இரு விகற்ப நேரிசை வெண்பா :
கதிரவனும் இப்புவியும் காலத்தின் சுற்றில்
எதிர்கொள் வகையுள் இருக்கும் - கதிர்வீசு(ம்)
செஞ்சுடர் தென்திசை சேர்ந்திடுந் தைநாளில்
நெஞ்சார்ந்து வாழ்த்துவன் நின்று !
***********
பொருள் :
கால ஓட்டத்தில் (ஆண்டிற்காண்டு), கதிரவனும், புவியும் ஒன்றுக்கொன்று பல நிலைகளில் இருக்கும் ( Relative position). கதிரவன், பூமியைப் பொறுத்த மட்டில், தென் திசையில் கடைசி கட்டத்தை சென்றடையும் நாள் தான் 'தை' திங்கள் நாள்... மங்களம் பொங்கும், மனம் மகிழும், பொங்கல் திரு நன்னாள்... இந்நாளில், நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சொல்கிறேன்.