Showing posts with label மழலை. Show all posts
Showing posts with label மழலை. Show all posts

குழந்தைகள் தினம்

பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான பதினான்கு நவம்பர், ஒவ்வொரு வருடமும் 'குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. இந்த விஷயம் நாமெல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் உலகளவில் 'குழந்தைகள் தினம்' நவம்பர் இருபதாம் தேதி கொண்டாடப் படுகிறது. 1959 ம்  வருடம் நவம்பர் 20ம்  நாளில், குழந்தைகளின் உரிமைகள் பற்றிய கொள்கைகளை அமல் படுத்தியது ஐ.நா சபை உலக குழந்தைகள் தினத்தினை அறிமுகப் படுத்தியது. குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களை நல்வழி நடத்திடுவோமாக. அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அளிப்பது நமது கடமையாகும்.

இங்கு கொடுக்கப் பட்டுள்ள பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் படம், நான் வரைந்து, வண்ணம் தீட்டியது. உங்களுக்காக இங்களித்துள்ளேன். கூகிளில் நேரு படத்த டவுன்லோடு பண்ணி, அதை பாத்து பாத்து வரைஞ்செனுங்க.. பையனோட ஸ்கூலுல குழந்தையர் தின சம்பந்தமா வீட்டுல யார் வேணாலும் படம் வரைஞ்சு தரலாம்ன்னு சொன்னாங்க.. அதுக்குத்தான் இந்த ஏற்பாடு. நா வரைஞ்சத பெஸ்ட் படம்னு நோட்டீஸ் போர்டுல போட்டுருக்காங்க..

இன்று காலை எனது மகன் சிறு குறும்பு செய்ததை கண்டித்து, நான் அவன் அடிக்க முனைந்தபோது, அவன் 'அப்பா, இன்னிக்காவது என்னை அடிக்காம, திட்டாம இருங்கபப்பா. இன்னைக்கு "எங்களோட டெ(ய்)", எனச் சொல்லி தடுத்துவிட்டான்.. சரிதான்.. இன்னிக்காவது (14 நவம்பர்) நம்ம பசங்களுகிட்டே அவங்க வெளையாட்டா குறும்பு செஞ்சா கோவப் படாம, அவங்க இஷ்டத்துக்கு விட்டுவோமே.

ஒரு நிமிஷன் பொறுங்க, எங்கம்மா யாரையோ திட்டிகிட்டு இருக்காங்க.... போய் பாத்துட்டு வாரேன்..

நான்: என்னம்மா யாரை திட்டுறீங்க..? என்ன மேட்டர்..?
 
என்னோட அம்மா : வாடா வா.... எவ்ளோ நாளா சொல்லுறேன்.. என்னோட கண்ணு சரியாவே தெரிய மாட்டேங்குது.. டாக்டரு கிட்டே போயிட்டு வரலாம்னு..
 
நான் : இன்னிக்கி சண்டே மா... இன்னிக்குத் ஹாஸ்பிடல் கெடையாது.. கண்டிப்பா நாளைக்கு கூட்டிக்கிட்டு போறேன்... அதுக்காக குழந்தையை திட்டாதேம்மா.. இன்னிக்கு 'குழந்தைகள்  தினம்'.

அம்மா : நா எங்கே குழந்தையை திட்டினேன்..? ஒன்னத்தானே (கோட்டானத் தானே) திட்டிக்கிட்டு இருக்கேன்..

நான் (ரொம்ப பணிவோட) : நான் குழந்தைன்னு சொன்னது என்னை தாம்மா நீதான் அடிக்கடி சொல்லுவியே.. என்னதான் வளந்துட்டாலும், நா என்னிக்குமெ ஒனக்கு கொழந்ததான்னு....... ஹி.. ஹீ.. அதான் ....