புரியுதா புதிர் ?

வணக்கம்.. 

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் - இந்திய ஆஸ்திரேலிய  ஆட்டம் கடைசி ஒன்னரை மணிநேரம் டி.வி.ல  பாத்தேன்.... தோணி தடவி தடவி.. நல்லா எங்கிட்ட திட்டு வாங்கிட்டு இருந்தாரு. கடைசி ஓவருல  ஒரு சிக்சர், ஒரு டூ(இடுப்புக்கு மேல வந்த நோ பால்) , ஒரு மூணு  அடிச்சு டீமா ஜெயிக்க வெச்சு .. நா திட்டினது தப்புன்னு நிரூபிச்சிட்டாரு ..

சரி.. சரி.. ஒரு சில கேள்விகள்... உங்களுக்கு..

1) ஜனவரி மாசம் ஏழு தடவ நடந்தது.. இந்த மாசத்துல இப்பத்தான் முதல் தடவையா நடந்திருக்கு அது என்ன?

2) மன்னராட்சி காலம்.. சுவர்ணபுரி, வெள்ளிபுரி அப்படி ரெண்டு நாட்டுக்கு நடுவுல அடிக்கடி சண்டை நடக்கும்.... சுவர்ணபுரி நாட்டோட சுப்பமுத்துனு ஒரு போர் வீரர், தொடர்ந்து நடந்த 18  போர்களில  பங்கெடுத்திருக்கார். அவர் போரில் காயமடைந்து இறந்தார். அவர் மொதொமொதலா கலந்துக்கிட்ட போர்லேருந்து.. நடந்த போர்களுல  எத்தனாவது போர் நடக்கும்போது இறந்தாருனு உங்களால சொல்ல முடியுமா ?

3) வீட்டுல... ஆபீசுல.. கைபேசியை தவறுதலா எங்கயாவது தெரியாம வெச்சிட்டா... கண்டு பிடிக்க.. லேண்ட்லயனே எனக்குத் துணை.. அதுலேருந்து செல்லுக்கு டயல் பண்ணா ரிங் கேட்டு கண்டுபிடிக்கலாம்..  அதனால, எந்தப் பொருளையும் கவனமா வெச்சிக்கணும்னா, கைபேசியோட செயின் போட்டு கட்டிடலாமே..! அல்லது.. இப்படி செஞ்சா என்ன ? எப்படி ?

4) நேத்தைக்கு லஞ்ச் முடிஞ்சு சுமார் ரெண்டு மணிபோல நண்பர் ஒருத்தர் வந்தாரு... கிட்டத்தட்ட இருபது நிமிஷம் பேசிட்டு இருந்தோம். அப்புறம் நாலுமணி வாக்கில  குடும்பத்தோட அவர் வீட்டுக்கு போனோம். அவங்க வீட்டுல எங்களுக்கு ஸ்நாக்ஸ்/டிபன்/காபின்னு கொடுத்து என்னமா அசத்திட்டாரு. அடாடா.. அவரு வந்தப்ப குடிநீர் கூட கொடுக்கல ஆனா, அவரு இப்படி உபசரித்தாரே!  நா தப்பு செஞ்சிட்டோனோ?  --- ம்ம்ம் இல்ல.. இல்ல.. நா வருத்தப் பட வேண்டிய அவசியம் இல்ல.. ஏன் ?  (இது நேற்று நடந்த விஷயம்)


விடைகள்  கீழே ...


1) ஹி.. ஹி...ஹி.. ஹி... என்னோட பிளாக் போஸ்டுதான்..  ஏழு தடவ போன மாசம் (ஜனவரி) போஸ்ட் பப்ளிஷ் பண்ணேன். இந்த மாசம் இதுதான் முதல் போஸ்டு.

2) பதினெட்டாவது போரில் அவர் இறந்தார்னு நீங்க சொன்னா.. அது சரியா இருக்கணும்னு அர்த்தம் இல்ல. அவர் காயம் அடைஞ்சது வேணா பதினெட்டாவது போரா இருக்கலாம்..  பின்னர்.. பல வருடங்கள் கழித்து (பல போர்கள் நடந்த பின்னர்) அவர் இறந்திருக்கலாமே..

3) எல்லா பொருளையுமே லேண்ட்லயனுக்கு(LL ஃபோன்) பக்கத்துல வெச்சா ஃபோன் செய்யப் போகும்போது கண்டு புடிச்சிடலாமே !

4) நாங்க ரெண்டு பெரும் சந்திச்சது ஆன்லையன் சாட்ல.. எப்படி அவர உபசரிப்பது ?
அவரு வீட்டுக்கு நாங்க போனது .. என்னோட மதியத்தூக்கக் கனவுல
------------------------------------------------------

9 Comments (கருத்துரைகள்)
:

ஸ்ரீராம். said... [Reply]

வொய் திஸ் கடிவெறி கடிவெறி கடிவெறி கடிவெறி ஜி....!

:)))

NAAI-NAKKS said... [Reply]

En perukku....
Velai vachiduveenga...
Poliruke...!!!!!????????

LOL...LOL....LOL....

NAAI-NAKKS said... [Reply]

En perukku....
Velai vachiduveenga...
Poliruke...!!!!!????????

LOL...LOL....LOL....

வெங்கட் நாகராஜ் said... [Reply]

அடங்கொக்க மக்கா... எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க! :)))

kg gouthaman said... [Reply]

ஹூம் இதெல்லாம் கேள்வியா? அட்ரஸ் குடுங்க. உங்களை கவனிக்கற விதத்துல கவனிச்சுக்கிறேன்!

RAMVI said... [Reply]

முதல் மூணும் பரவாயில்லை ஏதோ சமாளிக்க முடிந்தது.கடைசித படிச்சதும்.....எங்க இருக்கீங்க ஐதராபாத்தா? விசாக பட்டிணமா?

அப்பாதுரை said... [Reply]

3 உண்மையிலேயே நல்ல ஐடியா. லேந்ட்லைன் இல்லாதவங்க என்ன பண்ணலாம்?

சேலம் தேவா said... [Reply]

முடியல,,, :( :)

கோவை2தில்லி said... [Reply]

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..... தாங்கல.....

தமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்

Post a Comment

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...