கு ரொம்ப கஷ்டம்.. ம்ம்ம்.. வேணுமின்னா 'சிலம்பம் / கம்பு' - ஈசியா சுத்தலாம்..  அது ஜுஜுபி மேட்டரு.. ரொம்பவே ஈசி..
எப்படியா ?  கடைசியா சொல்லுறேன்..
----------------------------

நேத்தைக்கு(15-01-2012) சூப்பர் ஸ்டார் படம்னு ஆசையா டி.வி பாத்தா.... அட.. அதெப்படி.. 'மாப்பிள்ளை' படத்துல ரஜினிகாந்தக் காணுமே.. அவரோட 'மாப்பிளை' (மகள் கணவர்) நடிச்சதாமே..!!

அட.. நேத்திக்குத்தான் ஏமாந்து போயிட்டோம்.. இன்னைக்கு(16-01-2012) சூப்பர் ஸ்டார் நடிச்ச 'மாவீரன்' பாக்கலாம்னு ஆசையா டி.வி போட்டா.. அட... 'மாவீரன்' ரஜினி இல்லாம.. அதெப்படி ? -------- இப்படியா ஏமாத்துறது..

----------------------------
நல்லவேளையா நேத்தைக்கு ஈவினிங் 'எந்திரன்'லயாவது சூப்பர் ஸ்டார் ரஜினியே வந்திருந்தாரு..

இருந்தாலும் அதுல வந்த கதாபாத்திரம் வசீகரனுக்கோ, சிட்டிக்கோ கொஞ்சம் அறிவு கம்மியா இருந்திச்சிங்கோ..

சிட்டி, 'சனா' தனக்கு வேணுமின்னு சொன்னப்பவே.. சிட்டிய உருவாக்கின மாதிரி ஒரே ஒரு சனாவ வசீகரன் உருவாக்கி இருக்கலாம்..

அட.. 'சிட்டி'யாவது தன்னைப் போல ஆயிரமாயிர 'சிட்டி'யா உருவாக்கினதுக்கு பதிலாக ஒரேயொரு 'சனா'வ உருவாக்கி இருந்தா.. எத்தனையோ உயிர், பொருட்சேதம் இல்லாம சுமூகமா போயிருக்குமே..!  நம்மக் கிட்ட யாரு யோசனை கேக்குறாணுக.. ம்ம்ம் :(

------------------
சிலம்பு - ஈசியா  சுத்துறது எப்படி 

ஸ்டேப் 1 : சிலம்பத்த (கம்புதான்)  கையில எடுங்க..
ஸ்டேப் 2 : பூமில ஒரு வட்டம் அந்த சிலம்பு நீளத்தவிட கொஞ்சமாவது பெரிசா டயாமீட்டர்  வர்றா மாதிரி வரையணும் ... ஒகே..
ஸ்டேப் 3 : சிலம்ப அந்த வட்டத்தோட சென்டர்ல இருக்குறாமாதிரி படுக்க வெக்கணும்..
ஸ்டேப் 4 : இதுதான் முக்கியமான ஸ்டேப்.. கவனம் தேவை.. அந்த வட்டத்தோட பாதையில உங்களுக்கு வசதியான ஸ்பீடுல சுத்த ஆரம்பிக்கணும்..

எத்தன ரவுண்டு முடியுதோ அத்தன ரவுண்டு சுத்துங்க -- எப்படி இது ஈசிதான ?
:-)
======================================


சின்னப் பசங்க ஆனாலும்...

நம்ம பசங்களுக்கு இன்னிலேருந்து ஃபைனல் எக்ஸாம்..
நேத்து நைட்டு பசங்களுக்கு நல்லா பிரிபேர் பண்ணிக் கொடுத்து களைப்பா இருந்த தங்க்ஸ், ..  காலைல சமையல் வேலையில பிசியா இருந்ததால, பசங்கள குளிச்சுவிட்டு ரெடி பண்ணுறது நம்ம வேலையாகிடிச்சு. ஆமாங்க..  பசங்க படிக்குறது ரெண்டாவது, எல்.கே.ஜி.. தான். 

எல்.கே.ஜி படிக்குற பொண்ணுக்கு குளிச்சு விடச்சே.. சோப்பு நுரை மூக்குல போயிட்டுது  போல.. எரிச்சல்ல அழ ஆரம்பிச்சிட்ட.. ஒரு வழியா சமாதனம் பண்ணி குளிச்சு முடிச்சப்ப..

பொண்ணு : "ஏம்பா, சோப்புல மிளகாய் போடுவாங்களா ?"
நான் : "இல்லையே, ஏன் அப்படி கேக்குற ?"
பொண்ணு  : "அப்புறம் ஏன் எரியுது ?"  
நான் :  "!@#$%%^&*"
நான் :" அது வந்து..  ம்ம்... சோப்புல கெமிகல் போடுவாங்க அதான் எரியுது.."
பொண்ணு : "கெமிகல்னா  ?"
நான் : "ஆசிட் ஒரு கெமிகல்" 
பொண்ணு : "ஆசிட்னா என்ன ?"
நான் : "சரி விடு..  தண்ணி கூட ஒரு கெமிகல் தான் "
பொண்ணு : "போங்கப்பா.. தண்ணி கெமிகல் இல்லை.. அது பட்டா மூக்கு எரியாதே!"

இதக் காதுல வாங்கின தங்க்ஸ் : 'சால்ட் ஒரு கெமிகல்'
பொண்ணு : "ம்ம்.. இப்ப புரியுது.. சால்ட் கண்ணு, மூக்குல பட்டா எறியும்.."
நான் : (மனைவியிடம் ) -- அட.. எனக்குத் தோணலியே.. எப்படி பட்டுன்னு சொன்ன ?
தங்க்ஸ் : நீங்க அவ கேட்டப்ப பக்கெட்டுல மிச்சம்   இருந்த தண்ணிய பாத்திருப்பீங்க.., நா, இங்க  உப்பு டப்பாவா எடுத்தேன்.. அதான்.. 
நான்  (எனக்குள் ) : ஆசிட் சொன்ன நா, 'சால்ட்' சொல்லி இருக்கலாமே !

இப்ப எனக்கு புரியுது, அவ்வை ஷண்முகி படத்துல பேரு கேட்டப்ப எதுக்கு 'ப்ளீஸ் இன்செர்ட் ஒன் ரூபி காயின்'ன்னு சொன்னாருனு..  
==================================

பெற்ற இன்பம், பெருக வையகம்..

இனிதான சனிக்கிழமை....
பல விஷயங்களில் மகிழ்ச்சியாக இருந்தேன் இந்த சனிக் கிழமையில் (டிசம்பர் 4 , 2010 )..

மகிழ்ச்சி 1 :
2009-10 க் காண நிதியாண்டில் கூடுதலாக பிடிக்கப்பட்ட 'வருமான வரி', எனக்கு திரும்பக் கெடைச்சுது இன்றைய தினம். இதுல என்ன பெரிய சந்தோஷம்னு கேக்குறீங்களா..? நம்ம நாட்டுல நல்ல விஷயங்களை முனைப்பாக செய்யுறாங்க. அதப் பாராட்டனும்தான ?

முன்பெல்லாம், வருமான வரித்துறை, 'திரும்பத் தரவேண்டிய' தொகைக்கு காசோலை அனுப்புவார்கள். சாதாரணமாக ஒருவர் தரும் காசோலை, அதில் குறிப்பிடப்பட்ட நாள்முதல், ஆறு மாதங்கள் வரை செல்லுபடியாகும். ஆனால் அரசாங்கம் தரும் 'வருமான வரித் திருப்பம்' (IncomeTax Refund) காசோலை மூன்று மாதங்கள் வரைதான் செல்லுபடியாகும். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் எனக்கு அப்படி ஒரு காசோலை கிடைத்தது, இடப்பட்ட தேதியிலிருந்து ஒன்றரை மாதங்கள் கழித்து. எனக்கு அதை வங்கியில் உடனடியாக தர வேண்டிய நிர்பந்தம்.. இருப்பது மேலும் ஒன்றரை மாதங்கள்தானே. நான் கொடுத்தாலும்.. பணம் கிடைக்கவில்லை.... ஒரு மாதம் மேலும் ஆகிவிட்டதால், நான் வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தேன். அவர்கள், அந்த காசோலையை சரி பார்ப்பதற்கு வருமானவரித் துறைக்கு ஓரிரண்டு நாட்களுக்குள் அனுப்பியதாகவும்.. அங்கிருந்து மேலும் தகவல் வரவில்லையாதாலால் பணம் எனது கணக்கில் வரவில்லை என்றும் சொன்னார்கள். நான் சம்பந்தப் பட்ட ஐ.டி. அதிகாரிகளை(மண்டல தலைமை அலுவலகம்) தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது இக்கட்டான நிலையை சொன்னேன் (காசோலை காலம் முடிவுறும் நிலை). அவர்களும் அதனை புரிந்துகொண்டு சரியான நேரத்தில் செயல் பட்டு, எனது கணக்கில் பணம் சேர்பதற்கு ஒப்புதல் அளித்தனர். பணமும் வந்தது. ஏதோ ஒரு சில காரணங்களால் இவ்வாறு தாமதம் ஏற்பட்டதாக பின்னர் தெரிந்து கொண்டேன்.

ஐ.டி. துறையில், எனக்குத் தெரிந்தவரை நன்றாகத்தான் பணி செய்கிறார்கள்.. எனது நண்பர் ஒருவருக்கு வெறும் பதினாறு ரூபாய் வருமானவரியில் அதிகம் பிடித்ததால், ரீபண்டு, முறையாக இருபத்தி ஐந்து ரூபாய் தபால் தலை ஒட்டி (ரிஜிஸ்தர் தபால்) வந்து சேர்ந்தது சில வருடங்களுக்கு முன்னர்.

ஆனால் அந்த மாதிரி கால தாமதம் ஆகிவிடுமென இனி கவலை வேண்டாம்.. ஆமாம்.. தற்பொழுது, 'வருமானவரி ரீபண்டு' ஈ.சி.எஸ் (எலெக்ட்ரானிக் கிளியரன்ஸ் சிஸ்டம்) முறைப்படியும் தரப் படுகிறது. வருமான வரி ரிடர்ன் படிவத்தில் மீதிப் பணத்தை ஈ.சி.எஸ் முறைப் படி திரும்பப் பெரும் ஆப்ஷனையும் டிக் செய்து, உங்களது வங்கிக் கணக்கு எண்ணையும் எழுத வேண்டும். என்னைப் போல சாதாரண மனிதனுக்கு நடந்தது போல இனி அனைவருக்கும் நடக்கும் என நம்புகிறேன்.

மகிழ்ச்சி 2 :
இன்ட்லில ஒட்டு போட்டு பழகிகிட்டதால, ஊருல நடக்குற எலெக்ஷன்ல ஒட்டு போட ஆசை வந்துடிச்சு. அதற்காக எனது பெயரை எலெக்டோரல் லிஸ்டில் சேர்ப்பதற்கு, சம்பந்தப் பட்ட அலுவலகம் சென்று, விண்ணப் படிவத்தை சரியாக (!) பூர்த்தி செய்து அளித்துள்ளேன்.. (ஹி.. ஹி.. நானும் 18 + தான்.. ). பாஸ்போர்டு சைசில இரண்டு புகைப்படம்(கள்) கேட்டாங்க.. ஒன்றை அந்த படிவத்தில் கொடுக்கப்பட்ட இடத்தில் ஒட்டித் தரவேண்டும். (ஒக்கே).. இரண்டாவதை அந்தப் படிவத்துடன் இணைத்துத் தரவேண்டும். இந்த ரெண்டாவது போட்டோ எதுக்குன்னு தான் இதுவரை புரியவில்லை. வாக்களர் அடையாள அட்டைக்கு அவர்களே புகைப்படம் எடுத்துத் தரமாட்டார்களா ?

மகிழ்ச்சி 3 :
இன்று 'இந்திய கடற்படை தினம்' ஆகும்.
(4th December, Indian Navy Day)
நாட்டிலுள்ளோர் நன்றாக இருப்பதற்கு, கடல் மூலம் வரும் ஆபத்துக்களை கடற்படை மூலம் எதிர்கொள்ளும் வீரர்களை நினைவு கொள்வோம். இந்திய தினத்தில் இங்கு பொது மக்கள் பார்வைக்காக அப்படை வீரர்கள் வீர சாகசங்கள் செய்து காண்பித்தார்கள். அது பற்றி தனிப் பதிவு எழுதுவதாக நினைத்துள்ளேன்.. முடிந்தால் ஓரிரு நாட்களில் எழுதுகிறேன்.


டிஸ்கி
: இப்பலாம் இங்க எழுதுறதுக்கு 'மேட்டர்' பஞ்சமே இல்லை. இதுமாதிரி உருப்படியான (?) விஷயங்களையும் எழுதப் போறேன்..
-----------------------------------------------------------------------------

கொலு கொலுவாம்...

சென்ற பதிவினை பார்த்துவிட்டு, கமென்ட் எழுதிய, சித்ரா, ஸ்ரீராம், வருடங்களுக்கு ஊகித்த, பெ.சொ.வி, பின்னர் அதனை சரியாக கணித்துபின்தொடர்ந்த, (கமெண்டு பகுதியில்) அனு, அருண்., இந்தப் பதிவினை எழுதிக் கொண்டிருக்கும்போது, சரியாகச் சொன்ன 'சாய்', ஆர்.வீ.எஸ் -- உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

இப்போது 'நவராத்திரி'/ 'கொலு' பற்றி ஒரு பார்வை..

மேலும் ஒரு படம்.. இதனை அந்த பதிவில் கொடுத்திருந்தால் கணிப்பது சுலபமாக இருந்திருக்கும்...




'நவராத்திரி' / 'தசரா' என்றாலே நமக்கு 'கொலு' தான் ஞாபகம் வரும். சின்ன வயதில் முதலில் அக்கா மற்றும் அக்காவின் நண்பிகள், நண்பிகளின் தம்பிகள், ஆகியோருடன் இந்த ஒன்பது நாட்களிலும் எங்கள் குடியிருப்பு பகுதியில், 'கொலு' வைத்திருக்கும் வீடுகளுக்கு சென்று.... அவர்கள் பாடும்போது, Mr. பீனின் "HAAALELUUUUJA, HAALELUUUJA!!" போலத் தெரிந்த வார்த்தை வரும் பொது 'சத்தமாக' பாடி... முக்கியமாக பலவிதமான 'சுண்டல்' வாங்கி.., பல வருடங்களுக்கு முன்னர் நடந்த நல்ல பொழுதுகளின் நினைவு வருகிறது.

அந்த நாட்களில்.. எனது அக்கா, எனக்கு கிருஷ்ணன், ராமன், பெண், மற்றும் பலவிதமாக வேடமிட்டு அழைத்துச் செல்வார். அந்த நாட்களில் புகைப் பட கருவி, இல்லாததால் அந்த வேஷங்களை இப்போது உங்களுக்கு காண்பிக்க முடியவில்லை.... (நல்லவேளை.. தப்பிச்சேன்.. இல்லேன்னா அதெல்லாம் பாத்து கலாய்ச்சிருப்பீங்க)

பின்னர் சற்று வளர்ந்தவுடன்.... பெண்களுடன் செல்லத் தடை(நாங்களா போட்ட தடைதான்).... அதாவது.. எங்கள் நண்பர் குழு எங்களது தனித் திறமையை நிரூபிக்க.(வேஷம்லாம் கிடையாது. கெட்டப்பு, பாடுவது எல்லாமே ஒரிஜினல்தான்), ஆண்கள் மட்டுமே தனிக் குழுவாக அதே வீடுகளில் சென்று, (Mr. பீனின் "HAAALELUUUUJA, HAALELUUUJA!!" போலல்லாமல்), பாட்டுப் பாடி -- கொண்டாட்டம்தான். இதில் சில சமயங்களில் எனது அண்ணன் கூட வருவார். அவர் நல்லா பாடுவார், பாடல் எழுதுவார் -- வித்தியாசமான அனுபவங்கள்..

ஒன்பதாம் வகுப்புக்கு பின்னர் 'கொலு' வெல்லாம் எங்க வீட்டோடுதான். அதன் பின்னர் எங்களைப் போல வரும் குழுவிற்கு எங்கள் வீட்டில் அனுசரிப்பு நடக்கும். கண்டிப்பாக ரெண்டு பாட்டாவது பாடவேண்டும்.

நவராத்திரி வெள்ளிக்கிழமை 'இனிப்பு புட்டு' செய்வார்கள், அம்மா. ரொம்ப ருசியாக இருக்கும். நவராத்திரி-கொலு 'பெண்கள்' மற்றும் 'குழந்தைகள்' ஸ்பெஷல். ஆமாம் நா கொழந்தையா இருந்தப்ப என்ஜாய் பண்ணேன்.. இப்ப.. கொலு படி, பொம்மை செட் செய்வது நமது பொறுப்பாகிடுச்சு .... இந்த தடவை கொலுப் படி அரேஞ்சு செய்ய3 மணி நேரமாச்சு.... நான் வைத்திருக்கு அட்டைப் பெட்டிகளை (கார்ட்டன் பாக்ஸு) வைத்தே படி செட் பண்ணேன். என்னிடம் இருக்கும் பொம்மைகள் லைட் வெயிட் ஆனதுனால இந்த படியே போதும்.

ஆனால் எங்கள் அன்னை வைக்கும் கொலுவில், அந்தக் காலத்து பொம்மைகள் உயமாகவும் கனமாகவும் இருக்கும் . அதற்கு மரப் பலகை, ஸ்டீல் ப்ளைப் படிதான் சரியாக இருக்கும். ஏழு படிகள் வைப்பது எங்கள் வீட்டு வழக்கம். படிகளின் எண்ணிக்கை ஒத்தை படையிலிருக்கும், காரணம் தெரியவில்லை. அதனுடன், எனது அண்ணன் செய்யும் 'பார்க்', ரொம்ப நல்லா இருக்கும். பார்க்கில் விலங்குகள் (ஜூ), மனிதர்கள் (visitors), பப்ளிக் டெலிஃபோன், ராட்டினங்கள்.. பலவகை பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கும். பக்கத்தில் 'ரயில்வே track', over-bridge, எல்லாம் இருக்கும்.

வெளியூரில் வேலைக்கு போன பின்னர், கொலு டச்சே (ஆமாம், கொலு வெச்சிட்டா நவராத்திரி முடியற வரைக்கும் 'டச்சு' பண்ணக் கூடாது...) இல்லாமல் இருந்தேன், எனது திருமணம் வரை. அதற்குப் பின் இல்லத்துனைவியுடன் 'கொலு' கொண்டாட்டம் ஆரம்பமானது. முதலில் மூன்று படிகளுடன் துவங்கிய கொலு, மூன்றாம் வருடம் ஐந்து படிகளானது..இந்த முறை ஒருசில பொம்மைகள் வைக்கவில்லை... அனேகமாக வரும் காலங்களில் மேலும் சில பொம்மைகள் வாங்கி ஏழு படியாக வைக்கவேண்டும்.

சரி.. கீழே உள்ள எங்கள் வீட்டு கொலுவை கண்டு, (கண்டிப்பாக) பாட்டு பாடி.. நீங்கள் செய்த சுண்டலை சாப்பிட்டு, நவராத்திரி கொலுவை கொண்டாடுங்கள்..

நன்றி..



நல்லா இருக்குன்னு நெனைச்சா.. இன்ட்லில ஒட்டு போட்டுடுங்க..

நண்பனிடம் மாட்டிகிட்டு முழிச்ச அனுபவம்

நண்பர்களுக்கிடையே ஒருவருக்கொருவர் கலாய்த்துக் கொள்வது ரொம்ப சகஜம்தானே. அதுமாதிரி ஒரு அனுபவத்தை இங்கு பகிரவே இந்த பதிவு.

நான் : வாடா, மாப்ளே. ஊட்டுல எல்லாரும் சௌக்கியமா? என்னடா காலைலேர்ந்து ஆளை காணுமேன்னு பாத்தேன்..

அவன் : ஊட்டுல எல்லாரும் சௌக்கியம்தான்.... ஹோம் வோர்க்கு, அசைன்மெண்டு.... அப்பப்பா... தாங்கல... கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னுதான் இப்ப இங்க வந்தேன்..

நான் : சரிதான்.. பொழுது போக்கா நா சில கேள்வி கேக்குறேன்.. பதில் சொல்லு பாக்கலாம்..

அவன் : சரி.. ஆரம்பி..

நான் : மூணு ஸ்டெப்புல ஒரு யானைய ஃபிரிஜ்ஜுக்குள்ள எப்படி வெக்கலாம் ?

அவன் : ???

நான் : ஸ்டேப் ஒண்ணு - ஃபிரிஜ்ஜுக் கதவ தொறக்கணும்
ஸ்டேப் ரெண்டு - யானைய வெக்கணும்.
ஸ்டேப் மூணு - ஃபிரிஜ்ஜுக் கதவ மூடனும், அம்புட்டுதான்.

அவன் : (ஆண்டவா... நா வேறெங்காவது போயிருக்கலாம் ) ஹி.. ஹி.. ஹி..

நான் : ஒக்கே.. இப்ப சரியா சொல்லு .. மூனே ஸ்டெப்புல ஒரு நீர்யானைய எப்படி ஃபிரிஜ்ஜுக்குள்ள வெக்கலாம்..

அவன் : நீ சொன்ன மூணு ஸ்டெப்பு யானை கதை மாதிரியே.. யானைக்கு
பதிலா நீர்யானைய வெச்சிட்டு வேண்டியதுதான்..

நான் : அவ்ளோ கஷ்டப்பட வேண்டாம். ஒரு மிருகத்த வெச்சு வளக்குறதே கஷ்டம், இதுல எதுக்கு ரெண்டு மிருகம். நா சொன்ன மூணு ஸ்டெப்புல ரெண்டாது ஸ்டெப்பு மட்டும் 'தண்ணிய ஃபிரிஜ்ஜுக்குள்ள ஊத்த வேண்டியதுதான்'. அதான் யானை ஏற்கனவே உள்ள இருக்குதே.

அவன் : (அய்யோ.. அய்யோ.. தாங்கலையே.. ஸ்கூல் வோர்க்கே தேவலையே) நா அப்புறம் வரேண்டா..

நான் : ஹேய்.. நில்லுடா.. இன்னும் ரெண்டே ரெண்டு கேள்வி மட்டும் தான் பாக்கி.. ஒரு பறவை வானத்துல பறக்கும் பொது முட்டை போட்டுச்சாம்.. ஆனா முட்டை கீழே விழலையாம்.. எப்படி?

அவன் : அது ஆண் பறவையா இருக்கும்..

நான் : மாப்பு.. நான்தான் முட்டை போட்டுச்சுனு சொன்னேனே.. அது எப்படி ஆண் பறவையா இருக்கும்.. -- சரி சரி.. காரணம் என்னன்னா.. அது 'Snaggi' போட்டிருந்துச்சி..

(நண்பன் ஓட ஆரம்பிச்சான்.. விடுவேனா நா.... மடக்கி பிடிச்சி அடுத்த கேள்விய கேட்டேன்..)

நான் : இன்னும் ஒண்ணுதான் பாக்கி.. காட்டுல நடந்த முக்கியமான கூட்டத்துக்கு சிங்கம் தலைமையில, புலி, கரடி, மான், காண்டாமிருகம், எல்லாரும் வந்திருந்தாங்க.. ஒரு ஆளு மட்டும் வரலை.. யாருன்னு சொல்ல முடியுமா... அது யாரு தெரியுமா?

அவன் : ------- என்னடா சின்ன புள்ளதனமா இருக்கு.... மொட்டையா கேட்ட எப்படிடா சொல்லமுடியும்..

நான்: மொட்டையா இல்லடா... நா மொக்கையா கேட்டேன்.. சரி.. கூட்டத்துக்கு போகாதது யானைதான்..

அவன் : அதெப்படி சொல்ல முடியும் ?

நான் : அது தான் (தண்ணியோட) ஃபிரிஜ்ஜுக்குள்ள இருக்குதே..

அப்புறம் அவன் நாலு நாளைக்கு என்ன பாக்காவே மாட்டேனுட்டான்.... நீங்களே சொல்லுங்க, நா செஞ்சது தப்பா ?
--------------------

டிஸ்கி - 1 : நா கூட 'நண்பேண்டா' !

டிஸ்கி - 2 : தலைப்பு சரியா இல்லைனு நெனக்கறீங்களா? தலைப்புலாம் சரிதான்.. 'அவன்' தன்னோட 'நண்பனிடம்' (எங்கிட்டதான்) மாட்டிகினு முழிச்ச அனுபவமுங்கோ !