எலி :
நாமெல்லாம் எலிய மொதல்ல பாத்திருப்போம்.. அப்புறமா பல வருஷம் கழித்து கம்பியூட்டர் மௌஸ்.. பாத்தோம்.. என்னோட பொண்ணு எலியப் பாத்துட்டு சொல்லுறா,"அப்பா.. இது கம்பியூட்டர் மௌஸ் போல இருக்கு.. 'இங்க ஓடுது.. அங்க ஓடுது'.. 'வால் இருக்கு'.."
# இதுவும் generation கேப் தான் !
டேபிள் டென்னிஸ் பந்து :
என்னோட பையன் இந்த வருஷம் டேபிள் டென்னிஸ் கத்துக்கறான். இந்த ஆட்டத்துல முக்கியமான பிரச்சனை... பந்து தரையில விழும்போது தெரியாம.. எக்குக் தப்பா காலை அதுமேல வெச்சிட்டா.. நசுங்கிடும். ரெண்டு பந்து அப்படி நசுங்கி போச்சு... மொதோ பந்து நசுங்கி போனப்ப.. என்னமோ நா ஒரு பெரிய 'பந்து இஞ்சினியர்' போல அதை இப்படி அப்படி அமுக்கி சரி பண்ணிடலாம்னு நெனைச்சேன்.. பந்து விரிசல் விட்டதுதான் மிச்சம். மூணாவது தடவை அப்படி கால் பட்டு நசுங்கிப் போனபோது அத கவனிச்ச ட்ரைனர் வெந்நீர்ல போட்டா சரியாகிடும்னு சொன்னாராம்.. அட.. நல்ல ஐடியா தான்.. இது மொதல்லேயே தெரியாமப் போயிடிச்சே..
சினிமா :
இந்த சொல்லுக்கு சரியான அர்த்தம் 'திரைப்படம்' --- அப்படித்தான் நானும் சின்ன வயசுலேருந்து நெனைச்சுக் கிட்டு இருந்தேன். அதை திரையிடும் அரங்கத்திருக்கும் 'சினிமா ' என்ற வார்த்தை பொருந்தும்.
நா, சினிமால(அரங்கம்), சினிமா(மூவி) பாத்து எத்தனை வருஷம் இருக்கும் தெரியுமா..? ம்ம்ம்.. 2004 ல 'விருமாண்டி' பாத்ததா ஞாபகம்.... அதுவும் தமிழ் நாட்டுக்கு வெளியில. தமிழ்நாட்டுல நா இதுக்கு முன்னாடி பாத்தா படம் 'இந்தியன்' (1996). எப்படியோ.. சினிமா ஒரு பெரிய விஷயமா எனக்குத் தெரியல.. இப்போ தெரியுதா அருண், உங்க சினிமா புதிர்ல, ஏன் என்னால 50-60% க்கு மேல வாங்க முடியலன்னு.. ?
டவுட்டு :
'நகரும் படி' அதாங்க 'escalator' .. escalator is a moving staircase).
One which drives is called driver.
One which drills is driller.
One which rotates is rotator...
அதே மாதிரி, 'One which escalates is escalator'. 'escalate' meaning 'Increase rapidly'. ஆனா எஸ்கலேடர் ஸ்மூத்தா தான போகுது.......!
எச்சூஸ் மீ.. ஒன் லாஸ்ட் டவுட்..
டீச் பண்றவரு.. டீச்சர்
ரன் பண்றவரு.. ரன்னர்..
அப்ப, ஆஃபீஸ பண்ணவரு (கட்டின கொத்தனார்) ஆஃபீஸரா ?
எச்சூஸ் மீ.. ஒன் லாஸ்ட் டவுட்..
டீச் பண்றவரு.. டீச்சர்
ரன் பண்றவரு.. ரன்னர்..
அப்ப, ஆஃபீஸ பண்ணவரு (கட்டின கொத்தனார்) ஆஃபீஸரா ?
டிஸ்கி : எதலாம் பிலாகுல எழுதலாம்னு தெரியாதோர் சங்கம்..
==========================