Showing posts with label நடந்தது. Show all posts
Showing posts with label நடந்தது. Show all posts

காலேஜு டேஸ்ல நடந்தது..

அன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை.

வழக்கம்போல காலேஜு முடிஞ்சு, பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி.. ஃபிரண்டு போட்டு வெச்சிருந்த சீட்ல உக்காந்து வெயில்ல வெந்து நொந்து கொண்டிருந்தேன். அது என்னாத்துக்கு பஸ்ல காலேஜு ஸ்டாப்புல ரொம்ப நேரம் நிறுத்தறாங்களோ ? அதுக்கு முந்தின நாளுதான் நா கொஞ்சம் லேட்டா வந்தேன்.. ஆனா வண்டிய கெளப்பிட்டு போயிட்டாங்க.. நான்தான் இன்னிக்கு டயத்துக்கு வந்துட்டேனே.. அப்புறம் ஏன் இன்னும் வண்டிய எடுக்கல...... ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது.. ஆரம்பமே இப்படியா.. எல்லாம் என்னோட 'ரிஸ்டுல உக்காந்துக்கிட்டு காட்டுது பாரு' அதுதான். எப்படியோ என்னோட கஷ்டம் தெரிஞ்சு டிரைவர் ஸாரு பெரிய மனசு பண்ணி, வண்டிய கேளப்பினதுனால கொஞ்சம் கொஞ்சமா காத்து வர ஆரம்பிச்சுது... தூக்கம்தான் வரலை.. எப்படி வரும் ?

அதான் அன்னைக்குனு பாத்து லாஸ்டு பிரியடுல நல்லா தூங்கிட்டேனே. வழக்கமா 'லாஸ்டு' பிரியடுல நா தூங்க மாட்டேன், ( அதுக்கு ரெண்டு பீரியடுக்கு முன்னாலேய தூங்கிடுவேன் ). அப்பத்தான சொகுசா, பஸ்சுல ரிடர்ன் வர்றப்ப தூங்கலாம். பஸ்ஸ ஓட்டுறது நானா என்ன, ஒன்னேகா மணிநேரத்த ஓட்டினா போதாதா ?

என்ன சொன்னேன், ஆங்.. முன்னாடியே தூங்கினதுனால, பஸ்சுல தூக்கமே வரலை. பேச்சு தொணைக்கு யாருமே இல்லை.. எல்லாருமே தூங்கிட்டானுங்க.. பாவி மனுசனுங்க. முக்கியமான பாவி, சீட்டு போட்டு தந்தானே அவன்தான். அவன்கூட தூங்கிட்டான். என்னையப் பத்தி ஒரு நெனைப்பு வேணாம். வெச்சிக்குறேன் அப்புறமா.. 'every dog has it own day', நாய்க்கே அப்படி ஒரு நாளு இருக்குதுன்னா, நா யாரு.. எனக்கு ஒரு நாளு வராதா என்ன?

அட. இந்த மாதிரி தான், நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாம சுத்தி சுத்தி போயிடுறேன். இனிமே ஸ்ட்ரைட்டா மேட்டருதான்.

எப்படியோ அரைகொரையா தூக்க கலக்கத்தோட ஒருமாதிரியா ஒரு மணி நேரம் ஓடிடுச்சு ... இன்னும் கால் மணி தான்.. அட.. அட.. என்னடா ரோட்ல கூட்டம்.. முன்னால காரு, புஸ்சு, டிரக்கு.. . என்னதான் ஆச்சு ? என்னது முன்னால ஒரு மரம் விழுந்து டிராபிக்க நிறுத்திடுச்சா ? பத்து.. இருபது.. அட முப்பது நிமிஷம் ஆயிடுச்சி.. இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமா டிராபிக்க சரி பண்ணுறதுக்கு..

என்னோட ஃபிரேண்டு  'இதெல்லாம் ஆவுரதுல்ல, நாம நடந்தே போயிடலாம் இன்னும் மூனே மூணு கிலோமீட்டருதானே..', ஐடியா கொடுத்தான். ஏன் சொல்ல மாட்டான்.. அவன்தான் நல்லா ஒன்னவரு தூங்கிட்டானே.. இப்ப ஃபிரெஷ்ஷா இருக்குறானே.. சரி பேச்சு தொணைக்கு இப்பவாது ஆள் கேடைச்சுதே. 'சரி வா போகலாம், வேற யாராவது எங்ககூட வரீங்களா நாங்க லிஃப்டு தாரோம்.. ஒக்கே ஒக்கே கம்பெனி தாரோம்', சொன்னது நாதான்.. என்ன தாராள மனசு எனக்கு.

start music.. ஆரம்பிச்சுது எங்க 'நட-ராஜா' சரிவீஸ். நடந்து.. நடந்து.. மூணு கிலோமீட்டரு, மூணரை மணி வெயிலுல நடகச்சே தூங்காம ஒரு வழியா என்னோட பிரண்டு வீட்டுக் கிட்ட வந்துட்டோம். அதாவது அரை கிலோமீட்டரு தூரம்தான். மனசுக்கு நிம்மதி.. என்னதான் நம்மளோட வீடு இன்னும் ஒன்னரை கிலோமீட்டரு இருந்தாலும் கவலை இல்லை, ஃபிரெண்டோட சைக்கிள்ல போயிடலாம். அட என்னடா இது.. பின்னால என்ன சத்தம்னு திரும்பி பாத்தா.... பாவிங்களா எல்லா காரும் பஸ்சும் வேக வேகமா நம்மள தாண்டி போகுதே.. மரத்த எடுத்துப் போட்டு வழிய கிளியர் பண்ணிட்டாங்களா..?

எப்படி 'நடந்தோம்' பாத்தீங்களா (படிச்சீங்களா)?  
வீதில "நடக்கணும்னு" விதி....................................

டிஸ்கிகள்  :
  1. நல்லவேளை மூணாப்பு படிச்சப்பவே இப்படி நடக்கல.. இல்லேன்னா 10 கிலோ புத்தக மூட்டையோட எப்படி நடந்திருப்பேன்..
  2. என்னது தலைப்பல சொன்னமாதிரி காலேஜுல (டேஸ்ல) என்ன பெரிசா நடந்துச்சா? அம்புட்டு தூரம் நடந்துருக்கோம்..  அத சொல்லத்தான் இந்த மாதிரி..