எந்த ஒரு பொருளுக்கும், ஆளுக்கும் பேருன்னு ஒன்னு இருக்குது. அது சும்மா (ஜஸ்ட்) ஒரு அடையாளத்துக்குதான். இருந்தாலும் சிலரது பெயர் வித்தியாசமா இருக்கும். குடும்பத்துல இருக்குறவங்களுக்கு பொதுவா அடைமொழி இருக்கும், அது பெயருள வரும். உதாரணமா சர்-நேம் என்பது தமிழ்நாட்ட விட்டு வெளிய போனா கண்டிப்பா நீங்க சந்திப்பீங்க. 'ஷர்மா, வர்மா, சிங், பாட்டில், முகர்ஜி., etc.', இதெல்லாம் சர்நேம். (இதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்). அவங்களுக்கெல்லாம் ஒரு வசதி. யாராவது ஒருத்தரு பெயருள ரயில்வே டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு மத்தவங்க யாராவது ஒருத்தர் பயணம் பண்ணலாம். உதாரணம்: ஆர். ஷர்மா டிக்கட்டுல ராகேஷ் ஷர்மா, ராஜீவ் ஷர்மா, ராஜேஷ் ஷர்மா யாரு வேணா போகலாம்.நம்ம தமிழ்நாட்டுல பெரும்பாலும் சர்-நேம் வச்சுக்குறது வழக்கத்துல இல்லை. ஆனாலும் பாருங்க, சகோதர, சகொதரிக்கேல்லாம் பேருல ஏதாவது பொதுவா இருக்கும். எனக்கு தெரிஞ்சு,
- ஒரு குடும்பத்துல எல்லாரோட பேரும் 'ராஜ'னு ஆரம்பிக்கும்.
- இன்னொரு குடும்பத்துல ஏ.ஆர்.னு இனிஷியலோட பெயர் 'ஆர்'ல ஆரம்பிக்கும். அவங்க ஒரு 'ஏ.ஆர்.ஆர்' குடும்பம்.
- 'ஸ்ரீ'னு ஆரம்பத்துலயும்.. ஒரு குடும்ப உறுப்பினர்கள் பெயருள இருக்கும் (எனது அண்ணன் பையன்கள் கூட ஒரு உதாரணம்).
- 'ஸ்ரீ'னு முடியுமாரும் வேற அண்ணன்-தம்பி-சகோதரி பேருல வந்திருக்கு.
- 'ப்ரியா'னு முடியராமதிரி ஒரு அக்கா-தங்கையை சந்தித்திருக்கேன்.
- என்னோட சகோதரர்கள் பெயரிலும், எனது பெயர் உட்பட 'ன்' என்று முடியும் ஒருவர் தவிர. அதன் காரணமாகவோ என்னவோ அவர் மட்டும் அக்கவுண்ட்ஸ் படித்தார், மற்றவர்கள் அறிவியல் படித்தோம் (கல்லூரிப் படிப்பு)
இப்ப எதுக்கு இந்தப் பதிவா?அமிதாப் பச்சனோட பேத்திப் பெயர் -- அபிஷேக் பச்சனோட பொண்ணுக்கு என்ன பேரு வெப்பாங்களோ, அதுதான். ஓகே.. ஓகே.. அடிக்க வராதீங்க.. ஒரே ஒரு க்ளூ கொடுக்கறேன். 'பச்சன் சாஹிப்' வீட்டுல 'அமிதாப், அபிஷேக் , (ஐ)அய்ஸ்வர்யா' அதே வரிசையில பேபி பச்சனுக்கும் 'அ' வில் ஆரம்பிப்பதுபோல பெயர் இருக்குமென. அபிஷேக் பச்சன் சொல்லியதாக கேள்விப்பட்டேன்.
டிஸ்கி : பத்திரிகை படிச்சு நானும் இப்படி ஆயிட்டேன். படிக்கத் தூண்டுறமாதிரி தலைப்பு கொடுத்துட்டு, அதப் பத்தி எழுதாம, சம்பந்தமே இல்லாமே மேட்டர முடிக்கறது.
படங்கள் உதவி கூகிள் இமேஜெஸ்.
---------------------------------------------