வஞ்சப்புகழ்ச்சி அணி :
வஞ்சம் + புகழ்ச்சி = வஞ்சப்புகழ்ச்சி;
தமிழின் அணி வகைகளுள் ஒன்று வஞ்சப்புகழ்ச்சி அணி.
ஒருவரை புகழ்வது போல இகழ்வதும், இகழ்வது போல புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சி எனப்படும்.
(மா விளம் தேமா --- அறுசீர் கலிவிருத்தம் )
அறிவி லாதவன் நீரே
...அன்பி லாதவன் நீரே
குறிப்பி லாதவன் நீரே
....கூர்மை யிலாதவன் நீரே
மதியி லாதவன் நீரே
...வலிமை யிலாதவன் நீரே
சதியில் எழுந்தவிப் பாடல்
...சரிந்து மாறிய தேகாண் !
# சதியில் - விரைவில் , சீக்கிரத்தில்
# சரிந்து மாறிய தேகாண் -- சொல்லிய பொருள் 'சரிந்து' வேறு பொருள் தருமாறு மாறியதை காண்பாயோ !
அறிவில்லாதவன் = அறிவில் + ஆதவன் ( சூரியன் ) போன்று பிரகாசிப்பவன்