கிரிக்கெட்டும் நானும்..


மட்டைப்பந்து.. (மட்டையால் பந்தை அடித்து விளையாடும் விளையாட்டு) [ அதே விளக்கம் 'கால்பந்து, கைப்பந்து' விளையாட்டுக்கும் பொருந்தும் இறகுப்பந்துக்கு பொருந்துமா ? மன்னிச்சுகங்க.. http://ulagamahauthamar.blogspot.com/2010/06/blog-post_8334.html படிச்ச எபெக்ட்டுதான..

விஷயத்துக்கு வரேன்..
நேத்திக்கு இந்திய பாகிஸ்த்தான் மட்டைப்பந்து போட்டி, டி வி ல பாத்தேன்.. நான்கு நாடுகள் போட்டியிடும் ஆசிய கோப்பையாமே, இலங்கைல போட்டிகள் நடந்துகொண்டு இருக்கிறது.. மட்டைப்பந்துந்து போட்டிகளுக்கு உசிரு இருக்குது..(இல்லன்னா நடக்க முடியுமா?.. ஆண்டவா விஷயத்துக்கு வரேன்னு சொன்ன பின்னாடியும் இப்படு ஏன்டா கும்மியடிச்சி இம்சை செய்யுற... மாதவா உனக்கு இது நல்லா இருக்குதா?..)

கல்லூரி நாட்களில் ஒரு கிரிக்கெட் மாச்சுகூட விடாம, டிவில பாக்குற ஆளு நானு.. ஆனா.. கடந்த 7 -8 ஆண்டுகளில் நான் பார்த்த மாச்சு (டிவில தாங்க) 10 -15 கூட தேறாது... எல்லாத்துக்குமே ஒரு முடிவு / சலிப்பு உண்டோ? 1991 ல உலகக் கோப்பை விளையாட்டுகளில் இந்த-பாகிஸ்தான் விளையாட்டை ரொம்ப ரசிச்சு பாத்தேன்.. இல்லையா பின்னே, நாம ஜெயுச்சுட்டோமில்லை.அதேபோல நேத்திக்கி நடந்த பேச்சுகூட நல்லாவே இருந்துச்சி.. ... நாம யார்கிட்டே தோத்தாலும் பரவாயில்லை.. பாகிஸ்த்தான் கிட்டே ஜெயிச்சே ஆகணும்.. இந்த எண்ணம் நம்ம பல பேருகிட்ட இருக்கும்னு நம்புறேன்.
ஒரு சமத்துல 90 பந்துல, ஒரு பந்துக்கு சராசரியா ஒரு ஓட்டம் மட்டுமே தேவை, கையிருப்பு 8 விக்கேட்டுன்னு இருந்தப்ப, இந்தியா தான் ஜெயிக்கும்னு ரொம்பவே நம்பிட்டேன்.. ஆனாப் பாருங்க.. ஈசியா கிடச்ச எந்த பொருளுக்குமே மதிப்பு இருக்காதுன்னு, 30 பந்துல 49 ஓட்டம் தேவைன்னு ஆக்கிட்டாங்க, நம்மாளுங்க.
என்னமோ ௨ சிக்சர் அடிச்சி. ஒரு வழிய ஜெயிச்சிட்டாங்க.. மானத்த காப்பத்திட்டாங்க.

வீட்டுலதான் நம்ம மானம் போயிடுச்சு.. மேச்சு பாக்குற சுவாரசியத்துல,

"காய்ச்சின பால் சூடா இருக்குது, ஆறின பின்னாடி உறைமோர் குத்திட்டு தூங்குங்க..", இதுதான் எனக்கு, என் துணைவி சொல்லிய வேலை..
நமக்கு மேச்சு சுவாரசியத்துல எல்லாம் மறந்து போயி, காலைல துணைவி, என்னை எழுப்பி, பால் மோர் ஆகாம கேட்டுப்போயிடுச்சி செம திட்டு..
நா வரேன்.. போயி, பால், மொரு எல்லாம் வாங்கணும்..

8 Comments (கருத்துரைகள்)
:

வெங்கட் said... [Reply]

// நாம யார்கிட்டே தோத்தாலும் பரவாயில்லை..
பாகிஸ்த்தான் கிட்டே ஜெயிச்சே ஆகணும்..
இந்த எண்ணம் நம்ம பல பேருகிட்ட இருக்கும்னு நம்புறேன். //

முன்னே இந்த மாதிரி வெறி இருந்தது
உண்மைதான்.., ஆனா இப்ப இல்ல..

இப்பல்லாம் இந்தியா vs ஆஸ்திரேலியா
மேட்ச் பார்க்கும் போது தான் எனக்கு
அப்படி தோணுது...

Chitra said... [Reply]

"காய்ச்சின பால் சூடா இருக்குது, ஆறின பின்னாடி உறைமோர் குத்திட்டு தூங்குங்க..", இதுதான் எனக்கு, என் துணைவி சொல்லிய வேலை..
நமக்கு மேச்சு சுவாரசியத்துல எல்லாம் மறந்து போயி, காலைல துணைவி, என்னை எழுப்பி, பால் மோர் ஆகாம கேட்டுப்போயிடுச்சி செம திட்டு..
நா வரேன்.. போயி, பால், மொரு எல்லாம் வாங்கணும்..

....... ha,ha,ha,ha,ha.... இந்த "மேட்ச்" நல்லா இருக்குதுங்க.

பெசொவி said... [Reply]

இந்தப் பதிவைப் போட்டதுக்கு, எதுவும் திட்டு வாங்கினீங்களா? (உ-ம் : "ஆமா ஏதோ சாதனை செஞ்சா மாதிரி இதை ஊரெல்லாம் டமாரம் போட்டு சொல்லனுமாக்கும்!")
எனக்கு எப்படி தெரியும்னு கேக்காதீங்க......ஒய் ப்ளட், சேம் ப்ளட்!

ஸ்ரீராம். said... [Reply]

கிரிகெட்டுல இருந்த சுவாரஸ்யம் எல்லாம் போச்சு. எல்லாமே சொல்லி வச்சி விளையாடுற மாதிரியே ஒரு ஃபீலிங். அதிலும் ஹர்பஜன் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது.....

அன்புடன் நான் said... [Reply]

திட்டுனத மட்டுந்தான் சொல்லுவிங்களா....

அடிவாங்குனத தனி பதிவா போடுங்களேன்.
ரொம்ப சுவாரஸ்சியமா இருக்கே!

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ வெங்கட் --- >இந்தியா vs ஆஸ்திரேலியா --

@ Chira --- > இந்த "மேட்ச்" நல்லா இருக்குதுங்க.
என்னாத்தை 'மேச்சுன்னு' சொல்லுறீங்க.... "நான் - என் மனைவி" - மேச்சையா?

@ பெயர் சொல்ல விருப்பமில்லை -->
'பாம்பின்கால் பாம்பறியும்' - சும்மாவா சொன்னாங்க..?

@ஸ்ரீராம். ---> உண்மைதான்.

@ சி. கருணாகரசு -->

ஒரு முடிவோட வந்திங்களா..? அடி வாங்கினத ஒலி-ஒளி பரப்பு செய்ய சொல்லுவீங்க போல இருக்கு.. உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

எனது மற்ற பிற வாசகர்களுக்கும், வந்து, படித்து, பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள்..

அனு said... [Reply]

@வெங்கட்
//முன்னே இந்த மாதிரி வெறி இருந்தது
உண்மைதான்.., ஆனா இப்ப இல்ல..

இப்பல்லாம் இந்தியா vs ஆஸ்திரேலியா
மேட்ச் பார்க்கும் போது தான் எனக்கு
அப்படி தோணுது..//

இது நடந்து சுமார் ரெண்டு மாசம் இருக்குமா??

@Madhavan
அது ஜஸ்ட் ஒரு உள்குத்து கமெண்ட்.. லூஸ்ல விடுங்க..

நாங்களும் இந்தியா பாகிஸ்தான் மேச்ச லீவ் போட்டு பாக்குறவங்க தான்.. இப்போல்லாம் கொஞ்சம் குறைஞ்சிருச்சு..

CS. Mohan Kumar said... [Reply]

உறை ஊற்ற மறந்ததற்கு வாழ்த்துக்கள்

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...