எந்த ஒரு தகவலையும் மறக்காம இருக்க ஏதாவது ஷார்ட்-பார்ம், கோட்-வேர்ட், அல்லது பாட்டு வடிவில் --- குறிப்பு வெச்சுக்கலாம்.
என்னோட பையனுக்கு ஆங்கில வார்த்தைகள் 'stationary' & 'stationery'
ரெண்டுக்கும் இருக்கும் அர்த்தத்த இப்படி ஞாபகம் வெச்சுக்கலாம்னு சொன்னேன். "stationery மற்றும் --pen , pensil , note -- இதுல்லாம் 'e ' காமனா இருக்கு.. அதாவது 'stationery' என்று சொன்னால் 'பெண்', 'பென்சில்', 'நோட்' இதெல்லாம் இருக்கும் கடையைக் குறிக்கும்" என்றேன். குழப்பமில்லாமல் புரிந்துகொண்டான். நெஜமாவே.. இது எனக்கே தோன்றியதுதான்..
பின்னர் கூகிள் தேடலில் 'stationary stationery' என்று தேடியதன் மூலம் ஒரு வெப்சைட் கிடைத்தது.. உங்களுக்கும் பயன் படலாம். எனவே அதன் இணைப்பு.. இதோ..
என்னோட பையனுக்கு ஆங்கில வார்த்தைகள் 'stationary' & 'stationery'
ரெண்டுக்கும் இருக்கும் அர்த்தத்த இப்படி ஞாபகம் வெச்சுக்கலாம்னு சொன்னேன். "stationery மற்றும் --pen , pensil , note -- இதுல்லாம் 'e ' காமனா இருக்கு.. அதாவது 'stationery' என்று சொன்னால் 'பெண்', 'பென்சில்', 'நோட்' இதெல்லாம் இருக்கும் கடையைக் குறிக்கும்" என்றேன். குழப்பமில்லாமல் புரிந்துகொண்டான். நெஜமாவே.. இது எனக்கே தோன்றியதுதான்..பின்னர் கூகிள் தேடலில் 'stationary stationery' என்று தேடியதன் மூலம் ஒரு வெப்சைட் கிடைத்தது.. உங்களுக்கும் பயன் படலாம். எனவே அதன் இணைப்பு.. இதோ..
எலெக்ட்ரானிக்ஸ் Labல, Resistance(தடுப்பான் ?) மதிப்பு, கலர் கோடிங் 'BBROY of Great Britain had a Very Good Wife' என்று, ஞாபகம் கொள்ள சுலப வழி சொன்னார்கள். (விவரம் இங்கும்[1], அங்கும்[2] இருக்கிறது) சிறு வயதில் வார நாட்களை நினைவில் கொள்வதற்கு ஒரு பாடல் உண்டு. ஒரே பாட்டுலே மூன்று தகவல்கள்... (1)வார நாட்கள் வரிசை, (2) திருடாதே பாப்பா திருடாதே மேசெஜு மற்றும் (3) வார்த்தைகளின் ஒசைக்கேற்ற 'மோனையுடன்' பாடல்...... இதோ.. கீழே கொடுத்துள்ளேன்..... நம்ம கமேண்டோட........
ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணும்
(வீட்டப் பூட்டிட்டு குடும்பத்தோட ஊர் சுத்தினா அப்படித்தான்)
திங்கட்கிழமை திருடன் பிடிபட்டான்.
(அந்த காலத்துல போலீசு செமையா வேலை செஞ்சாங்க)
செவ்வாக் கிழமை ஜெ(செ)யிலுக்குப் போனான்
(ம்ம்ம்.. அப்ப நீதித் துறையும் செமையா இருந்திச்சு போல..)
புதன்கிழமை புத்தி வந்தது..
(பொன் ஆப்டாலும், புதன் ஆப்டாதுன்னு சும்மாவா சொன்னாங்க..)
வியாக்கிழமை விரதம் இருந்தான்.
(ஸ்ரீ ராகவேந்தர் சீடன் ஆயிட்டான் போல..)
வெள்ளிக் கிழமை விடுதலை ஆனான்..
(இங்கப் பாருடா.. விரதத்தொட உடனடிப் பலன்..)
சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்...
(ரெஸ்ட் வேணும்தான்.. நாளைக்கு வேலை இருக்கோ என்னவோ.. ம்ம் மறுபடியும் மோதலேருந்தா..!)
படங்கள் உதவி : கூகிள் இமேஜெஸ்..(நன்றி)
---------------------------------------------