நேற்று, இன்று, நாளை...

நேற்றைக்கு முன்தினம் :
'desert' & 'dessertஇரண்டிற்கும் இருக்கும் வேறுபாடு உங்களுக்குத் தெரியுமா ?

மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனின் புத்தகத்தில் இது இருந்தது "ஹோமாநிம்" எனும் வரிசையில். ஒரே ஒரு 's' இருப்பது பாலைவனத்தையும், இரண்டு 's' இருப்பது  உணவிற்குப் பின் சாப்பிடும் ஐஸ்க்ரீம், இனிப்பு வகைகளையும் குறிப்பதாகும். இந்த வேறுபாட்டை நேற்றைக்கு முன்தினம்தான் தெரிந்துகொண்டேன். பலநாட்களாக எதற்கு 'ஐஸ்க்ரீமை' டெசெர்ட்(பாலைவனம்) என்று குறிப்பிடுகிறார்கள் என யோசித்திருக்கிறேன்,  அகராதியை பார்க்காமலேயே. இப்போதாவது தெரிந்ததே.

'Dessert' & 'Dessert  பற்றி நெட்டில் படித்தபோது தெரிந்துகொண்டது....
பட உதவி லிங்கிற்கு நன்றி
  • A "desert" is a dry, sandy region or wasteland; Also, the verb "desert" means to abandon. 

  • A "dessert" is a sweet dish served at the end of a meal.
  1. Desert(verb) the 'dessert(noun)' in the 'desert(noun)'.
  2. The desert(noun) was full of deserted(verb) desserts(noun).

நேற்று :
உணவகத்தில் கொடுத்த மெனு-கார்டில் ஐஸ்க்ரீம், மில்க் ஷேக், ஃப்ரூட் சாலட், இனிப்பு வகைகள் பட்டியலிடப்பட்ட பகுதியின் தலைப்பு "Desert". ம்ம்ம், மிஸ்டேக்க கண்டு பிடிச்சிட்டேன்..

இன்று எனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ் :
"Republic Day special is back! (!). Shop for 1950 & get cloths worth 1950 free. Also get gift coupns worth 1000 free."

மைன்ட் வாய்ஸ் : அப்படீன்னா நீங்க ரூ.1950னு சொல்லி வியாபாரம் செய்யற பொருளோட உண்மையான மதிப்பு ஜஸ்ட் ரூ. 425 தானா ? 
அதான்.. 425 மதிப்புள்ள பொருள ரெண்டு பங்கு வேலை ஏத்திட்டு (அதே மதிப்புள்ள பொருள் இலவசமாமே !), மேலும் ஆயிரம் ரூபாய் விலை ஏத்தி (ஃகிப்ட் கூப்பனோட மதிப்பு) , விக்கிறதுதான் உங்கள் சிறப்பு தருதலா? (தருதல் = offer ... ம்ம்ம்ம் தறுதலை..)

நாளை :  இனிமே யாரவது இந்தப் பிலாகுப் பக்கம் வருவாங்களா ? ம்ம்ம்.. பாப்போம்.. 

டிஸ்கி : அப்பாடா, இனிமே நானு, "நேற்று இன்று நாளை" ஏதாவது எழுதி ஒப்பேத்தலாம்.. .. (நீங்களும்தான்..)

12 Comments (கருத்துரைகள்)
:

ஷைலஜா said... [Reply]

அதுக்காக டெஸ்ஸர்ட்ல டெஸர்ட் படம் எப்டி மாதவன்?:)

rajamelaiyur said... [Reply]

offer என்றாலே ஆப்புனுதான் அர்த்தம்

வெங்கட் நாகராஜ் said... [Reply]

அட “நேற்று இன்று நாளை” நல்லா இருக்கே இந்த ஐடியா....

நாய் நக்ஸ் said... [Reply]

மாதவன் ரோம்ப யோசிக்காதீங்க....
அப்புறம்..நாங்க எப்படி...
புத்திசாலி ஆகுறது???

RAMA RAVI (RAMVI) said... [Reply]

//'Dessert' & 'Dessert // பற்றி நல்ல அறிவுப்பூர்வமான பதிவு.
இந்த மாதிரி நிறைய வார்த்தைகள் தமிழ், ஆங்கிலம் எல்லாவற்றிலும் இருக்கே,நிறைய பதிவுகள் தேற்றலாம்.

A.R.ராஜகோபாலன் said... [Reply]

வித்தியாசம் சொன்ன வித்தியாச பதிவு
நேற்று இன்று நாளை நல்ல சுவையான தலைப்பு, எல்லோருக்குமே.........

ஸ்ரீராம். said... [Reply]

நானும் கற்றுக் கொண்டேன். நன்றி.

ADHI VENKAT said... [Reply]

நேற்று, இன்று, நாளை நல்லாயிருக்குங்க....
தொடர்ந்து கலக்குங்க.

Mohamed Faaique said... [Reply]

நானும் இதுவர ஒரே மாதிரித்தான் எழுதுவாங்களா இருக்கும்’னு நெனச்சிட்டு இருந்தேன்.. இனிமே யார் கிட்டயவாது இதைக் கேட்டு, நாம புத்திசாலி’னு நிரூபிச்சுடலாம். நன்றி பாஸ்...

Chitra said... [Reply]

why this kolaveri?

சேலம் தேவா said... [Reply]

வருவோம்... :)

அப்பாதுரை said... [Reply]

சில ப்ரெஞ்சு dessert உணவுக்கூடங்களில் முதலில் கொடுப்பார்கள். உச்சரிப்பிலும் வித்தியாசங்கீது. டெசர்ட் (பாலைவனம்), டிசர்ட் (பாயசம்).

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...