Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

பலகை செய்திகள்..

பின்வரும் படங்களை பார்க்க நேர்ந்தது.. சிரிக்கவும், சிந்திக்கவும் தூண்டியதால், இதனை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். விளக்கம் வேண்டியதில்லையாதலால் கீழே படங்கள் மட்டும் கொடுக்கப் பட்டுள்ளன.









சில செய்திகள் -- எனது முயற்சி..

  1. போலி மருந்து விற்றால் ஆயுள் தண்டனை ; முதல்வர் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் முடிவு
    • அவசர  முடிவு எடுக்கலேன்னா, மத்தவங்க "ஆயுளுக்கே" தண்டனை தான்.
  2. ஆட்சியை பிடிக்க இளங்கோவன் ஆசை:  
    • ('ஆச்சி') மசாலா விக்குறவங்க என்ன தப்பு பண்ணாங்க, பிடிக்குறதுக்கு..?   
  3. மலட்டுத்தன்மை உள்ளபெண்ணுக்கு 'குவா குவா'
    •  மலட்டுத்தன்மை ஒரு பரம்பரை வியாதியா இல்லையான்னு தெரிஞ்சிக்க ஒரு சான்ஸ்.
  4. பிரமோஸ் ஏவுகணை சோதனை அபார வெற்றி 
    • சோதனையான' காலம் வந்தா (அபார) வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  5. 105 துப்பாக்கிகளால் மரியாதை 
    • ஒரு துப்பாக்கின்னாலே நாங்க ரொம்ப மரியாதை  தந்துருவோம்ல.. என்னாத்துக்கு அம்புட்டு..
  6. கலவர வழக்கு விசாரணை ஆஜராகவில்லை மோடி 
    • 'மோதி' பாக்காலான்னு நெனைச்சாங்க சிலபேரு.... பப்பு வேகல.. 
    • ('Modi' என்பதற்கு சரியான உச்சரிப்பு 'மோதி' தான் 'மோடி'  அல்ல) 
  7. ஒகேனக்கல் பிரச்னைக்கு 4 நாட்களில் பேச்சு
    • பேச்சு.. பேச்சாத்தான் இருக்கணு....  செயல்லலாம்  எறங்கப்டாது  ஆமாம்.
  8. ராமநாதபுரத்தில் நிறுத்த வசதியில்லாமல் ராமேஸ்வரம் சென்ற விழிப்புணர்வு ரயில் 
    • அவங்க வந்ததே விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான்.. (ரயில் நிறுத்த வசதி இல்லைங்கறது உள்பட)
  9. அரசு மருத்துவமனையில் மாலை நேர சிகிச்சை இல்லை 
    • டாக்டருக்கெல்லாம் 'மாலைக் கண்' இருக்குதோ ?
  10. சுகாதார நிலையங்களில் 'எக்ஸ்ரே பிலிம்' இல்லை  
    • நாங்கல்லாம் எதிர்பாக்குற 'பிலிமே' வேற..