சின்ன வயசு ஞாபகங்கள்.

சின்ன வயசுல நடந்தது எல்லாமே ஞாபகம் இல்லேன்னாலும் சில விஷயங்கள் நெனப்புல  நல்லா பதிஞ்சிருக்கும். அந்த வகையில சில..
  
நானு, ஸ்கூல் படிக்கறப்ப போஸ்ட் கார்டு, பதினஞ்சு பைசாக்கு கெடைச்சுது. இப்ப அதோட விலை என்ன ? இ-மெயில், செல்போன்..  இவை வந்த பின்னர் தபால்-கடிதம் எழுதும் பழக்கம் போயே போச்சு..

எங்க ஊரு கோவில் ரொம்ப பெருசு.. பதினாறு கோபுரம் இருக்கும். அதுல வடக்கு உள்சுவர் கோபுரத்துல, நண்பர்களோட சேர்ந்து உச்சி வரைக்கும் ஏறி ஊர் முழுக்க பாப்போம். அதுல ஏர்றது ரொம்ப ரிஸ்கான காரியம், படிகள் ஒழுங்கா இருக்காது. கால் கைகளால, தூண் இடுக்குல உடம்ப வெச்சு கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறனும். முதல் நிலை  வரைக்கும் வெளிப்புறமா ஏறனும். யாராவது பாத்தா திட்டுவாங்கனு பயந்துக்கிட்டே வேகமா ஏறுவோம். பெரும்பாலும் மதியம் இரண்டரை - மூன்று மணி போல ஆள் நடமாட்டம் இருக்காது அந்த பகுதியில. அப்ப எங்களோட சாகசத்த வெச்சிப்போம். முதல் நிலைக்கப்புறம் உட்புறமா ஏறுவோம். வெளில யாருக்கும் தெரியாது.  மேல் நிலையிலிருந்து உட்புறமா கீழ விழுந்தாலும் யாருக்கும்  தெரியாது, இளங்கன்று பயமரியாதுன்னு சொல்லுறதுகேத்தாப்ல அப்படி தேவையில்லாத ரிஸ்கான வேலைதான். ஆனா, ஆர்வத்தோட ஏறுவோம். இப்ப நெனைச்சா பயமா இருக்கு. உச்சில ஏறி ஊர் முழுக்க சுத்தி சுத்தி பாத்திருக்கோம்.. என்னதான் ரிஸ்க் எடுத்தாலும் அந்த ஏரியல் வியூ செமையாத்தான் இருக்கும்.

சிரிப்போ சிரிப்பு :

சின்னஞ்சிறு கிளி ஏன்  என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையெனும் ஓடம் வழங்கி வந்த பாடும்போது நான் தென்றல் காற்றினிலே வரும் கீதம் சங்கீதம் நீதானே என் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளும் ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலை புஷ்பங்களே என் சோதனைமேல் சோதனை போதுமடா சாமியே சரணமையப் ருவமே நீ புதிய பாடல் பாடு, உன் இளமை இதோ இதோ.. இனிமை இதோ இதொட்டால் பூமலரும் தொடாமால் நான் பாடிய முதல் பாட்டு அவள் பேசிய தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தப் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறக்கும் போதும் அழுகின்றான், இறக்கும் போனால் போகட்டும் போடா. இந்த பூமியில் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. நான்.. நான்..

இது போன்ற தொடர்ச்சியான பாடல்களை உடையது 'முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்'...

--- 'சிரிப்போ சிரிப்பு'   (சிட்டி பாபு & மயில்சாமி )கேசட்டில் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கேட்டது..


கொசுறு : இது பழைய ஞாபகம் அல்ல -- நல்லவர்களுக்கு எந்நாளும் இனிய, நல்ல நாளே. அப்படி இருக்கையில் அதென்ன விசேஷம் 11-11-11. அன்றையத்தினத்தில் குழைந்தை டெலிவரி செய்ய பல மக்கள் ஆர்வமா இருக்காங்களாம், டாக்டர் கிட்ட ஆபரேஷனுக்கு அப்பாயின்மென்ட் வாங்கி இருக்காங்களாம். 'ப்ளான்' பண்ணி பண்ணா நல்லாத்தான் இருக்கும், அதுக்காக இப்படியா ? 

டிஸ்கி : இது எனது 200 வது பதிவு

24 Comments (கருத்துரைகள்)
:

பெசொவி said... [Reply]

Congrats for 200!

எஸ்.கே said... [Reply]

200வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

மோகன் குமார் said... [Reply]

200க்கு வாழ்த்துகள். நானும் அந்த கேசட் கேட்டிருக்கேன்

RAMVI said... [Reply]

நல்ல ஞாபகம்.

எந்த ஊர்?

சிப்போ சிரிப்பு ஞாபகம்,சூப்பர்.

200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்,மாதவன்.

NAAI-NAKKS said... [Reply]

:)

cheena (சீனா) said... [Reply]

அன்பின் மாதவன் - இருநூறுக்கு நல்வாழ்த்துகள் - மேன் மேலும் பதிவுகள் பெருக நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Madhavan Srinivasagopalan said... [Reply]

@பெசொவி
@எஸ்.கே
மிக்க நன்றி
@மோகன் குமார் ம்ம்.... அதுலதான் மயில்சாமியும், சிட்டு பாபுவும் பேமஸ் ஆனாங்க.
@RAMVI எந்த ஊரா ? வலைப்பூவோட தலைப்புலயே இருக்கே [ மன்னை -(இராஜ)மன்னார்குடி ]
@NAAI-NAKKS :-)

அனைவருக்கு மிக்க நன்றி

Madhavan Srinivasagopalan said... [Reply]

@cheena (சீனா) தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்.

middleclassmadhavi said... [Reply]

Congrats for 200!

பொதினியிலிருந்து... கிருபாகரன் said... [Reply]

வாழ்த்துகள்

Lakshmi said... [Reply]

200 -வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

பாலா said... [Reply]

வாழ்த்துக்கள் நண்பரே. அந்த கேசட்டை நானும் கேட்டிருக்கிறேன். அதில் லக்ஷ்மண் ஸ்ருதி குழுவின் தலைவர் லக்ஷ்மனும் பேசி இருப்பார். அந்த கேசட்டை சுமார் 50 தடவை கேட்டிருப்பேன். நன்றி நண்பரே,

வெளங்காதவன் said... [Reply]

இருநூறுக்கு வாழ்த்துக்கள்...
:-)

ஸ்ரீராம். said... [Reply]

இருநூறுக்கு வாழ்த்துகள். அப்போது இது போல நிறைய சிரிப்பு கேசட்கள் வந்ததாய் ஞாபகம்.

வெங்கட் நாகராஜ் said... [Reply]

ஊர் நினைவுகள் என்றுமே இனியவை தான் நண்பரே...

இன்னும் எத்தனை நினைவுகள் நெஞ்சில் இருக்கின்றது இல்லையா இத்தனை வருடங்கள் கழித்தும்... :)

தங்களது 200-வது பதிவிற்கு வாழ்த்துகள்.... தொடரட்டும் இந்த பயணம்....

வெங்கட் நாகராஜ் said... [Reply]

தில்லி விஜயம் இருக்கிறது என முன்பு சொன்ன நினைவு.. எப்போது....

Ramani said... [Reply]

200 வது பதிவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
100 பதிவுக்கே எங்களுக்கு மூச்சு முட்டுகிறது
தொடர்ந்து வருகிறோம்
சிறப்பாக தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்

kg gouthaman said... [Reply]

200 ஆவது பதிவுக்கு எங்கள் வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் வலைப பணி. 11.11.11 ஐஸ் மட்டும்தானே கியூவில் நிற்கிறார்? நீங்க ஏதாவது பிளான் பண்ணியிருக்கீங்களா?

Philosophy Prabhakaran said... [Reply]

சிரிப்போ சிரிப்பு கேசட் என்கிட்டயும் இருந்துச்சு... நீங்க போட்டிருக்குற பாடல் உட்பட அதிலுள்ள பெரும்பாலான வசனங்கள் எனக்கு அத்துப்படி...

கிருபானந்த வாரியார்: கல்லியிலே கவாஸ்கர், மிட்-ஆனிலே கபில் தேவ்... அங்க நாலு பொடிப்பய நிக்கிறான் ஆருன்னே தெரியல... ரிச்சா ஒன்னு வாடகைக்கு வச்சிட்டு போய் பாக்கணும்...

ஜனகராஜ்: நல்லா ஒரு கலக்கு கலக்கு... அதுல இருந்து ஒரு நூறு கிராம் குடு...

Philosophy Prabhakaran said... [Reply]

அது சிட்டிபாபு - மயில்சாமி இல்லை...

மயில்சாமி - லக்ஷ்மன்...
மயில்சாமி - லக்ஷ்மன்..
மயில்சாமி - லக்ஷ்மன்.

(எக்கோ கொடுத்து படிக்கவும்)

Madhavan Srinivasagopalan said... [Reply]

@middleclassmadhavi
@பொதினியிலிருந்து... கிருபாகரன்
@Lakshmi
@பாலா
@வெளங்காதவன்
@ஸ்ரீராம்.
@வெங்கட் நாகராஜ்
@Ramani
@kg gouthaman
@Philosophy Prabhakaran
To all
தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் இதயம் கனிந்த நன்றிகள்

@kg gouthaman சார், நெட்-நியூஸ்ல வேறு பல பேரன்ட்ஸ் அப்படி விரும்பினதா படிச்சேன். சுட்டி நினைவில் இல்லை. நெட்ல செர்ச் பண்ணிப் பாருங்க.

@வெங்கட் நாகராஜ் முடிந்தால் அஜீத்-நகரில் சந்திப்போம்..

@Philosophy Prabhakaran//மயில்சாமி - லக்ஷ்மன்.//
அப்படியா! அப்ப இந்த பதிவோட தலைப்புல ஞாபங்களும், மறதிகளும் னு மாத்திடவேண்டியதுதான்.

தவறினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் நண்பரே :-)

ஷைலஜா said... [Reply]

முதல்ல வாழ்த்துகள் ம.மா! மன்னார்குடி ராஜ கோபாலசுவாமியின் புன்னகை அற்புதமானது உங்க ஊரைப்பத்தி ஓரளவே தெரிஞ்சிருந்தது.உங்க பதிவில் இன்னும் விவரங்கள் அதோட உங்க ஞாபகங்களூம் !

அப்பாதுரை said... [Reply]

வாழ்த்துகள்!

RAMVI said... [Reply]

மாதவன்,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...