இருவிகற்ப நேரிசை வெண்பா :
நாடி வருவோர் நலம்பேணும் நாயகனைப்
பாடிப் படைத்த பசும்பாவைப் - பாடல்கள்
முப்பதைஇத் திங்கள் முழுதும் இசைத்திட
எப்போதும் இல்லை இடர் !
******************************
***********************************
நாடி வருவோர் நலம்பேணும் நாயகனைப்
பாடிப் படைத்த பசும்பாவைப் - பாடல்கள்
முப்பதைஇத் திங்கள் முழுதும் இசைத்திட
எப்போதும் இல்லை இடர் !
******************************
நா டி | வரு வோர் | நலம் பே ணும் | நா யக னைப் |
நேர் நேர் | நிரை நேர் | நிரை நேர் நேர் | நேர் நிரை நேர் |
தேமா | புளிமா | புளிமாங்காய் | கூவிளங்காய் |
பா டிப் | படைத் த | பசும் பா வைப் | பா டல் கள் |
நேர் நேர் | நிரை நேர் | நிரை நேர் நேர் | நேர் நேர் நேர் |
தேமா | புளிமா | புளிமாங்காய் | தேமாங்காய் |
முப் பதை இத் | திங் கள் | முழு தும் | இசைத் திட |
நேர் நிரை நேர் | நேர் நேர் | நிரை நேர் | நிரை நிரை |
கூவிளங்காய் | தேமா | புளிமா | கருவிளம் |
எப் போ தும் | இல் லை | இடர் | |
நேர் நேர் நேர் | நேர் நேர் | நிரை | |
தேமாங்காய் | தேமா | மலர் |
***********************************
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
2 Comments (கருத்துரைகள்)
:
கோதையை பசும்பாவைனு சொல்றீங்களா, தப்பில்லை. வெண்பா நல்லா வந்திருக்கு.
@நெல்லைத் தமிழன்
நன்றி
'பாவை' என்பது 'கோதை'யையும் குறிக்கும்.... அவர் எழுதிய 'திருப்பாவை'யையும் குறிக்கும்.
Post a Comment