முத்தான (!) மூன்று கேள்விகள்..

1) எனது சென்ற பதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன்னர் தலைப்பு எழுத மறந்து விட்டேன். முன்னர் ஓரிரு முறை அப்படி நடந்திருக்கிறது. மறுபடியும் எடிட் மோடிற்கு சென்று தலைப்பினை கொடுத்து மறுபடியும் பப்ளிஷ் செய்திருக்கிறேன்.  தலைப்போடன் மறுபடியும் பதிவு வெளியாகும். எனினும் புதிய பதிவு என முதல் முறை பப்ளிஷ் செய்தபோதுதான், என்னை தொடர்பவர்கள் டாஷ்போர்டிங் தெரியும். எனவே அவர்களுக்கு குழப்பம் இருக்காது. நேற்றைய பதிவில் எத்தனை முறை முயற்சி செய்தும், முதலில் விடுபட்ட தலைப்பினை சேர்க்க முடியவில்லை.  :-( யாராவது விளக்கம் சொல்வார்களா ?

2) பிரபல சாட்டிலைட் தொலைக் காட்சியில், வழக்கம் போல பொங்கலுக்கு 'உலகத் தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக' எனச் சொல்லி ஒரு திரைப்படத்தினை வெளியிட இருக்கிறார்கள். ஆனால் அந்தப் படம் ஹிந்தியில் பல முறை (அதாவது உலக.. ஏன்.. ஏன்.. இந்திய தொலைக் காட்சி வரலாற்றிலேயே ) வெளியிடப் பட்டுள்ளது. இன்றைக்கும் 11-01-2012 (புதன்கிழமை) கூட செட்-மேக்ஸ் தொலைக் காட்சியில் (ஹிந்தியில்) மதியம் வெளியிடப் பட்டது.  ஏன்.. ஏன்.. இப்படி ஒரு விளம்பரம் செய்கிறார்கள் என யாராவது சொல்லுவார்களா ?

3) இதுவும் பிரபல தொலைக் காட்சியில் வரும் மெகாத் தொடர் பற்றியது. எங்கள் வீட்டில் பெரும்பாலும் மெகா தொடர்கள் பார்ப்பது இல்லாவிட்டாலும், குழந்தைகளுக்கு விடுமுறை ஆனதால் வீட்டில் ஓய்வு கிடைக்க, நேற்றும் இன்றும் மாலை ஏழரை மணி முதல் எட்டரை மணி வரை மெகாத் தொடர் பார்த்தோம், ஒரு மாறுதலுக்காக. இன்று எட்டு மணி தொடரில் ஒரு சீனில், சிலை கடத்தல் பற்றிய நிகழ்வு வந்தது. அதனை கவனித்த எனது ஏழு வயது மகன் சொன்னது, "அட.. நேத்தைக்கு 'பாண்டி' சிலை கடத்துறதுல மாட்டிக் கிட்ட மாதிரி இன்னைக்கு இந்த ஆண்ட்டி மாட்டிக்கிட்டாங்க".  -- அடா ஆமாம். நேற்று ஏழரை மணி தொடரில் சில கடத்துவது போன்ற சீன இருந்தது. அதெப்படி அடுத்தடுத்த தொடர்கள்ல அடுத்தடுத்த நாட்கள்ல இப்படி கிட்டத்தட்ட ஒரே மாதிரியான நிகழ்வுகள்
==============================

19 Comments (கருத்துரைகள்)
:

நாய் நக்ஸ் said... [Reply]

இப்படி எல்லாம் கேள்வி கேட்டா..
நாங்க...எங்க போய் பதில் தேடறது..???

இனி நீங்க....பதிலை சொல்லிட்டு
கேள்வி கேளுங்க....
:)
:)
:)

வெங்கட் நாகராஜ் said... [Reply]

நிஜமாகவே முத்தான கேள்விகள் தான்... :)

இதைத் தான் எதிர்பார்த்தேன்.... :))))

RAMA RAVI (RAMVI) said... [Reply]

கேள்வியும் நானே பதிலும் நானே என்று பதிலையும் நீங்களே சொல்லிவிட்டால் எங்களுக்கு செளகரியமாக இருக்கும், மாதவன்.

Madhavan Srinivasagopalan said... [Reply]

பதில் தெரிஞ்சிருந்தா கேள்வி கேட்ருக்க மாட்டேனே..!

வருகைக்கு நன்றி
நக்கீரரே,
வெங்கட் சார் ,
ராம்வி மேடம்..

எஸ்.கே said... [Reply]

விடுபட்ட தலைப்பை சேர்க்க முடியுமே? ஒருவேளை முடியாவிட்டால் பழைய போஸ்ட்டை அழித்து விட்டு புதிதாக ரீபோஸ்ட் செய்யலாம்!

Madhavan Srinivasagopalan said... [Reply]

ஒகே எஸ்.கே நன்றி.

நீங்க சாட்டிலைட் டி.வி பாக்க மாட்டீங்களா ?.. அந்த கேள்விக்குலாம் பதில் இல்லையே !

எஸ்.கே said... [Reply]

:-) விளம்பரம்னா என்ன வேணா சொல்வாங்க!
மூணாவது கேள்விக்கு பதில்.. சீரியல்னாலே கிட்டதட்ட ஒரே டெம்ப்ளேட்தான் அதானல இப்படிலாம் நடக்கும்...

TERROR-PANDIYAN(VAS) said... [Reply]

ஹலோ!! சும்மா ஆள் ஆளுக்கு காப்பி பண்ண முடியாம ப்ளாக்ல ஸ்கிரிப்ட போட்டு கடுப்படிக்காதிங்க. கமெண்ட் போடரதுக்கு முன்னாடி கோட் பண்ர லைனை எப்படி நான் செலைக்ட் பண்ரது.. :)

Madhavan Srinivasagopalan said... [Reply]

எப்பவோ டெஸ்ட் பண்றதுக்கு அந்த எச்.டி.எம்.எல் ஸ்க்ரிப்ட சேத்தேன் . அப்புறம் மறந்தே போயிட்டேன். இப்போது நீங்கள் சுட்டிக் காட்டியதற்கு நன்றி..

ம்ம்ம் இப்ப காப்பி பண்ணிப் பாருங்க..

(For Terror Pandiyan)

Yaathoramani.blogspot.com said... [Reply]

வேதாளம் கேட்கிறார்போல சிக்கலான கேள்விகளைக் கேட்டால்
நான் என்ன செய்வது
விக்கிரமாதிதான் யாராவது வருகிறார்களா பார்ப்போம்

வெங்கட் said... [Reply]

// 'உலகத் தொலைகாட்சி வரலாற்றில் முதல்
முறையாக' எனச் சொல்லி ஒரு திரைப்படத்தினை
வெளியிட இருக்கிறார்கள். ஆனால் அந்தப் படம்
ஹிந்தியில் பல முறை வெளியிடப்பட்டுள்ளது. //

நீங்க சொல்றது ROBOT..
அவங்க சொல்றது " எந்திரன் "

Madhavan Srinivasagopalan said... [Reply]

@ ரமணி சார்.. வந்துட்டாரு வெங்கட்டு.. சாரி.. சாரி.. விக்ரமாதித்தன்..

@ வெங்கட் : இதெல்லாம் போங்காட்டம்.. ரெண்டுமே ஒரே விடியோகிராபி.... ஆடியோ டப்பிங் மட்டும்தான் வேற வேற.. என்னப் பொருத்தவரைக்கும் ரெண்டுமே ஒண்ணுதான்.. ஒரே சமயத்துல ரிலீஸ் ஆனதுதான், ரீமேக் அல்ல என்பதே என்வாதம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]

டீவி அதிகமா பார்க்கிறீங்க போல...?

ஸ்ரீராம். said... [Reply]

முதல் கேள்விக்கு பதில்....சிலசமயம் இப்படித்தாங்க நடக்கும்!
இரண்டாவது, மூன்றாவது ...எல்லாம் வியாபாரம்...எல்லாம் பிரம்மை..

சேலம் தேவா said... [Reply]

எல்லாச்சேனல்காரங்களும் இப்டிதான் பாஸ்...சினிமாவை கண்டுபுடிச்ச மாதிரியே பில்ட்-அப். :)

ராஜி said... [Reply]

முதல் கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரிஞ்சா எனக்கும் ரகசியமா சொல்லிவிடுங்க.

ஹாலிவுட்ரசிகன் said... [Reply]

அதிகமா டீவி பாக்காதீங்க, அதுலயும் முக்கியமா சீரியல் பார்க்கவே பாக்காதீங்க.

விடைகள் சத்தியமா தெரியல ...

புவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]

மன்னை மைந்தருக்கும் உங்களது குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ADHI VENKAT said... [Reply]

கேள்வியெல்லாம் நல்லாத் தான் இருக்கு....

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...