"சற்று நேரம் இருந்து, நான் தரும் 'நூறு பொன்' பரிசினை பெற்றுச் செல்லுங்கள்", எனச் சொன்னான்.
மற்ற அலுவல் இருந்ததால் அப்புலவனுக்கு பரிசு தருவது தாமதமானது....
தன்னை அரசவையில் மறந்து விட்டார்கள் என நினைத்து அப்புலவன் மன்னரிடம்...
புலவர் : மன்னா...!! இருநூறு தருவதாகச் சொன்னீர்களே..?!!. அது இன்னும் வரவில்லை..
அரசன் : இருநூறா..? எப்பொழுது சொன்னேன் ?
புலவர் : முன்னூறு தருவதாகச் சொன்னீர்களே..
அரசன் : முன்னூறா... யார் சொன்னது ?
புலவர் : நானூறு தருகிறேன் என்றீர்கள்.
அரசன் : நான் எவ்வளவு பொன் தருவதாகச் சொன்னேன், சற்று விளக்கமாகச் சொல்கிறீர்களா ?
புலவர் : நீங்கள் 'நூறு' பொன் தருவதாகச் சொன்னீர்கள்.
அரசன் : அப்புறம் ஏன் இருநூறு, முந்நூறு, நானூறு என்றெல்லாம் சொன்னீர்கள், புலவரே ?
புலவர் : அரசே, நீங்கள் 'எப்படி சொன்னேன்?' என்பதற்கு 'இரு(ந்தால்) நூறு தருவதாகவும்', 'எப்போது சொன்னேன்?' என்பதற்கு 'முன்பு -- முன்-நூறு' என்றும் 'யார் சொன்னார்' என்பதற்கு, 'நா(ன்)னூறு, தருவதாகவும் சொன்னீர்கள்', என்றேன்.
அதனை கேட்டு மகிழ்ந்து போய் அரசன், அனைத்தையும் சேர்த்து ஆயிரம் பொன் கொடுத்தான் அப்புலவனுக்கு.(அமாம் அரசன் கணக்குல ஸ்ட்ராங்கு..)
------------------------------------------------------
எனக்கு பிடித்த நூறுகள் ( ஹன்ரட்ஸ் )
- மோகனின் படம் - நூறாவது நாள்
- பூஜைப் பொருள் - துன்-நூறு
- நன்பேண்டா - நூர்-முகமது.
- கார்கறி - நூர்-கோல்
- தமிழ் -- m
- ரோமன் - C
- இரண்டடிமானம் (பைனரி) - 1100100
- எட்டடிமானம் (ஆக்டால்) - 144
- பதினாரடிமானம் (ஹெக்சா டெசிமல் ) -- 64
டிஸ்கி : "இதெல்லாம் எனக்குக்தான் ஏற்கனவே தெரியுமே.. இதப் போயி ஒரு பதிவா, அதுவும் நூறாவது பதிவா போட்டுட்டீங்களே / போட்டுட்டியே?" , அப்படின்னா .....
- நீங்க பதிவரா இருந்தா.. இதப் பத்தி நீங்க ஏன் ஒங்க நூறாவது பதிவுல எழுதல ?
- பதிவர்தான், நூறாவது பதிவா இதத்தான் எழுத நெனைச்சேன் அப்படீன்னா, ஐ ஆம் வெரி சாரி.. 'பர்ஸ்டு கம் பர்ஸ்டு செர்வ்', ஒக்கே ..?
- பதிவர் இல்லேன்னா --- ஒங்களலாம் நெனைச்சா, ரொம்பப் பாவமா இருக்கு..( வெரி பிடி ஆன் யு )