மடக்கணி - 1 (10-08-2017)

 நேரிசை வெண்பா : மடக்கணியாக 
மாலை மலர்ந்திட வாடும் மனத்தினுள்;
மாலை மலர்ந்திட வாடும்பூ - சோலைப்பூ
மாலையில் சேர்ந்த மணத்தால் பெருமின்பம்
மாலையில் சேர்ந்த மணம் !

(1) மாலை வேளை வந்துவிட்டால், தலைவனின் வரவிற்காக வாடும், தலைவியின் மனம்.
(2) (பூ)மாலை நேரக்கணக்கில் மலர்ந்து வாடிவிடும் சோலையில் பூக்கும் பூ. (1க்கு இது உவமை)
(3) மாலை சூடி (திரு)மணத்தால் சேர (மனமும்) இன்பமடையும்,.
(4) மாலையாக கோர்த்த நிலையில் 'பூக்கள்' தரும் இன்பம் போல (மணம்போல)..
# இது மடக்கணியாகுமா ?

6 Comments (கருத்துரைகள்)
:

நெல்லைத் தமிழன் said... [Reply]

ஒருமுறை வந்த சொற்களோ, சொற்றொடரோ மீண்டும் வந்து வேறுபொருளைத் தருவது மடக்கணியாகும். இங்க, 'மாலை' என்பதும் 'மணம்' என்பதும் திரும்ப வரும்போது வேறு பொருளைத் தருகிறது. நல்ல முயற்சி.

நெல்லைத் தமிழன் said... [Reply]

'நீங்க, முதல்ல ஒரு பத்தியில், 'அணியைப் பற்றி விளக்கமும் அதற்குப் பொருத்தமான பாடலும் தந்து' அதன் பின்பு உங்கள் பாடலைத் தந்தால், இடுகை முழுமைபெறும். இடுகையில் ஒரு நோக்கமும் அமையும்.

middleclassmadhavi said... [Reply]

நெல்லைத் தமிழனின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். விளக்கத்தோடு இருந்தால், என்னைப் போன்ற பாமரளுக்கும் உபயோகமாயிருக்கும்.
இப்போது கூட பாருங்கள், மடக்கணினி என்று தலைப்பை படித்திருக்கிறேன்!! :-))

அப்பாதுரை said... [Reply]

middleclass கட்சி.

நெல்லைத் தமிழன் said... [Reply]

மி.மி.மா. படித்ததுதான் படித்தீர்கள், மடிக்கணினி என்று படித்திருக்கலாம். 'மடக்கணினி' வார்த்தையைப் பார்த்து சிரித்து மாளல.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

ரொம்ப நாள் கழிச்சு இப்படி அணி எல்லாம் படிக்கறேன்! :)

மடக்கணினி! ஹா... மடக்கணின்னு படிச்சப்ப எதோ தப்பா படிக்கறேன்னு ஒரு ஃபீலிங்க்!

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...