அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 06-11-2017

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் :
பன்னிரு ஆழ்வார்கள் : (விளம், மா, விளம், மா, விளம், காய் )
******************************
சோழசே ரநாட்டொ டுபாண்டிய நாடு,
..தொண்டையில் கண்டதனை ;
ஆழ்கட லமுதை; நடுவட தேச
...மடைந்துதாங் கண்டதனை;
வாழவைக் குந்தெய் வந்தனை, விண்ணில்
...வைத்துவாழ்த் துப்பாடி;
ஆழமா யாழ்ந்த ஆறிரு ஆழ்வா
...ரவர்புகழ் போற்றுதுமே !

 
 *****************
 நன்றி : பைந்தமிழ்ச் சோலை, முகப்புத்தகம்:
"அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்."
(விளம்,மா,விளம்,மா,விளம்,காய்)
பொது இலக்கணம்:
*********************
* ஆறு சீர்கள் பெற்று,
*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து,
* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த இரண்டு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று, (ஆறு சீர்களை ஓரடியாகத் தொடர்ச்சியாகவும் எழுதலாம்.)
* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,
* ஓரடிக்கு " விளம், மா, விளம்,மா,விளம்,காய்." என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,
* ஈற்றுச்சீர் ஏகாரத்திலோ அல்லது எப்படியும் முடியலாம்.
தனிப்பாடலாயின் (முத்தகம்) ஏகாரமே சிறப்பு.
தொடர்பாடலாயின்(குளகம்) இறுதிப் பாடலின் இறுதிச்சீர் ஏகாரம் பெறல் சிறப்பு.
விளச்சீரெனில் (முதல்சீர்.)கூவிளம், கருவிளம் இரண்டில் எதுவும் வரலாம்
மாச்சீர் எனில்தேமா, புளிமா எதுவும் வரலாம். காய்ச்சீர் எனில் எந்தக் காயும் வரலாம்.
***************************************

ஏதேனும் புரிகிறதா ? 05-10-2017

பல விகற்ப இன்னிசை வெண்பா :
அயராமற் சாய்ந்த அளவுதரு(ம்) வர்க்கம்,
உயரமாய் நின்றும் உறங்கு மளவுகள்
தத்தம் மடங்கொடு தாம்சேர. வொன்றானால்,
சுத்தசெங் கோணமே, சுட்டு !