உடன்சேர்ந்து வந்திடுமே, உள்ளங்கால் தொட்டும்;
நடவாசல் சேர்ந்திடினும்,
உயர்வாய் மழலைகா ணோவியமுங் கொண்டச்
செயலில் நிலவாஞ் செருப்பு !
செருப்பு :
(1) உடன்சேர்ந்து வந்திடுமே : அணிந்து செல்லச் செல்ல நம்முடன் சேர்ந்துவரும்.
(2) உள்ளங்கால் தொட்டும் : உள்ளங்கால் கீழ், தொடுமாரு அணியப்படும்.
(3) நடவாசல் சேர்த்திடினும்,
(4) உயர்வாய்த் தெரியு மோவியமுங் கொண்ட : உயர்வான /
நிலவு :
(1) உடன்சேர்ந்து வந்திடுமே : நடந்து / ஒடி / வாகனத்த்தில் செல்லச் செல்ல நம்முடன் சேர்ந்துவரும்.
(2) உள்ளங்கால் தொட்டும் : கால் நிலவு (பிறை நிலவு) வருமாயின் அது கண்டு உள்ளம் பாய்ந்து பறித்திடத் தொடும்படி ஆசையூட்டும்.
(3) நடவாசல் சேர்த்திடினும்,
(4) உயர்வாய்த் தெரியு மோவியமுங் கொண்ட: உயர்வான /
செயலில் நிலவாஞ் செருப்பு : இவ்வாறான செய்கையினால் / ஒத்த பண்பினால் நிலவுபோல் ஆகுமே செருப்பு.